கொழும்பில் பரபரப்பை ஏற்படுத்திய கொள்ளையர்கள் – பெருந்தொகை தங்கம் மீட்பு

கொழும்பில் பரபரப்பை ஏற்படுத்திய பெண் உட்பட கொள்ளை கும்பல் ஒன்றை பொலிஸார் கைது செய்துள்ளனர். பொரளையிலுள்ள கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரின் வீட்டிற்குள் புகுந்து ஒன்றரை கோடி ரூபா பெறுமதியான தங்கப் பொருட்கள் மற்றும் வெளிநாட்டு நாணயங்களை கொள்ளையிட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கும்பலிடமிருந்து சிறியளவிலான போதைப்பொருளும் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. சந்தேகநபர்களிடம் நடத்திய விசாரணையில், திருடப்பட்ட நகைகள் மற்றும் வெளிநாட்டு நாணயங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த வருடம் டிசம்பர் மாதம் 10ஆம் திகதி பொரளை கோடீஸ்வர வர்த்தகரின் … Read more

மக்களுக்கு உணவு கொடுக்க வீதியில் இறங்கிய மகிந்த

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இன்று கடலை தன்சல் ஒன்று வழங்கியுள்ளார். வெசாக் போயா தினத்தை முன்னிட்டு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கொழும்பு விஜேராமவில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்திற்கு முன்பாக இன்று கடலை தன்சல் வழங்கியுள்ளார். இந்நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மனைவி ஷஷி வீரவன்சவும் கலந்துகொண்டமை விசேட அம்சமாகும். இந்த கடலை தன்சலுக்கு பாரிய அளவிலான மக்கள் வருகைத்தந்து அதனை பெற்றுக் கொள்ளும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியானியுள்ளது. Source link

“பௌத்தாலோக மத அனுஷ்டான நிகழ்ச்சி” ஷங்ரிலா பசுமை மைதானத்தில் நடைபெற்றது

பிக்கு மாணவர்கள் நாற்பது பேர் மற்றும் 1,200 பாடசாலை மாணவ, மாணவிகளுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கிவைப்பு சுமார் மூவாயிரம் பாடசாலை மாணவர்களை சில் அனுஷ்டானத்தில் ஈடுபடுத்தும் நிகழ்வு இன்று (05) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்திற்கு முன்பாக உள்ள ஷங்ரிலா பசுமை மைதானத்தில் இடம்பெற்றது. அகில இலங்கை பௌத்த சம்மேளனத்தினால் இந்த “பௌத்தலோக மத அனுஷ்டான நிகழ்ச்சியை” ஏற்பாடு செய்திருந்தது.கொழும்பு வலயத்தில் உள்ள பல பாடசாலைகளை பிரதிநிதித்துவப்படுத்தி மாணவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டதுடன்,பிரதான பௌத்த பிரசங்கத்தை ஒலபொடுவ ரஜமஹா விகாரையின் … Read more

இலங்கையை மீண்டும் மிரட்டும் கோவிட்! அதிகரிக்கும் தொற்றாளர்கள்

நாட்டில் மேலும் 6 பேருக்கு கோவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த சில தினங்களாக கோவிட்-19 தொற்று உறுதியாகின்றவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொற்று உறுதி அதிகரிப்பு இதன்படி, கடந்த 3 தினங்களுக்குள் தொற்று உறுதியான 15க்கும் மேற்பட்டோர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.  Source link

விரைவில் நிகழவுள்ள முக்கிய கிரக பெயர்ச்சிகள்! அதிஷ்டத்தில் திளைக்க உள்ள இரு ராசிக்காரர்கள் – இன்றைய ராசிபலன்

ஜோதிடத்தின் அடிப்படையான நவகிரகங்கள் தினமும் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு பெயர்ச்சி ஆகிக் கொண்டு தான் இருக்கின்றன. இப்படிப்பட்ட சூழலில் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாறுவதைத்தான் கிரக பெயர்ச்சி என்கிறோம். அந்த அமைப்பே எதிர்காலத்தை தீர்மானிப்பதாக இந்து மக்களிடையே நம்பிக்கை நிலவி வருகிறது. இந்த நிலையில் நவகிரகங்களில் தேவகுருவாக திகழும் குருபகவான் இன்று மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். இந்த குரு பெயர்ச்சியால் இன்றைய தினம் உயர்ச்சி பெற போகும் ராசிக்காரர்கள் யார் … Read more

நாட்டின் பொதுவான வானிலை முன்னறிவிப்பு

2023 மே 05ஆம் திகதி இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்பு பிரிவால் வெளியிடப்பட்டுள்ளது. 2023 மே 05ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2023 மே 04ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டள்ளது. கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, … Read more

காதலனால் காதலிக்கு ஏற்பட்ட கொடூரம்: கண்டியில் சோகம்

தன்னுடைய காதலியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு பிரதேசத்தில் இருந்து காதலன் தப்பியோடியுள்ளார். இந்தச் சம்பவம் நேற்றைய தினம் (04.05.2023) கண்டி – பல்லேகல பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் பிலிமத்தலாவை வசிப்பிடமாகக் கொண்ட வருணி நிரோஷா (வயது 30) என்ற பெண்ணே படுகொலை செய்யப்பட்டுள்ளார். விசாரணை இந்நிலையில், சம்பவம் தொடர்பில் பல்லேகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேற்படி சம்பவம் பல்லேகல பொலிஸ் பிரிவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  நாட்டையே உலுக்கிய சம்பவம் … Read more

‘புத்த ரஷ்மி’ வெசாக் வலயம் ஜனாதிபதியினால் திறந்துவைப்பு

கொழும்பு, ஹுனுப்பிட்டி கங்காராம விகாரையினால் வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘புத்த ரஷ்மி’ வெசாக் வலயம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் (03) ஆரம்பமானது. புத்த ரஷ்மி தேசிய வெசாக் கொண்டாட்டத்தை முன்னிட்டு, காலி முகத்திடல் ஷங்ரிலா பசுமை மைதானம் மற்றும் ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் மே 03, 04, 05 மற்றும் 06 ஆம் திகதிகளில் வெசாக் தோரணங்கள், வெசாக் கூடுகள், பக்திப் பாடல்கள், அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அந்த … Read more

கிழக்கு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 25 பேர் கடற்படையினரால் கைது

திருகோணமலை, கொரல்கோவ் கடல் பகுதியில் 2023 மே 02 ஆம் திகதி காலை மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இருபத்தைந்து (25) நபர்களுடன் ஐந்து (05) டிங்கி படகுகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி சாதனங்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டன. இலங்கைக்கு சொந்தமான கடலில் மற்றும் கடற்கரையில் மேற்கொள்ளப்படுகின்ற சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் கடற்படையினர் தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். … Read more

தாமரை கோபுர திறப்பு நேரத்தில் மாற்றம்

கொழும்பிலுள்ள தாமரை கோபுரத்தை இரண்டு நாட்களுக்கு நள்ளிரவு வரை திறந்திருக்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் நள்ளிரவு வரை திறந்திருக்க கொழும்பு தாமரை கோபுர முகாமைத்துவ நிறுவனம் தீர்மானித்துள்ளது. வெசாக் பண்டிகையை கொண்டாடும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Source link