பின் தொடர்ந்த ஆன்மா! எதிர்பாராத திருப்பங்களுடன் விபரீதமான முடிவு(Video)

மனித வாழ்வில் எந்தளவிற்கு தெய்வ சக்தியின் ஆதிக்கம் இருக்கிறதோ அந்தளவு அமானுஷ்யங்களும் நடக்கின்றன என்பது பலரது நம்பிக்கை. இவற்றில் பலர் திகிலூட்டும் அனுபவங்களை பெற்றுள்ளதாக பகிர்ந்துள்ளனர். அந்த அனுபவங்களை நேரடியாக நாமே பெறாவிட்டாலும் கூட கதையாக கேட்கும் போதே பீதியில் ஆழ்த்தும் சம்பவங்கள் பல. ஒரு சில சம்பவங்கள் உலகளவில் பலரையும் நடுங்க வைத்து ஆட்டங்காண வைத்துள்ளன. அப்படியொரு கதிகலங்க வைக்கும் விடை தெரியாத மர்மம் அடங்கிய உண்மைச் சம்பவமொன்று தொகுப்பாக, Source link

மூன்றாம் சார்ள்ஸ் மன்னரின் பங்கேற்புடன் லண்டனில் நடைபெற்ற பொதுநலவாய தலைவர்களின் மாநாட்டில் ஜனாதிபதி பங்கேற்பு

கானா மற்றும் ருவண்டா ஜனாதிபதிகளுடனும் கலந்துரையாடல் மூன்றாம் சார்ள்ஸ் மன்னரின் பங்கேற்புடன் (05) லண்டனில் நடைபெற்ற பொதுநலவாய தலைவர்கள் மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் அவரது பாரியார் மைத்திரி விக்ரமசிங்க ஆகியோர் கலந்துகொண்டனர். இதன் போது மூன்றாம் சார்ள்ஸ் மன்னருக்கு வாழ்த்துகளை கூறிய ஜனாதிபதி, அவருடன் சுமூகமாக கலந்துரையாடலில் ஈடுபட்டதோடு, இச் சந்திப்பில் பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்கவும் கலந்துகொண்டார். இம்மாநாட்டில் இளையோரின் பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையிலான கல்வி மறுசீரமைப்புக்களை மேற்கொள்வதற்கு பொதுநலவாய அமைப்பு விரிவான திட்டங்களை … Read more

கொழும்பில் வெசாக் பார்ப்பதற்காக சென்ற குடும்பத்தினருக்கு நேர்ந்த கதி

கொழும்பில் வெசாக் பார்ப்பதற்காக சென்று திரும்பிக்கொண்டிருந்த பொலேரோ ரக கெப் வண்டியொன்று வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாணந்துறை வலான பிரதேசத்தில் சாரதி உறங்கியமையினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த வாகனம் களுத்துறை நோக்கி பயணித்த போது, ​​சாரதி உறங்கியமையால் வாகனத்தின வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் தலைகீழாக கவிழ்ந்ததால் வீதியின் நடுவில் இருந்த மின் கம்பம் சேதமடைந்துள்ளது. மத்துகம பிரதேசத்தில் வசிக்கும் குழுவினர் அங்கு பயணித்துள்ளனர். விபத்தில் மூன்று சிறுவர்கள் … Read more

16 வருட போராட்ட வாழ்கை 8 வருட சிறை வாழ்கை! முன்னாள் போராளியின் வலிசுமந்த கதை (Video)

சொந்த நாட்டு மக்களின் மீதே போர் தொடுத்து இலட்சக்கணக்கான மக்களை கொன்று குவித்து, உடமைகளை சூறையாடி மீண்டும் மீண்டும் அந்த இனத்தை அடக்கி நெருக்கடிக்கு உள்ளாக்கி இந்த நூற்றாண்டிலே மிகப்பெரும் மானுட பேரவலத்தை நிகழ்த்தி மீண்டும் ஆட்சி ஏறி அதிகாரம் செலுத்தும் ஓர் அரசாங்கம் எம் நாட்டில் மட்டுமே இருக்க முடியும். எமது நாட்டில் நடந்த, நடந்து கொண்டிருக்கின்ற பல நெருக்கடியான மற்றும் துன்பியல் நிகழ்வுகளுக்குள்ளால் இந்த தமிழினம் இன்னும் வாழ்கிறது என்றால் அதிலும், தனது இருப்பை … Read more

மூன்றாம் சார்ள்ஸ் மன்னருக்கு வாழ்த்துக் கூறிய ஜனாதிபதி

மூன்றாம் சார்ள்ஸ் மன்னரின் தலைமையில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் உச்சி மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் அவரது பாரியார் பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்க ஆகியோர் கலந்துகொண்டனர். இதன்போது மூன்றாம் சார்ள்ஸ் மன்னருக்கு வாழ்த்துக்களைக் கூறிய ஜனாதிபதி, அவருடன் சுமுகமாகக் கலந்துரையாடலிலும் ஈடுபட்டுள்ளார்.  கல்வி மறுசீரமைப்பு இம்மாநாட்டில் இளையோரின் பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையிலான கல்வி மறுசீரமைப்புக்களை மேற்கொள்வதற்குப் பொதுநலவாய அமைப்பு விரிவான திட்டங்களை முன்னெடுக்க வேண்டியது அவசியம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது உரையில் … Read more

உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு தொடர்பில் வெளியான அறிவிப்பு

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமை(08.05.2023) மேலும் பத்து விடைத்தாள் மதிப்பீட்டு நிலையங்கள் திறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசிங்க இதனை தெரிவித்துள்ளார். விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கை    2022ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் தொழிற்சங்கப் போராட்டத்தை முன்னெடுத்து வரும் நிலையில் இவ்வாறு விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதேவேளை … Read more

தேசிய விளையாட்டு சபையிலிருந்து பதவி விலகும் மஹல ஜயவர்தன!

இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் மஹல ஜயவர்தன தேசிய விளையாட்டு சபையிலிருந்து பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். இந்த விளையாட்டுச் சபையின் தலைவர் பதவியை மஹல வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நாட்டின் விளையாட்டுத்துறையை மேம்படுத்தும் மூலோபாயங்களை வகுக்கும் நோக்கில் தேசிய விளையாட்டுச் சபை உருவாக்கப்பட்டது.    விபரங்கள் வெளியிடப்படவில்லை கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மஹல விளையாட்டுச் சபையின் தலைவர் பொறுப்பிற்கு நியமிக்கப்பட்டார். என்ன காரணத்தினால் பதவி விலகுகின்றார் என்பது பற்றிய விபரங்கள் … Read more

கடத்தப்பட்ட இலங்கை திரைப்பட இயக்குநருக்கு நேர்ந்த கொடுமை

இலங்கை தொலைக்காட்சி நாடகம் மற்றும் திரைப்பட இயக்குநர் ஒருவரைக் கடத்திச்சென்று தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் 5 பேரை பதுளை வெலிமடை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த கைது நடவடிக்கை நேற்றைய தினம் (05.05.2023) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 51 வயதுடைய இந்த திரைப்பட இயக்குநர் காமினி பிரியந்த, வெலிமடையில் நடந்து சென்று கொண்டிருந்த போது வேன் வாகனம் ஒன்றில் வந்த நான்கு பேர் அவரை கடத்திச் சென்றுள்ளனர். தனிப்பட்ட முறுகல் இதன் பின்னர் கொடூரமான முறையில் … Read more

மாறாத பெண் மனித வதைகள்: விடியலை நோக்கி ஒரு சமூகத்தின் பயணம்!

இந்திய வம்சாவளி தமிழ் மக்கள் இலங்கைக்கு வருகை தந்து சுமார் 200 வருடங்கள் நிறைவடைந்துள்ளது.  இந்நிலையிலும் கூட, இலங்கையின் மலையகம் குறிப்பாக பெருந்தோட்டப் பகுதிகளில் வாழும் மக்கள் பல்வேறுபட்ட சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர். அதிலும் பாரிய அளவில் பாதிக்கப்படுபவர்களாக மலையகப் பெண்கள் காணப்படுகின்றனர். “ஒரு பெண்ணின் வலிமை அவளது தசைகளில் இல்லை…. அவளுடைய மனதிலும் உள்ளத்திலும் உள்ளது” என்று கூறுவார்கள். அதுபோன்று எமது மலையக பெண்கள் வலிமையுள்ளவர்கள். ஆனால் களங்கள் அமையவில்லை. சாதிக்கக் கூடியவர்கள் ஆனால் வழிகாட்டப்படவில்லை… … Read more

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் இராணுவ பயிற்சி பாடசாலைக்கு விஜயம்

இலங்கையின் இஸ்லாமிய குடியரசின் உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேணல் முஹம்மட் சப்தார் கான் அவர்களின் கிழக்குக்கான சுற்றுப்பயணத்தின் போது புதன்கிழமை (ஏப்ரல் 26) மதுருஓயா இராணுவப் பயிற்சி பாடசாலைக்கு விஜயம் மேற்கொண்டார். வருகை தந்த சிரேஷ்ட அதிகாரியை இராணுவப் பயிற்சி பாடசாலையின் தளபதி பிரிகேடியர் கேஏடபிள்யூஎன்எச் பண்டாரநாயக்க யூஎஸ்பீ அவர்களால் மரியாதையுடன் வரவேற்கப்பட்டதுடன், அதன் பாடத்திட்டம் மற்றும் இராணுவப் பயிற்சி பாடசாலையின் பயிற்சிகளில் வெளிநாட்டு மாணவர்கள் எவ்வாறு பயிற்றுவிக்கப்படுகின்றார்கள் என்பது தொடர்பான விவரத்தை விரிவுபடுத்துவதற்கு முன் வளாகத்தைச் … Read more