சட்டவிரோதமான முறையில் நாட்டிலிருந்து வெளியேற முயற்சித்த 06 பேர் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர் மன்னார், எருக்குளம்பிட்டி கடல் பிரதேசத்தில் நடத்தப்பட்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோதமான முறையில் நாட்டிலிருந்து வெளியேற முயற்சித்த 06 பேருடன் ஒரு டிங்கி படகு கைது செய்யப்பட்டது. சட்டவிரோத குடியேற்றங்கள் உட்பட கடல் வழியாக மேற்கொள்ளப்படுகின்ற சட்டவிரோத கடத்தல்களை கட்டுப்படுத்தும் நோக்கத்தில், தீவைச் சுற்றியுள்ள கடல் மற்றும் கடற்கரை பிரதேசங்களில் கடற்படையினர் பல தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். அதன் படி 2023 மே மாதம் 05 ஆம் திகதி வட மத்திய கடற்படை … Read more

ஸ்ரீலங்கா டெலிகொம் பங்குகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

அரசாங்கத்திற்குச் சொந்தமான ஸ்ரீலங்கா டெலிகொம் பங்குகள் குறிப்பிட்ட காலத்திற்கு விற்பனை செய்யப்படமாட்டாது என நிதியமைச்சின் செயலாளர் உயர் நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளார். ஜூன் 15 ஆம் திகதிக்கு முன்னர் ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தில் பங்குகளை விற்பனை செய்வதற்கு திறைசேரி அனுமதியளிக்காது என உயர் நீதிமன்றத்திற்கு இன்று (8.05.2023) அறிவிக்கப்பட்டுள்ளது. திறைசேரி ஸ்ரீலங்கா டெலிகொம் கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது மற்றும் SLT PLC இன் வெளியிடப்பட்ட பங்கு மூலதனத்தின் 49.50 சதவீத பங்குகளை திறைசேரி வைத்துள்ளது. இரண்டு நிறுவனங்களிலும் … Read more

கிழக்கு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 20 பேர் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினரால் கோக்கிளாய் கடற்பகுதியில் 2023 மே மாதம் 05 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது மின் விளக்குகள் மற்றும் தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இருபது (20) பேருடன் 08 டிங்கி படகுகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி சாதனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இலங்கைக்கு சொந்தமான கடல் மற்றும் கரையோர வலயத்தில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் கடற்படையினர் தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, 2023 … Read more

இந்திய விமானப்படையின் நன்கொடையில், இலங்கை சீன துறைமுக விமானப்படைக் கல்விக் கல்லூரிக்கான புதிய கோட்போர் கூடம்

நீண்ட கால இராஜதந்திர தொடர்பை வலுப்படுத்துவதற்காக இந்திய விமானப்படையினால் நன்கொடையாக, சீன துறைமுக விமானப்படைக் கல்விக் கல்லூரியில் புதிய கோட்போர் கூடமொன்றை நிர்மாணிப்பதற்காக அடிக்கல் நாட்டும் வைபவம் அண்மையில் இடம்பெற்றது. இவ்வைபவம் இந்திய விமானப்படைத் தளபதி எயார் சீப் மாஷல் விவேக் ராம் சௌத்ரி மற்றும் இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பதிரண தலைமையில் இடம்பெற்றது. நிர்மாணிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள புதிய கேட்போர் கூடத்தில் 700பேருக்கு கேட்போர் கூட வசதிகளைப் பெற்றுக்கொள்ள முடியும். இம்மண்டப ஒலி … Read more

மூன்றாம் சார்ள்ஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் கலந்து கொண்ட இலங்கை சாரணர்கள் ஜனாதிபதியை சந்தித்தனர்

ஐக்கிய இராச்சிய சாரணர் இயக்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட முடிசூட்டு விழா முகாமில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்ற இலங்கை சாரணர் இயக்கத்தின் சிரேஷ்ட சாரணர்கள் மற்றும் பெண் சாரணர்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையிலான சந்திப்பு நேற்று (07) லண்டனில் இடம்பெற்றது. முடிசூட்டு விழாவிற்கு இலங்கை சாரணர் இயக்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஷலினி பெரேரா, அரிதா பண்டார, அசேல பண்டார மற்றும் சரித் பெர்னாண்டோ ஆகிய சாரணர்கள் கலந்துகொண்டனர். அவர்களுடன் சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, உலகளாவிய … Read more

IMDEX ASIA – 2023 கடல்சார், பாதுகாப்பு கண்காட்சி மற்றும் சர்வதேச கடல்சார் பாதுகாப்பு மாநாட்டில் கடற்படைத் தளபதி கலந்து கொண்டார்

சிங்கப்பூர் சாங்கி கண்காட்சி மையத்தில் 2023 மே 03 முதல் 05 வரை நடைபெற்ற IMDEX ASIA – 2023 கடல்சார், பாதுகாப்பு கண்காட்சி மற்றும் சர்வதேச கடல்சார் பாதுகாப்பு மாநாட்டில் (International Maritime Security Conference – IMSC ) வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா பங்கேற்றார். IMDEX ASIA, ஆசிய பிராந்தியத்தில் நடைபெறும் ஒரு முன்னணி கடற்படை, கடல்சார் மற்றும் பாதுகாப்பு கண்காட்சியாகும். இந்த ஆண்டு நடைபெற்ற கண்காட்சியின் 13வது தொகுதி மற்றும் அதன் … Read more

இந்தியாவில் இலங்கை தமிழர் ஒருவர் செய்த தவறான செயல் அம்பலம்

போலி இந்தியக் கடவுச்சீட்டை பயன்படுத்தி நாட்டை விட்டு வெளியேற முயன்ற இலங்கைத் தமிழர் ஒருவர் சென்னை – வளசரவாக்கம் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். குறித்த கைது நடவடிக்கை கடந்த (02.05.2023) அன்று முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சென்னை- வளசரவாக்கம் ஸ்ரீதேவி குப்பத்தில் உள்ள வீட்டில் தங்கியிருந்த ரொபின்சன் சார்லஸ் (43) என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார். போலி ஆவணங்கள் தகவல் ஒன்றின் அடிப்படையில் தமிழ்நாடு கியூ பிரிவு பொலிஸார் விசா காலம் முடிந்த பிறகும், சார்லஸ் இந்தியாவில் தங்கியிருப்பதைக் கண்காணித்துள்ளனர். இதனையடுத்து, … Read more

'இலங்கை அணிக்கு மதீஷ பத்திரன மிகப்பெரிய சொத்து' – மகேந்திர சிங் தோனி

இலங்கை அணிக்கு மதீஷ பத்திரன மிகப்பெரிய சொத்து என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், தற்போதைய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான எம்.எஸ். தோனி தெரிவித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவரான எம்.எஸ். தோனி, ‘மதீஷவினை நான் டெஸ்ட் போட்டிகளில் விளையாட வைப்பதற்கு விரும்பவில்லை. அவர் ஐ.சி.சி. இன் அனைத்து தொடர்களிலும் ஆட வேண்டும் என நினைக்கின்றேன். அவர் இலங்கை அணியின் சொத்தாக எதிர்வரும் காலத்தில் மாறுவார்.’ என்று குறிப்பிட்டிருந்தார். இந்தியன் பிரீமியர் … Read more

காலி முகத்திடல் – ஷங்ரிலா பசுமை வளாக வெசாக் நிகழ்ச்சியில் பெருந்திரளான மக்கள் பங்கேற்பு

புத்த ரஷ்மி தேசிய வெசாக் கொண்டாட்டத்தை முன்னிட்டு காலி முகத்திடல் ஷங்ரிலா பசுமை மைதானத்தில் இரண்டாவது நாளாக (06) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அன்னதான நிகழ்வில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர். இக்கட்டான காலத்தினை நிறைவு செய்து, நான்கு வருடங்களின் பின்னர் வெசாக் பண்டிகையை கொண்டாடும் வாய்ப்பு மக்களுக்கு இம்முறை கிடைத்துள்ளதுடன், மக்கள் ஆர்வத்துடனும் மகிழ்ச்சியுடனும் கலந்துகொண்டமை விசேட அம்சமாகும். சிங்கப்பூர் மகா கருணா பௌத்த சங்கம் மற்றும் சிங்கப்பூரின் வில்லிங் ஹார்ட்ஸ் (Wiling Hearts) அறக்கட்டளை ஆகியவற்றின் பங்களிப்புடன், … Read more

களுத்துறையில் சடலமாக மீட்கப்பட்ட மாணவி – பாடசாலை பெண் அதிபர் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

களுத்துறை பிரதேசத்தில் உள்ள முன்னணி பெண்கள் பாடசாலை ஒன்றின் பெண் அதிபருக்கு எதிராக பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளமையினால் மோதல் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதிபருக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டமையே இதற்குக் காரணம் என கூறப்படுகின்றது. ஆசிரியர் ஒருவருடன் தகாத உறவில் ஈடுபட்டு வருவதாகவும், அதற்காக இரண்டு மாணவிகளின் உதவியை பெற்று வருவதாகவும் அவரது பெற்றோர் தெரிவிக்கின்றனர். இதற்கு மேலதிகமாக பிரதேசத்தில் உள்ள அரசியல் பிரபலத்தின் உதவியுடன் செயற்படும் அதிபர் அந்த … Read more