மகிந்தவை பிரதமராக்குவது தொடர்பில் மனோ கணேசன் வெளியிட்டுள்ள அறிவிப்பு

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமிப்பதற்கு ஆட்சேபனையில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். பதவிகளுக்காக யாரை நியமித்தாலும் நாடாளுமன்றத்தை கலைத்து துரித கதியில் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.  மகிந்த பிரதமராவதில் பிரச்சினையில்லை மேலும் கூறுகையில், மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியை கோருவதாக நாட்டில் அதிகமாக பேசப்படுகின்றது, யாரிடம் இதனைக் கேட்கின்றார்? … Read more

அவுஸ்திரேலியாவிடமிருந்து இலங்கைக்கு விமானம் அன்பளிப்பு

அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் அந்நாட்டு அரச விமானப்படைக்குச் சொந்தமான பீச் கிராப்ட் “KA350 King Air” விமானம் ஒன்றை (பதிவிலக்கம் – A32-673) இலங்கைக்கு அன்பளிப்புச் செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விமானம் வழங்குவது தொடர்பாக அவுஸ்திரேலிய உள்நாட்டலுவல்கள் அமைச்சர் கிளேர் ஓ நீல் (Clare O’Neil) அளித்த கடிதம், இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் பவுல் ஸ்டெபன் இனால், அண்மையில் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது. பீச் கிராப்ட் “KA350 King Air” என்பது நவீன … Read more

அரச ஊழியர்களுக்கு இன்று முதல் கட்டாயமாகும் நடைமுறை

அரச ஊழியர்கள் வேலைக்குச் செல்லும் போதும், வெளியேறும் போதும் இன்று முதல் கைரேகை பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் இது தொடர்பில் அனைத்து நிறுவன தலைவர்களுக்கும் சுற்றறிக்கையை அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அரச ஊழியர்கள் இதேவேளை, 17 லட்சம் அரச ஊழியர்களை பராமரிப்பதற்கு வருடாந்தம் 1.4 ட்ரிலியன் ரூபா செலவிடப்படுமென முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். செலவிடப்படும் பணத்துடன் ஒப்பிடும் போது அவர்களால் நாட்டுக்கும் … Read more

மீண்டும் தீவிரமடையும் போர் பதற்றம்! உக்ரைன் எல்லை அருகே அடுத்தடுத்து சுட்டு வீழ்த்தப்பட்ட ரஷ்ய விமானங்கள்

ரஷ்ய படையை சேர்ந்த 2 போர் விமானங்கள் மற்றும் 2 ஹெலிகாப்டர்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் மீதாக ரஷ்யா போர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் தீவிரமடைந்த நிலையில், இரு தரப்பும் தனது படைகளை அனுப்பி தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. இந்த நிலையில், உக்ரைன் எல்லையையொட்டியுள்ள தெற்கு ரஷ்ய பிராந்தியத்தின் பிரையன்ஸ்க் பகுதியில் இரண்டு எம்.ஐ.-8 ரஷ்ய ஹெலிகாப்டர்கள், சு-35 போர் விமானம் மற்றும் சு-34 போர் விமானம் ஆகியவை சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக தகவல் … Read more

களுத்துறை மாணவி உயிரிழந்த சம்பவம்! விடுதி தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

களுத்துறையில் 16 வயதான பாடசாலை மாணவி உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய விடுதி சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நகர அபிவிருத்தி அதிகார சபை இந்த தகவலை வெளியிட்டுள்ளது. குறித்த விடுதி சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்டமை தொடர்பில் முன்னதாக அறிக்கை கோரப்பட்டிருந்தது. அமைச்சரின் ஆலோசனை இந்நிலையில் அந்த அறிக்கைக்கு அமைய தற்போது சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேவேளை குறித்த விடுதிக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். … Read more

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு!

மோட்டார் போக்குவரத்து திணைக்களம் பல வருடங்களாக வருமான உரிமத்தைப் புதுப்பிக்காத சுமார் 2.3 மில்லியன் வாகனங்களைக் கண்டறியும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது. கடந்த ஐந்து வருடங்களாக வருமான அனுமதிப்பத்திரம் பெறாத வாகனங்களின் தரவுத்தளத்தை சரிபார்த்து அவ்வாறான வாகனங்களின் விபரங்களை வழங்குமாறு திணைக்களம் ஒன்பது மாகாணங்களின் பிரதம செயலாளர்களிடம் வினவியுள்ளதாக ஆணையாளர் நிஷாந்த வீரசிங்க தெரிவித்துள்ளார். கால அவகாசம் குறித்த தகவலின் அடிப்படையில், இதுபோன்ற வாகனங்களை கண்காணித்து அவற்றுக்கு என்ன நடந்தது என்பது குறித்து தெரிவிக்க மாவட்ட மோட்டார் வாகன … Read more

கம்பளை யுவதி படுகொலைக்கான காரணம் வெளியானது

கம்பளை எல்பிட்டிய பாத்திமா முனவ்வரா என்பவரின் பிரேதப் பரிசோதனையும் கண்டி தேசிய வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி சிவசுப்ரமணியத்தினால் இன்று (14) நடைபெற்றது. கழுத்தை நெரித்ததால் தான் மரணம் என்றும், பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை என்றும் மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கம்பளை வெலிகல்ல – எல்பிட்டிய பகுதியை சேர்ந்த 22 வயதான பாத்திமா முனவ்வரா படுகொலை செய்யப்பட்டமை அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. கடந்த வாரம் காணாமல் போயிருந்து யுவதியின் சடலம் நேற்று மீட்கப்பட்டு கண்டி தேசிய … Read more

இலங்கை தமிழரசு கட்சி கூட்டத்தின் போது ஏற்பட்ட மோதல் சம்பவம்! இம்மானுவல் ஆர்னோல்ட்டின் வீட்டிற்கு சென்ற பொலிஸார்

இலங்கை தமிழரசு கட்சி கூட்டத்தின் போது ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக யாழ்ப்பாண மாநகர சபையின் முன்னாள் முதல்வரான இம்மானுவல் ஆர்னோல்ட்டின் வீட்டிற்கு இன்று (14.05.2023) பொலிஸார் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  பொலிஸார் விசாரணைக்காக சென்ற போது யாழ்ப்பாண மாநகர சபையின் முன்னாள் முதல்வர் வீட்டில் இருக்கவில்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது.  இலங்கைத் தமிழரசுக் கட்சி இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண தொகுதி கிளைக் கூட்டம் நேற்று (13.05.2023) நடைபெற்றது.  கூட்டத்தின் பின்னர் இரண்டு நபர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. … Read more

கடலில் பயணம் செய்வோர் மற்றும் மீனவ சமூகத்ரிற்கு எச்சரிக்கை

இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு 2023 மே 14 (இன்று) அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. கிழக்கு – மத்திய வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக வலுவடைந்த ஆழஉhய’ என்ற மிக மிகப் பாரிய சூறாவளியானது நேற்று, 2023 மே 13ஆம் திகதி 23.30 மணிக்கு வட அகலாங்கு 17.90 N இற்கும் கிழக்கு … Read more

தமிழரின் உயிர் காத்த முள்ளிவாய்க்கால் கஞ்சி! மடிந்து போன மனித நேயம் (Video)

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தினை முன்னிட்டு முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் நிகழ்வுகள் வடக்கு, கிழக்கு பகுதிகளில் மக்களால் இன்றும் மூன்றாவது நாளாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. “கஞ்சி” ஈழத் தமிழ் மக்களால் மறக்க முடியாத ஒன்று. உண்ண உணவின்றி உறங்க குடில் இன்று இரத்த வாசத்தை சுவாசித்துக் கொண்டு திரிந்த எமக்கு உண்பதற்காக இருந்த ஒரே ஒரு உணவு கஞ்சி தான். லட்சக்கணக்கான மக்களின் உயிர்காத்த இந்த கஞ்சியை முள்ளிவாய்க்கால் கஞ்சி என்ற பெயருடன் அந்த மாபெரும் அவலத்தின் நினைவை … Read more