“அஸ்வெசும” நலன்புரி நன்மைகள் கொடுப்பனவு ஜூலை 01 முதல் வழங்கப்படும்

33 இலட்சத்துக்கும் அதிகமானோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய முன்னெடுக்கப்படும் “அஸ்வெசும”(ஆறுதல்) நலன்புரி நன்மைகள் கொடுப்பனவு வழங்கும் பணிகள் ஜூலை 01 முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அதிகாரங்களுக்கமைய இதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இடைநிலை, பாதிக்கப்படக்கூடிய, வறிய மற்றும் மிகவும் வறுமையான குடும்பங்களுக்கு 04 பிரிவுகளின் கீழ் கொடுப்பனவுகள் வழங்கப்பட உள்ளதோடு, அங்கவீனமானவர்கள், முதியவர்கள் மற்றும் … Read more

ஜனாதிபதியுடன் பேசிய விடயங்களை இந்திய தூதுவரிடம் எடுத்துரைத்த சம்பந்தன்

ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் நடத்திய பேச்சுக்கள் தொடர்பான முழு விவரங்களையும் இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேக்கு எடுத்துரைத்துள்ளதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவரும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் அரசியல் குழுத் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இது குறித்து இன்றைய தினம் (10.05.2023) ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, “நேற்றைய தினம் (09.05.2023) மாலை ஜனாதிபதியுடன் முதலில் சந்திப்பு நடந்தது. வடக்கு … Read more

தேசிய படைவீரர் நினைவுதின நிகழ்வு இம்முறையும் பெருமையுடன் நடைபெறும்

இலங்கையில் முப்பது வருடகால யுத்தத்தின் போது வீரமரணம் அடைந்த படைவீரர்களுக்கு தேசத்தின் நன்றி தெரிவிக்கும் தேசிய படைவீரர் நினைவுதின நிகழ்வு முப்படைத்தளபதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான பூர்வாங்க கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்தில் (08) காலை ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவின் தலைமையில் இடம்பெற்றது. எதிர்வரும் மே 19 ஆம் திகதி பத்தரமுல்லை படைவீரர் நினைவுத்தூபிக்கு முன்பாக தேசிய படைவீரர் … Read more

மகிந்தவுக்கு மரண போஸ்டர் அடித்த நபர்! களுத்துறை மாணவியின் மரணத்துடன் தொடர்புடையவரும் சிக்கலில் – வெளியான தகவல்

மகிந்த ராஜபக்‌சவுக்கு மரண போஸ்டர் அச்சிட்டவர் லங்கா வைத்தியசாலையில் மரணித்துள்ளார். இதுதான் கர்ம வினையால் கிடைப்பவை என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.  காலி முகத்திடல் போராட்டக்களத்தில்  முன்னணியில் இருந்து செயற்பட்டவர்களை கர்ம வினை துரத்திக் கொண்டிருக்கின்றது எனவும், மக்களை தவறாக வழிநடத்திய போராட்டக்காரர்கள் பலர் இறந்துள்ளனர் எனவும் அவர் கூறினார்.  நாடாளுமன்றத்தில் நேற்றையதினம்(09.05.2023) இடம்பெற்ற அமர்வின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.  மகிந்தவுக்கு மரண போஸ்டர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், காலி முகத்திடல் போராட்ட களத்தில் பல்வேறுபட்ட … Read more

சர்வதேச சந்தைகளில் யாழ். வாழைப்பழம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

கிடைக்கின்ற வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்தி உள்ளூர் உற்பத்திகளை சர்வதேச சந்தைகளுக்கு எடுத்துச் செல்லுகின்ற போது, எமது மக்களின் பொருளாதாரத்தினை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்ல முடியும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம், புத்தூரில் அமைக்கப்பட்டுள்ள, வாழைப்பழ ஏற்றுமதி தொழிற்சாலையை அண்மையில் பார்வையிட்ட கடற்றொழில் அமைச்சர் ஆழமான தீர்க்கதரிசனமான முயற்சிகளை முன்னெடுக்கும் அரசாங்க அதிகாரிகளுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார். உலக வங்கி மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் நிதியுதவியில் விவசாய செயற்பாடுகளை நவீனமயப்படுத்தும் திட்டத்திற்கு அமைய … Read more

லண்டன் பௌத்த விகாரையில் ஜனாதிபதி வழிபாடு

மூன்றாம் சார்ள்ஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் பங்கேற்பதற்காக லண்டன் நகருக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (07) லண்டனிலுள்ள பௌத்த விகாரையில் வழிபாடுகளில் ஈடுபட்டார். அதனைத் தொடர்ந்து பௌத்த விகாராதிபதி இங்கிலாந்தின் பிரதான சங்கநாயக்கர் பேராசிரியர் வண.போகொட சீலவிமல நாயக்க தேரரிடம் ஆசி பெற்றுக்கொண்ட ஜனாதிபதி அவருடன் கலந்துரையாடி நலம் விசாரித்தார். பின்னர் வண.போகொட சீலவிமல நாயக்க தலைமையிலான மகா சங்கத்தினர் செத் பிரித் பாராயணம் செய்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆசிகளை வழங்கினர். இதன்போது … Read more

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு

பெட்ரோலில் இயங்கும் முச்சக்கர வண்டிகளை மின்சார முச்சக்கர வண்டிகளாக மாற்றுவதற்கான முன்னோடி வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க தெரிவித்துள்ளார். நாளை (11.05.2023) முதல் முச்சக்கர வண்டிகளுக்கான விசேட வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.  முன்னோடி திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக 300 பெட்ரோலில் இயங்கும் முச்சக்கர வண்டிகளை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.  Source link

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் ஆவண உறுதிப்படுத்தல் செயன்முறை தாமதம்

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கொன்சியூலர் விவகாரங்கள் பிரிவில் உள்ள கணினி அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, கொழும்பில் உள்ள வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கொன்சியூலர் விவகாரங்கள் பிரிவு மற்றும் யாழ்ப்பாணம், திருகோணமலை, மாத்தறை, கண்டி, குருநாகல் பிராந்திய அலுவலகங்கள் ஆகியவற்றின் ஆவண அங்கீகார செயன்முறை மறு அறிவித்தல் வரை மட்டுப்படுத்தப்படவுள்ளது. சுமூகமான ஆவண அங்கீகார செயன்முறைக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கும் முகமாக, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு துரிதமான திருத்த நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. தற்போது, மிகவும் … Read more

இலங்கை, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஒருநாள் போட்டி

3 ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்க ஆப்கானிஸ்தான் அணி ஜூன் மாதம் இலங்கை வரவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிக்கை வெளியிட்டுள்ளது. ஜூன் 2 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இந்த ஒரு நாள் போட்டியில் கலந்து கொள்வதற்காக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி மே 29 ஆம் திகதி இலங்கை வரவுள்ளது. இவ்வாணிகளுக்கிடையிலான போட்டிகள் அனைத்தும் ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெறவுள்ளது. முதலாவது போட்டி ஜூன் 2 ஆம் திகதியும், இரண்டாவது நாள் போட்டி ஜூன் 04 … Read more

இலங்கை GSP வரிச்சலுகைக்கு மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும்: அலி சப்ரி

2024 மற்றும் 2034க்கு இடைப்பட்ட காலப்பகுதியில் திருத்தப்பட்ட அளவுகோலின் கீழ் ஐரோப்பிய ஒன்றிய சந்தைக்கான ஜீ.எஸ்.பி. (GSP) வர்த்தக வசதிக்காக, இலங்கை மீண்டும் ஒருமுறை விண்ணப்பிக்கவேண்டும் என்று அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.  ஐரோப்பிய ஆணையம், 2021ஆம் ஆண்டில், அடுத்த பத்து ஆண்டுக் காலத்திற்கு ஒரு சட்ட முன்மொழிவை ஏற்றுக்கொண்டுள்ளது.  எனினும் தற்போதைய ஜிஎஸ்பி விதிமுறை இந்த ஆண்டு இறுதியுடன் காலாவதியாக உள்ளது. இந்தநிலையில், ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகைக்காக மீண்டும் விண்ணப்பிப்பதற்கான ஒப்புதல் கோரி ஒரு கூட்டு … Read more