இலங்கை இராணுவப் படையினரால் முல்லைத்தீவு நோயாளர்களுக்கு இரத்த தானம்

நோயாளிகளின் இரத்த தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில் எதிர்வரும் வெசாக் பண்டிகையை முன்னிட்டு, முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படையினர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை அதிகாரிகளுடன் இணைந்து, கடந்த மே 1ஆம் திகதி முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக வளாகத்தில் இரத்ததான நிகழ்வினை மேற்கொண்டனர் என இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன்போது முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் சேவையாற்றும் 120க்கும் மேற்பட்ட படையினர் இரத்த தானம் செய்ய முன்வந்தது குறிப்பிடத்தக்கது. இதேவேளை, வைத்தியசாலை பணிப்பாளரின் வேண்டுகோளுக்கு … Read more

ஜப்பானுடனான உறவை மேலும் வலுப்படுத்த இலங்கை திட்டம்!

இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையில் தற்போதுள்ள உறவை மேலும் மேம்படுத்தும் வகையில் கிரிக்கெட் அணி ஒன்றை, இலங்கை, ஜப்பானுக்கு அனுப்ப உள்ளது. ஜப்பான் கிரிக்கெட் சங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, இலங்கையில் வளர்ந்து வரும் அணி ஒன்று, 2023ஆம் ஆண்டு மே மாதத்தில் ஜப்பானுக்கு சுற்றுப்பயணம் செய்யும் என்று சிறிலங்கா கிரிக்கட் தெரிவித்துள்ளது. இந்த சுற்றுப்பயணத்தின் போது, இலங்கை வளர்ந்து வரும் அணி ஜப்பான் தேசிய கிரிக்கெட் அணிக்கு எதிராக ஐந்து 20க்கு 20 போட்டிகளில் விளையாடவுள்ளது. ஜப்பான் தேசிய … Read more

வெசாக் பௌர்ணமி செய்தி

மூவித ரத்தினங்களால் ஆசீர்வதிக்கப்பட்ட வெசாக் பெர்ணமி தினம் பௌத்த நாட்காட்டியின் மிக முக்கியமான நாட்களில் ஒன்று என்பதோடு இது புனிதத்துவமான முக்கியத்துவத்தையும் கொண்டுள்ளது. இந்த நாள் கௌதம புத்தரின் பிறப்பு, புத்தத்துவம் மற்றும் சம்புத்த பரிநிர்வாணத்தின் புனித நிகழ்வை நினைவுபடுத்துவதோடு மனிதநேயம் மற்றும் கருணையுடன் கூடிய அறப்பணிகளை மேற்கொள்வதன் மூலம் கௌதம புத்தரின் போதனைகளுக்கு மரியாதை செலுத்துவதற்கான வாய்ப்பாகவும் இருக்கிறது. வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியை நாடு சந்தித்து வரும் இந்த சவாலான நேரத்தில், காலத்தால் அழியாத … Read more

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்க வந்த விமானங்களுக்கு ஏற்பட்ட நிலை

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்க வந்த இரண்டு விமானங்கள் மத்தள விமான நிலையத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கட்டுநாயக்க விமான நிலையத்தை சூழவுள்ள பகுதியில் நேற்று இரவு கடும் மழை மற்றும் மின்னலுடன் ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதலாவது விமானம் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL-605 ஆகும், இது நேற்று ஆஸ்திரேலியாவின் மெல்பேர்னில் இருந்து இரவு 10.25 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. இந்த விமானத்தில் 297 பயணிகளும் 15 … Read more

வெசாக் நோன்மதி தினச் செய்தி

வெசாக் நோன்மதி தினமானது அனைத்து பௌத்தர்களுக்கும் மிகவும் புனிதமான நாளாகும். வரலாறு நெடுகிலும் பௌத்த மதத்திலிருந்து நாம் பெற்ற ஒழுக்க விழுமியங்கள் தேசிய மற்றும் மத நல்லிணக்கத்தை மேம்படுத்துவதில் பெரும் பங்கு வகித்ததுடன், உலகின் முன் பெருமையுடன் எழுந்து நிற்கவும் எமக்கு உதவியது. உலகின் இயல்பைப் சிறப்பாகப் புரிந்துகொள்ள உதவும் பௌத்தத்தின் வழியை இன்று முழு உலகமும் பின்பற்றுவதற்கான தேவை எழுந்துள்ளது. பௌத்த விழுமியங்களைச் தேடிச் செல்லும் நாடுகள் அதற்காக பௌத்த நாடுகளை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கின்றன. … Read more

சிறை கைதிகளுக்கான மகிழ்ச்சியான அறிவிப்பு!

வெசாக் தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் (05.05.2023) 988 கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலைகள் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது. இவர்களில் 6 பெண் கைதிகளும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறை கைதிகளை சந்திப்பதற்கு அனுமதி  இதேவேளை, வெசாக் தினத்தை முன்னிட்டு சிறை கைதிகளை சந்திப்பதற்கு, அவர்களது உறவினர்களுக்கு இரண்டு நாட்கள் விசேட சந்தர்ப்பமொன்றை வழங்குவதற்கு சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. சிறைச்சாலைகளின் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க இதனை தெரிவித்துள்ளார். அதற்கமைய, இன்று (5.05.2023) மற்றும் நாளை … Read more

கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சர்ச்சையை ஏற்படுத்திய சிறுநீரக மோசடி! சத்திரசிகிச்சைகளை இடைநிறுத்த குழு பரிந்துரை

பொரளை தனியார் வைத்தியசாலையொன்றில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சிறுநீரக மோசடி தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழு மேற்படி வைத்தியசாலையில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளை தற்காலிகமாக இடைநிறுத்த பரிந்துரை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்விடயம் தொடர்பாக விசாரணை நடத்தும் குழு பரிந்துரைத்துள்ளதாக சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றுக்கு அறிவித்துள்ளார். சத்திரசிகிச்சைகளை இடைநிறுத்துமாறு எழுத்து மூலம் அறிவிப்பு குறித்த வைத்தியசாலைக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வழங்கப்பட்டுள்ள கடிதத்தை வலுவிழக்கச் செய்யுமாறு கோரி குறித்த வைத்தியசாலையினால் சமர்ப்பிக்கப்பட்ட நீதிப்பேராணை மனு நேற்று … Read more

புதிய தொழில் சட்டத்தை தயாரிக்க நடவடிக்கை – அமைச்சர் மனுஷ நாணயக்கார

பல ஆண்டுகாலம் பழமைவாய்ந்த நாட்டின் தொழில் சட்டத்திற்குப் பதிலாக, நவீன உலகத்திற்கு ஏற்றதும், தொழிலாளர்களின் நலன்களுக்கும் உரிமைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் புதிய தொழில் சட்டம் தயாரிக்கப்படவுள்ளதாக, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் கௌரவ மனுஷ நாணயக்கார தெரிவித்தார். தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சில் நேற்று (03) நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில், கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்…. ‘2048ஆம் ஆண்டில் வெற்றி பெறுவோம் என்ற ஜனாதிபதியின் … Read more

முல்லைத்தீவு கடற்படை புலனாய்வாளருக்கு நீதிமன்றம் அழைப்பாணை (Photos)

முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் மீது முல்லைத்தீவு கோட்டபாய கடற்படை முகாம் கடற்படை அதிகாரி தொடர்ந்த வழக்கானது கடந்த 2019ஆம் ஆண்டு முதல் இடம்பெற்று வரும் நிலையில், இது தொடர்பான விசாரணைகள் இடம்பெற்றுள்ளது. இன்றைய தினம் (04.05.2023) முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது வழக்கு தொடுனரான கடற்படை புலனாய்வாளருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதோடு வழக்கு விசாரணைகள் எதிர்வரும் 2023-09-21க்கு தவணையிடப்பட்டுள்ளது. கடற்படை புலனாய்வாளருக்கு அழைப்பாணை முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர் சண்முகம் … Read more

12 வருடங்களின் பின்னர் இலங்கையில் டெங்கு 03 வகை வைரஸ் பரவியுள்ளது.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் டெங்கு ஆய்வு நிறுவகம் மேற்கொண்ட 90 பரிசோதனைகளில் டெங்கு 03 வகை வைரஸ் நாட்டில் ஆதிக்கம் செலுத்தி பரவி வருகின்றமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இது கடந்த 12 வருடங்களாக நாட்டில் காணப்படாத ஒரு வகையான வைரஸ் என்றும் கொழும்பு மாநகர சபையின் பிரதம வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனி தெரிவித்துள்ளார். எமது உடலில் இந்த நோய்க்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்திகள் இல்லை என்றும், இதன் காரணமாக இந்நோய் பரவும் அபாயம் காணப்படுவதாகவும் வைத்தியர் … Read more