ஆபத்தான நிலையில் நாடு உள்ளது – மத்திய வங்கி ஆளுநர் எச்சரிக்கை

எதிர்காலத்தில் மிகவும் கடினமான பயணம் உள்ளது. எனவே அடுத்த நான்கு வருடங்களில் நிலையான முன்னேற்றப் பயணத்தை நாம் மேற்கொள்ள வேண்டும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். பொருளாதாரத்தின் முன்னேற்றம் குறித்து ஊடகங்களுக்கு நேற்று ஊடகங்கள் முன்னிலையில் மத்திய வங்கியின் ஆளுநர் கருத்து வெளியிட்டார். எங்களிடம் கடன் மறுசீரமைப்பு சவால் உள்ளது. அடுத்து, சர்வதேச நாணய நிதியத்துடன் நாம் ஒப்புக்கொண்ட ஒப்பந்தத்தில் பல முக்கிய சீர்திருத்தங்கள் உள்ளன. இதுபோன்ற பல விடயங்களை இப்போது … Read more

எரிபொருள் கோட்டா அதிகரிக்கப்படுகிறது

புத்தாண்டு பண்டிகை காலத்தில், ஏற்கனவே நடைமுறையில் இருந்த எரிபொருள் கோட்டாவை (04) நள்ளிரவு முதல் அதிகரிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் பணிப்புரைக்கமைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. முன்னதாக திட்டமிட்டபடி, பண்டிகைக் காலத்தில் அதிகரிக்கும் எரிபொருள் தேவைக்கு ஏற்ப, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தேவையான கைருப்புகளை முன்கூட்டியே பெற்றுக் கொண்டுள்ளது. அதன்படி ஒரு வாரத்திற்கு கீழ்கண்டவாறு பரிந்துரைக்கப்பட்ட கோட்டா விநியோகிக்கப்படவுள்ளது.    

புதிய ஒம்புட்ஸ்மனாக கே.பி.கே.ஹிரிம்புரேகம ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம்

நிர்வாகத்துக்கான பாராளுமன்ற ஆணையாளராக (ஒம்புட்ஸ்மன்) நியமிக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி கே.பி.கே.ஹிரிம்புரேகம (04) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 156(2) மற்றும் 1981 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க நிர்வாக விவகாரங்களுக்கான பாராளுமன்ற ஆணையாளர் சட்டத்தின் பிரிவு 3(1) ஆகியவற்றின் படி உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. பதவிப் … Read more

கட்புல அரங்கேற்றக் கலைகள் பல்கலைக்கழகத்தின் வேந்தராக பேராசிரியர் சுனில் ஆரியரத்ன நியமனம்

கட்புல அரங்கேற்றக் கலைகள் பல்கலைக்கழகத்தின் வேந்தராக பேராசிரியர் சுனில் ஆரியரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். 1985 ஆம் ஆண்டு 07 இலக்கச் சட்டத்தின் திருத்தம் செய்யப்பட்ட 1978 ஆம் ஆண்டு 16 ஆம் இலக்க பல்கலைக்கழகச் சட்டத்தின் 32 வது உறுப்புரைக்கமைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களால் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இந்த ஐந்தாண்டு பதவிக்கால நியமனம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைவான நியமனக்கடிதம் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் பேராசிரியர் சுனில் ஆரியரத்ன அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்துடன் இணையவுள்ள சஜித் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள்! பகிரங்கமாக அறிவிப்பு

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர், அரசாங்கத்துடன் இணையப்போவதாக இன்று நாடாளுமன்றில் தெரிவித்த, நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே, எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் லச்மன் கிரியெல்லவிடம் சவால் ஒன்றையும் விடுத்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின்; நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்கத்துடன் இணைந்தால், லச்மன் கிரியெல்ல, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகவேண்டும் என்றும் அளுத்கமகே சவால் விடுத்துள்ளார். போலி செய்தி ஐக்கிய மக்கள் சக்தியில் கிரியெல்ல மற்றும் சஜித் பிரேமதாச போன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமே இருப்பார்கள், … Read more

விரைவில் நிகழவுள்ள 4 முக்கிய கிரக பெயர்ச்சிகள்!அதிஷ்டத்தில் திளைக்கவுள்ள இரு ராசிக்கார்கள்- நாளைய ராசிபலன்

ஏப்ரல் மாதத்தில் சூரிய பெயர்ச்சி, குரு பெயர்ச்சி, சுக்கிர பெயர்ச்சி மற்றும் புதன் வக்ர பெயர்ச்சி என 4 முக்கிய கிரக பெயர்ச்சிகள் நிகழவுள்ளன. ஏப்ரல் 6 – சுக்கிரன் தனது சொந்த ராசியான ரிஷபத்திற்கு பெயர்ச்சி ஆகவுள்ளது. ஏப்ரல் 14 – சூரிய பகவான் மேஷ ராசிக்கு பெயர்ச்சி ஆகி உச்சம் அடையவுள்ளது. ஏப்ரல் 21 – புதன் பகவான் மேஷத்தில் வக்ர பெயர்ச்சி மேற்கொள்ளவுள்ளது. ஏப்ரல் 22 – குரு பகவான் மீனத்திலிருந்து மேஷ … Read more

எதிர்கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிளவு!

எதிர்க்கட்சி தலைவரான சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் அணிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த நாட்களில் கொழும்பு அரசியலின் பேசுப்பொருளாக அரசியல்வாதிகளின் கட்சி தாவல் செயற்பாடு காணப்பட்டது. அரசாங்கத்துடன் இணையவுள்ள எதிர்கட்சி உறுப்பினர்கள் எதிர்கட்சி உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணையவுள்ளதாக பல தகவல்கள் வெளியாகிய போதும் எதிர்க்கட்சி தலைவரான சஜித் பிரேமதாஸ அதனை மறுத்துவிட்டார். இந்நிலையில் அவ்வணியைச் சேர்ந்த மூவர், ஜனாதிபதி ரணிலுடன் இணைந்துகொள்ள போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்பிரகாரம் ஹர்ஷ டி சில்வா, ​ஏரான் … Read more

போர்க்குற்றத்தை கையிலெடுக்கும் அமெரிக்கா! ரணில் தொடர்பில் இலங்கைக்குள் இரகசிய நகர்வு(Video)

அமெரிக்கா, இலங்கையை முற்றுமுழுதாக தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான நகர்வொன்றை மேற்கொண்டு வருவதாக தெரியவந்திருக்கின்றது என அரசியல் ஆய்வாளர் எம்.எம்.நிலாம்டீன் தெரிவித்துள்ளார்.   எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.    இங்கிருக்கும் அமெரிக்கத் தூதுவர் மிகத் தீவிரமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.  போர்க்குற்றங்கள் தொடர்பான தகவல்களை அமெரிக்கா இலங்கைக்குள் மிகவும் இரகசியமான முறையில் சேகரித்து வருகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.  மேலும், ரணில் தொடர்பில் … Read more

<span class="follow-up">NEW</span> லிட்ரோவை தொடர்ந்து லாப் சமையல் எரிவாயுவின் விலையும் குறைந்தது! வெளியான விபரம் (Video)

12.5 கிலோகிராம் எடையுள்ள லாப் சமையல் எரிவாயுவின் விலையும் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.  அதன்படி 12.5 கிலோகிராம் எடையுள்ள லாப் சமையல் எரிவாயுவின் விலை 1,290 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை ரூ.3,990 ஆகும என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், 5 கிலோகிராம் எரிவாயு கொள்கலனின் விலை 516 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 1,596 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக லாஃப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.  முதலாம் இணைப்பு … Read more

இரத்மலானையில் போக்குவரத்து பல்கலைக்கழகம்

ரஷ்யா மற்றும் பெலாரிஸ் அரசின் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடக அமைச்சர் பேராசிரியர் பந்துல குணவர்தன அந்த நாடுகளில் போக்குவரத்துத் துறைக்காக பட்டம் வழங்குவதற்காக இப்பல்கலைக்கழகம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். இவ்விரண்டு நாடுகளிலும் காணப்படும் போக்குவரத்து பல்கலைக்கழகங்களில் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் மாணவர்கள் போக்குவரத்து விடயம் தொடர்பான பட்டப்படிப்பை மேற்கொள்வதாக பல்கலைக்கழக அதிகாரிகள் சுட்டிக்காட்டினார்கள். இதற்கமைய ரஷ்ய போக்குவரத்து பல்கலைக்கழகத்தின் RUT (MIIT) உபவேந்தர் பேராசிரியர் அலெக்சாண்டர் கிளிமொச் உட்பட்ட அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் … Read more