இரண்டு தனியார் வங்கி கணக்குகளுக்கு வந்த கோடிக்கணக்கான பணத்தால் சர்ச்சை

இலங்கையில் இரண்டு தனியார் வங்கி கணக்குகளில் 5 கோடி ரூபாய் பணம் வைப்பிடப்பட்டதனையடுத்து அந்த கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரருக்கு சொந்தமான இரண்டு தனியார் வங்கிகளில் வைத்திருந்த கணக்குகளை சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவு தடை விதித்துள்ளது. “ஹிக்கடுவையைச் சேர்ந்த இஸ்ஸோ சுஜி” என அழைக்கப்படும் குணரத்ன சுஜித் சில்வாவின் வங்கிக் கணக்குகளே இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளன. குறித்த கணக்குகளில் 5 கோடி ரூபாவிற்கும் அதிகமான பணம் வைப்புச் செய்யப்பட்டுள்ளதாகவும் விசாரணை பிரிவு மேலும் தெரிவித்துள்ளது. போதைப்பொருள் … Read more

தமிழ்த் தேசிய பிரச்சினைக்கு அரசாங்கத்தோடு பேசி முடிவெடுக்க தயார்! கூட்டமைப்பு அறிவிப்பு

மே மாதம் 9 ஆம் திகதி ஜனாதிபதியோடு நடைபெறும் கூட்டத்தில் நாம் பங்குபெற்றுவோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் அனுப்பி வைத்துள்ள செய்திக்குறிப்பிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த செய்திக் குறிப்பில், தமிழ்த் தேசிய பிரச்சினைக்கான தீர்வு சம்பந்தமாக ஒரு குறிப்பிட்ட கால எல்லைக்குள் ஆக்கபூர்வமாக நாம் அரசாங்கத்தோடு பேசி முடிவெடுக்கத் தயார். இந்திய – இலங்கை ஒப்பந்தம் வடக்கும், கிழக்கும் தமிழ் மக்களினதும் தமிழ் … Read more

ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் பங்குகள் தொடர்பில் எடுத்துள்ள முக்கிய தீர்மானம்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் பங்குகளை விற்பனை செய்வது தொடர்பாக அடுத்த சில மாதங்களில் விண்ணப்பங்கள் கோரப்படும் என்று அதன் பிரதம நிறைவேற்று அதிகாரி  ரிச்சர்ட் நட்டால் தெரிவித்துள்ளார். தேர்ந்தெடுக்கப்பட்ட பொது நிறுவனங்கள் மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் ஸ்ரீலங்கன் விமான சேவையும் மறுசீரமைக்கப்படும் என்று கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அரசாங்கம் தெரிவித்தது.  இதன்படி, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் பெரும்பான்மையான பங்குகளை வாங்குவதற்கு இந்தியாவின் டாடா குழுமம் ஆர்வமாக உள்ளதாக கூறப்படுகின்றது. ] ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸை வாங்குவதற்கு டாடா குழுமம் ஆர்வம் … Read more

கோதுமை மாவின் விலையில் மாற்றமில்லை

கோதுமை மாவிற்காக சேர்க்கப்பட்டுள்ள மூன்று ரூபா எனும் சுங்க சலுகை நீக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் கோதுமை மாவின் விலை எக்காரணத்திற்காகவும் மாற்றம் செய்யப்படாது எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிடிய தெரிவித்தார். அவிஸ்ஸாவெல பிரதேசத்தில் (07) நேற்று ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும் குறிப்பிட்ட அரிசிக்கு பிரதான மாற்றீடான கோதுமை மாவிற்காக வழங்கப்பட்ட கிலோவிற்கு மூன்று ரூபா சுங்க சலுகை மீண்டும் நீக்கப்பட்டமை ஊடாக, விவசாயிகளின் வாழ்வாதார மட்டத்தை 90வீதம் … Read more

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் களமிறக்கும் தமிழர்: பாராட்டிய டிரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட களமிறங்கியுள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமியை முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பாராட்டியுள்ளார். அமெரிக்காவில் 2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது.  இந்நிலையில், 2017ஆம் ஆண்டு ஜனவரி முதல் 2021ஆம் ஆண்டு ஜனவரி வரை அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவி வகித்த குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ட்ரம்ப்,  மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளார். விவேக் ராமசாமிக்கு பாராட்டு இதற்காக குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தேர்தலுக்கு அவர் விண்ணப்பித்துள்ளார். … Read more

எரிசக்தியில் புதிய எண்ணிக்கையிலான மெகா வோட்ஸ் சேர்த்துக்கொள்வதற்கான திட்டம்

2027இலிருந்து 2030 வரை பிரதான உற்பத்தித் திட்டத்திற்கு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்தை சேர்ப்பதற்கான திட்டம் கடந்த வாரத்தில் மின்சார சபையினால் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர வினால் வரவேற்கப்பட்டது. குடந்த வருடத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியாக 211 மெகா வோட்ஸ் செயன்முறைக்கு சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளதுடன் அவற்றில் 146மெகா வோட்ஸ் கூரை மீது இணைக்கப்பட்டுள்ள புதுப்பிக்கப்படத் தக்க எரிசக்தி திட்டத்தின் ஊடாகவேயாகும். 2027 தொடக்கம் 2030 வரையான காலப்பகுதியினுள் மேலதிக 3075 மெகா வோட்ஸ் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியிலிருந்து பெறுவதற்கு … Read more

பாடசாலை மாணவியின் மர்ம மரணம்! கார் சாரதியொருவர் சிக்கினார் – வெளிவரும் தகவல்

களுத்துறையில் மர்மமான முறையில் உயிரிழந்த மாணவியை விடுதிக்கு அழைத்து வந்ததாக கூறப்படும் கார் சாரதியொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.  தங்குமிடமொன்றுக்கு அருகில் புகையிரத பாதை பகுதியிலிருந்து 16 வயது பாடசாலை மாணவி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. நாகொட பிரதேசத்தில் வசித்து வந்த 11ஆம் தரத்தில் கல்வி கற்கும் பாடசாலை மாணவியே உயிரிழந்துள்ளதாகவும், பெற்றோரால் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சிசிடிவியில் பதிவாகியுள்ள காட்சி குறித்த … Read more

அதிபர் சேவை தரம் III க்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்முகப்பரீட்சை

இலங்கை அதிபர் சேவை தரம் III க்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்முகப்பரீட்சை மே மாதம் 22ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 01ஆம் திகதி வரை கல்வி அமைச்சில் நடாத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இலங்கை அதிபர் சேவையின் தரம் III க்கான போட்டிப் பரீட்சைகள் 2019.02.10 ஆம் திகதி அன்று நடைபெற்றது. அந்த வரையறுக்கப்பட்ட போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்த விண்ணப்பதாரர்கள் இந்த நேர்முகப்பரீட்சைக்கு அழைக்கப்படுவார்கள் என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கான மேலதிக தகவல்களை www.moe.gov.lk என்ற … Read more

அடுத்த சில நாட்களில் சூறாவளிக்குச் சாத்தியம்! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக உருவாகியுள்ள கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை படிப்படியாக ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசமாக விருத்தியடைவதுடன், அடுத்த சில நாட்களில் சூறாவளியாக விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.  எனவே கடலில் பயணம் செய்வோரும், மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தால் வழங்கப்படும் எதிர்கால ஆலோசனைகள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. நாட்டை சூழவுள்ள கடற்பரப்பின் வானிலை இன்றைய தினத்திற்கான (08.05.2023) காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் … Read more

கிராமப்புறங்களில் பொது போக்குவரத்தை மேம்படுத்துவதற்காக இரத்தினபுரி மாவட்டத்திற்கு 23 பஸ்கள்…

நாட்டிலுள்ள கிராமப்புற வீதிகளில் பொதுப் போக்குவரத்து வசதிகளை வலுப்படுத்தும் வகையில் இலங்கை போக்குவரத்து சபையினால் 500 புதிய பஸ்களை சேவையில் ஈடுப்படுத்தும் திட்டத்திற்கு அமைய இரத்தினபுரி மாவட்டத்திற்கு 23 பஸ்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த பஸ்களை இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள டிப்போவிற்கு கையளிப்பு செய்யும் நிகழ்வு நேற்று (07) நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தலைமையில் இடம்பெற்றது. 75 ஆவது சுதந்திர விழாவை முன்னிட்டு கிராமப்புற சாலைகளில் பொது போக்குவரத்தை மேம்படுத்துவதற்காக இந்திய … Read more