புலம்பெயர் இலங்கை தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்

இலங்கை வரும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு விமான நிலையத்தில் வழங்கப்படும் சுங்க தீர்வை சலுகையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி முதல் இந்த சலுகை நடைமுறைக்கு வரும் என அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். வெளிநாட்டு தொழிலாளர்கள் அனுப்பிய பணத்தின் அடிப்படையில் சுங்க தீர்வை சலுகைகளைப் பெற்றுக்கொள்ள முடியும். இந்த சலுகையை பல்வேறு வடிவங்களில் பெற்றுக்கொள்ள முடியும். 2400 முதல் 4799 டொலர் வரை அனுப்பிய தொழிலாளர்களுக்கு 600 டொலர் கூடுதல் சுங்க தீர்வையும் … Read more

14 வருடங்களாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த 3 தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை (video)

14 வருடங்களாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 3 தமிழ் அரசியல் கைதிகளை வவுனியா மேல் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. 2009ஆம் ஆண்டு மே மாதம் கைது செய்யப்பட்டுத் தடுப்பு காவலில் இருந்த யாழ். வேலணையை சேர்ந்த இ. திருவருள், யாழ் கரவட்டியை சேர்ந்த ம. சுலக்சன், முள்ளியவளையை சேர்ந்த க. தர்சன் ஆகிய மூவருக்கும் எதிராக வவுனியா மேல்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நிலையில், அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால், குறித்த மூவரையும் அனைத்து … Read more

ஆப்கானிஸ்தான் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

இலங்கை 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணி மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான இளையோர் ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணியானது அங்கே இடம்பெற்ற முக்கோண இளையோர் ஒருநாள் தொடரை அடுத்து, ஆப்கானிஸ்தான் அணியுடன் இரு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இந்த ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்று தொடரில் … Read more

நாளை முதல் பாடசாலை விடுமுறை

எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளுக்கு நாளை (04) முதல் விடுமுறை வழங்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, 2023 ஆம் ஆண்டுக்கான பாடசாலை கல்விச் செயற்பாடுகளின் முதலாம் தவணைக்கான  இரண்டாம் கட்டம் ஏப்ரல் 17 ஆம் திகதி முதல்  மே 12 வெள்ளிக்கிழமை வரை நடைபெற உள்ளதோடு, மே 13 முதல் மீண்டும் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளது. மேலும் முதலாம்  தவணையின் மூன்றாம் கட்டம் மே 25ஆம் … Read more

லிட்ரோ எரிவாயுவின் விலை பெருந்தொகையால் அதிரடியாக குறைப்பு

லிட்ரோ எரிவாயுவின் விலை நாளை நள்ளிரவு முதல்  ஆயிரம் ரூபாவினால் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் இந்த விடயத்தை அறிவித்துள்ளார். லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் வரலாற்றில் இவ்வளவு பாரிய தொகையில் விலை குறைக்கப்பட்டமை இதுவே முதல் சந்தர்ப்பம் என தெரிவித்துள்ளார். ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு மற்றும் உலக சந்தையில் எரிவாயு விலை குறைவடைந்தமை உள்ளிட்ட காரணிகளின் அடிப்படையில் இவ்வாறு விலை குறைக்கப்பட்டுள்ளது.  இதன்படி 12.5 கிலோ கிராம் எடையுடைய லிட்ரோ எரிவாயுவின் … Read more

புத்தாண்டு சுபநேரப் பத்திரம் ஜனாதிபதியிடம் கையளிப்பு

தமிழ், சிங்கள புத்தாண்டு சுபநேரப் பத்திரம் பாரம்பரிய மற்றும் சம்பிரதாய முறைப்படி ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (03) முற்பகல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களிடம் கையளிக்கப்பட்டது. பாரம்பரிய முறைப்படி மேளதாளத்துடன் கொண்டுவரப்பட்ட சுபநேரப் பத்திரத்தை, புத்தசாசன, சமயம் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க ஜனாதிபதிக்கு வழங்கி வைத்தார். வளர்பிறை தரிசனம், பழைய ஆண்டிற்கான நீராடல், புத்தாண்டுப் பிறப்பு, புண்ணியகாலம், உணவு சமைத்தல், சுப காரியங்களை ஆரம்பித்தல் கைவிசேடம் பெறுதல், உணவு உண்ணுதல், தலைக்கு மருத்துநீர் … Read more

வெடுக்குநாறி விவகாரத்திற்கு விரைவில் நிரந்தர தீர்வு 

நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் சந்தப்பட்டவர்களுடன் சுமூகமான கலந்துரையாடல்களை மேற்கொள்வதன் ஊடாகவும் வெடுக்குநாறி விவகாரத்திற்கு விரைவில் நிரந்தர தீர்வு எட்டப்படும் என்று வெடுக்குநாறி மலையில் வைத்து அமைச்சர்  டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். அத்துடன் தமிழ் மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு ஒத்துழைப்புக்களை வழங்குகின்ற ஜனாதிபதிக்கு நன்றி கூறுவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவிக்கையில், உரிய ஆவணங்கள் இல்லாததால் அதனை அதிகாரிகள் பயன்படுத்திக் கொள்கின்றனர். அதனால் ஆவணங்களை கோரியுள்ளேன். சமய முக்கியத்துவம் … Read more

நியூசிலாந்து அணியை சூப்பர் ஓவரில் வீழ்த்தி இலங்கை அணி வெற்றி

சுற்றுலா இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதல் ரி20 போட்டியில் இலங்கை அணி சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றுள்ளது. இலங்கை, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதல் ரி20 போட்டி ஓக்லேன்ட் நகரின் ஈடன் பார்க் அரங்கில் ஆரம்பமாகியது. இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி களத்தடுப்பில் ஈடுப்பட்டது. இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 196 ஓட்டங்கள் எடுத்தது. இலங்கை அணியின் துடுப்பாட்டம் சார்பில் சரித் அசலன்க … Read more

இந்திய நல்லாட்சி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம், ஜனாதிபதியை சந்திப்பு

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் இந்திய நல்லாட்சி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் பாரத் லால், இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ஆகியோர், நேற்று முன்தினம் (01) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களை சந்தித்தனர். இலங்கையில் அரச சேவையில் பயனுள்ள மாற்றத்தை ஏற்படுத்த உதவுவது மற்றும் பயனுள்ள கண்காணிப்பு நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் அரச நிறுவனங்களின் செயல்திறனை எவ்வாறு மேம்படுத்துவது என்பதைக் கண்டறிவதே பாரத் லாலின் இலங்கை விஜயத்தின் நோக்கமாகும். மக்கள் சேவைகளை வழங்குவதற்காக தகவல் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி இந்தியா குறிப்பிடத்தக்க … Read more

கொழும்பில் மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் தனியார் வைத்தியசாலை – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கொழும்பின் புறநகர் பகுதியான தெஹிவளையில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலைக்கு 15 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்ட பிரிவின் சிரேஷ்ட புலனாய்வு அதிகாரி தெரிவித்துள்ளார். டெங்கு என்டிஜன் மற்றும் முழுமையான இரத்த பரிசோதனைக்காக நோயாளிகளிடம் இருந்து மேலதிகமாக 1,350 ரூபா பணம் வசூலித்த குற்றச்சாட்டின் கீழ் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. விதிக்கப்பட்டுள்ள அதிகூடிய அபராதம் நுகர்வோர் விவகார அதிகார சபையினால் தனியார் வைத்தியசாலை அல்லது ஆய்வகத்திற்கு விதிக்கப்பட்ட அதிகூடிய அபராதம் இதுவென அவர் குறிப்பிட்டுள்ளார். டெங்கு … Read more