இலத்திரனியல் வாகனத்தை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி

வெளிநாடுகளில் தொழில் புரிகின்ற இலங்கையர்களுக்கு இலத்திரனியல் வாகனத்தை இறக்குமதி செய்கின்ற அனுமதிப்பத்திரம் வழங்கும் முன்மொழிவு திட்டத்திற்கு அமைச்சரவை நேற்று (15) அங்கீகாரம் வழங்கியுள்ளது. இன்று (16) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சரவை பேச்சாளரும், அமைச்சருமான பந்துல குணவர்தன இதனை தெரிவித்தார். இதுதொடர்பான அமைச்சரவை முடிவு வருமாறு :  

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடற்படையினர் நிவாரணம்

நாட்டில் ஏற்பட்டுள்ள மோசமான காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக தென் மாகாணத்தின் காலி, அக்குரஸ்ஸ, கொடபொல, நாகொட, தவலம, கம்புறுப்பிட்டிய மற்றும் அத்துரலிய ஆகிய பிரதேசங்களுக்கு 2023 மே மாதம் 14 ஆம் திகதி முதல் கடற்படை நிவாரணக் குழுக்களை அனுப்பியுள்ளதுடன் தற்போது, நிவாரணக் குழுக்கள் பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கமைய, நேற்று (15) நில்வலா ஆறு பெருக்கெடுத்து ஓடியதால், மாத்தறை மாவட்டத்தில் அதுரலிய பானதுகம பிரதேசத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக … Read more

நாட்டில் ஆபத்தான கோவிட் திரிபு பரவுகிறதா..! பரிசோதனை ஆரம்பம்

நாட்டில் பரவி வரும் கொவிட் வைரஸின் தற்போதைய மாறுபாட்டை கண்டறியும் சோதனை அடுத்த வாரம் மேற்கொள்ளப்படும் என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் செல் உயிரியல் பிரிவு பணிப்பாளரான வைத்தியர் சந்திம ஜீவேந்திர தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்ட 10 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த நாட்களில் பரவும் கோவிட் வகையை அடையாளம் காண்பது முக்கியம். கோவிட் ஓமிக்ரோன் XBB ஸ்ரெய்ன் நாட்டிற்குள் நுழைந்ததாக சந்தேகம் இருந்தாலும், … Read more

வடக்கு ரயில் பாதை அபிவிருத்திப் பணிகளை இந்த ஆண்டுக்குள் நிறைவு செய்ய எதிர்பார்ப்பு – அமைச்சர் பந்துல குணவர்தன

வடக்கு ரயில் பாதை அபிவிருத்திப் பணிகளை இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவு செய்ய எதிர்பார்ப்பதாக போக்குவரத்து, நெடுங்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சரும், அமைச்சரவைப் பேச்சாளருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (16) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். மேலும், அடுத்த வருடம் முதல் காங்கசந்துறையில் இருந்து கொழும்பு வரை சிறந்த புகையிரத சேவையொன்றை வழங்குவதற்கு எதிர்பார்ப்பத்திருப்பதாகவும் … Read more

பேருவளை கடற்பரப்பில் விபத்திற்குள்ளான மீன்பிடி படகில் இருந்த 06 மீனவர்கள் மீட்பு

இலங்கை கடற்படை மற்றும் இலங்கை கடலோர காவல்படை திணைக்களம் இணைந்து 14ஆம் திகதி காலை மேற்கொண்ட விசேட தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையின் போது, பேருவளை கலங்கரை விளக்கத்தில் இருந்து சுமார் 08 கடல் மைல் (சுமார் 15 கிலோமீட்டர்) தொலைவில், இலங்கையின் மேற்கு கடலில் ஏற்பட்ட மோசமான காலநிலை காரணத்தினால் ஏற்பட்ட கடல் நீர் கசிவு காரணமாக மூழ்கும் அபாயத்தில் இருந்த மீன்பிடி படகொன்றில் இருந்த ஆறு மீனவர்கள் கரையோர பாதுகாப்பு திணைக்களத்திற்கு சொந்தமான ஊபு … Read more

யுத்தம் இல்லாதொரு நாட்டை உருவாக்கிய தேசியப் பணியை நினைவுகூருவது அனைத்து இனங்களின் பொறுப்பும் கடமையும் ஆகும் – அமைச்சர் பந்துல குணவர்தன

சிங்களம், தமிழ், முஸ்லிம், பர்கர் என அனைத்துத் தரப்பு மக்களும், நாட்டில் பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வந்து சமாதானத்தை ஏற்படுத்தி இலங்கையை யுத்தம் அற்ற ஒரு நாடாக மாற்றிய பணியை நினைவுகூருவது அனைத்து இன மக்களினதும் கடமையும் பொறுப்புமாகும் என்று வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (16) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில், எதிர்வரும் மே 18ஆம் திகதி நடைபெறவுள்ள போர்வீரர்கள் தினத்தை முன்னிட்டு … Read more

இலங்கை – சவூதி அரேபிய பாராளுமன்ற சிநேகபூர்வ சங்கத்தின் தலைவராக அமைச்சர் நஸீர் அஹமத்

இலங்கை – சவூதி அரேபிய பாராளுமன்றத்தின் புதிய தலைவராக சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இலங்கை – சவூதி அரேபிய பாராளுமன்ற சிநேகபூர்வ சங்கத்தின் 9ஆவது பாராளுமன்றத்திற்கான அதிகாரிகள் குழுவை தெரிவு செய்யும் விசேட கூட்டம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் (10) இடம்பெற்றது. இதன்போது அமைச்சர் விதுர விக்ரமநாயக்க உட்பட பாராளுமன்ற உறுப்பினர்களான ஜே.சி. அலவதுவல மற்றும் எஸ். எம். எம் முஷாரப் ஆகியோர் உப தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு பாராளுமன்ற … Read more

சிறுவர் துஷ்பிரயோகத்தைத் தடுக்க கடுமையான சட்டத்தை உருவாக்குமாறு சட்டத் துறையினருக்கு ஜனாதிபதி பணிப்புரை

சிறுவர் துஷ்பிரயோகத்தைத் தடுக்க கடுமையான சட்டத்தை உருவாக்குமாறு சட்டத் துறையினருக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். ஒரு சில ஆசிரியர்கள், முதியவர்கள் மற்றும் சமூகத்தின் பல்வேறு தரப்பினரால் தொடர்ச்சியாக இடம்பெறும் சிறுவர் துஷ்பிரயோகங்களை விரைவாக தடுக்க வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அவ்வாறான செயல்களுக்கு கடுமையான தண்டனை வழங்கும் சட்டக் கட்டமைப்பு ஒன்றின் அவசியத்தையும்வலியுறுத்தியுள்ளார். களுத்துறை ஹோட்டல் ஒன்றின் மேல் மாடியில் இருந்து குதித்து 16 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம், களுத்துறை தனியார் வகுப்பு … Read more

கதிர்காமம் பகுதியில் நிலநடுக்கம்

கதிர்காமம் பகுதியில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  இந்த நிலநடுக்கம் நேற்றைய தினம் (15.05.2023) இரவு வேளையில் பதிவாகியிருந்ததாக தெரியவருகிறது.  சிறியளவு நிலநடுக்கம் 2.1 ரிக்டர் அளவான சிறியளவு நிலநடுக்கமே பதிவாகியுள்ளது. இந்த விடயத்தை புவிச்சரிதவியல் ஆய்வு சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.  இந்த நிலநடுக்கம் காரணமாக பாதிப்புகள் ஏற்படவில்லை என்றும் தெரியவந்துள்ளது  Source link

கனடா செல்வோருக்கான முக்கிய தகவல்! கொழும்பில் அம்பலமான மோசடி (Video)

கனடாவிற்கு மாணவர் விசாவிற்கு விண்ணப்பிப்பதற்காக கட்டணங்களை அறவிட்டு தனிநபர் ஒவ்வொருவரிடம் இருந்து கிட்டதட்ட 14 லட்சம் ரூபா பெற்றுகொள்ளப்பட்டு மோசடியில் ஈடுபட்ட நிறுவனம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. கொழும்பில் அமைந்துள்ள நிறுவனம் ஒன்றிலே இந்த மோசடி இடம்பெற்றுள்ளது.  சுமார் 500ற்கும் மேற்பட்டோர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் பாதிக்கப்பட்ட இளைஞர்கள்  தெரிவித்த விரிவான தகவல்களை இந்த காணொளியில் காணலாம்,        Source link