விசேட பாதுகாப்பு நடவடிக்கையில் பொலிஸார்! வெளியான அறிவிப்பு

நாட்டில் நாளை (01.05.2023) நடைபெறவுள்ள மே தினக் கூட்டங்களின் நிமித்தம் பொலிஸார் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். கொழும்பு, நுகேகொடை, ஹட்டன் மற்றும் கண்டி ஆகிய நகரங்களில் இந்த பாதுகாப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.  3,500 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில்  இதன்படி, குறித்த பிரதேசங்களில் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு தொடர்பிலும் அதிக கவனம் செலுத்தப்பட்டு விசேட வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  கொழும்பில் நடைபெறும் மே … Read more

இலங்கையில் ரூபாய் நெருக்கடி எப்படி உருவானது.. சபையில் எழுப்பப்பட்ட கேள்வி

அந்நியச் செலாவணி நெருக்கடி மட்டுமின்றி, ரூபாய் நெருக்கடியும் நாட்டில் எப்படி உருவானது என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கேள்வி எழுப்பியுள்ளார்.  கடந்த வாரத்தில் இடம்பெற்ற நாடாளுமன்ற விவாதத்தின் போது அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.  பாதாளத்திற்குச் செல்லவே வழிவகுக்கிறது  தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,  தவறான பரிகாரங்களைச் செய்து கொண்டு இந்த நெருக்கடியை மென்மேலும் மோசமாக்கி இந்த நாட்டை அழிக்கிறார்கள். உள்நாட்டுக் கடனை மறுசீரமைப்பதில், அரச வங்கி நிதிச் சந்தை நிலையற்ற தன்மைக்கு உள்ளாகின்றது. இந்த மூன்று … Read more

<span class="follow-up">NEW</span> இறக்குமதி முட்டை சில்லறை விற்பனைக்கென வெளியான அறிக்கை தவறானது! விவசாய அமைச்சு

இறக்குமதி செய்யப்பட்ட முட்டையை சில்லறை விலைக்கு விற்பனை செய்வதற்காக அனுமதி வழங்கப்பட்டதாக தெரிவித்து வெளியான அறிக்கை தவறானது என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளை சில்லறை விலையில் விற்பனை செய்வதற்காக, சந்தைக்கு விநியோகிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்து விவசாய அமைச்சினால் இன்று முற்பகல் வெளியிடப்பட்டிருந்தது. இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டை நாட்டில் முட்டை தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வால் இந்தியாவில் இருந்து முட்டையை இறக்குமதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது. இந்தநிலையில் … Read more

அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் பல பகுதிகளில் மாலை வேளைகளில் இடியுடன் கூடிய மழை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்பு பிரிவால் வெளியிடப்பட்டுள்ளது. 2023 ஏப்ரல் 30ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2023 ஏப்ரல் 30ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டள்ளது. அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் பல பகுதிகளில் மாலை வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். அத்துடன், மேல், சப்ரகமுவ, … Read more

குழந்தைகளின் பசியை தீர்க்க உணவு தேடி தவித்த தாய்! இறுதியில் நேர்ந்த சோகம்

புத்தளம்- பள்ளம, அடம்மன வெலிய பிரதேசத்தில் மின்னல் தாக்கி இரண்டு பிள்ளைகளின் இளம் தாயொருவர் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளதாக பள்ளம பொலிஸார் தெரிவித்துள்ளனர். அடம்மன, எம்.ஏ. பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய மல்காந்தி என்ற இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார். ரோகினி தன்னை கணவனின் குடிப்பழக்கத்தால் கடும் பொருளாதார நெருக்கடிக்குள்ளான இந்த இளம் தாய், தனது காணியில் உள்ள முந்திரி மரத்தில் ஒரு கிலோ முந்திரியை பறித்து விற்பனை செய்து தனது இரண்டு குழந்தைகளுக்கும் இரவு உணவு … Read more

சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் வகையில் காலியில் பிரபாண்டமான இலக்கிய விழா (Galle Literary Festival)

பல வருடங்களாக நடைபெறாத, சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற இலக்கிய விழாவான காலி இலக்கிய விழாவை (Galle Literary Festival) சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் நோக்கில் மீண்டும் பிரமாண்டமாக நடத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு இணையாக, பல்வேறு கலை அம்சங்கள் அடங்கிய தொடர் நிகழ்ச்சிகளை காலி, மாத்தறை, அஹங்கம மற்றும் ஹிக்கடுவ ஆகிய பிரதேசங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதோடு, இதற்கான ஆரம்பகட்ட கலந்துரையாடல் (28) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்றது. அந்தத் … Read more

இலங்கையில் மீண்டும் தீவிரமடையும் கோவிட் தொற்று! இருவர் மரணம்

இலங்கையில் மீண்டும் கோவிட் வைரஸ் தீவிரமடைந்து இரண்டு நாட்களில் இருவர் உயிரிழந்துள்ளதாக கொலன்னாவ மரண விசாரணை அதிகாரி காஞ்சனா விஜேநாயக்க தெரிவித்துள்ளார். மாத்தறை ஹமந்துவ பிரதேசத்தில் வசிக்கும் 56 வயதுடைய பெண்ணும், யட்டியந்தோட்டை பனாவத்தையில் வசிக்கும் 73 வயதுடைய ஆணும் உயிரிழந்துள்ளனர். இரண்டு நாட்களில் இருவர் பலி உயிரிழந்த பெண் கடந்த 27ஆம் திகதி IDH வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மறுநாள் வெள்ளிக்கிழமை (28.04.2023) உயிரிழந்துள்ளார். மற்றைய நபர் 28ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று (29.04.2023) … Read more

“புராஜெக்ட் ரன்“ விருது பெற்ற பாடசாலைகளுக்கு விருதுகள்

எம்மிலிருந்து நாட்டிற்கு – நாட்டின் முன்னேற்றத்திற்கு’ எனும் தொனிப்பொருளில் மதர் ஸ்ரீலங்கா அமைப்பினால் நடைமுறைப்படுத்தப்படும் “புராஜெக்ட் ரன்“ திட்டத்தின் பரிசளிப்பு விழா (28) பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் அலரி மாளிகையில் இடம்பெற்றது. பாடசாலையில் அல்லது பாடசாலையைச் சூழவுள்ள சமூகத்தில் உள்ள பிரச்சினையை கண்டறிந்து, அதற்கான தீர்வுகளை முன்வைக்கும் திட்டம், புராஜெக்ட் ரன் திட்டத்தின் மூலம் பாடசாலை பிள்ளைகள் மூலம் நடைமுறைப்படுத்தப்பட்டது. மாணவர்களின் தேசப்பற்றை வளர்த்தல், படைப்பாற்றல் – சுதந்திரம் – தலைமைத்துவ திறன் – திட்ட … Read more

ஐ.எம்.எப் உடன்படிக்கையை எதிர்க்கும் முதுகெலும்பு ஐக்கிய மக்கள் சக்திக்கு இல்லை! சுனில் ஹந்துன்நெத்தி

சர்வதேச நாணய நிதியம் மூலம் நாட்டிற்கும் பொருளாதாரத்திற்கும் ஏற்படும் அழிவுகளுக்கு எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியும் ஒப்புதல் அளித்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியம் தொடர்பான நாடாளுமன்ற வாக்கெடுப்பின்போது, சபையில் சமுகமளிக்காததன் மூலம் நிதி வசதி ஒப்பந்தத்துக்கு அவர்கள் ஒப்புதல் வழங்கியுள்ளதாக ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கைக்கு நாடாளுமன்றத்தினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது என்பதை மட்டுமே காட்ட விரும்புவதாக … Read more

காலநிலையில் இன்று ஏற்படவுள்ள மாற்றம்! பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது. பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுததல்  மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த … Read more