காணி கட்டளைச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி பணிப்புரை

நடைமுறை அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு ஏற்றவாறு காணிக் கட்டளைச் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இப் பணிகளை துரிதப்படுத்துவதற்கு தகுதியான குழுவொன்றினை நியமிக்குமாறும் ஜனாதிபதி அறிவுரை வழங்கினார். காணி முகாமைத்துவம் தொடர்பிலான நிறுவனங்களின் சட்ட ஏற்பாடுகளில் திருத்தம் மேற்கொள்வது மற்றும் புதிய சரத்துக்களை திருத்துவது உள்ளீடு செய்வது தொடர்பில் ஜனாதிபதி அலுவலகத்தில் (10) நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். காலணித்துவ ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட காணிச் … Read more

உலகின் முதலாவது சர்வதேச சுற்றாடல் பல்கலைக்கழகம் இலங்கையில் நிறுவப்படும்

காலநிலை மாற்றத்தை தடுப்பதற்குப் பதிலாக அதனை தாமதப்படுத்தல் மாத்திரமே இதுவரை நடந்துள்ளது- சுற்றுச்சூழல் முன்னோடி பதக்கம் வழங்கும் விழாவில் ஜனாதிபதி தெரிவிப்பு. உலகின் முதலாவது சர்வதேச சுற்றாடல் பல்கலைக்கழகம் இலங்கையில் ஸ்தாபிக்கப்படும் எனவும், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கு உலக நாடுகளுக்கு ஆதரவளிப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். காலநிலை மாற்றம் இன்று உலகிற்கு சவாலாக உள்ள போதிலும் அது தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்வதற்கான நிலையமொன்று கிடையாது என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, ஏனைய நாடுகளை இணைத்து அதற்கான … Read more

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை குறைப்பு

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை குறைக்கப்பட்டுள்ளது.  15ஆம் திகதி நடைமுறைக்கு வரும் இதன்படி ஒரு கிலோ கிராம் பால் மாவின் விலை 200 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.  மே, 15ஆம் திகதி முதல் நடுமறைக்கு வரும் வகையில் இந்த விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.   நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW  Source link

கடற்படை வரலாற்றில் முதன்முறையாக பெண் மாலுமிகள் கடல் கடமைகளுக்கு நியமிப்பு

கடற்படை பெண் மாலுமிகளுக்கான கடல் கடமைகளுக்கு வாய்ப்பை திறந்து வைக்கும் வகையில் இலங்கை கடற்படை வரலாற்றில் முதல் தடவையாக இரண்டு (02) பெண் அதிகாரிகள் மற்றும் ஐந்து (05) பெண் மாலுமிகள் அடங்கிய முதலாவது பெண் மாலுமிகள் குழு கடல் கடமைகளுக்காக நேற்று காலை (11) இலங்கை கடற்படை கப்பல் கஜபாஹுவில் இணைக்கப்பட்டனர். இதுவரை ஆண் மாலுமிகளுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்ட கப்பல்கள் மற்றும் படகுகளின் கடமைகளுக்கான வாய்ப்பை பெண் மாலுமிகளுக்கு வழங்கும் கடற்படையின் முடிவின்படி, 2022 அக்டோபர் மாததில், … Read more

அரச ஊழியர்களின் சம்பளம்! எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை

வேட்பாளர்களான அரசாங்க ஊழியர்களின் சம்பளம் உள்ளிட்ட பெருமளவு பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது என பிரதமர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார். எஞ்சிய சிறுசிறு பிரச்சினைகள் தொடர்பில் மீண்டும் தேர்தல் ஆணைக்குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் உறுதி அளித்துள்ளார்.  நேற்றையதினம்(11.05.2023) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின் போது, நாடாளுமன்ற உறுப்பினர்களான தயாசிறி ஜயசேகர மற்றும் அனுர பிரியதர்ஷன யாப்பா அகியோர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் பிரதமர்  மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.  தொடர்ந்தும் தெரிவிக்கையில், முதலில் … Read more

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சர்வதேச தொழிலாளர் சம்மேளனத்தின் (ILO) பங்களிப்பு அவசியம்

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சமூக மற்றும் பொருளாதார பாதுகாப்புக்கு சர்வதேச தொழிலாளர் சம்மேளனத்தின் (ILO) பங்களிப்பும் அவசியம் என நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். சர்வதேச தொழிலாளர் சம்மேளனத்தின் உயர்மட்ட பிரதிநிதிகளுக்கும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸினருக்கும் இடையிலான சந்திப்பு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமையகமான சௌமிய பவனில் (10) நடைபெற்றது. இதன்போது மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் உட்பட தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், அவர்களுக்கான பாதுகாப்பு பொறிமுறை, சர்வதேச தொழில் … Read more

ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தைக்கு செல்லும் கட்சிகளுக்கு காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் விடுத்துள்ள கோரிக்கை! (Photos)

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் பேச்சுவார்த்தைக்கு போகும் கட்சிகளுக்கு வடக்கு- கிழக்கு வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் வேண்டுகோளொன்றை விடுத்துள்ளது.  இது தொடர்பில் வடக்கு- கிழக்கு வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில், மௌனிக்கப்பட்ட யுத்தம் “2009 யுத்தம் மௌனிக்கப்பட்டதை தொடர்ந்து கையளிக்கப்பட்ட சரணடைந்த கூட்டிச் செல்லப்பட்ட உறவுகளும், வெள்ளை வான்களிலும் ஆயுதம் முனைகளிலும் கடத்தப்பட்ட உறவுகளும் சிங்கள அரசாலும் அதன் இராணுவ துணைக் குழுக்களாலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டனர். அவர்களைத் தேடி 14 வருடங்களாக … Read more

இலங்கை வளர்ந்து வரும் அணி 68 ஓட்டங்களால் வெற்றி

ஜப்பான் தேசிய அணிக்கெதிரான 5 போட்டிகள் கொண்ட ரி20 கிரிக்கெட் தொடரில் நேற்று (11) இடம்பெற்ற இரண்டாவது போட்டியில் இலங்கையின் வளர்ந்து வரும் அணி 68 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது. டோக்கியோவில் உள்ள சனோ சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியை வென்ற ஜப்பான் அணி, வளர்ந்து வரும் இலங்கை அணியை முதலில் துடுப்பாட பணித்தது. இதற்கமைய களமிறங்கிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுக்கு 125 ஓட்டங்கள் எடுத்தது. இதனைதொடர்ந்து விளையாடிய … Read more

இலங்கை, பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான் 3ஆவது ரி20 போட்டி இன்று

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான தொடரை தீர்மானிக்கும் 3ஆவது போட்டி இன்று (12) கொழும்பு எஸ். எஸ். சி. மைதானத்தில் பகல் 1 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இதேவேளை நேற்று (11) நடைபெற்ற பங்களாதேஷ் மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது ரி20 போட்டியில் இலங்கை மகளிர் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் மகளிர் அணி 18.3 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 100 ஓட்டங்களை பெற்றது. இதனைதொடர்ந்து … Read more

நாட்டின் பல இடங்களில் பிற்பகல் அல்லது இரவில் மழை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்பு பிரிவால் வெளியிடப்பட்டுள்ளது. 2023 மே 12ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு2023 மே 12ஆம் திகதி அதிகாலை 5.30 மணிக்கு மணிக்கு வெளியிடப்பட்டது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 … Read more