தீவிரமடையும் ட்ரோன் தாக்குதல்! போரின் அடுத்தகட்ட நகர்விற்கு ரஷ்யா செய்த இரகசிய சதி அம்பலம்

ரஷ்ய ஜனாதிபதி மாளிகையான கிரெம்ளின் மாளிகையின் கோபுரத்தை நோக்கி மேற்கொள்ளப்பட்ட ஆளில்லா ட்ரோன் தாக்குதல் ரஷ்யாவின் இரகசிய சதியென அமெரிக்காவின் `The Institute for the Study of War’ அமைப்பு தெரிவித்துள்ளது. மே 9 ஆம் திகதி நடைபெற்ற `வெற்றி தின’ அணிவகுப்புக்கு முன்பாக நடத்தப்பட்ட இந்த தாக்குதல் திட்டமிட்ட பயங்கரவாதச் செயல் எனவும் தெரிவித்துள்ளது. ரஷ்ய கூட்டமைப்பின் தலைவரை கொல்ல இரண்டு ஆளில்லா ட்ரோன்களை கிரெம்ளின்மீது உக்ரைன் ஏவியிருந்ததாக உக்ரைன் ரஷ்யா பகிரங்கமாக குற்றம்சாட்டியிருந்தது. … Read more

களுத்துறை மாணவி விடுதியிலிருந்த போது ஆசிரியரிடமிருந்து வந்த அழைப்பு! விடுதி உரிமையாளரின் மனைவியும் சிக்கினார்

களுத்துறையில் மர்மமான முறையில் உயிரிழந்த பாடசாலை மாணவிக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்ட ஆசிரியரொருவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. களுத்துறையில் உயிரிழந்த 16 வயதான பாடசாலை மாணவியின் தொலைபேசி தரவுகளை கொண்டு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரியவருகிறது. விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட ஆசிரியர் இந்த நிலையில் குறித்த மாணவி உயிரிழந்த தினத்தில் அவர் விடுதியில் தங்கியிருந்த காலப்பகுதியில், மாணவியின் தொலைபேசிக்கு அழைப்பை மேற்கொண்ட ஆசிரியர் ஒருவர் நேற்று (10.05.2023) விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன்போது “குறித்த மாணவியை … Read more

ஜனாதிபதியுடன் வடக்கு- கிழக்கு எம்.பிக்கள் சந்திப்பு! கலந்துரையாடப்பட்ட முக்கிய விடயங்கள் (Video)

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் வடக்கு- கிழக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை இன்றைய தினம் (11.05.2023) நடைபெற்றது. இச்சந்திப்பின் போது, 1985 ஆம் ஆண்டு இருந்த வரைப்படத்திற்கு அமைய காணிகளை விடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் எம்.பிக்களினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மக்களின் அடிப்படை பிரச்சினைகள்  அதன்படி இன்றைய தினம் நடைபெற்ற சந்திப்பில் காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், அரசியல்கைதிகள் விவகாரம், காணிப்பிரச்சினை, பயங்கரவாதத் தடைச்சட்டம் குருந்தூர் மலை விவகாரம் மற்றும் நெடுக்குநாறி மலை விவகாரம் … Read more

வடக்கு மாகாணத்தில் பல தடவைகள் மழை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்பு பிரிவால் வெளியிடப்பட்டுள்ளது.  2023 மே 11ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2023 மே 10ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் … Read more

தொழில் சட்ட திருத்தத்திற்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஒத்துழைப்பு

தற்போதுள்ள தொழில் சட்டத்தில் மேற்கொள்ளப்படும் திருத்த முயற்சிக்கு தமது அமைப்பு ஒத்துழைப்பு வழங்கும் என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. ஒருங்கிணைந்த தொழிலாளர் சட்டத்தைத் தயாரிப்பதற்காக அவசிய பூரண சட்ட ஒத்துழைப்பை வழங்குவதற்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக, தொழிலாளர் சட்டத்தை மாற்றுதல் தொடர்பாக தொழில் அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் அபிப்பிராயத்தைப் பெறும் அமர்வில் இணைந்து கொண்டு, சட்டத்தரணிகள் சங்கத்தின் தொழிலாளர் சட்டம் தொடர்பான ஆலோசகர் சட்டத்தரணி கனிஷ்க வீரசிங்க தெரிவித்தார். தொழிலாளர் சட்டத்தை விரைவாக … Read more

எக்ஸ்பிரஸ் பேர்ள் விபத்தினால் பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கு நான்காம் கட்ட நட்டஈடு

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தினால் பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கு நான்காம் கட்ட நட்டஈடாக சுமார் 160.5 கோடி ரூபாய்க்கான காசோலைகள் வழங்கும் நிகழ்வு இன்று (11) கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில், கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த டி சில்வாவின் பங்கேற்புடனும் கடற்றொழில் அமைச்சில் நடைபெற்றது. கடற்றொழில் அமைச்சின் முயற்சியினால், எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் கடற்றொழில் மேற்கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டதன் காரணமாக தமது வாழ்வாதாரத்தை இழந்த 15,000 கடற்றொழிலாளர்கள் மற்றும் … Read more

DREAM11 GAMECHANGER – இலங்கையின் மதீஷ பத்திரன

2023 இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் நேற்று (10) சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கிடையில் நடைபெற்ற போட்டியில், சிறப்பாக பந்து வீசிய மதீஷ பத்திரன 37 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தி சென்னை அணிக்கு இலகுவான வெற்றியைப் பெற்றுத் தந்தார். போட்டியின் 55ஆவது போட்டியில் நாணய சுழற்சியை வென்ற சென்னை அணி தலைவர் மகேந்திர சிங் தோனி முதலில் துடுப்பாட்டத்தை செய்ய தீர்மானித்தார். இதற்கமைய 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி … Read more

புகையிரதத் திணைக்களத்திற்கு புதிய ஊழியர்கள் 3000 பேரை உள்வாங்கவிருப்பதாக வெளிவந்த செய்தி முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது – அமைச்சர் பந்துல குணவர்தன

ஆரசாங்க நிறுவனங்களை மறுசீரமைத்தலின் கீழ் சுயமாக சேவையிலிருந்து இளைப்பாற்றுவதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும், அதற்கிணங்க புகையிரதத் திணைக்களத்தின் சில ஊழியர்கள் சுயமாகவே ஓய்வுபெற்றுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடக அமைச்சர் பேராசிரியர் பந்துலகுணவர்தன இன்று (11) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அரச நிறுவனங்களை மூடி, ஊழியர்களை நீக்குதல் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாஷிம் கேட்ட வாய்மொழி மூலமான கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். புகையிரதத் திணைக்களத்திற்குப் புதிய ஊழியர்கள் 3000 பேரை உள்வாங்குவது தொடர்பாக வெளியிடப்படும் … Read more

முதல் ரி20 போட்டியில் இலங்கை வளர்ந்து வரும் அணி வெற்றி

ஜப்பான் தேசிய கிரிக்கெட் அணிக்கு எதிராக நேற்று (10) இடம்பெற்ற முதலாவது ரி 20 கிரிக்கெட் போட்டியில் வளர்ந்து வரும் இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டோக்கியோவில் உள்ள சனோ சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியை வென்ற ஜப்பான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுக்கு 97 ஓட்டங்களை எடுத்தது. ஜப்பான் அணி சார்பாக கெண்டோல் கடோவகி பிளெமிங் அதிகபட்சமாக 21 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, இறுதி வரை … Read more

காலிமுகத்திடல் போராட்ட இயக்கத்தின் முன்னணி சமூக ஆர்வலருக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்! சஜித் வலியுறுத்து (Video)

காலிமுகத்திடல் போராட்ட இயக்கத்தின் முன்னணியில் இருந்த சமூக ஆர்வலரான பியத் நிகேஷலவிற்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என நாடாளுமன்றத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்றில் இன்றைய தினம் (11.05.2023)  கருத்து தெரிவிக்கும் போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். உடனடியாக பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் அத்துடன் கடுவளையின் முன்னாள் பிரதி மேயர் சந்திக அபேரத்னவால், பியத் நிகேஷல தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலும் அவர் இதன்போது கேள்வி எழுப்புள்ளார். மேலும், பியத் நிகேஷலவுக்கு உடனடியாக பாதுகாப்பு வழங்கப்பட … Read more