இலங்கையில் பல பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்படும் ஆபத்து

இலங்கைக்கு அண்மித்த பகுதியில் 900 முதல் 1000 கிலோமீற்றர் வரையிலான புதிய நில எல்லை உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் மற்றும் சுரங்க பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.எம்.ஜே.ஏ.அஜித்பிரேம தெரிவித்துள்ளார். இந்த அபாயம் காரணமாக இலங்கையில் நிலநடுக்கம் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட புவியியல் மற்றும் சுரங்க பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.எம்.ஜே.ஏ.அஜித்பிரேம இதனைத் தெரிவித்துள்ளார். இதேவேளை, இந்த வருடத்தில் இதுவரை நாட்டில் 09 நிலநடுக்கங்கள் … Read more

குருநகர் கடற்கரையை சுத்தம் செய்த இராணுவத்தினர்

புவி தினத்தை முன்னிட்டு யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 51 ஆவது காலாட்படை பிரிவின் படையினரால் யாழ் குருநகர் கடற்கரையை சுத்தம் செய்யும் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. படையினரால் (24) முன்னெடுக்கப்பட்ட இச் சமூகப் திட்டத்தில் கடற்கரையோரப் பகுதியில் காணப்பட்ட பொலித்தீன்கள், பிளாஸ்டிக் போத்தல்கள், வெற்று கேன்கள் மற்றும் ஏனைய குப்பைகள் அகற்றப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது. யாழ் மாவட்டச் செயலகம் மற்றும் கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை ஆகியவற்றால் ஒருங்கிணைக்கப்பட்ட இந்த திட்டம், கரையோர மற்றும் கடல் … Read more

8 ஆயிரம் இலங்கையர்களுக்கு கொரியா வழங்கும் வாய்ப்பு

இலங்கையர்களுக்கான தொழில் வாய்ப்புகளின் எண்ணிக்கையை 8,000 ஆக கொரியா அதிகரித்துள்ளது. தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவுக்கும் கொரிய மனித வள திணைக்களத்தின் பிரதானிகளுக்கும் இடையில் இன்றையதினம்(26.04.2023) விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின்போது, அந்த திணைக்களத்தின் பிரதானி, இலங்கையர்களுக்கான தொழில் வாய்ப்பிற்கான எண்ணிக்கையை 8,000 ஆக அதிகரிக்க இணக்கம் தெரிவித்துள்ளார். டிசம்பருடன் காலாவதி கொரிய மொழி ஆற்றலுடன் தயாரிப்பு பிரிவில் தொழில்வாய்ப்பை எதிர்பார்த்துள்ள 600 பேரை, கப்பல் கட்டுமானத்துறையில் தொழிலில் ஈடுபடுத்துவதற்கு இதன்போது … Read more

முதல் டெஸ்ட் சதம் அடித்த நிஷான் மதுஷ்க….

இலங்கை மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாளான இன்று (26) இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் நிஷான் மதுஷ்க தனது கன்னி டெஸ்ட் சதத்தை பதிவு செய்துள்ளார். மதிய உணவு இடைவேளைக்கு ஆட்டம் நிறுத்தப்பட்ட போது, இலங்கை அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 228 ஓட்டங்கள் எடுத்திருந்தது. இதன்போது நிஷான் மதுஷ்க ஆட்டமிழக்காமல் 103 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். இதன்படி, 115 ஓட்டங்கள் எடுத்திருந்த திமுத் கருணாரத்ன, மதிய உணவுக்கு முன் … Read more

மாற்று வழியில்லாத போது ஐ.எம்.எப் இற்கு செல்ல நடவடிக்கை எடுத்திருந்தோம்! ரணில் நாடாளுமன்றில் அறிவிப்பு (Live)

சர்வதேச நாணய நிதியத்திடம் செல்வதற்கான அனுமதியை அனைவரும் நாடாளுமன்றில் பெற்றுக் கொடுக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கோரியுள்ளார். நாடாளுமன்றில் இன்றைய தினம் விசேட உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். சர்வதேச நாணய நிதியத்திடம் செல்ல நடவடிக்கை மேலும் தெரிவிக்கையில், நாட்டை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்பதற்கு சர்வதேச நாணய நிதியத்திடம் செல்வதை தவிர மாற்று வழியொன்று இல்லை. மாற்று வழியொன்று இல்லாத நிலையில், யாரும் அவ்வாறான வழிமுறையொன்றை முன்வைக்காத போதே, சர்வதேச … Read more

கொரியா தொழில் வாய்ப்புக்கான எண்ணிக்கை எட்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் கௌரவ மனுஷ நாணாயக்காரவுக்கும் கொரிய மனித வள திணைக்களத்தின் பிரதானிகளுக்கிடையில் இன்று (26) இடம்பெற்ற சந்திப்பின் போது அந்த திணைக்களத்தின் பிரதானி இலங்கையர்களுக்கான தொழில் வாய்ப்புக்கான எண்ணிக்கையை எட்டாயிரமாக அதிகரிக்க உடன்பாடு தெரிவித்துள்ளரர். கொரிய மொழி ஆற்றலைக்கொண்டு அதாவது தற்போது இணைய தளத்தின் மூலம் தொழில்வாய்ப்பை எதிர்பார்த்துள்ள தயாரிப்பு பிரிவில் 600 பேரை ,கப்பல் கட்டுமானத் தொழில் துறையில் ஈடுபடுத்துவதற்கு இதன்போது உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக தயாரிப்புத் துறைகளில் தொழில் … Read more

இன்று (26) முதல் 02 ஆம் திகதி வரை மேல் மாகாணத்தில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

இன்று (26) முதல் அடுத்த மாதம் 2 ஆம் திகதி வரை மேல் மாகாணம், உள்ளூராட்சி நிறுவனங்கள், பிரதேச செயலாளர் அலுவலகங்கள் மற்றும் ஏனைய நிறுவனங்கள் இணைந்து விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் சமூக விசேட வைத்திய நிபுணர் நிமல்கா பன்னிலஹெட்டி தெரிவித்தார். இன்று (26) சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் ‘டெங்கு நோய் பரவுவதைக் கட்டுப்படுத்த மேல் மாகாணங்களில் விசேட டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டம்’ என்ற … Read more

வெளிநாட்டு வேலைக்கு செல்வதற்கு தொழிற்பயிற்சி பெற்றிருப்பது கட்டாயம் – வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார

வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்ல இருப்பவர்கள் தொழிற்பயிற்சியைப் பெற்றிருப்பது கட்டாயம் என்பதுடன், அனைத்து வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களுக்கும் பயிற்சி பெற்ற தொழிலாளர்கள் மாத்திரமே அனுப்பப்படுவார்கள் என்று தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று (26) அமைச்சர், ஊடகங்களுக்கு விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையிலேயே அவர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார். அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது… வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களுக்கு தொழிற்பயிற்சி கட்டாயமானது. கடவுச் சீட்டுக்களை பெற்றால் மாத்திரம் வெளிநாடு … Read more

நாட்டின் கல்வி முறையை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சீர்குலைப்பதற்கு யாருக்கும் இடமளியேன்

21ஆம் நூற்றாண்டுக்கு ஏற்ற கல்வி முறையை உருவாக்கி, சர்வதேசத்தில் இலங்கையின் பெயரை உயர்ந்த நிலையில் வைக்கப்படும் – மாத்தறை ராகுல கல்லூரியில் ஜனாதிபதி தெரிவிப்பு நாட்டின் கல்வி முறையை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சீர்குலைக்க எவருக்கும் இடமளிக்க முடியாது எனவும் தேவைப்பட்டால் அதற்கு எதிராக சட்டங்கள் கொண்டு வரப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் கல்வி தொடர்பான புதிய அமைச்சரவைக் குழுவொன்று நியமிக்கப்பட்டதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அதில் தானும் கல்வி அமைச்சர் … Read more

வெளிநாடுகளுக்கு தொழிலுக்கு செல்லும் பெண்களுக்கு முக்கிய அறிவிப்பு

இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளை கொண்ட தாய்மார்கள் வெளிநாடுகளுக்கு வேலைக்காக செல்லக்கூடாது என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு புதிய சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. அமைச்சர் மனுஷ நாணயக்கார அமைச்சரவைக்கு சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்தின் பிரகாரம், வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்து செல்லும் பெண்களின் குழந்தைகளை பாதுகாப்பதற்காக கடந்த வருடம் சுற்றறிக்கை வெளியிடப்பட்டது. புதிய சுற்றறிக்கை அதனை மேலும் செயல்திறன் மிக்கதாக மாற்றும் வகையில், மார்ச் 31ஆம் திகதி புதிய சுற்றறிக்கையை வெளியிடுவதற்கு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய, 45 வயதை … Read more