இலங்கை தொடருக்கான தென்னாபிரிக்க 'ஏ' அணி அறிவிப்பு

இலங்கை ‘ஏ’ கிரிக்கட் அணியுடன் நான்கு நாள் மற்றும் ஒரு நாள் போட்டித் தொடரில் பங்கேற்பதற்காக தென்னாபிரிக்க ‘ஏ’ கிரிக்கட் அணி எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி இலங்கை வரவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. இந்தப் போட்டியில் 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் இரண்டு நான்கு நாள் போட்டிகள் இடம்பெற்றுள்ளன. போட்டி அட்டவணை வருமாறு :முதல் ஒருநாள் போட்டி – ஜூன் 4 ஆம் திகதி – பல்லேகலஇரண்டாவது ஒருநாள் போட்டி … Read more

பாடசாலை மாணவர்களுக்கான பாதணிகள் மற்றும் புத்தக பை விலைகளில் மாற்றம்! வெளியான தகவல்

பாடசாலை மாணவர்களுக்கான பாதணிகள் மற்றும் புத்தக பைகளின் விலைகள் குறைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் மே மாதம் 9ம் திகதியின் பின்னர் பாடசாலை புத்தக பைகள் மற்றும் பாதணிகள் என்பனவற்றின் விலைகளை 500 ரூபா முதல் 1000 ரூபா அளவில் குறைப்பதற்கு இணங்கப்பட்டுள்ளது. வழங்கப்பட்ட உறுதி நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவிடம் உற்பத்தியாளர்கள் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளனர். மாணவர்களுக்கான பாதணிகள் மற்றும் புத்தக பைகள் உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்கள் நேற்றைய தினம் நிதி இராஜாங்க அமைச்சரை … Read more

சர்வதேச நாணய நிதிய உடன்படிக்கை குறித்து நாடாளுமன்றத்தில் மூன்று நாட்கள் விவாதம்

 சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கை குறித்து இன்று நாடாளுமன்றில் விவாதம் நடைபெறவுள்ளது. இன்றைய தினம் காலை 9.30 மணிக்கு நாடாளுமன்றம் கூடவுள்ளது.  சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட நிதி வசதி  இந்த விவாதம் இன்று, நாளை மற்றும் நாளை மறுதினம் ஆகிய மூன்று நாட்களுக்கு இந்த விவாதம் நடைபெறும் என தெரிவிக்கப்படுகின்றது. சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் கீழ் இலங்கை 2.9 பில்லியன் டொலர் கடனுதவி குறித்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டமை குறிப்பிடத்தக்கது. Source … Read more

மத்திய வங்கியின் உயர் பாதுகாப்பு அறையிலிருந்து மாயமான பெருந்தொகை பணம்! குற்றப்புலனாய்வு திணைக்களம் தீவிர விசாரணை

இலங்கை மத்திய வங்கியின் விநியோக பெட்டகத்தில் வைப்பிலிடப்பட்டிருந்த 50 இலட்சம் ரூபா பணக்கட்டு காணாமல்போனமை தொடர்பிலான மேலதிக விசாரணைகள் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் பணிப்புரையின் பேரில், விசாரணை கோட்டை பொலிஸாரிடமிருந்து குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. உயர் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்த பணம் திருட்டு நவீன தொழில்நுட்ப பாதுகாப்பு கெமராக்கள் பொருத்தப்பட்டுள்ள மத்திய வங்கி கட்டிடத்தின் உயர் பாதுகாப்பு பகுதியில் அமைந்துள்ள மூன்றாவது மாடியில் உள்ள … Read more

வடக்கு-கிழக்கு நிர்வாக முடக்கல் போராட்டத்திற்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி! தமிழ்த் தேசிய கட்சிகள்

இலங்கையின் வடக்கு-கிழக்கு மாகாணங்களில் இன்று (25.04.2023) முன்னெடுக்கப்பட்ட முழுமுடக்கப் போராட்டம் முழுமையான வெற்றியைப் பதிவுசெய்வதற்கு  ஆதரவளித்த அனைவருக்கும் தமிழ்த் தேசிய கட்சிகள் கூட்டாக தமது நன்றிகளைத் தெரிவித்துள்ளன. இதுதொடர்பில் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையின் விபரம் வருமாறு, ‘‘இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களின் கலாசாரம் பண்பாடு, மற்றும் அவர்களது புராதான சின்னங்களை அடித்தொழித்து அவ்விடங்களில் புத்தகோயில்களைக் கட்டி, பௌத்த சமய திணிப்பை ஏற்படுத்துவதற்கு எதிராகவும் இலங்கை அரசாங்கம் கொண்டுவர உத்தேசித்துள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கு எதிராகவும் தமது எதிர்ப்பை முழுமையாகப் … Read more

இலங்கை அரச தொலைக்காட்சியொன்றில் பெண் ஊடகவியலாளர் மீது பாலியல் துன்புறுத்தல்: வெளியான தகவல்

இலங்கை அரச தொலைகாட்சியொன்றில் பணிபுரியும் முன்னாள் பெண் ஊழியர் ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக கூறப்படுகின்றது. இது தொடர்பான விசாரணையை உடனடியாக ஆரம்பிக்குமாறு அத்தொலைகாட்சி நிறுவனத்தின் பொது முகாமையாளருக்கு பணிப்புரை வழங்கியுள்ளதாக அந்நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். பாலியல் துன்புறுத்தல் குறித்த பெண் ஊடகவியலாளர், அந்நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவரிடமிருந்து தொடர்ந்து பாலியல் துன்புறுத்தலை எதிர்கொண்டதாக சமீபத்தில் குற்றம் சாட்டியுள்ளார்.  பாலியல் துன்புறுத்தல் புகார்கள் குறித்து ஆதாரங்கள், குரல் பதிவுகள் மற்றும் காணொளி பதிவுகளுடன் அதிகாரிகளிடம் தெரிவித்தும் யாரும் … Read more

தொடரும் பௌத்த சிங்களமயமாக்கல்! உடைத்து எறியப்பட்ட திரிசூலம்(Video)

அண்மைக்காலமாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் பௌத்த சிங்கள மயமாக்களுக்கு எதிராக வடக்கு கிழக்கில் தமிழ் பேசுகின்ற மக்கள் இன்று இப்படியாக தமது எதிர்ப்பை தெரிவிக்கின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(25.04.2023)உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் கூறுகையில்,“பல சமய வழிபாட்டு தளங்கள் தாக்கபட்டிருக்கின்றன. வணக்கத்துக்குரிய விக்கிரகங்கள், திரிசூலம் என்பன உடைத்து எறியப்பட்டுள்ளன. நிலங்கள் அபகரிக்கபடுகின்றன. வெடுக்குநாறி மலை மத சின்னங்கள் அழிப்பு தொடர்பான வழக்கில் முன்னிலையாகும் சட்டத்தரணி என்ற … Read more

உடன் நடைமுறைக்கு வரும் வகையில் உயர் பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம்

உடன் நடைமுறைக்கு வரும் வகையில் உயர் பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் மா அதிபர் பதவிக்காக முயற்சித்து வரும் சிரேஸ்ட பிரதி பொலிஸ் அதிபர்களான அஜித் ரோஹன மற்றும் லலித் பத்திநாயக்க ஆகியோர் உள்ளிட்ட 7 சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சேவை தேவை நிமித்தம் இடமாற்றம் செய்வதாக பொதுப்பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். தென் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஸ்ட பிரதிப்பொலிஸ் மா அதிபராக கடமையாற்றி வந்த அஜித் ரோஹன, … Read more

இலங்கைக்கு அச்சுறுத்தலாக மாறும் மலேரியா – விமான நிலையத்தில் பாதுகாப்பு

தற்போதைய நிலவரப்படி இலங்கையில் மலேரியா நோய் இல்லை என தேசிய மலேரியா நோய் தடுப்பு திட்டத்தின் பணிப்பாளர் டொக்டர் திருமதி சம்பா அலுத்தவீர தெரிவித்துள்ளார். எனினும் மலேரியா நோயுள்ள நாட்டிலிருந்து யாராவது ஒரு நபர் அந்த தொற்றுடன் இலங்கைக்குள் வந்தால் இந்த நோய் மீண்டும் உருவாகலாம் என அவர் எச்சரித்துள்ளார்.  நைஜீரியா, தன்சானியா போன்ற நாடுகளில் மலேரியா நோயாளர்கள் காணப்படுகின்றனர். இரத்த பரிசோதனை மூலம் இந்த நோயை இனங்கண்டு கொள்ள முடியும். இதற்கு தேவையான வசதிகளை சுகாதார … Read more

ராமன்ய மகா பீடத்தின் 73ஆவது “உப சம்பதா” நிகழ்விற்கு அரச அனுசணை

இலங்கை ராமன்ய மகா பீடத்தின் 73ஆவது “உப சம்பதா” நிகழ்விற்கு முழுமையான அரச அனுசரணை வழங்கப்படுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அரசாங்கம் புத்தசாசனத்தைப் பேணிக்காக்க கடமைப்பட்டுள்ளது என்ற வகையில் மகா சங்கத்தின் தலைமையிலான அனைத்து பீடங்களையும் வலுவூட்டுவதற்கு அவசியமான நடவடிக்கைகளை எடுப்பதாகவும் ஜனாதிபதி உறுதியளித்துள்ளார். ராமன்ய மகா பீடத்தின் 73ஆவது “உப சம்பதா” நிகழ்வு தொடர்பில் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (24) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். இரு வருடங்களுக்கு ஒரு முறை … Read more