மன்னார் கடல் பகுதியில் 10 வர்த்தக வெடிபொருள் குச்சிகளுடன் 07 சந்தேகநபர்கள் கைது

இலங்கை கடற்படையினரால் (08) மன்னார் வங்காலே கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, குறித்த கடற்பகுதியில் வெடிபொருட்களை பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொள்ள தயாராக இருந்த ஏழு (07) பேர் வாட்டர் ஜெல் எனப்படும் வர்த்தக வெடிமருந்துகளின் பத்து (10) குச்சிகள், பதினெட்டு (18) மின்சாரம் அல்லாத டெட்டனேட்டர்கள் மற்றும் சுழியோடி உபகரணங்களுடன் ஒரு (01) டிங்கி படகு கைப்பற்றப்பட்டன. வெடிபொருட்களை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் சட்டவிரோத மீன்பிடித்தலால் கடல்வாழ் உயிரினங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுக்கும் … Read more

கடலில் பயணம் செய்வோருக்கும், மீனவ சமூகத்திற்கும் எச்சரிக்கை

இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்பு பிரிவால் வெளியிடப்பட்டுள்ளது.  அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு 2023 மே 10ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. தென் கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த தாழமுக்கமானது ஆழமான ஒரு தாழமுக்கமாக வலுவடைந்து 2023 மே 10ஆம் திகதி 08.30 மணிக்கு வட அகலாங்கு 8.80 N இற்கும் கிழக்கு நெடுங்கோடு … Read more

ஒரே வாரத்தில் என்னால் டெங்குவை கட்டுப்படுத்த முடியும்! மேர்வின் சில்வா

ஒரே வாரத்தில் தம்மால் டெங்கு பரவுகையை கட்டுப்படுத்த முடியும் என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். அரசாங்கம் தமக்கு சந்தர்ப்பம் வழங்கினால் டெங்குவை கட்டுப்படுத்திவிட முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். டெங்கு ஒழிப்பு பிரிவின் உயர் அதிகாரிகள் மற்றும் சுகாதார தரப்பினருடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். டெங்கு ஒழிப்பு திட்டம் டெங்கு ஒழிப்பு திட்டத்தில் அமைச்சர்கள் பங்கேற்பதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தற்போதைய சுகாதார அமைச்சர் தமது நல்ல நண்பர் எனவும், … Read more

சிங்கள இடதுசாரிகளின் மௌனமும் பௌத்தமயமாக்கலும்

Courtesy: கூர்மை உலக அரசியலில் வலதுசாரிக் கட்சிகளின் செல்வாக்குகள் சரிந்தவரும் நிலையில், இடதுசாரிகளின் செல்வாக்குகளும் ஆதரவும் அதிகரித்து வருகின்றன. குறிப்பாகத் தென் அமெரிக்க நாடுகளில் கடந்த இரண்டு வருடங்களில் இடதுசாரிகள் அடுத்தடுத்து ஆட்சியை அமைத்து வருகின்றன. ஆனால் இடதுசாரி என்பதன் உண்மையான அடிப்படை மற்றும் இடதுசாரி என்பதற்குரிய சரியான உள் நோக்கங்களைத் தற்கால இடதுசாரிகள் குறிப்பாக தென் அமெரிக்க நாடுகளில் ஆட்சி அமைத்து வரும் இடதுசாரிகள். கொணட்டிருப்பதாகக் கூற முடியாது. இந்த இடதுசாரிகள் தத்தமது நாடுகளின் தேசியச் … Read more

வங்கக்கடலில் தீவிரமடையும் மோக்கா புயல்! இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

வங்கக்கடல் அருகே உருவாகி வரும் மோக்கா புயல் வெள்ளிக்கிழமை (12 ஆம் திகதி) தீவிர புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் ஏற்கனவே குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பல பகுதிகளுக்கு எச்சரிக்கை இதனால், ஒடிசா, மேற்கு வங்கம் உள்ளிட்ட இந்தியாவின் கிழக்கு மாநிலங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளன. இந்திய வானிலை ஆய்வு மையத்தின்படி, மோக்கா புயல் … Read more

யாழ். யுவதியை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய சிங்கள யுவதி! தென்னிலங்கையில் நடந்த சம்பவம்

தென்னிலங்கையில் இடம்பெற்ற விளையாட்டுப் போட்டியில் நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று பலராலும் அதிகம் பேசப்பட்டு வருகிறது. தியகமவில் நடைபெற்ற இளையோருக்கான மெய்வல்லுனர் சாம்பியன்ஷிப்பில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த மாணவி 2 பதக்கங்களை வென்றுள்ளார். வல்வெட்டித்துறை பொலிகண்டி இந்து தமிழ் கலவன் பாடசாலையை சேர்ந்த செல்வகுமார் செவ்வானம் 2 பதக்கங்களை வெற்றிகொண்டார். பரிதிவட்டம் எறிதல்  18 வயதுக்குட்பட்ட மகளிருக்கான பரிதிவட்டம் எறிதலில் தங்கப்பதக்கமும் சம்மட்டி எறிதலில் வௌ்ளிப்பதக்கத்தை வெற்றிகொண்டார். மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்ட யாழ். மாணவி பயன்படுத்தும் தரமற்ற நிலையில் இருந்த … Read more

வடக்கும் கிழக்கும் ஒன்றே! சாணக்கியன் சபையில் ஆவேசம் (Video)

‘‘ஜனாதிபதியுடன் நாளை மறுதினம் (12.05.2023) நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வடக்கு கிழக்கில் இருக்கும் அனைத்து கட்சிகளும் வர வேண்டும்‘‘என நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராசமாணிக்கம் தெரிவித்துள்ளார். இன்று  (09.05.2023) நாடாளுமன்றில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். ‘‘தமிழ் தேசிய அரசியல் பரப்பில் இருக்கும் கட்சிகளுக்கு மக்கள் தந்த பொறுப்பு, மக்கள் தந்த ஆணை எங்களுடடைய மக்களுக்கான நிரந்தரமான ஓர் அரசியல் தீர்வினை பெறுவதாகும்‘‘ என இன்றைய அமர்வில் தெரிவித்துள்ளார்.  அதிகாரப் பகிர்வு தொடர்பில் … Read more

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்பு பிரிவால் வெளியிடப்பட்டுள்ளது. 2023 மே 10ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2023 மே 10ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 … Read more

மதம் தொடர்பில் விடுதலைப் புலிகளின் நிலைப்பாடு இதுவே! தையிட்டியில் நடப்பது என்ன..Video)

தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் இவ்வாறானதொரு பௌத்த மயமாக்கல் தொடர்பில் சிந்தித்ததும் கிடையாது, செயற்பட்டதும் கிடையாது. அவர்கள் ஒரு மத சார்பற்ற கோட்பாட்டில் தான் இருந்தார்கள் என இலங்கைத் தமிழரசுக் கட்சியினுடைய மூத்த துணைத் தலைவரும் வடமாகாண சபையின் அவைத் தலைவருமான சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.   எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.  சிங்கள தேசத்தினுடைய நீண்ட கால நிகழ்ச்சி நிரலே தற்போது அரங்கேறிக் கொண்டிருக்கின்றது.  தற்போது தீவிரமாக,  வெளிப்படையாக … Read more

கடலில் பயணம் செய்வோரும், மீனவ சமூகமும் அவதானமாக இருக்க வேண்டும்

இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்பு பிரிவால் வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு 2023 மே 10ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த தாழமுக்கமானது 2023 மே 9ஆம் திகதி 23.30 மணிக்கு வட அகலாங்கு 8.50 N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 89.30 E இற்கும் அருகில் மையம் … Read more