நாடு முழுவதும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-45 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று

நாட்டின் பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்பு பிரிவால் வெளியிடப்பட்டுள்ளது. 2023 மே 14ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2023 மே 14ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில … Read more

இலங்கை மக்களுக்கு மீ்ண்டும் நெருக்கடி! மும்மடங்கு அதிகரித்துள்ள விலைகள்

நாட்டில்  மரக்கறிகளின் விலை கடுமையாக  அதிகரித்துள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது.  கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் மரக்கறிகளின் விலைகள் இவ்வாறு மும்மடங்கு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தேவையான அளவு மரக்கறிகள் சந்தைக்கு கிடைக்காமையினால்  மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளதாக வர்த்தகர்கள் குறிப்பிடுகின்றனர். பாரியளவில் குறைந்துள்ள உற்பத்தி எவ்வாறிருப்பினும் மரக்கறிகளின் விலையானது மேலும் அதிகரிப்பதற்கான சாத்தியம் உள்ளதாகவும்  தெரிவிக்கப்படுகின்றது.  கடந்த எப்ரல் மாதம் அதிகளவிலான மரக்கறிகள் சந்தைக்கு கிடைக்கப்பெற்றமையினால் விலையானது குறைவடைந்து காணப்பட்டது. எனினும், இம்மாதம் மரக்கறிகளின் உற்பத்தி பாரியளவில் குறைவடைந்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிிவக்கின்றன.  நாட்டு … Read more

பாராளுமன்ற துறைசார் மேற்பார்வை குழுவில் பங்கேற்க இளைஞர்களுக்கு வாய்ப்பளித்த முதல் நாடு இலங்கையாகும்

இளைஞர் கோரிய மாற்றத்தை நாம் ஏற்படுத்தியுள்ளோம். இன்று கடமையை செய்தால் இன்னும் 25 வருடங்களில் பெருமிதம் கொள்ள முடியும் – இளையவர்களிடம் ஜனாதிபதி வேண்டுகோள். இன்னும் 25 ஆண்டுகளில் நாடு வெற்றிப் பாதையை எட்டியிருக்கும் போது, “நாம் எடுத்த நடவடிக்கையே நாட்டின் முன்னேற்றத்திற்கு வழிவகுத்தது” என இளைஞர் சமூகம் பெருமிதம் கொள்ள முடியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பத்தரமுல்லை வோடர்ஸ் ஹெட்ஜில் நேற்று (13) நடைபெற்ற பாராளுமன்ற துறைசார் மேற்பார்வை குழுவின் இளம் உறுப்பினர்களை தெளிவுபடுத்துவதற்கான … Read more

அனுசரணையாளரின் உதவியுடன் படையினரால் பொதுமக்களுக்கு நீர் சுத்திகரிப்பு நிலையம்

இராணுவத்தின் சட்ட பணிப்பாளர் நாயகம் பிரிகேடியர் ஆர்டீஓ பத்திரனகே அவர்களின் தலைமையில் நன்கொடையாளர்கள் குழு வழங்கிய அனுசரணையில் மொனராகலை கோனகனர பிரதேசத்தில் வசிப்பவர்களுக்கான நீர் சுத்திகரிப்பு நிலையம் திறந்து வைக்கப்பட்டதுடன், மொனராகலை கோனகனர கனிஷ்ட பாடசாலையின் 310 மாணவர்களுக்கு பாடசாலை எழுதுபொருட்கள் மற்றும் கற்றல் உபகரணம் (9) விநியோகிக்கப்பட்டது. மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 12 வது காலாட் படைப்பிரிவின் 121 வது காலாட் பிரிகேடின் 20 வது இலங்கை சிங்கப் படையணியின் படையினர், கோனகனர பிரதேசத்தில் … Read more

இலங்கையில் பேருந்துகளில் வரும் புதிய நடைமுறை

பயணிகள் போக்குவரத்து பேருந்துகளின் இயக்கத்தை 24 மணி நேரமும் கண்காணிக்க, பேருந்துகளில் ஜி.பி.எஸ். கருவிகளை நிறுவ அரசாங்கம் முடிவு செய்துள்ளது. நெடுஞ்சாலையில் ஒரு நிறுத்தத்தில் நீண்ட நேரம் நிறுத்தப்படும் பயணிகள் பேருந்துகளை கண்டறிந்து அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க இந்த ஜி.பி.எஸ். உதவும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.  இலங்கை போக்குவரத்து சபை இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளிலும் அனைத்து தனியார் பேருந்துகளிலும் GPS வசதிகள் பொருத்தப்படும். உபகரணங்கள் நிறுவும் திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படும் என தேசிய போக்குவரத்து … Read more

ஓய்வுபெறும் மேஜர் ஜெனரல் ஏஎல் இளங்ககோன் அவர்களுக்கு இராணுவத் தளபதி வாழ்த்து

முல்லைத்தீவு முன்னரங்கு பராமரிப்புப் பிரதேசத்தின் தளபதியும், இலங்கை இராணுவப் பொலிஸ் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஏஎல் இளங்ககோன் அவர்கள், 34 வருடங்களுக்கும் மேலாக இராணுவத்தில் சேவையாற்றி ஓய்வு பெறுவதற்கு ஆறு நாட்களுக்கு முன்னர் இராணுவத் தளபதியின் அலுவலகத்திற்கு அவரது குடும்ப உறுப்பினர்களுடன் வெள்ளிக்கிழமை (11) பிற்பகல் அழைக்கப்பட்டிருந்தார். இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள், ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியுடனான சந்திப்பின் போது அனுபவம் வாய்ந்த ஒழுக்க அதிகாரியாகப் … Read more

பிரான்ஸில் காணாமல் போன இலங்கையின் முப்படையைச் சேர்ந்த ஏழு வீரர்கள்!

2023ஆம் ஆண்டுக்கான உலக இராணுவ டிரையத்லான் செம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற இலங்கையின் முப்படையைச் சேர்ந்த ஏழு வீரர்கள் பிரான்சில் காணாமல் போயுள்ளனர். அதன்படி, நிகழ்விற்காக பிரான்ஸ் சென்ற 13 பேர் கொண்ட தூதுக்குழுவின் தலைவரிடமிருந்து இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த நான்கு அதிகாரிகள், கடற்படை வீரர் ஒருவர் மற்றும் இலங்கை விமானப்படையின் இரண்டு அதிகாரிகள், தமது கடவுச்சீட்டுகளை திருடி, குழுவிடம் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக நம்பப்படுகிறது. திருடப்பட்ட கடவுச்சீட்டுக்கள் இந்த நிகழ்வில் பங்கேற்பதற்காக முப்படையைச் சேர்ந்த ஐந்து ஆண்கள், … Read more

இராணுவத்தின் முயற்சியில் பெரியவளையன்கட்டு மாணவர்களுக்கு 40 ஜோடி காலணிகள்

வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 56 வது காலாட் படைப்பிரிவின் 562 வது காலாட் பிரிகேட் படையினரின் ஒருங்கிணைப்பின் மூலம் வவுனியா, பெரியவளையன்கட்டு, சின்னவளையன்கட்டுப் பாடசாலையில் கல்வி கற்கும் குறைந்த வருமானம் பெறும் குடும்பத்தைச் சேர்ந்த 40 மாணவர்களுக்கு பாடசாலைக் காலணிகள் வழங்கப்பட்டன. இராணுவத்தின் முயற்சிக்கு பதிலளிக்கும் வகையில், 562 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் ஜேஎம்ஏ ஜயசேகர ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, டிஎம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் திரு. ஆர்எம் … Read more

552 வது காலாட் பிரிகேட் படையினர் பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு உணவு வழங்கல்

யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 55 வது காலாட் படைப்பிரிவின் 552 வது காலாட் பிரிகேட் படையினர் கடந்த செவ்வாய்கிழமை (9) ஆணையிறவுப் பகுதியைக் கடந்து செல்லும் ‘கதிர்காமம் பாதயாத்திரை’ பக்தர்களுக்கு குளிர்பானம் மற்றும் மருத்துவ சிகிச்சைகளை வழங்கினர். ஒவ்வொரு வருடமும் தென்னிலங்கை ருஹுணு மஹா கதிர்காம ஆலயத்தின் திருவிழாவில் பங்குபற்ற யாழ் பக்தர்கள் பாத யாத்திரையை மேற்கொள்கின்றனர். 55 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எம்கேயூபீ குணரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசி மற்றும் … Read more

யாழில் தமிழரசுக் கட்சி கூட்டத்தில் மோதல்! ஒருவர் வைத்தியசாலையில்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இன்றைய(13.05.2023)யாழ்ப்பாண தொகுதி கிளைக் கூட்டத்துக்கு பின்னர் இரண்டு நபர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் காயமடைந்த ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வாய்தர்க்கமே மோதலுக்கு காரணம்  குறித்த கூட்டத்திற்கு பின்னர் இரண்டு நபர்களிடையே ஏற்பட்ட வாய்தர்க்கமே மோதலுக்கு காரணம் என தெரியவந்துள்ளது. தாக்குதலில் காயமடைந்தவர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளதுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் … Read more