கடன் அட்டைகளின் பாவனை தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்ட தகவல்

இந்த வருடத்தின் முதல் இரண்டு மாதங்களில் இலங்கையில் கடன் அட்டைகளின் பாவனை கணிசமாக குறைந்துள்ளது என இலங்கை மத்திய வங்கி அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 2022 டிசெம்பர் இறுதிக்குள், இலங்கையில் செயலில் உள்ள கடன் அட்டைகளின் மொத்த எண்ணிக்கை 52,991 இலட்சம் எனவும், இந்த ஆண்டு ஜனவரி மாத இறுதிக்குள், இலங்கையில் செயல்பாட்டில் உள்ள மொத்த கடன் அட்டைகளின் எண்ணிக்கை 42,272 லட்சமாக இருந்தது. மத்திய வங்கி அறிக்கைகள் இதேவேளை, பெப்ரவரி மாதத்திற்குள் அது மேலும் 40,872 இலட்சமாக … Read more

வடக்கு – கிழக்கு தழுவிய பூரண கதவடைப்பு! தமிழ்த் தேசியக் கட்சிகள் கூட்டாக அழைப்பு

வடக்கு – கிழக்கில் எதிர்வரும் இன்று செவ்வாய்க்கிழமை (25.04.2023) கதவடைப்பு அனுஸ்டிக்க தமிழ்த் தேசிய கட்சிகள் கூட்டாக அழைப்பு விடுத்துள்ளன. யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தமிழ் தேசிய கட்சிகளினால் கூட்டாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வடக்கு-கிழக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் பௌத்த மயமாக்கல் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக எதிர்வரும் 25ஆம் திகதி முழுமையான கதவு அடைப்புக்கு தமிழ் கட்சியினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. Source link

ஜீ.எல் பீரிஸை பொது வெளியில் மோசமாக திட்டிய மகிந்த ராஜபக்ச

முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் ஓர் விசரன் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.  சிறிலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்று திரும்பிய போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் இவ்வாறு கருத்துரைத்துள்ளார். எந்தவொரு தேர்தலையும் எதிர்நோக்கத் தயார்  கட்சியின் முன்னாள் தவிசாளர் புதிய தவிசாளர் நியமனத்தை ஏற்கவில்லை என எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது அவர் இவ்வாறு கூறியுள்ளார். தானாகவே ஜீ.எல். பீரிஸ் விலகிக் கொண்டார், தற்பொழுது புதிய ஒருவரை … Read more

சகோதரத்துவத்தைப் பாதுகாத்து, அவநம்பிக்கை, சந்தேகம் நீங்கிய சிறந்த சமூகத்திற்கான போதனைகளை கடைப்பிடிப்போம்.

இலங்கை சமூகத்தின் இஸ்லாமிய சகோதரத்துவத்தைப் பாதுகாத்து, அவநம்பிக்கை, சந்தேகம் நீங்கிய சிறந்ததோர் சமூகத்திற்கான போதனைகளை உறுதியாகக் கடைப்பிடிப்போமஎன்று பிரதமர் தினேஷ் குனவர்தன தனது நொன்புப் பெரநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். முஸ்லிம் சமூகத்தினர் பன்னெடுங்காலமாக ரமழான் காலத்தில் தங்களின் சமயக் கிரியைகளிலும் பிரார்த்தனைகளிலும் ஈடுபட்டு, ஏனையவர்களுக்கு உதவி உபகாரங்களைச் செய்து நாட்டின் கலாசார மற்றும் சமய பன்முகத்தன்மைக்கு முன்மாதிரியான அர்த்தத்தை வழங்கிவருகின்றனர். உலகம் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வரும் இவ்வேளையில் பாதிக்கப்பட்ட மக்கள் மீதான மனிதாபிமான உணர்வை … Read more

உயர்தரப் பரீட்சை தமிழ் மொழி விடைத்தாள் திருத்தும் பணிகள் ஆரம்பம்

உயர்தரப் பரீட்சை விடைத்தாள்களைத் திருத்துவதற்கான முதற்கட்டப் பணிகள் (21) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்து சமயம், கிறிஸ்தவம், இந்து நாகரிகம், பரதநாட்டியம், கீழைத்தேய சங்கீதம், கர்நாடக சங்கீதம், மேற்கத்திய சங்கீதம், சித்திரம், நாடகமும் அரங்கியலும் மற்றும் ஹிந்தி ஆகிய பாடங்களுக்கான பணிகளே தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் எச்.ஜே.எம்.சீ. அமித் ஜயசுந்தர தெரிவித்தார். யாழ்ப்பாணம், கொழும்பு, மட்டக்களப்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் குருநாகல் ஆகிய நகரங்களை அண்மித்து காணப்படும் விடைத்தால் திருத்தும் நிலையங்களில் பணிகள் … Read more

பொருளாதார முகாமைத்துவக் கொள்கை தயாரிப்பு பணிகள் எதிர்வரும் மாதத்திற்குள் நிறைவடையும்

இலங்கைக்கான பொருளாதார வாய்ப்புக்களை மேம்படுத்தும் பொறுப்பை தனியார் துறை ஏற்க வேண்டும்- பிஸ்னஸ் டுடே விருது வழங்கல் நிகழ்வில் ஜனாதிபதி தெரிவிப்பு. இலங்கையின் பொருளாதாரத்தை வலுவாக்குவதற்கான பொருளாதார முகாமைத்துவக் கொள்கை தயாரிப்பு பணிகள் எதிர்வரும் மாதத்திற்குள் நிறைவு செய்யப்படும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். மேற்படி பொருளாதார முகாமைத்துவக் கொள்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்றிக்கொள்ள எதிர்பார்த்துள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். நாட்டின மிகச்சிறந்த 40 வர்த்தகர்களக் விருது வழங்குவதற்காக ஜனாதிபதி அலுவலகத்தில் (20) நடைபெற்ற பிஸ்னஸ் டுடே விருது … Read more

இலங்கையில் நிலவும் கடும் வெப்பம்! குழந்தைகள் தொடர்பில் பெற்றோருக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவிப்பு

வெப்பத்தினால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதகமான விளைவுகளை தவிர்ப்பதற்கு பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டுமென லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், அதிக திரவங்களை பயன்படுத்துவதன் மூலம் வெப்பமான காலநிலையினால் ஏற்படும் சிக்கல்களை குறைக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சருமத்தில் ஏற்படும் சிக்கல்கள் இன்றைய நாட்களில் தோல் நோய்கள் அதிகரித்து வருவதாகவும், சிறிய குழந்தைகள்  தினமும் இரு வேளை குளிக்க … Read more

நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி

முஸ்லிம்கள், ரமழான் மாத நோன்பை நிறைவு செய்து, நாட்டில் ஏற்பட்டுள்ள சுமூகமான சூழ்நிலையில் இவ்வருட நோன்புப் பெருநாளை கொண்டாடுகின்றனர். அது அனைவருக்கும் ஆறுதலாக இருக்கும் என்பது உறுதி. ரமழான் காலம் மற்றும் நோன்புப் பெருநாள் என்பன மதிப்புமிக்க மத, ஆன்மீக மற்றும் சமூக அமைப்பைக் கொண்டுள்ளன. அந்த விழுமியங்களையும் பாதுகாத்து நேர்மையாக நோன்பு நோற்று முஸ்லிம்கள் தம்மை அர்பணிக்கின்றனர். ரமழான் மாதம், நோன்புநோற்று காலத்தை கழிப்பதாக மட்டுமின்றி, ஏனைய சமூகத்தவர் மீதான கரிசணை மற்றும் தியாகம் மற்றும் … Read more

இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் ஜனாதிபதி பிறப்பித்துள்ள கட்டளை! வெளியானது விசேட வர்த்தமானி

இலங்கையில் ஆயுதம் தாங்கிய அனைத்து படையினருக்கும் அழைப்பு விடுத்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கட்டளை பிறப்பித்துள்ளார். பொது மக்களின் அமைதியைப் பேணல் பொது மக்களின் அமைதியைப் பேணுவதற்காக ஆயுதம் தாங்கிய படையினர் அனைவரையும் இன்று (22.04.2023) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அழைத்து உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த கட்டளை தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்றைய தினம் பிரசுரிக்கப்பட்டுள்ளது.  பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் 12ஆவது பிரிவின் கீழ் அவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு இணங்க ஜனாதிபதி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளமை … Read more

பிரித்தானிய துணை பிரதமர் பதவி விலகல்

பிரித்தானியாவின் துணைப்பிரதமர் டொமினிக்  பதவி விலகியுள்ளார்.  டொமினிக் ராப் மீது பல்வேறு அமைச்சகங்களின் செயற்பாடுகளில் தலையிட்டதாக அதிகார துஷ்பிரயோக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனை தொடர்ந்து அவர் தனது பதவிகளிலிருந்து விலகுவதாக டுவிட்டரில் பதவி விலகல்  கடிதத்தை வெளியிட்டுள்ளார். டொமினிக் ராப் பதவி விலகிய நிலையில் புதிய துணை பிரதமராக ஆலிவர் டவுடன் நியமிக்கப்பட்டுள்ளார். My resignation statement.👇 pic.twitter.com/DLjBfChlFq — Dominic Raab (@DominicRaab) April 21, 2023 Source link