இலங்கையில் மீண்டும் நடைமுறைக்கு வரும் கோவிட் கட்டுப்பாடுகள்

இலங்கையில் மீண்டும் கோவிட் கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வரவுள்ளன. கோவிட் தொற்றுக்குள்ளான 7 பேர் நேற்றைய தினமும் 4 பேர் நேற்று முன்தினமும் (24.04.2023) அடையாளம் காணப்பட்டுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது இலங்கையில் கோவிட் நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை குறைவாக இருந்த ஒரு காலத்திற்குப் பிறகு மீண்டும்  ஏற்பட்டுள்ளமையினால் அதிக அவதானம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. கோவிட் நோய் தொற்று இதன் காரணமாக சுகாதார ஆலோசனைகளை தொடர்ந்து பின்பற்றுவது மிகவும் அவசியம் என சுகாதார … Read more

நயினாதீவில் புதிய மின் பிறப்பாக்கி – குடிநீர் பிரச்சினைக்கும் தீர்வு

நயினாதீவு பிரதேசத்தில் பழுதடைந்திருந்த மின்பிறப்பாக்கிக்கு பதிலாக சுமார் 300 மெகாவாட்ஸ் உற்பத்தி திறனுள்ள மின்பிறப்பாக்கி ஒன்று புதிதாக பொருத்தப்பட்டுள்ளது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியினால் இலங்கை மின்சார சபையினால் இந்த மின்பிறப்பாக்கி பொருத்தப்பட்டுள்ளது. இதன்மூலம், நயினாதீவிற்கு 24 மணித்தியால மின்சார விநியோகம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், முழு திட்டத்தினை சீராக செயற்படுத்தி நயினாதீவு, அனலைதீவு மற்றும் எழுவைதீவு ஆகியவற்றுக்கான குடிநீர் விநியோகத்தினை தொடர்ச்சியாக வழங்குவதற்கான வாய்ப்பும் உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு உயர் தொழில்நுட்ப கல்லூரியின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்

 மட்டக்களப்பு உயர் தொழில்நுட்ப கல்லூரியின் ஏற்பாட்டில் இரத்ததானம் வழங்கும் நிகழ்வு கல்லூரியின் பணிப்பாளர் செ.ஜெயபாலன் தலைமையில் நடைபெற்றது. நேற்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமான இந்நிகழ்வில் உயர் தொழில்நுட்ப கல்லூரியின் உத்தியோகத்தர்கள், மாணவர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் என ஏராளமானோர் ஆர்வமுடன் கலந்துகொண்டு குருதிக்கொடை வழங்கினர். சமூக விழுமிய செயற்பாடு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியின் தேவையினைப் பூர்த்தி செய்வதற்காக மட்டக்களப்பு உயர்தொழில்நுட்ப கல்லூரியின் சமூக விழுமிய செயற்பாடொன்றாக குறித்த இரத்ததான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. … Read more

வீட்டுக்குள் புகுந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வரை கொடூரமாக வெட்டிய மர்ம நபர்கள்

மாத்தறையில் வீடொன்றிற்குள் புகுந்த குழுவொன்று 13 வயதுடைய பாடசாலை மாணவன் உட்பட நால்வரை கத்தியால் குத்தி பலத்த காயங்களுக்குள்ளாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பெங்கமுவ, புஹுல்ஹேனே, வலகட பிரதேசத்தில் உள்ள வீடோன்றில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. ஊர்பொக்க பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெங்கமுவ பிரதேசத்தில் உள்ள வீட்டிற்கு இரவு 9.00 மணியளவில் வந்த குழுவொன்று தாய், தந்தை, மகன் மற்றும் மகள் ஆகிய நால்வரையும் வெட்டிவிட்டு மோட்டார் சைக்கிள்களில் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். முச்சக்கர வண்டிகளில் வந்த கும்பல் … Read more

சயனைட் மூலம் 9 பேரை கொலை செய்த குற்றச்சாட்டில் பெண் ஒருவர் கைது!

9 பேரை, சயனைட் கொடுத்து கொலை செய்தார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பெண்ணொருவரை தாய்லாந்து பொலிஸார் கைது செய்துள்ளனர் என தெரிவிக்கப்படுகி்ன்றது.  குறித்த பெண் பாங்காக்கில் வைத்து நேற்று பொலிஸாரினால் கைது செய்யப்பட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் இன்று (26) தெரிவித்துள்ளனர். பல ஆண்டுகளாக நடந்த கொலைகள் பல ஆண்டுகளாக நடந்த இந்த கொலைகள் தொடர்பாக 30 வயதுடைய பெண் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.  பணமே இக்கொலைகளுக்கான காரணமாக இருக்கலாம் என தாய்லாந்து பொலிஸ் பேச்சாளர் அர்சயொன் க்ரெய்தோங் … Read more

விமலின் புத்தகத்திற்கு அமெரிக்க தூதுவர் கடும் எதிர்ப்பு!

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்  விமல் வீரவன்ச அண்மையில் அமெரிக்காவிற்கு எதிராக சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் தமது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். தமது டுவிட்டர் பதிவில் குற்றச்சாட்டுகளை ‘அடிப்படையற்றது’ என்று குறிப்பிட்டுள்ளார். I am disappointed that an MP has made baseless allegations and spread outright lies in a book that should be labeled “fiction.” For 75 years, the US & SL … Read more

அம்பாறை ரஜகல தொல்பொருள் தளத்தின் பராமரிப்பு பணிகள் ஆரம்பம்: தொல்பொருள் திணைக்களம்

அம்பாறையில் அமைந்துள்ள  ரஜகல தொல்பொருள் தளத்தின் பராமரிப்பு பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை தொல்பொருள் திணைக்கள ஊடகப் பிரிவு இத்தகவலை வெளியிட்டுள்ளது.  பராமரிப்புப் பணிகள் பராமரிப்புப் பணிகள் எம். குபேரன் மாயா (பராமரிப்பு உத்தியோகத்தர்) இரேஷா ஜீவந்தி (பராமரிப்பு பிரிவுத் தலைவர் ) எம்.பி. அலஹகோன் மாயா (பிராந்திய அதிகாரி), பி. ராசு மாயா (பிராந்திய அதிகாரி), ஹிமாலி துனுசிங்க, எஸ். ஏ. பிரசன்னா மாயா, உபுல் பண்டார ஆகியோரின் பங்களிப்புடன்  இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. … Read more

நாட்டின் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்பு பிரிவால் வெளியிடப்பட்டுள்ளது. 2023 ஏப்ரல் 26ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2023 ஏப்ரல் 25ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. சப்ரகமுவ, மத்திய, வடமத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சில இடங்களில் 50 மி.மீ க்கும் … Read more

இலங்கையில் முதன்முறையாக உருவாகும் தொழிற்சாலை

இலங்கையின் முதலாவது ஏற்றுமதி சார்ந்த உருளைக்கிழங்கு சிப் பதப்படுத்தும் தொழிற்சாலை பண்டாரவளையில் நிறுவப்பட்டுள்ளது. புதிய தொழிற்சாலைக்கு சுமார் 20 மில்லியன் ரூபாய் செலவிடப்படவுள்ளது. இதன்மூலம் சர்வதேச சந்தைக்குள் இலங்கை செல்லும் வாய்ப்பு ஏற்படும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. உலகளவில் உருளை சிப்ஸின் மொத்த பெறுமதி சுமார் 30பில்லியன் டொலர்களுக்கும் அதிகமாக உள்ளது. சுமார் 21 பில்லியன் ரூபாய் பெறுமதியான உருளைக்கிழங்கு சிப்ஸ் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படுகின்றது. குறித்த ஏற்றுமதி நிறுவனத்தின் வெற்றியானது மேலதிக உள்ளூர் உற்பத்தியை அதிகரிப்பதுடன் … Read more

மே மாதம் இறுதி வரை அதிக வெப்பம்

இந்த நாட்களில் நிலவும் கடும் வெப்பமான காலநிலை படிப்படியாக குறைந்து வருகின்றது. மே மாதம் 20 ஆம் திகதிக்கு பின்னர் தென்மேற்கு பருவமழை காலம் ஆரம்பிப்பதனால், அதன் பின்னர் இந்த நிலை குறைந்துவிடும் என்று வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (26) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்;. இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்… பூகோள காலநிலை மாற்றங்களினால் … Read more