இந்திய – இலங்கை இருதரப்பு கடல்சார் பயிற்சிகள் ஆரம்பம்

இந்திய – இலங்கை இருதரப்பு கடல்சார் பயிற்சியின் 10 ஆவது பதிப்பு ஏப்ரல் 3 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது. இப்பயிற்சி, துறைமுகம் மற்றும் கடல் என்ற இரண்டு கட்டங்களாக இரண்டு நாட்களுக்கு நடத்தப்படவுள்ளது. இந்திய கடற்படையை ஐ.என்.எஸ் கில்தான் மற்றும் ஐ.என்.எஸ் சாவித்ரி என்பன பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.  இதேவேளை இலங்கை கடற்படையை விஜயபாகு மற்றும் சமுத்ரா ஆகிய கப்பல்கள் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. அத்துடன் இந்திய கடற்படை சேடக் ஹெலிகாப்டர், டோர்னியர் கடல் ரோந்து விமானம், இலங்கை விமானப்படையின் டோர்னியர் … Read more

டிஜிட்டல் மயமாக்கப்பட்ட நவீன இலங்கையை கட்டியெழுப்ப தனது தலைமையிலான அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாக ஜனாதிபதி தெரிவிப்பு!

டிஜிட்டல் மயமாக்கலின் ஊடாக நவீன இலங்கையை கட்டியெழுப்ப தனது தலைமையிலான அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அரச துறையை டிஜிட்டல் மயமாக்குவதும், டிஜிட்டல் மயமாக்கலை துரிதப்படுத்துவதும் அரசாங்கத்தின் பொறுப்பாகும். அதற்காக அமைச்சரவைக் குழுவொன்று நியமிக்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். அலரிமாளிகையில் நேற்று (30) பிற்பகல் நடைபெற்ற “DIGIECON 2030” வெளியீட்டு விழாவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் இதனைக் குறிப்பிட்டார். இந்த நிகழ்ச்சியை தொழில்நுட்ப அமைச்சு ஏற்பாடு செய்திருந்தது. தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் … Read more

வவுனியாவில் விவசாயிகளிடமிருந்து 46 இலட்சம் கிலோ நெல் அரசாங்கத்தால் கொள்வனவு

வவுனியா மாவட்டத்தில் விவசாயிகளிடமிருந்து 46 இலட்சம் கிலோ கிராம் நெல் அரசாங்கத்தின் நெல் கொள்வனவு திட்டத்தின் கீழ் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட செயலாளர் பி.ஏ.சரத்சந்திர தெரிவித்துள்ளார். பொருளாதார நெருக்கடிக்குள்ளான குடும்பங்களுக்கு இலவச அரிசி வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் இவ்வாறு விவசாயிகளிடமிருந்து 46 இலட்சம் கிலோ நெல், 14% ஈரப்பதனுக்கு குறைவாக உள்ள நெல் ஒரு கிலோ 100 ரூபாவிற்கும், 14% முதல் 22% ஈரப்பதம் உள்ள நெல் ஒரு கிலோ 88 ரூபாவிற்கும் கொள்வனவு செய்யப்பட்டது. … Read more

இலங்கை, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான ரி20 போட்டி நாளை ஆரம்பம்

சுற்றுலா இலங்கை அணிக்கும், நியூசிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது ரி20 போட்டி நாளை (02) ஆரம்பமாகவுள்ளது. நேற்று முன்தினம் (31) சுற்றுலா இலங்கை அணிக்கும், நியூசிலாந்து அணிக்கும் இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரையும் வென்றமை குறிப்பிடத்தக்கது.

தேசிய மாணவர் படையணியின் பாடத்திட்டத்தை காலத்திற்கு ஏற்றவாறு திருத்த கவனம் செலுத்ப்படும் – பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்

தேசிய மாணவர் படையணியின் பாடத்திட்டம் காலத்திற்கு ஏற்றவாறு எதிர்காலத்தில் மாற்றியமைக்கப்படும் என தெரிவித்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித பண்டார தென்னகோன், ரண்டம்பே தேசிய மாணவர் படையணி பயிற்சி நிலையத்திற்கு மேலதிகமாக வேறு இடங்களிலும் பயிற்சிகளை விரிவுபடுத்தவும், வசதிகளை பெற்றுக் கொடுப்பதற்கும் கவனம் செலுத்தப்படும் எனவும் குறிப்பிட்டார். ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே பாதுகாப்புத் தலைமையக வளாகத்தில் அமைந்துள்ள இராணுவத் தலைமையகத்திற்கு (மார்ச் 31) விஜயம் செய்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித பண்டார தென்னகோன், … Read more

“சிறந்த நடைமுறைகள் 2022” இற்கான ஐரோப்பிய விருதை வென்ற பீப்பிள்ஸ் லீசிங் நிறுவனம் தனது விருதை ஜனாதிபதியிடம் கையளித்தது

இலங்கையில் வங்கியல்லாத நிதி நிறுவனத் துறையில் நிதித் தீர்வுகளை வழங்கும் பீப்பிள்ஸ் லீசிங் நிறுவனத்திற்கு, சிறந்த நடைமுறைகளை மதிப்பிடுவதற்காக ஐரோப்பிய சமூகத்தின் தர ஆராய்ச்சி (European Society Quality Research – ESQR) வருடாந்தம் வழங்கும் “சிறந்த நடைமுறைகள் 2022” (Best Practices 2022) விருது வழங்கப்பட்டது. 2022 டிசம்பர் 11, அன்று பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் இந்த விருது வழங்கப்பட்டதுடன் அது சமீபத்தில் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களிடம் … Read more

கோட்டாபயவின் வீட்டிற்கு அருகில் குவிக்கப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொலிஸ் மற்றும் இராணுவத்தினர்

“கோ ஹோம் கோட்டா” போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருடம் பூர்த்தியானதையொட்டி மீரிஹான பகுதியில் வெள்ளிக்கழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நினைவுப் போராட்டத்தால் அந்தப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டிருந்தது. நேற்று (31.03.2023) மாலை போராட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், அதன் முன்னணி செயற்பாட்டாளர்களான டானிஸ் அலி உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்தே அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் பலவந்தமாக கடத்தப்பட்டதாக தெரிவித்து, போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தவர்கள் பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் குறித்தப் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொலிஸாரும், … Read more

வள்ளுவரும் தமிழ்த்தேசிய அரசியல் விடுதலையும்!

Courtesy: koormai 2009 மே மாதத்திற்குப் பின்னரான சூழலில், ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலை பற்றிய நியாயப்படுத்தலை மறுதலிக்கக்கூடிய அரசியல் உத்திகள் நுட்பமாக வகுக்கப்பட்டு மறைமுகமாகவும் நேரடியாகவும் மெது மெதுவாகச் செயற்படுத்தப்பட்டு வரும் பின்னணியில், தமிழ்த்தேசியச் சிந்தனையை மேலும் மடைமாற்றக்கூடிய முறையில் சமயக் கோட்பாடுகள் மிகைப்படுத்தப்படுகின்றன. இந்த இடத்தில் ஈழத்தமிழ் அறிஞர்களான கா.பொ.இரத்தினம், தனிநாயகம் அடிகளார் போன்றோர் வள்ளுவம் ஊடாகத் தமிழினத்தை ஒன்றுபடுத்த மேற்கொண்ட முயற்சிகள் பற்றிய மீள் பார்வை அவசியமாகிறது. ‘குறள் ஆய்வுச் செம்மல்’ ‘உலகத் தமிழர் … Read more

கொழும்பின் புறநகர் பகுதியான மிரிஹானையில் பதற்றம்: மூவர் கைது (Live Video)

நுகேகொடை – மிரிஹானவில் உள்ள கோட்டாபய ராஜபக்சவின் வீட்டுக்கு அருகில் கடந்த 2022ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் திகதி இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் முதலாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு மீண்டும் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்றைய தினம் (31.03.2023) முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும்  இடையில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு பதற்றநிலை ஏற்பட்டதையடுத்து, அப்பகுதியில் ஏராளமான பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், முன்னணி செயற்பாட்டாளர்களான அனுருத்த பண்டார, டனிஸ் அலி மற்றும் சுதார ஆகிய … Read more

கொழும்பில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு குடும்பஸ்தர் பலி

முச்சக்கரவண்டியில் வந்த  அடையாளம் தெரியாத சிலர், குடும்பஸ்தர் ஒருவரைக் கூரிய ஆயுதங்களால் தாக்கிக் கொலை செய்துள்ளனர். இந்தச் சம்பவம் கொழும்பு – மட்டக்குளியில் இன்று (31.03.2023) இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் அப்பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய மொஹமட் சுதுர் மொஹமட் இர்பாட் என்பவரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபரை அவரது வீட்டின் முன் வைத்து தாக்கிவிட்டுச் சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார். குடும்பஸ்தர் … Read more