ரணில் – ருவண்டா ஜனாதிபதி சந்திப்பு: பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து பேச்சு

 மூன்றாம் சார்ள்ஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் பங்கேற்பதற்காக உத்தியோகபூர்வ அழைப்பின்பேரில் பிரித்தானியாவுக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அங்கு பல முக்கியஸ்தர்களை சந்தித்து வருகின்றார். அதன்படி, இன்றைய தினம் (06.05.2023) ருவண்டா ஜனாதிபதியைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இச்சந்திப்பின்போது, விவசாயம், சுகாதாரம் உள்ளிட்ட பல துறைகளில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்தும், அதன் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து இரு நாட்டு அமைச்சர்களின் சந்திப்பு குறித்தும் ஆராய்ந்துள்ளனர். இலங்கை பாதுகாப்பு படைகள் மேலும், இரு நாடுகளுக்குமிடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது … Read more

இராணுவ பொலிஸ் படையணியின் 33வது ஆண்டு நிறைவு

இராணுவ பொலிஸ் படையணி தனது 33 வது ஆண்டு நிறைவை 2023 ஏப்ரல் 19-28 வரை பொல்ஹெங்கொட இராணுவ பொலிஸ் படையணி தலைமையகத்தில் கொண்டாடியது. இராணுவ சம்பிரதாயங்களுக்கமைவாக இராணுவ பொலிஸ் படையணியின் படைத் தளபதியான மேஜர் ஜெனரல் அனில் எல் இளங்ககோன் அவர்களுக்கு பிரதான நுழைவாயிலில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதுடன், இராணுவ சம்பிரதாயங்களின்படி அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது. அன்றைய பிரதம அதிதியான மேஜர் ஜெனரல் அனில் எல் இளங்ககோன் அவர்களை, ஒழுக்க பாதுகாப்பு பணிப்பாளர் நாயகம் … Read more

வெசாக் தினத்தை முன்னிட்டு 14 கைதிகளுக்கு விடுதலை!!

வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் அடிப்படையில் நேற்று (05) திகதி மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து 14 ஆண் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் நல்லையா பிரபாகரன் தலைமையில் இடம்பெற்ற கைதிகள் விடுதலை செய்யப்படும் நிகழ்வில் பிரதம ஜெயிலர் உள்ளிட்ட சிறைச்சாலையின் உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர். சிறு குற்றம் புரிந்த தண்டணைப் பணம் செலுத்தாத கைதிகளே நேற்றைய தினம் இவ்வாறு இலங்கை பூராகவும் உள்ள சிறைகளில் இருற்கு 988 பேர் விடுதலை … Read more

நீர்கொழும்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இராணுவத்தினர் உதவி

லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டி மற்றும் செல்லகந்த கிராம சேவையாளர் பிரிவுகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 2 வது (தொ) இலங்கை இராணுவ சேவைப் படையினர் வெள்ளிக்கிழமை (5) உடனடி உதவிகளை மேற்கொண்டனர். மாவட்டச் செயலக ஊழியர்களுடன், 03 அதிகாரிகள் மற்றும் 23 சிப்பாய்கள் வெள்ளத்தால் சிக்கித் தவித்த 20க்கும் மேற்பட்டவர்களை மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தினர். மேலும் பத்து நபர்களுக்கு நீர்கொழும்பு பெரிய பள்ளிவாசலில் … Read more

கொழும்பில் வேலை செய்யும் பெற்றோர்: 13வயது சிறுமியின் விபரீத முடிவு

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ட்ருப் (Troup) தோட்டத்தில் தூக்கில் தொங்கிய நிலையில்  சிறுமியொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 13 வயது சிறுமியொருவரே இவ்வாறு நேற்று (5.05.2023) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பொலிஸார் விசாரணை சிறுமியின் பெற்றோர் கொழும்பில் வேலை செய்வதாகவும்,  தனது தாத்தா பாட்டியின் பாதுகாப்பிலேயே சிறுமியும் அவரது சகோதரனும் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் நடைபெற்ற போது வீட்டில் ஒருவரும் இருக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.  இதுதொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  Source link

இலங்கையர்களுக்கு நவீன தொழிநுட்பத்துடன் கூடிய அடையாள அட்டை

இலங்கையர்களின் வாழ்க்கைக்கு நன்மையை ஏற்படுத்தும் மூன்று திட்டங்களை உடனடியாக நடைமுறைப்படுத்துவது குறித்து இந்திய அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இலங்கையர்களுக்கு நவீன தொழிநுட்பத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்குதல், சூரிய சக்தி திட்டம் மற்றும் இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையில் கப்பல் சேவையை ஆரம்பிப்பது ஆகிய மூன்று அவசர வேலைத்திட்டங்களாகும். ஜனாதிபதியின் தலைமை அதிகாரி மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர்  கோபால் பாக்லே ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற … Read more

அலங்கார பொருட்களின் இறக்குமதியை நிறுத்தியதால் 90 கோடி ரூபாவை சேமித்துள்ளோம்: ரஞ்சித் சியம்பலாபிட்டிய

அலங்கார பொருட்கள் இறக்குமதி செய்வதை நிறுத்தினோம் அதனால் 90 கோடி ரூபாவை சேமித்துள்ளோம் என நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் நேற்று (05.05.2023) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது, 90 கோடி ரூபாய் “அலங்கார பொருட்கள் இறக்குமதி செய்வதை நிறுத்தினோம். அலங்காரம் என்னும் விடயதானத்திற்குள் தான் வெசாக் அலங்காரங்களும் உள்ளடங்கியுள்ளன. இதனால் அலங்காரங்கள் குறைந்து விட்டதா என்ற கேள்வி எனக்குள் உள்ளது. இதற்கு … Read more

அரச ஊழியர்கள் குறித்து வெளியிடப்படவுள்ள விசேட சுற்றறிக்கை

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் அரச ஊழியர்களை மீள இணைத்துக் கொள்வதற்கான சுற்றறிக்கை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் எதிர்வரும் திங்கட்கிழமை(08.05.2023) வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இராஜாங்க அமைச்சர் ஜனக்க வக்கும்புர இதனை தெரிவித்துள்ளார். விசேட சுற்றறிக்கை இது தொடர்பில் மேலும் கூறுகையில்,எதிர்வரும் திங்கட்கிழமை (08.05.2023) தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலுக்கு பின்னர் அமைச்சு சுற்றறிக்கை வெளியிடும். அதன்படி இந்த வேட்பாளர்கள் தங்கள் வாக்காளர்களுக்கு வெளியே அருகிலுள்ள தேவையின் அடிப்படையில் சேவையில் மீண்டும் இணைத்து கொள்ளப்படுவார்கள் என்றும் … Read more

பிரம்மாண்ட கொண்டாட்டத்திற்கு தயாராகும் லண்டன்! பாதுகாப்பு தீவிரம் : தங்கமுலாம் பூசப்பட்ட சிம்மாசனம் தயார்

பிரித்தானியாவின் புதிய மன்னராக அறிவிக்கப்பட்டுள்ள 3ஆம் சார்லஸ் மற்றும் அவரது மனைவி கமீலா ஆகியோரின் முடிசூட்டு விழா நாளைய தினம்(06.05.2023) மிக பிரம்மாண்டமாக இடம்பெறவுள்ளது.   இந்த விழாவை உலகமே வியந்து பார்க்கும் வகையில் நடத்த பக்கிம்காம் அரண்மனை நிர்வாகம் ஏற்பாடுகளை செய்துள்ள நிலையில் இந்த பிரம்மாண்ட விழாவை காண ஒட்டுமொத்த இங்கிலாந்தும்  தயாராகி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. லண்டன் நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளதுடன்,  இந்த விழாவை இதுவரை நடைபெறாத வகையில் மிகப் பிரம்மாண்டமாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. … Read more

பிரான்ஸில் கைது செய்யப்பட்ட இலங்கையருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

பிரான்ஸ் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட குடு அஞ்சுவை நாட்டிற்கு அனுப்புவது கடினம் என பிரான்ஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாட்டின் அரசியல் அகதிகளுக்கான ஓப்ரா என்ற அமைப்பில் அவர் பதிவு செய்யப்பட்டுள்ளமையே அதற்கு காரணமாகும். அஞ்சு ஒரு பிரெஞ்சு பெண்ணை திருமணம் செய்துள்ளார். இந்த நிலையில் பாரிஸில் உள்ள இன்டர்போல் பொலிஸார் அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது. அஞ்சுவின் சார்பில் உயர்மட்ட வழக்கறிஞர்கள் முன்னிலையாகி வருவதாக பிரான்ஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவரை இலங்கைக்கு அனுப்பினால் … Read more