டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்கு துரித நடவடிக்கை எடுக்குமாறு மாகாண பிரதம செயலாளர்களுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்

டெங்கு நோயை கட்டுப்படுத்த பொலிஸ் , முப்படைகளின் முழுமையான ஆதரவு. பொதுமக்களின் முழு ஒத்துழைப்பு எதிர்பார்ப்பு. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பிரகாரம், டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு, அனைத்து மாகாண செயலாளர்களுக்கும் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க எழுத்து மூலம் நேற்று (09) அறிவித்துள்ளார். டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டத்தின் தேவைக்கு ஏற்ப பிரதம செயலாளர்களுக்கு முழுமையான ஆதரவை வழங்குமாறு பொலிஸாருக்கும் முப்படைக்கும் ஜனாதிபதியின் செயலாளர் பணிப்புரை விடுத்துள்ளார். கடந்த வாரத்தில் நாடளாவிய ரீதியில் … Read more

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் வழக்கு: சிங்கப்பூர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

இலங்கையின் சுற்றாடலுக்குப் பாதிப்பை ஏற்படுத்திய எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் நிறுவனத்திடம் இருந்து இழப்பீடு கோரி சிங்கப்பூர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதன்படி குறித்த வழக்கு எதிர்வரும் 15ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு நேற்றைய தினம் (09.05.2023) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. சிங்கப்பூர் நீதிமன்றில் வழக்கு இந்த வழக்கில் சிங்கப்பூரில் உள்ள ஒரு சட்ட நிறுவனம் இலங்கையின் சார்பில் முன்னிலையாகியுள்ளது. சேதத்துக்காகக் கப்பல் நிறுவனத்திடமிருந்து 6.2 பில்லியன் அமெரிக்க டொலர் இழப்பீடு கோரியே சிங்கப்பூர் நீதிமன்றில் … Read more

இலங்கை மக்களுக்கு சேவை செய்ய தயார் – அதிமுக குழுவினர்

இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள தமிழகத்தின் முன்னாள் செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு தலைமையிலான அதிமுக குழுவினர், நேற்று (08) அமைச்சர் ஜீவன் தொண்டமானை சந்தித்துள்ளனர். இதன்போது எம்.ஜி.ஆர். அறக்கட்டளை மூலம் முன்னெடுக்கப்படும் பணிகள் தொடர்பில் அமைச்சரிடம் எடுத்துரைத்த அவர்கள், இலங்கை மக்களுக்கும் சேவை செய்ய தயாராக இருப்பதாக தமது விருப்பத்தை தெரிவித்துள்ளனர். இதற்கமைய இந்த குழுவினர் இன்றும், நாளையும், மலையக பகுதிகளுக்கு விஜயம் செய்து, மக்களுடன் கலந்துரையாடவுள்ளனர். இந்த குழுவினரால் மக்களுக்கான உதவி திட்டங்கள் முன்னெடுக்கும் பட்சத்தில் … Read more

ஹிருணிகா மீது வழக்கு விசாரணை

இளைஞர் ஒருவரை கடத்தியதாக கூறப்பட்டும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் சாட்சியங்கள் மீதான விசாரணை இன்று(09.05.2023) கொழும்பு மேல் நீதிமன்றில் இடம்பெற்றுள்ளது. இந்த வழக்கு தொடர்பான சாட்சியங்கள் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா முன்னிலையில் சமர்ப்பிக்கப்பட்டன. அமில பிரியங்க அமரசிங்க என்ற இளைஞர், 2015 ஆம் ஆண்டு தாம் கடத்தப்பட்டு தாக்கப்பட்டதாகவும் பின்னர் தடுத்துவைக்கப்பட்டதாகவும் சாட்சியமளித்துள்ளார். குற்றச்சாட்டுக்கள் மறுப்பு 2015ஆம் ஆண்டு தெமட்டகொட பிரதேசத்தில் உள்ள ஆடையகம் … Read more

இலங்கை மத்திய வங்கி சட்டமூலம் இந்த வாரம் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட மாட்டாது – பிரதமர்

மத்திய வங்கி சட்டமூலங்களை இந்த வாரம் பாராளுமன்றத்தில் விவாதிக்காமல் ஒத்திவைக்க இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். இன்று (09) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார்.

இந்தியாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள கடன் சலுகைக்காலம் நீடிப்பு

இந்தியாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட 1 பில்லியன் அமெரிக்க டொலர் கடனை செலுத்துவதற்கான சலுகைக்காலத்தினை இந்தியா ஒரு வருடத்திற்கு நீடித்துள்ளது. இந்த 1 பில்லியன் கடன் சலுகைக்காலம் கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்திருந்த நிலையில்,  பேச்சுவார்த்தைகளின் பின்னர் 2024 மார்ச் வரை சலுகைக்காலம் நீடிக்கப்பட்டுள்ளது என இலங்கையின் பிரதி திறைசேரி செயலாளர் பிரியந்த ரத்நாயக்க இன்று(09.05.2023) ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் மேலும் தெரிவித்த அவர், பெற்றுக்கொண்ட கடன் வசதியின் அடிப்படையில் 350 மில்லியன் டொலர் மீதம் … Read more

ஐரோப்பா மற்றும் ஜப்பானின் மீன் தேவையை பூர்த்தி செய்து, நாட்டின் மீன்பிடி தொழிற் துறை ஏற்றுமதி மையமாக மாற்றப்படும் – பிரதமர்

(2023.05.08) கொழும்பு இலங்கை மன்றத்தில் நடைபெற்ற சீநோர் நிறுவனத்தின் ஐம்பத்தைந்தாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு சமர்ப்பிக்கப்பட்ட ஐந்தாண்டுத் திட்டம் மற்றும் இணையத்தள வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார். உயர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி குறைந்த செலவில் அதிக மீன் உற்பத்திக்கான படகுகளை உற்பத்தி செய்வதன் மூலம் கடற்றொழில் அமைச்சின் திட்டங்களுக்கு பங்களிக்கும் சீநோர் நிறுவனம் 1967 இல் நோர்வே அரசாங்கத்தின் அனுசரணையுடன் ஆரம்பிக்கப்பட்டது. இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர், “எமது நாடு … Read more

’வாத்தியாரு எங்க போய்ட்டாரு’ கோபமாக இந்தி கற்றுக் கொடுக்கும் சிறுவனின் மைண்ட்வாய்ஸ்

வகுப்பறையில் சக மாணவர்களுக்கு இந்தி கற்றுக்கொடுக்கும் சிறுவனின் காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது. குழந்தை பருவத்தில் பள்ளி செல்லும் குழந்தைகளின் சுட்டித்தனத்திற்கு அளவே இல்லாமல் இருக்கும். அந்த அளவிற்கு அவர்களின் செயல்கள் இருக்கும். கவலைப்படாமலும், ஜாலியாகவும், வேடிக்கையாகவும் இருக்கும் காலங்களை தற்போது நினைத்தாலும் மறக்கமுடியாது. பசுமை மாறாத அந்த நினைவுகளை தற்போதும் நினைத்துப் பார்த்தாலும் தற்போதுள்ள கவலையினை மறக்க செய்யும். இங்கு சிறுவன் ஒருவன் சக மாணவர்களுக்கு இந்தி கற்றுக் கொடுக்கின்றார். குறித்த மாணவர் நன்றாக சத்தமிட்டும் … Read more

வெளிநாட்டு முதலீட்டை விரைவாக ஈர்க்கும் வகையில் விசேட பெக்கேஜ் ஒன்று…

வெளிநாட்டு முதலீடுகளை உள்வாங்குவதற்கான விசேட பெக்கேஜ் ஒன்றை ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு விரைவில் அறிவிக்க உள்ளார் என்று அமைச்சரவைப் பேச்சாளர், வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (09) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். முதலீட்டாளர்கள் அச்சமின்றி இலங்கையில் முதலீடு செய்வதற்கான சந்தர்ப்பம் கிடைத்தால் மாத்திரம் தான் அவர்கள்; இலங்கைக்கு வருவார்கள் என தெரிவித்த அமைச்சர், … Read more

தொடருந்து பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு

இலங்கை தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கத்தின் (SLRSMU) மத்திய குழு இன்று (09.05.2023) இரவு முதல் 24 மணித்தியால அடையாள பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்க தீர்மானித்துள்ளது. ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான ஒருவருக்கு பிரதிப் பொது முகாமையாளர் (வணிக) பதவியை வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. 24 மணி நேர அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் தொழிற்சங்க மத்தியக் குழு அவசரக் கூட்டத்தைக் கூட்டி இந்தப் பிரச்சினை குறித்து ஆலோசித்து, இந்த நியமனத்துக்கு … Read more