பிரான்ஸில் கைது செய்யப்பட்ட குடு அஞ்சு தொடர்பில் வெளிவரும் தகவல்

பிரான்ஸில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் வர்த்தகரான ரத்மலானை குடு அஞ்சு தொடர்பில் பல தகவல்கள் வெளியாகி உள்ளன. பிரான்ஸில் வைன் தயாரிக்கும் தொழிற்சாலை மற்றும் டுபாயில் தண்ணீர் போத்தல்கள் தயாரிக்கும் தொழிற்சாலை உட்பட பல வர்த்தகங்களை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. குடு அஞ்சு பிரான்சில் அகதியாக வாழ்ந்து வருவதாகவும், அதனால் இந்த தொழிற்சாலை வேறு ஒருவரின் பெயரில் நடத்தப்படுவதாகவும் அந்த வட்டாரங்கள் மூலம் மேலும் தெரியவந்துள்ளது. டுபாயில் தண்ணீர் போத்தல் தொழிற்சாலை, ஆரோக்கிய மையம், … Read more

உக்ரைன் மீதான போர் தந்திரோபாயங்களில் மாற்றம்: ரஷ்யாவின் பயங்கர திட்டம் அம்பலம்

உக்ரைன் மீதான ரஷ்ய போர் ஓராண்டை கடந்து இன்று 433 ஆவது நாளாக நீடித்து வரும் நிலையில் உக்ரைன் மீதான ஏவுகணை தாக்குதல் தந்திரோபாயங்களை ரஷ்யா மாற்றி உள்ளதாக உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது. உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கியின் ஆலோசகர் மைக்கைலோ போடோலியாக் இதனை தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா சமீபத்தில் ஏவிய 18 ஏவுகணைகளில் 15-ஐ உக்ரைனிய வான் பாதுகாப்பு அமைப்பு தடுத்து நிறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமாதான பேச்சுவார்த்தை இந்நிலையில், ரஷ்யாவின் போர் தந்திரோபாயங்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக … Read more

டெங்கு மற்றும் இரத்த பரிசோதனைகளில் மேற்கொள்ளப்பட்ட மோசடி அம்பலம்!

டெங்கு பரிசோதனை மற்றும் முழு இரத்த எண்ணிக்கை பரிசோதனை ஆகிய இரண்டிற்கும் நோயாளிகளிடம் அதிக கட்டணம் வசூலித்த 12 தனியார் மருத்துவமனைகள் மற்றும் ஆய்வகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, 12 நிறுவனங்களுக்கு நோயாளிகளிடம் இருந்து சம்பந்தப்பட்ட சோதனைகளுக்கு கட்டணம் வசூலித்ததற்காக 9.4 மில்லியன் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்று நுகர்வோர் விவகார அதிகாரசபையின் (CAA) மூத்த புலனாய்வு அதிகாரி ஏ.யு.ரஞ்சன் தெரிவித்துள்ளார்.  நீதிமன்ற உத்தரவு நுகேகொட, கல்கிசை, மாளிகாகந்த மற்றும் கொழும்பு கோட்டை … Read more

விரைவில் கியூ.ஆர் முறை இடைநிறுத்தப்படும்! வெளியான அறிவிப்பு

QR குறியீட்டின் ஊடாக எரிபொருளை  வழங்கும் முறை விரைவில் இடைநிறுத்தப்படும் என ஜனாதிபதி அலுவலகத்தின் பிரதானி சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  எரிவாயு விலை குறைப்பு மேலும், எரிவாயுவின் விலையும் குறையும் சாத்தியம் இருப்பதாகவும் அவர் நேற்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  இதேவேளை, லிட்ரோ உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் விலை நாளை நள்ளிரவு முதல் நடைமுறைக்கு  வரும் வகையில் … Read more

வெளிநாடுகளில் நடைபெறுகின்ற டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும் – திமுத் கருணாரத்ன

அயர்லாந்து அணியுடனான டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்றிய போதிலும், இலங்கை அணி பங்கேற்கும் வெளிநாட்டு; போட்டிகளில் வெற்றி பெறுவது ஒரு நாடு என்ற வகையில் மிகவும் முக்கியமானது என இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன தெரிவித்தார். காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று இடம்பெற்ற இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்றதன் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். ‘அயர்லாந்துக்கு எதிரான போட்டி முழுவதும் நன்றாக இருந்தது. இந்த … Read more

யாழ்ப்பாணம் அல்லப்பிட்டி பகுதியில் இருந்து 50 வர்த்தக வெடிபொருள் குச்சிகள் கடற்படையினரால் மீட்கப்பட்டன

யாழ்ப்பாணம் ஆல்லப்பிட்டி பகுதியில் 2023 ஏப்ரல் 30 ஆம் திகதி இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, 50 வர்த்தக வெடிபொருட்கள், பதினைந்து மின்சாரம் அல்லாத டெட்டனேட்டர்கள் மற்றும் 172 செ.மீ நீளமான பாதுகாப்பு உருகிகள் ஆகியவை கைப்பற்றப்பட்டன. வெடிபொருட்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் சட்டவிரோத மீன்பிடியினால் கடல்சார் சூழலுக்கு ஏற்படும் சேதங்களைத் தடுக்கும் வகையில் கடற்படையினர் தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, இலங்கை கடற்படையின் வடக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை … Read more

சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் வழங்கிய பங்களிப்புக்காக, கடற்படை கப்பல்துறைக்கு ஜனாதிபதி சுற்றுச்சூழல் தங்க விருது வழங்கப்பட்டது

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கௌரவ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் 2023 ஏப்ரல் 28 ஆம் திகதி இடம்பெற்ற 2021-2022 ஜனாதிபதி சுற்றாடல் விருது வழங்கும் நிகழ்வில், இலங்கை கடற்படை திருகோணமலை கடற்படைத் கப்பல்துறையில் சுற்றாடல் பாதுகாப்புக்காக மேற்கொள்கின்ற சிறந்த பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் வழங்கப்பட்ட தங்க விருது கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி மற்றும் தன்னார்வ கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் தம்மிக்க குமார கௌரவ ஜனாதிபதியிடமிருந்து பெற்றுக் கொண்டார். கடற்படைத் … Read more

சர்வஜன வாக்கெடுப்பும் தமிழரும்

Courtesy: ச.வி.கிருபாகரன், பிரான்ஸ் ஜனநாயகத்தின் அடிப்படை விதிமுறைகளில் ஒன்றானது தேர்தலும், வாக்களிப்பும். இவை இரண்டும் ஜனநாயக நாடுகளென கூறப்படும் மேற்கு நாடுகளிலும், வேறு சில ஆசிய, ஆபிரிக்க, லத்தின் அமெரிக்க நாடுகளிலும் நடை முறைபடுத்தப்படுகின்றன. தேர்தலில் வாக்களிக்கும் முறைகளும், நாடு நிலைமைகளிற்கு ஏற்ப உலகளவிய ரீதியில் வேறுபடும். தேர்தலுக்கும் வாக்களிப்பிற்கும் உள்ள முக்கிய வேறுபாடு என்னவென்றால், தேர்தல் என்பது பலரின் கருத்தைப் பெறுவதற்கான ஒரு முறை சாரா செயல்முறையாகும். வேறுபட்ட விதி முறை மறுபுறம், வாக்களிப்பது என்பது … Read more

மின் விளக்குகளை பயன்படுத்தி வடக்கு கடலில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 02 பேர் கடற்படையினரால் கைது

யாழ்ப்பாணம், சுண்டிக்குளம் கடற்பகுதியில் 2023 ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது மின்சார விளக்குகளை பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இருவர் (02), இரண்டு டிங்கி படகுகள் (02) மற்றும் சட்டவிரோத மீன்பிடி உபகரணங்கள் கைப்பற்றப்பட்டன. இலங்கைக்கு சொந்தமான கடல் மற்றும் கரையோர வலயத்தில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் கடற்படையினர் தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி 2023 ஏப்ரல் மாதம் 30 … Read more

சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 836 கிலோ கிராமிற்கும் அதிகமான பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி இரவு மற்றும் மே 01ஆம் திகதி அதிகாலை கல்பிட்டி, பராமுனை மற்றும் குடாவ கடற்பகுதியில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 836 கிலோவிற்கும் அதிகமான பீடி இலைகளுடன், ஒரு டிங்கி படகும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், இருவர் கைது செயய்பப்பட்டுள்ளனர். கடல் வழிகள் ஊடாக மேற்கொள்ளப்படும் பல்வேறு ஆட்கடத்தல் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் பொருட்டு, கடற்படையினர், தொடர்ச்சியான ரோந்து மற்றும் … Read more