வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள மொக்கா சூறாவளி! கடலோரப்பகுதிகளின் எச்சரிக்கை நிலை நீடிப்பு

வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிக்கையின்படி, தென்கிழக்கு வங்காள விரிகுடா கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள “மொக்கா ” புயல் தற்போது தீவிர புயலாக உருவாகியுள்ளது. இந்த சூறாவளி தற்போது பங்களாதேஷை நோக்கி நகர்ந்து வருவதாகவும் அதன் தாக்கம் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் கடும் மழை பெய்யக்கூடும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடல் அலை வேகம் வங்கக் கடலில் 2023-ம் ஆண்டு வீசிய முதல் புயல் மொக்கா வங்காளதேசத்தின் சிட்டகாங் மற்றும் காக்ஸ் பஜார் பகுதிகளுக்கு 14 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் … Read more

“ஹெல்த் டுவரிஸம்” மேம்படுத்துவதில் அரசு கவனம்

மக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதுடன், நாட்டுக்கு அந்நியச் செலாவணியை பெற்றுத்தரும் துறையாகவும் தாதியர் சேவையை மேம்படுத்த வேண்டும் – சர்வதேச தாதியர் தின நிகழ்வில் சாகல ரத்நாயக்க தெரிவிப்பு. “ஹெல்த் டுவரிஸம்” (Health Tourism) மூலம் நாட்டுக்கு வருமானம் ஈட்டும் வேலைத்திட்டம் ஒன்றை தயாரிக்க எதிர்பார்க்கப்படுவதாக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார். இலங்கை போன்ற அழகிய சூழலைக் கொண்ட நாட்டில் “ ஹெல்த் டுவரிஸம்” வேலைத்திட்டம் சாதகமாக … Read more

நாட்டின் பல பாகங்களுக்கு இடியுடன் கூடிய மழை

நாட்டின் பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்பு பிரிவால் வெளியிடப்பட்டுள்ளது. 2023 மே 13ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2023 மே 12ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ … Read more

இலங்கையில் திருமணமாகி 2 மாதங்கள் – விபத்தில் பலியான இளம் தம்பதி

 இரத்தினபுரி, திரிவானாகெட்டிய பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் மற்றும் டிப்பர் ஒன்று மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளம் தம்பதி ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கஹவத்த ஓபாத பிரதேசத்தை சேர்ந்த 24 வயதுடைய எஸ்.மோகன் ராஜ் மற்றும் புஷ்பிகா ஹர்ஷனி தம்பதியே உயிரிழந்துள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி இரண்டு மாதங்களோயான நிலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது அவர்கள் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக இரத்தினபுரி மரண விசாரணை அதிகாரி தெரிவித்தார். உயிரிழந்த இருவரின் பிரேத … Read more

உரத்திற்கான வவுச்சர்கள் மே மாத இறுதிக்குள்…

உரத்திற்கான வவுச்சர்கள் மே மாத இறுதிக்குள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இந்த வவுச்சர்கள் இன்று அச்சிடுவதற்காக அரசாங்க அச்சகத்திற்கு வழங்கப்படும். அவற்றை 10 நாட்களுக்குள் அச்சடித்து முடிக்க முடியும். இந்த வவுச்சர்களை குறிப்பாக பண்டி உரம் கொள்வனவு செய்வதற்காக பயன்படுத்தவும். அத்துடன் இந்த வவுச்சர் ஊடாக விருப்பமான … Read more

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்தில் புலனாய்வாளர்களால் ஏற்பட்ட பதற்ற நிலை! (Video)

திருகோணமலை – நெல்சன் திரையங்கிற்கு முன்பாக பௌத்தமயமாக்கல் தடுத்து நிறுத்தவேண்டும் என்று வலியுறுத்தி யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றினைந்து போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.  திருகோணமலை மாவட்டத்தில் இன்று (12.05.2023) காலை முதல் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்றிட்டம் யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட நிலையிலே இவ்வாறு போராட்டமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் சுமார் 10 இற்கும் மேற்பட்ட மோட்டார் வாகனங்களில் ஒவ்வொரு பகுதிக்கும் மாணவர்கள் பயணித்த வாகனத்தை பின்தொடர்ந்து வருகை தந்த புலனாய்வாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட  மாணவர்களை ஒளிப்படம் எடுத்து … Read more

தேர்தல் வேட்பாளர்களான அரச உத்தியோகத்தர்கள் வாக்களிக்கும் நிலையங்களுக்கு அருகில் உள்ள தொகுதிகளில் பணியாற்றுவது குறித்து சிக்கல்கள் இருந்தால் தீர்வு வழங்கப்படும்

தேர்தல் வேட்பாளர்களான அரச உத்தியோகத்தர்கள், தேர்தலில் போட்டியிடும் இடத்திற்கு அண்மையிலுள்ள பிரதேசங்களில் சேவையில் ஈடுபடுவது தொடர்பில் சிக்கல்கள் காணப்படுமிடத்து கலந்துரையாடி தீர்வு வழங்கப்படும் என்று பிரதமர் தினேஷ் குணவர்தன நேற்று (11) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். தேர்தல் சட்டம் ஒன்று இருப்பதால், பொது நிர்வாக அமைச்சின் அதிகாரிகளால் மாத்திரம் அந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது. எனவே தேர்தல் ஆணைக்குழுவின் அறிவிப்பு இருக்க வேண்டும் என்றும் பிரதமர் கூறினார். அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கை தொடர்பில் சிலருக்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக, பாராளுமன்ற … Read more

யாழில் விசேட நுளம்புக் கட்டுப்பாட்டு செயற்திட்டம் – மே 16, 17 ஆம் திகதிகளில்

யாழ் மாவட்டத்தில் டெங்கு நோய் பரம்பல் அதிகரித்து வருகின்ற நிலையில் தற்போதைய காலநிலை காரணமாக டெங்கு நோய் பரப்பும் நுளம்புகள் அதிகரிப்பதற்கு அபாயநிலை காணப்படுகின்றது. இதனை கருத்தில் கொண்டு மே மாதம் 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் யாழ் மாவட்டத்தில் விசேட நுளம்பு கட்டுப்பாட்டு செயற்திட்டத்தினை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக யாழ் மாவட்ட செயலகம் அறிவித்துள்ளது. இந்நிலையில் நுளம்பு கட்டுப்பாட்டு நடவடிக்கையினை முன்னெடுக்காதுவிடின் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அடுத்துவரும் மாதங்களில் அதிகரித்துச் செல்லும் என அஞ்சப்படுகின்றது. சுகாதார … Read more

கல்வியில் உச்சம் தொட்ட வடக்கு மக்கள்! திட்டமிட்டு சிதைத்த சிங்களம் – நில அபகரிப்பை தொடரும் புத்தர்

நாம் வாழும் இந்த பரந்த உலகு நாளுக்கு நாள் பல்வேறு மாற்றங்களை சந்தித்து வருகின்றது. ஆரம்பகாலகட்டம் தொடக்கம் தற்போது வரை புதுப் புது மாற்றங்கள் அரங்கேறி வருகின்றன. அவற்றில் பல அதிசயங்களாகவும், பிரம்மிப்பூட்டும் ஆச்சர்யங்களாகவும், இன்னும் பல விடை தெரியா மர்மங்களாகவும் உள்ளன. கற்கால மனிதனின் சிந்திக்கும் திறன் வளர்ச்சியடைய ஆரம்பித்த காலத்தில் இருந்து மனிதர்கள் நாகரீகத்தை நோக்கிய பயணத்தை ஆரம்பித்தனர். அவ்வாறு ஆரம்பித்த பயணத்தில் உதித்ததே தொடர்பாடலுக்கான ஒரு மொழி. ஒரு மொழியின் வளர்ச்சி என்பது … Read more

ஆசியாவின் ஒற்றுமைக்கு இடையூறு விளைவிக்கும் எந்தவொரு செயற்பாட்டிற்கும் இலங்கை ஆதரவளிக்காது – ஜனாதிபதி

ஆசியாவின் முதலாவது மாநாட்டு மண்டபமான பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபம் நிர்மாணிக்கப்பட்ட 50 ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது.! ஆசியாவின் ஒற்றுமைக்கு இடையூறு விளைவிக்கும் எந்தவொரு செயற்பாட்டிற்கும் இலங்கை ஆதரவளிக்காது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார். ஆசிய பூகோள அரசியலுக்கும் பசுபிக் பிராந்திய அரசியலுக்கும் இடையில் பல வேறுபாடுகள் காணப்படுவதாகவும், அந்த வேறுபாடுகளை நாம் உணர்ந்து சமாதானத்தையும் ஸ்திரத்தன்மையையும் பேணுவதற்கு செயற்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். அடுத்த இரண்டு … Read more