யாழ்ப்பாணத்தில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட 85 கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சா

யாழ்ப்பாணம், மண்டத்தீவின் தென் கரையோரப் பகுதியில் நேற்று (08) இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, 85 கிலோவுக்கும் அதிகமான (ஈரமான எடை) கேரள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. கடல் வழியாக மேற்கொள்ளப்படுகின்ற கடத்தல் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிராக தீவைச் சுற்றியுள்ள கடல் மற்றும் கடற்கரையை உள்ளடக்கி கடற்படை பல ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. இதற்கமைய, நேற்று (08) காலை யாழ்ப்பாணம், மண்டத்தீவின் தெற்கு கடற்கரையில், வடக்கு கடற்படை கட்டளைக்கு … Read more

இலங்கைத் தமிழரசுக் கட்சியுடன் ஜனாதிபதி சந்திப்பு! எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்

இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் எதிர்வரும் வரும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை  நாட்களில் நடக்கவுள்ள சந்திப்புகளில் வடக்கு கிழக்கு மாகாணங்களின் தமிழ் எம்.பிக்களை ஒரே நேரத்தில் சந்திக்க ஜனாதிபதி ரணில் இணக்கம் தெரிவித்துள்ளார். இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவுடன் இன்று (09.05.2023) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடந்த சந்திப்பின்போது ஜனாதிபதி தரப்பில் இந்த இணக்கம் வெளியிடப்பட்டது. எட்டப்பட்ட தீர்மானம்  கிழக்கு மாகாண எம்.பிக்களை அழைக்காமல் வடக்கு எம்.பிக்களை மாத்திரம் ஜனாதிபதி சந்திக்க முன்னர் ஏற்பாடாகியிருந்தது. ஆனால் இன்றைய … Read more

இலாபமீட்டும் துறையாக கடற்றொழில் துறை மாறிவருகிறது – பிரதமர்

நஷ்டத்தில் இயங்கிவந்த கடற்றொழில் துறை இலாபமீட்டும் துறையாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தொடர்ச்சியான முயற்சி காரணமாக மாற்றியமைக்கப்பட்டு வருவதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வழிநடத்தலில் செயற்பட்டு வருகின்ற சீநோர் நிறுவனத்தின் 55 ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு நேற்று (08) இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றிய போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நோர்வே அரசாங்கத்தினால் ஸ்தாபிக்கப்பட்ட சீநோர் நிறுவனமானது மரத்தினாலான படகுகளையே நிர்மாணித்து … Read more

திருகோணமலையிலிருந்து கண்டி வரை பாத யாத்திரை மேற்கொள்வது தொடர்பான கலந்துரையாடல்

இலங்கைத் தீவிற்கு சமய சகல துணை உரிமை கிடைக்கப்பெற்று 270 வருடங்கள் நிறைவடைவதை முன்னிட்டு தாய்லாந்து நாட்டின் சுமார் 50க்கும் மேற்பட்ட பிக்குகளால் திருகோணமலையிலிருந்து கண்டி வரை பாத யாத்திரை மேற்கொள்வது தொடர்பான கலந்துரையாடல் நேற்று (08) திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. மே மாதம் 14 திகதி திருகோணமலையிலிருந்து ஆரம்பமாகும் இப்பாதயாத்திரை மே மாதம் 23 ஆம் திகதி பயணத்தின் முடிவான கண்டி மல்வத்தை மற்றும் அஸ்கிரி மகா விகாரைகளை சென்றடைய எதிர்பார்க்கப்படுகிறது. இதன்போது பாதயாத்திரை … Read more

மாணவியின் மர்ம மரணத்திற்கு மத்தியில் மற்றுமொரு இளம் மாணவி கடத்தல்

கம்பஹாவில் இளவயது மாணவி கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மினுவாங்கொடை, ஓபாத பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயதுடைய சிறுமியொருவரே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளார். ஓபாத பிரதேசத்தில் வசிக்கும் இளைஞர் ஒருவரால் குறித்த சிறுமி கடத்தப்பட்டுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுமிக்கும் இளைஞருக்கும் இடையே காதல் தொடர்பு இருந்து வந்ததாகவும், சிறுமி அந்த உறவை முறித்துக் கொண்டதால் குறித்த இளைஞர் தொடர்ந்தும் அவரை மிரட்டி வந்துள்ளார். அதன் காரணமாக சிறுமியை மொனராகலை பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் தங்க வைக்க … Read more

தேசிய தாதியர் பல்கலைக்கழகத்தை நிறுவ கொள்கை ரீதியான ஒப்புதல்

தற்போது சுகாதார அமைச்சின் கீழ் நிர்வகிக்கப்படுகின்ற தாதியர் கல்லூரியை, இலங்கை தேசிய தாதியர் பல்கலைக்கழகமாக மாற்றுவதற்கு முன்மொழியப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இது தொடர்பான அமைச்சரவை முடிவு வருமாறு (2023-05-08) :  

உள்நாட்டு கோதுமை மாவின் விலையை 5 சதத்தினாலேனும் அதிகரிக்கவில்லை

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்ற கோதுமை மாவின் விலையை 5 சதத்தினாலேனும் அதிகரிக்கவில்லை, என்று அமைச்சரவைப் பேச்சாளரும், வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். மாறாக, இறக்குமதி செய்யப்படும் கோதுமை மாவின் விலை மாத்திரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்டில் கோதுமை மா உற்பத்தி செய்யும் நிறுவனங்களிடம் அடுத்த 06 மாதங்களுக்கு தேவையான கோதுமை மா கையிருப்பு காணப்படுகின்றது என்பதை நாட்டு மக்களுக்கு அறிவிக்குமாறு உள்நாட்டு கோதுமை மா உற்பத்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அரசாங்க … Read more

அரச வைத்தியசாலைகளில், கட்டணம் செலுத்தும் நோயாளர் விடுதி வசதிகளை அமைக்க அமைச்சரவை அனுமதி

அரச வைத்தியசாலைகளில் கட்டணம் செலுத்தும் நோயாளர் விடுதி வசதிகளை விரிவாக்கம் செய்வது தொடர்பாக முன்வைக்கப்பட்ட ஆலோசனைக்கு அமைச்சரவை நேற்று (08) அங்கீகாரம் வழங்கியுள்ளது. இன்று (09) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சரவை பேச்சாளரும், அமைச்சருமான பந்துல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார். இதற்கமைய, இலங்கை பிரஜைகளுக்கும் வெளிநாட்டவர்களுக்கும் அரச வைத்தியசாலைகளில் கட்டணம் செலுத்தும் நோயாளர் விடுதி வசதிகளை வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது இதுதொடர்பான அமைச்சரவை முடிவு வருமாறு :

நுவரெலியா மாவட்டத்தை சுற்றுலாத் தளமாக மாற்றுவதற்கு விசேட குழு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனையின் பிரகாரம் நுவரெலியா மாவட்டத்தை சுற்றுலா தளமாக மாற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக வேண்டி விசேட குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது என்று நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே தலைமையில், அமைச்சரின் பங்கேற்புடன், நுவரெலியா மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று (08.05.2023) நடைபெற்ற கூட்டத்திலேயே இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்போது நுவரெலியா மாவட்டத்தை சிறப்பானதொரு சுற்றுலா … Read more

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் மிகப் பெரிய இரத்தினக்கல் தொடர்பான அதிர்ச்சித் தகவல்

நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் மிகப் பெரிய இரத்தினக் கற்களின் உண்மையான மதிப்பு பாரிய வீழ்ச்சியடைந்துள்ளது. 200 மில்லியன் அமெரிக்க டொலர் என ஊடகங்களால் விளம்பரப்படுத்தப்பட்ட இந்த இரத்தினக் கல்லின் பெறுமதி 10 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் (சுமார் 36 இலட்சம் ரூபா) எனத் தெரியவந்துள்ளது. நாடாளுமன்றத்தில் அண்மையில் நடைபெற்ற சுற்றுச் சூழல் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவில் இது தெரியவந்துள்ளது. உலகிலேயே மிகப் பெரிய இரத்தினக் கொத்து என கின்னஸ் சாதனை படைத்துள்ளதாகவும், ஆனால் இது ஒரு … Read more