இசைக் கச்சேரியுடன் கூடிய தமிழ் – சிங்கள புத்தாண்டு கொண்டாட்டம், ஏப்ரல் 22 ஆம் திகதி காலிமுகத்திடலில்

திறந்த மற்றும் வெளிநாட்டவர்களுக்கான பல்வேறு போட்டிகள். ஜனாதிபதி செயலகம், பிரதமர் அலுவலகம் , அனைத்து அமைச்சுக்கள் உள்ளிட்ட அரச துறை நிறுவனங்கள் பலவற்றின் ஊழியர் குழாம் உள்ளிட்ட அனைத்து இலங்கையர்களுக்குமான திறந்த போட்டிகள் மற்றும் வெளிநாட்டவர்ளுக்கான போட்டிகள் அடங்கிய “வசந்த சிரிய 2023” (வசந்தத்தின் வனப்பு 2023) தமிழ் சிங்களப் புத்தாண்டு கொண்டாட்டம் ஏப்ரல் 22 ஆம் திகதி சனிக் கிழமை கொழும்பு காலிமுகத்திடல் மைதானததில் நடைபெறும். காலை 7:00 மணி முதல் மாலை 5:00 மணி … Read more

அயர்லாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது நாள் இன்று.

சுற்றுலா அயர்லாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது நாள் இன்று. நேற்று ஆட்டம் நிறுத்தப்படும் போது, தனது முதல் இன்னிங்சை விளையாடி வரும் இலங்கை அணி, 4 விக்கெட் இழப்புக்கு 386 ரன்கள் பெற்றிருந்தது. ஆட்டமிழக்காமல் களமிறங்கிய தினேஷ் சந்திமால் 18 ஓட்டங்களையும், தடுப்பாட்டக்காரராக களம் இறங்கிய பிரபாத் ஜெயசூர்யா ஆட்டமிழக்காமல் 12 ஓட்டங்களையும் பெற்றனர். நேற்றைய தினம் இலங்கையின் முதல் இன்னிங்ஸில் இரண்டு சதங்கள் பதிவாகின. கேப்டன் திமுத் … Read more

இதுவரை கால துன்பங்களில் இருந்து விடுபட்டு முன்னோக்கிச் செல்ல உறுதி கொள்வோம் – பிரதமர் தினேஷ் குணவர்தன

நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படும் ’புதியதோர் கிராமம் – புதியதோர் நாடு’ நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் புத்தாண்டின் முதல் நிகழ்ச்சித்திட்டத்தை (16) கொட்டாவ ஸ்ரீ தம்மகித்திகாராம விகாரையில் ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே பிரதமர் இதனை தெரிவித்தார். இங்கு மேலும் உரையாற்றிய பிரதமர், “இந்த சந்தர்ப்பத்தில், இத்தேபானே தம்மாலங்கார நாயக்க தேரரின் ஆசியும் வழிகாட்டுதலும் முக்கியமானது. பௌத்த சாசனத்திற்காக அவர் ஆற்றிய பங்களிப்பு மகத்தானது. நான் உங்களது மக்கள் பிரதிநிதியாக கடந்த நாற்பது ஆண்டுகளாக பணியாற்றிய காலத்தில் முடியுமான அனைத்து … Read more

நானுஒயா முதல் நுவரெலியா ஊடாக உடபுஸல்லாவ வரை மின்சார ரயில் பாதையை அமைக்க திட்டம்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றலாப் பயணிகளை ஈர்ப்பதற்காகவும். சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்குடனும் நானுஒயா முதல் நுவரெலியா ஊடாக உடபுஸல்லாவ வரை மின்சார ரயில் பாதையை அமைக்க திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரும், வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். நுவரெலியா உள்ளிட்ட மத்திய சுற்றுலாப் பிரதேசத்திலுள்ள இடங்களுக்கு அதிகளவான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் மின்சார ரயில் பாதை விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் இங்கு குறிப்பிட்டார். அண்மையில் நுவரெலியா பிரதேசத்தில் இடம்பெற்ற வைபவமொன்றில் … Read more

நாட்டின் பல பாகங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழை

2023 ஏப்ரல் 16 ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு மேல், சப்ரகமுவ, தென், மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என்று தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்பு பிரிவால் அறிவிக்கபட்டுள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் முக்கியமாக சீரான வானிலை நிலவும். இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் … Read more

புத்தாண்டைத் தொடர்ந்து பயணிகள் போக்குவரத்துக்காக இன்று முதல் விசேட பஸ் சேவைகள்

  புத்தாண்டு சம்பிரதாயங்களை முடித்துக்கொண்டு கிராமங்களுக்குச் செல்லும் மக்கள் மற்றும் கிராமங்களில் இருந்து கொழும்புக்கு வரும் மக்களின் வசதிக்காக இன்று (15) முதல் பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. அத்துடன், ஏப்ரல் மாதம் 18 ஆம் திகதி வரை மேலதிக பஸ் சேவைகளை நடைமுறைப்படுத்த உள்ளதாகவும் இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் பண்டுக ஸ்வர்ணஹன்ச குறிப்பிட்டள்ளார்.

நியூசிலாந்துக்கு எதிரான 20க்கு 20 முதலாவது போட்டியில் பாகிஸ்தான் வெற்றி

சுற்றுலா நியூசிலாந்து அணி மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 20க்கு 20 முதலாவது கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி நியூசிலாந்து அணிக்கு எதிராக 88 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. லாகூர் கடாபி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 19 ஓவர்கள் 05 பந்துகளில் 182 ஓட்டங்களைப் பெற்றது. பக்கர் ஸ்மான் மற்றும் சைம் அயூப் ஆகியோர் தலா 47 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் மத்தியூ ஹென்றி 03 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 183 … Read more

நல்லூர், பரந்தன் மற்றும் சுண்டிக்குளம் ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.

2023 ஏப்ரல் 15ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்பு பிரிவால் வெளியிடப்பட்டுள்ளது. மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் … Read more

புத்தாண்டு காலத்தில் போலி நாணயத்தாள்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்கவும்

புத்தாண்டு காலங்களில் போலி நாணயத்தாள்கள் கைமாறக்கூடும்; என்பதால், பணத்தைப் பயன்படுத்துவதில் கவனமாக இருக்குமாறு பொலிஸார் பொது மக்களை அறிவுறுத்தியுள்ளளனர். பண்டிகைக் காலத்தில் போலி நாணயத்தாள்களை சந்தையில் கைமாற்றுவதற்கு மோசடிக்காரர்கள் முயற்சிக்கின்றனர் என்ற தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, பண்டிகைக் காலத்தில் முக்கிய நகரங்களில் வாகனங்களை நிறுத்தும் போது கவனமாக இருக்குமாறும் பொலிஸார் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளனர். முறையற்ற விதத்தில் வாகனங்களை நிறுத்தவதன் காரணமாக, கடந்த சில நாட்களாக … Read more

இலங்கைக்கான மாலைதீவு உயர்ஸ்தானிகர் – பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் இடையிலான சந்திப்பு

இலங்கைக்கான மாலைதீவுக் குடியரசின் உயர்ஸ்தானிகர் அதிமேதகு அலி பாயிஸ் அவர்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் அவர்களை சந்தித்தார். இந்த சந்திப்பு கொழும்பில் உள்ள பாதுகாப்பு இராஜாங்க அமைச்சில் (12) இடம்பெற்றது. பாதுகாப்பு இராஜாங்க அமைச்சுக்கு வருகை தந்த மாலைதீவு உயர்ஸ்தானிகர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரினால் வரவேற்கப்பட்டதை தொடர்ந்து இரு நாடுகளுக்குமிடையிலான நீண்டகால ஒத்துழைப்பையும் மற்றும் இருதரப்பு உறவுகளையும் மேலும் மேம்படுத்தவும் இந்த சந்திப்பின் போது சுமுகமாக கலந்துரையாடப்பட்டது. மேலும் இக்கலந்துரையாடலின் போது, … Read more