அடுத்த கட்ட ஐஎம்எப் பேச்சுவார்த்தையில் அரசு ஊழியர்களுக்கு முதல் சலுகை…

எதிர்வரும் சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சுவார்த்தையில் நிவாரணம் கிடைக்குமாயின் முதலில் அரச ஊழியர்களுக்கு நிவாரணம் வழங்கப்படுமென அரசாங்கம் கொள்கையாக தெரிவித்துள்ளது என்ற அமைச்சரவை பேச்சாளர், ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (03) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அரசாங்கம் என்ற ரீதியில் நாம் ஒரு துறையைப் பற்றி மாத்திரம் சிந்திப்பதில்லை. எனவும், இந்த நேரத்தில் அனைத்து … Read more

டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி! மத்திய வங்கியின் தகவல்

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது. இதன்படி, நேற்றுடன் ஒப்பிடும் போது டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி இன்றையதினம்(03.05.2023) சற்று அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய  நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 327.95 ரூபாவாகவும், கொள்வனவு விலை 313.05 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. பவுண்ட் மற்றும் யூரோவின் பெறுமதி இந்தநிலையில் ஸ்டெர்லிங் பவுண்டிற்கு எதிராக ரூபாவின் பெறுமதியில் சிறு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதேவேளை, … Read more

யாழ் மாவட்டத்தில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரிப்பு – யாழ் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்

யாழ் மாவட்டத்தில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துவருவதாக யாழ் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவ கலாநிதி ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். மலேரியா பரவும் வாய்ப்புள்ள நாடுகளுக்கு சென்று வருபவர்கள் சுகாதார மற்றும் மலேரியா தடுப்பு ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார். டெங்கு மற்றும் மலேரியா நோய் தொடர்பாக நேற்றைய தினம் (02) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் இந்த வருடத்தில் மட்டும் சுமார் 1132 டெங்கு நோயாளிகள் … Read more

காலி முகத்திடல் ஷங்ரிலா பசுமை மைதானம் மற்றும் ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் விசேட வெசாக் நிகழ்ச்சி இன்று ஆரம்பம்

புத்த ரஷ்மி தேசிய வெசாக் கொண்டாட்டத்தை முன்னிட்டு, காலி முகத்திடல் ஷங்ரிலா பசுமை மைதானம் மற்றும் ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் மே 03, 04, 05 மற்றும் 06 ஆம் திகதிகளில் வெசாக் தோரணங்கள், வெசாக் கூடுகள், பக்திப் பாடல்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இன்று (03) மாலை 7.00 மணிக்கு ஜனாதிபதி அலுவலக படிக்கட்டுகளுக்கு முன்பாக வண்ணமயமான பக்திப் பாடல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளதுடன், இந்நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் பங்கேற்க உள்ளார். மே … Read more

மூடப்படும் நான்கு அரச நிறுவனங்கள்: அமைச்சர் வெளியிட்டுள்ள காரணம்

நிதி பற்றாக்குறை காரணமாக நான்கு நிறுவனங்களை மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதுள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இன்றைய தினம் (03.05.2023) அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் கூறியுள்ளதாவது, பராமரிப்பதற்கு நிதிப் பற்றாக்குறை நிலவுவதன் காரணமாக, மக நெகும மற்றும் அதனுடன் இணைந்த நான்கு நிறுவனங்களை மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நிதிப் பற்றாக்குறை  மக நெகும வீதி கட்டுமான உபகரண நிறுவனம், 2004ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இது … Read more

இந்திய விமானப்படை தளபதி இலங்கை கடற்படை தளபதியுடன் சந்திப்பு

இலங்கைக்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள இந்தியவிமானப்படைத் தளபதி எயார் சீஃப் மார்ஷல் விவேக் ராம் சௌதாரி, நேற்று (02) கடற்படைத் தலைமையகத்தில் இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவை சந்தித்தார். அதன்படி, கடற்படைத் தலைமையகத்திற்கு வருகை தந்த இந்திய விமானப்படைத் தளபதி எயார் சீஃப் மார்ஷல் விவேக் ராம் சௌதாரி கடற்படை மரபுகளுக்கு இணங்க வரவேற்கப்பட்டதுடன் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா, இந்திய விமானப்படைத் தளபதியை அன்புடன் வரவேற்று, … Read more

இன்றிலிருந்து வெசாக் வாரம்

அரச வெசாக் விழா மே மாதம் 04-05 ஆம் திகதிகளில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வின் தலைமையில் புத்தளம் மாவட்டத்தின் சிலாபம் மாதம்பே கெபெல்லேவல ஸ்ரீ ரதனஷிலி பிரிவென விகாரையில் இடம்பெற ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனை முன்னிட்டு இன்றிலிருந்து மே மாதம் 8ஆம் திகதி வரை வெசாக் வாரம் நடைமுறைப்படுத்தப்படுவதுடன் அதற்காக பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவிருப்பதாக பௌத்த மற்றும் கலாசார அலுவல்கள்அமைச்சர் விதுர விக்ரமநாயக தெரிவித்தார். இம்முறை வெசாக் விழா வழமை போன்று வெசாக் விழா பாரிய … Read more

இலங்கை வந்த வெளிநாட்டு பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி

இலங்கை சுற்றுலா பயணம் மேற்கொள்ள வந்த பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவரின் பையில் பெறுமதியான பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. சுமார் ஒரு இலட்சம் இலங்கை ரூபாய், 100 அமெரிக்க டொலர்கள் மற்றும் 200 அவுஸ்திரேலிய டொலர்கள் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளன. காலி சமனல மைதானத்திற்கு அருகில் வைத்து நால்வர் பேர் கொண்ட கும்பல் கொள்ளையில் ஈடுபட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பெண் தனது பையை தரையில் வைத்துவிட்டு தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்த நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கொள்ளைக் … Read more

தேசிய செயற்திறன் ஆணைக்குழுவின் பணிகளுக்கு அவுஸ்திரேலியா உதவி

அவுஸ்திரேலிய தேசிய செயற்திறன் ஆணைக்குழு மற்றும் இலங்கை தேசிய செயற்திறன் ஆணைக்குழு ஆகியவற்றின் செயற்பாட்டாளர்களுக்கு இடையிலான அனுபவங்களை பகிர்ந்துகொள்வதற்கான இணையவழி அமர்வொன்று அண்மையில் இடம்பெற்றது. ஜனாதிபதி அலுவலகத்தினால் இந்தக் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்காக இலங்கை பரந்த அளவிலான திட்டமிடல்களை அமுல்படுத்தியிருக்கின்ற நிலையில் அதன் முதன்மைத் திட்டமாக தேசிய செயற்திறன் ஆணைக்குழு நிறுவப்பட வேண்டுமென அடையாளங்காணப்பட்டுள்ளது. அதன் காரணமாகவே நாட்டின் நெருக்கடியை பொருட்படுத்தாமல் 2023 வரவு செலவு திட்டத்தில் ஆணைக்குழுவை நிறுவுவதற்காக அரசாங்க நிதி … Read more

பெலாரஸில் உயிரிழந்த இலங்கை மருத்துவ மாணவனின் மரணத்தில் மர்மம் – விசாரணைகள் ஆரம்பம்

பெலாரஸில் பல்கலைகழகத்தில் இலங்கை மருத்துவ மாணவன் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அந்நாட்டு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். Grodno State Medical பல்கலைகழகத்தில் கல்வி கற்ற 24 வயதுடைய மருத்துவ மாணவரான திஷான் குலரத்ன என்ற மாணவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். கண்டியில் உள்ள பிரதான ஆண்கள் பாடசாலையொன்றில் கல்வி கற்ற இந்த மாணவன் உயிரியல் பிரிவில் சித்தியடைந்து வைத்தியராக வேண்டும் என்ற நோக்கத்தில் பெலாரஸில் உள்ள Grodno பல்கலைக்கழகத்தில் பதிவு செய்துள்ளார். இறக்கும் போது … Read more