இலங்கையில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட பெண்கள்! பின்னணியில் மறைந்துள்ள மாபியாக்கள்

இலங்கையில் தற்போது அதிகளவு பேசுப்பொருளாகியுள்ள ஒரு விடயம் தான் பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடூரமான கொலைச் சம்பவங்கள். ஆனால் இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய ஓர் விடயம் என்னவெனின் ஆங்காங்கே அரங்கேறும் இந்த கொலைச் சம்பவங்கள் அவ்வப்போது மட்டும் ஊடகங்களால் பெரிதும் பேசப்படுவதும், மக்கள் பதற்றமடைவதும் அதற்கு உடனடியாக தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்தி போராட்டங்களை முன்னெடுப்பதும், பொலிஸார் விரைந்து விசாரணைகளை முன்னெடுப்பதும் ஆகும். பொதுவான கருத்தொன்று எம்மத்தியில் உள்ளது. அதுதான் ‘‘இதுவும் கடந்து போகும்‘‘ என்பது போல … Read more

மக்கள் நலத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் அரசியல் வேறுபாடு கிடையாது – கடற்றொழில் அமைச்சர்

மக்கள் நலத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் அரசியல் வேறுபாடு கிடையாது என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கிடைக்கின்ற வாய்ப்புக்கள் அனைத்து மக்களுக்கும் கிடைக்க வேண்டும் அதற்கான ஆலோசனைகளையும் முன்மொழிவுகளையும் மக்கள் பிரதிநிதிகள் வழங்க முடியும் எனவும் தெரிவித்தார். கிளிநொச்சி மாவட்ட செயலக மண்டபத்தில் நேற்று (03) இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும் போதே ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா இதனைத் தெரிவித்தார். வடக்கு மாகாணத்தினை சேர்ந்த கடற்றொழிலாளர்களின் … Read more

ஜனாதிபதி கல்விப் புலமைப்பரிசில் வேலைத்திட்டம் ஆரம்பம்

ஜனாதிபதியால் அடையாள ரீதியாக புலமைப்பிரிசில் வழங்கி வைப்பு ஜனாதிபதி புலமைப்பரிசில் வழங்கல் – 2023 நிகழ்வு (03) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நடைபெற்றது. ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய க.பொ.த சதாரண தர பரீட்சையில் தோற்றி முதல் அமர்விலேயே சித்தி பெற்று க.பொ.த உயர்தரத்திற்கு தெரிவான மாணவ மாணவியருக்கான புலமைப்பரிசில் வழங்குவதற்கான மேற்படி திட்டத்தினை ஜனாதிபதி நிதியம் மற்றும் கல்வி அமைச்சு ஆகியன இணைந்து முன்னெடுக்கின்றன. அதற்கமைய, 2022 ஆம் ஆண்டில் க.பொ.த சதாரண தர … Read more

நான்கு ஆண்டுகளுக்குப் பின்பு, ஜனாதிபதி நிதியத்தின் ஆளும் சபை கூடியது

நான்கு வருடங்களின் பின்னர் ஜனாதிபதி நிதியத்தின் ஆளும் சபை (03) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் கூடியது. இந்த ஆளும் சபை, ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர், ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட இரண்டு உறுப்பினர்கள் உட்பட 07 உறுப்பினர்களைக் கொண்டது. வண, கலாநிதி மெதகொட அபயதிஸ்ஸ நாயக்க தேரரும் நியமிக்கப்பட்ட உறுப்பினராக செயற்படுகின்றார். நான்கு வருடங்களின் பின்னர் நடைபெற்ற இந்த ஆளும் சபை கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை … Read more

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டிற்கான ஒன்லைன் விண்ணப்பம் இன்று நள்ளிரவுடன் நிறைவு

க.பொ.த உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப்பணிகளுக்காக, தகுதிவாய்ந்த ஆசிரியர்களிடம் இருந்து ஒன்லைன் ஊடாக விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. இந்நிலையில் அக்கால அவகாசம் இன்று (4) நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடைவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.  

கொழும்பில் Beauty Salon செல்லும் பெண்களுக்கு எச்சரிக்கை – ஆபத்தான பெண் கண்டுபிடிப்பு

கொழும்பில் அழகு சிகிச்சை பெற்றுக் கொள்வதாக கூறி பெறுமதியான பொருட்கள் அடங்கிய பைகளை திருடும் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அழகுக்கலை நிலையங்களுக்கு வரும் வாடிக்கையாளர்கள் தங்கள் பைகளை ஒரு இடத்தில் வைத்து விட்டு அந்த பைகள் தொடர்பில் அவதானம் செலுத்தாத சந்தர்ப்பங்களை இந்த பெண் பயன்படுத்திக் கொள்வதாக குறிப்பிடப்படுகின்றது. இந்த பெண் அங்குள்ள பைகளில் பொருட்கள் மற்றும் பணத்தை கொள்ளையடிப்பதாக தெரியவந்துள்ளதென பொலிஸார் கூறியுள்ளனர். அவிசாவளை, கம்பளை, பொரலஸ்கமுவ, வரக்காபொல ஆகிய பல நிலையங்களில் … Read more

பதில் பாதுகாப்பு அமைச்சராக இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் நியமிக்கப்பட்டுள்ளார்

மூன்றாம் சார்ள்ஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் கலந்துகொள்வதற்காக கௌரவ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் இன்று (04) காலை இலங்கையிலிருந்து பிரித்தானியாவிற்கு பயணமானார். மேற்படி முடிசூட்டு விழாவானது இம்மாதம் 06ஆம் திகதி சனிக்கிழமை காலை 11.௦௦ மணிக்கு வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் தொடங்கவுள்ளது. இதன்படி, பதில் பாதுகாப்பு அமைச்சராக இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய விமானப்படை தளபதி பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு

இந்தியாவில் நடைபெறும் பயிற்சி கற்கைநெறிகளில் கலந்து கொள்ளும் இலங்கை பாதுகாப்பு படையினரின் தொழில்முறை தரத்தை இந்திய விமானப்படைத் தளபதி பாராட்டினார். இந்திய விமானப்படைத் தளபதி எயார் சீப் மார்ஷல் வி. ஆர்.சௌதாரி பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன அவர்களை (மே 03) சந்தித்தார். கோட்டே, ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு அமைச்சுக்கு இன்று காலை வருகை தந்த இந்திய விமானப்படைத் தளபதி பாதுகாப்புச் செயலாளரினால் வரவேற்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற சுமூகமான கலந்துரையாடலின் போது, இரு … Read more

பாதுகாப்பு செயலாளருக்கு போர் வீரர்களின் கொடி அணிவிப்பு

போர் வீரர்கள் நினைவு மாதத்தினை முன்னிட்டு பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன அவர்களுக்கு புதன்கிழமையன்று (மே 03) போர்வீரர்களின் கொடி அணிவிக்கப்பட்டது. ரணவிரு சேவா அதிகாரசபையின் தலைவர் மேஜர் ஜெனரல் நந்தன சேனாதீர (ஓய்வு) தலைமையிலான குழுவினர், கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்புச் செயலாளரை சந்தித்த போது அவர் மீது போர்வீரர்களின் கொடி அணிவிக்கப்பட்டது. பணிப்பாளர் மேஜர் ஜெனரல் கித்சிறி ஏகநாயக்க (ஓய்வு), பிரிகேடியர் ரொஷான் திரிமான்ன, லெப்டினன்ட் கேர்ணல் ரக்ஷித … Read more

2023 ஆம் ஆண்டினுள் காணி உரிமைகளை வழங்கும் 2000 காணி காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கத் திட்டம்

தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் கடன், நிதியுதவி மற்றும் அரச அளிப்பு காணி உரிமங்களை வழங்கும் நிகழ்வு பொலன்னறுவையில் ஆரம்பம். ஜனாதிபதி ரணிலின் வேலைத் திட்டத்தினை முன்னெடுக்கும் நோக்கில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மீண்டும் அவதானத்திற்குக் கொண்டு வரும் நோக்கில் பொலன்னறுவை, ஹிங்குராக்கொடை தாரகை மண்டப கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற அரச அளிப்பு காணி உறுதிகளை வழங்கும் நிகழ்வில் அண்மையில் (29) கலந்து கொண்ட போதே அமைச்சர் ரணதுங்க இதனைத் தெரிவித்தார். இதன்போது கிங்குராக்கொடை பிரதேச செயலகத்தினால் பயனாளிகள் … Read more