இலங்கையில் குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ள மோசமான நிலை! வெளியான அதிர்ச்சி தகவல்

ஐந்து வயதுக்குட்பட்ட எடை குறைந்த குழந்தைகளின் அடிப்படையில் தெற்காசிய பிராந்தியங்களில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இலங்கை இரண்டாவது இடத்தில் உள்ளது என இலங்கை மத்திய வங்கி (CBSL) 2022 இல் வெளியிட்ட அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் நிபுணத்துவ சங்கத்தின் (MCPA) தலைவர் சமல் சஞ்சீவ இதனைத் தெரிவித்துள்ளார்.  பாடசாலை மாணவர்களுக்கான உணவு இவ்வாறானதொரு பின்னணியில், பாடசாலை மாணவர்களின் போசாக்கு நிலையை மேம்படுத்தும் வேலைத்திட்டங்களும் பல காரணிகளால் சீர்குலைந்துள்ளதாக நாடாளுமன்றத்தில் தெரியவந்துள்ளதாக அவர் மேலும் … Read more

இலங்கை வரலாற்றை ஆய்வு செய்வதற்காக புதிய நிறுவனம் விரைவில் நிறுவப்படும் – ஜனாதிபதி

இலங்கையின் வரலாற்றை ஆய்வு செய்வதற்காக புதிய நிறுவனம் ஒன்று விரைவில் ஸ்தாபிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தேசிய அருங்காட்சியகம், ஆவணக் காப்பகத் திணைக்களம், தொல்பொருள் திணைக்களம், கலாசார முக்கோணம், பல்கலைக்கழகங்கள் மற்றும் றோயல் ஆசிய சங்கம் என்பனவற்றை இணைத்து நிறுவி, அதற்கான சட்ட வரைவை நிறைவு செய்வதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி குறிப்பிட்டார். மகாவலி கேந்திர நிலையத்தில் கடந்த (27) நடைபெற்ற றோயல் ஆசிய சங்கத்தின் 178 ஆவது கொண்டாட்ட நிகழ்வில் … Read more

ஒன்லைனில் கையடக்க தொலைபேசி கொள்வனவு செய்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

இரத்தினபுரியில் கொரியர் சேவை மூலம் பெறுமதியான கையடக்கத் தொலைபேசி கொள்வனவு செய்தவருக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. தொலைபேசி பார்சலை பெற்றுக்கொண்ட பாடசாலை மாணவர் ஒருவர், அதனை திறந்து பார்த்தபோது தண்ணீர் போத்தல் மற்றும் வைக்கோல் இருந்ததாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பேஸ்புக்கில் வெளியிடப்பட்ட விளம்பரத்தின் மூலம் கையடக்கத் தொலைபேசிக்கு விண்ணப்பித்துள்ளதாகவும் அந்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பேஸ்புக்கில் வெளியான விளம்பரத்தின் அடிப்படையில் இரத்தினபுரி நகரிலுள்ள அரசாங்க பாடசாலை ஒன்றில் படிக்கும் மாணவர் ஒருவர் நவீன கையடக்கத் தொலைபேசிக்கு … Read more

சூழலைப் பாதுகாக்க அர்ப்பணிப்புடன் செயற்பட்ட 90 பேருக்கு ஜனாதிபதி விருதுகள்

காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும் – ஜனாதிபதி உறுதி.உலகில் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க இலங்கை உள்ளிட்ட அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளால் மாத்திரம் முடியாது எனவும் சூழலை மாசுபடுத்துவதற்கு காரணமாக உள்ள அபிவிருத்தியடைந்த நாடுகள் நிதியுதவி அளித்து இதற்குப் பங்களிக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கு அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு தேவையான வளங்களை பெற்றுக்கொடுக்க இலங்கை முதன்மையான … Read more

இலங்கையின் பொருளாதார நெருக்கடி மேலும் மோசமடையும் – கலாநிதி விடுத்துள்ள எச்சரிக்கை

நாட்டின் பொருளாதார நெருக்கடி மேலும் மோசமடையும் என்பது தெளிவாகி தெரிவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கமைய, இந்த விடயம் தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச நாணய நிதியத்துடன் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, இந்த நாட்டு மக்களுக்கு என்ன நடக்கப் போகிறது என்பது தெளிவாகத் தெரிகிறது என அவர் கூறியுள்ளார். இந்த நிலையில் இந்த நாட்டு மக்களுக்கு எந்த நிவாரணமும் கிடைக்காது என அவர் கூறியுள்ளார். நாட்டு மக்களின் … Read more

அமெரிக்காவின் தீர்மானத்தின் பின்னணியில் இலங்கையின் முன்னாள் இராணுவ அதிகாரி! வசந்த கரன்னாகொட தகவல்

தாமும் தமது குடும்பத்தினரும் நாட்டுக்குள் நுழைவதற்கு தடை விதித்த அமெரிக்காவின் முடிவு குறித்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியதாக வடமேல் மாகாண ஆளுநர் வசந்த கரன்னாகொட தெரிவித்துள்ளார். எனினும் இந்த நடவடிக்கையின் பின்னணியில் ‘வேறு ஏதோ ஒன்று’ இருப்பதாக அவர் கூறியுள்ளார். இந்த நடவடிக்கை குறித்து தமக்கு சில சந்தேகங்கள் உள்ளன, இதன் பின்னணியில் வேறு ஏதோ இருப்பதாக தாம் நம்புவதாகவும் முன்னாள் கடற்படைத் தளபதி கரன்னாகொட குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவின் முக்கிய தீர்மானம் “யுத்தம் முடிந்து 14 வருடங்களின் பின்னர் திடீரென … Read more

இந்திய ரூபாவின் பயன்பாடு – அமெரிக்க டொலருக்கு எச்சரிக்கையா! இலங்கையின் காத்திருப்பு

Courtesy: koormai 1983 இல் ஈழத்தமிழர்களின் ஆயுதப் போராட்டம் ஆரம்பிக்கும் வரையும் அமெரிக்காவுடன் இணக்கமில்லாத பரம வைரியாக இருந்த இந்தியா, ஈழப்போர் தொடங்கியதும், அமெரிக்காவுடன் சுமூகமான அரசியலைப் பேண ஆரம்பித்தது. அதற்கேற்ப இந்திய வெளியுறவுக் கொள்கையை அன்று இந்திராகாந்தி வகுத்திருந்தார். அதன் பின்னரான சூழலில் ஆட்சிக்கு வந்த ஒவ்வொரு இந்திய ஆட்சியாளர்களும் அமெரிக்காவுடன் சீரான உறவைப் பேணி வந்தனர். 2016 இல் டொனால்ட் ட்ரம்பின் ஆட்சியின்போது நரேந்திர மோடி அமெரிக்காவுடனான உறவை மேலும் இறுக்கமாகப் பற்றிப் பிடித்தார். … Read more

விவசாயத்துறை மற்றும் தோட்டப்பகுதிகளின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு வழங்குமாறு ஜனாதிபதி அறிவுரை

விவசாயத்துறையை நவீனமயப்படுத்துவதற்கான முயற்சிகளை அரசாங்சாங்கம் அர்பணிப்புடன் மேற்கொண்டு வருகின்ற நிலையில் தோட்டப் பகுதி மக்கள் முகம்கொடுத்து வருகின்ற பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வுகளை வழங்க வேண்டியது அவசியம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். பெருந்தோட்ட மறுசீரமைப்பு குழுவுடன் (PRC) ஜனாதிபதி அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்ற சந்திப்பொன்றிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். காணிப் பிரச்சினை உட்பட விவசாயத்துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் மற்றும் சவால்கள் தொடர்பிலும் இங்கு விரிவாக ஆராயப்பட்டதோடு, தற்போது தீர்வுகள் வழங்கப்பட்டு வருகின்ற மகாவலி காணிப் பிரச்சினை … Read more

தனது படைப்பை அமெரிக்க தூதுவர் ஒரு நாளுக்குள் வாசித்ததில் மகிழ்ச்சி : விமல் வீரவன்ச

அமெரிக்கத் தூதுவர் தனது நூலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து ஒரு நாளுக்குள் தனது படைப்பை வாசித்தது மகிழ்ச்சியளிக்கிறது.என்று நாடாளுமன்ற உறுப்பினர் விமல்வீரவன்ச தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தனது புத்தகத்தை ‘புனைவு’ என்று கூறியதற்குப் பதிலளிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் விமல் வீரவன்சவின் நூலில் அமெரிக்காவுக்கு எதிரான கருத்துக்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அந்த குற்றச்சாட்டுக்களை ஜூலி சங் ஏற்கனவே மறுத்திருந்தார். அமெரிக்காவுக்கு எதிரான கருத்து இதேவேளை … Read more

கடற்கரையோரங்களை அண்டியதாக இடம்பெறும் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுப்பதற்காக தயாரிக்கப்பட்ட விசேட வாகனங்களை ஜனாதிபதி பார்வையிட்டார்

கடற்கரையோரங்களை அண்டியதாக இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகள், பயங்கரவாத நடவடிக்கைகள் மற்றும் பல்வேறு ஆட்கடத்தல்களை தடுப்பதற்காக ஐடியல் மோட்டார் நிறுவனத்தினால் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 03 விசேட வாகனங்கள் (27) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டன. கடலோர மற்றும் குளம் சார்ந்த பகுதிகள் மற்றும் எந்த கரடுமுரடான நிலப்பரப்பிலும்(Combat All Terrain Vehicle) கடற்படை நடவடிக்கைகளுக்கு இலகுவாகப் பயன்படுத்தக்கூடிய வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த வாகனங்கள், கொழும்பு மற்றும் மன்னார் கடற்பகுதிகளில் பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகள் மற்றும் … Read more