இலங்கையில் மற்றுமொரு பெண் மர்மமான முறையில் படுகொலை

இரத்தினபுரியில் மர்மமான முறையில் உயிரிழந்த பெண் சட்டத்தரணி ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பெல்மடுல்ல – புலத்வெல்கொட பகுதியிலுள்ள வீடொன்றில் 40 வயதுடைய சட்டத்தரணியான துஷ்மந்தி அபேரத்ன என்ற பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்த பெண்ணின் கணவர் நேற்று இரவு முதல் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சட்டத்தரணியின் குடும்பத்தினர் பொலிஸாரிடம் முறையிட்டுள்ளனர். கொலை செய்யப்படுதற்கு முதல்நாள் இரவு உயிரிழந்த பெண் குடும்பத்தாருக்கு அனுப்பிய குறுஞ்செய்தி குறித்தும் பொலிஸார் விசாரணை நடத்தி … Read more

<span class="follow-up">NEW</span> 100 ரூபாவால் குறைந்ததா டொலரின் பெறுமதி! கூகுளில் ஏற்பட்ட திடீர் மாற்றம்

வழமைக்கு வந்தது கூகுள்.. தொழிநுட்ப கோளாறு காரணமாக  கூகுள் தரவுகளில் இலங்கை ரூபாவுக்கு நிகரான ஏனைய வெளிநாட்டு நாணயங்களின் பெறுமதியில் சடுதியான வீழ்ச்சி ஏற்பட்டிருந்ததாக பதிவு செய்யப்பட்டிருந்தது. எனினும், தற்போது மீண்டும் கூகுள் தரவு வழமைக்குத் திரும்பியுள்ளதுடன் தற்போது ரூபாவின் பெறுமதி மீண்டும் பழைய  தரவுகளின் படி காட்டுகின்றது. முதலாம் இணைப்பு அமெரிக்க டொலரின் பெறுமதி திடீரென 100 ரூபாவால் வீழ்ச்சியடைந்துள்ளதாக கூகுள் தரவில் பதிவிடப்பட்டுள்ளது.  இதன்படி, டொலரின் பெறுமதி 236.81 ரூபாவாக காணப்படுகின்றது.  அது மாத்திரமின்றி … Read more

ரூபாவின் பெறுமதியில் கடும் வீழ்ச்சி! மத்திய வங்கியின் தகவல்

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது. இந்தநிலையில், நேற்றுடன் ஒப்பிடும் போது இன்றையதினம் ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள தரவுகளின் மூலம் தெரியவந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 336.01 ரூபாவாகவும், கொள்வனவு விலை 318.27 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. பவுண்ட் மற்றும் யூரோவின் பெறுமதி இந்தநிலையில் நேற்றுடன் ஒப்பிடும்போது ஸ்டெர்லிங் பவுண்டிற்கு எதிராக … Read more

IMF இலங்கைக்கு வழங்கிய கடனுக்கு எதிராக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

சர்வதேசக் குற்றங்களுக்குப் பொறுப்பேற்காத கொள்கையைக் கொண்டுள்ள இலங்கை அரசு எப்படி சர்வதேச நிதிகளுக்குப் பொறுப்பேற்க முடியும் என்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கேள்வி எழுப்பியுள்ளது. இந்தநிலையில், மனித உரிமைகள் பாதுகாப்பு, மத சுதந்திரம் அல்லது தமிழர்களுக்கு எதிரான சர்வதேச குற்றங்களுக்குப் பொறுப்புக் கூறுதல் தொடர்பான நிபந்தனைகள் ஏதுவுமின்றி, சர்வதேசநாணய நிதியம், இலங்கை அரசுக்கு 3 பில்லியன் டொலரை கடனாக வழங்கியுள்ளது. இது நெறிமுறையற்ற மற்றும் நியாயமற்ற ஏற்பாடு என்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதானி … Read more

மறைந்த ஜோசப் மைக்கல் பெரேராவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி செலுத்தினார்

தலைசிறந்த அரசியல்வாதியும், இலங்கை பாராளுமன்றத்தின் முன்னாள் சபாநாயகரும், அமைச்சரவை அமைச்சருமான, மறைந்த ஜோசப் மைக்கல் பெரேராவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் (30) இறுதி அஞ்சலி செலுத்தினார். இன்று, அவரது பூதவுடல் தாங்கிய விஷேட வாகனம், பொலிஸ் வாகன தொடரணியுடன் பாராளுமன்ற வளாகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. பாராளுமன்றத்தின் பிரதான நுழைவாயில் அருகே பூதவுடல் கொண்டு வரப்பட்ட பின்னர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள், சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன உள்ளிட்ட ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் … Read more

''ஆதர்ஷ சிற்பி'' கவிதை, கட்டுரை போட்டிகளுக்கான கால அவகாசம் நிறைவு

அமரர் ஆறுமுகன் தொண்டமானின் ஜனன மற்றும் சிரார்த்த தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘ஆதர்ஷ சிற்பி’ கவிதை, கட்டுரை போட்டிகளுக்கான கால அவகாசம் நிறைவடைந்துள்ளது. இது தொடர்பாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளதாவது, நாம் எதிர்பார்த்ததை விட அதிகமான எழுத்தாளர்கள் தமது படைப்புகளை நாடு முழுவதிலுமிருந்து ஆர்வத்துடன் அனுப்பி வைத்துள்ளார்கள். அனைவருக்கும் எமது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். படைப்புகள் யாவும் பரிசீலிக்கப்பட்டு பரிசுக்குரியவை தேர்ந்தெடுக்கப்படும். வெற்றியாளர்களின் முகவரிக்கு இது சம்பந்தமான தகவல்கள் அனுப்பி வைக்கப்படும். கட்டுரைப் போட்டிக்கான … Read more

இலங்கையில் இராமாயணத்துடன் தொடர்புடைய பல இடங்கள்! மிலிந்த மொரகொட வலியுறுத்திய விடயம்

இராமாயணம் மற்றும் சீதை பாதைகளை இலங்கை நாடு அபிவிருத்தியினை மேற்கொண்டு வருவதாக இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளார். இராம நவமி விழாவையொட்டி, மிலிந்த மொரகொட நேற்றைய தினம் (30.03.2023) மும்பையில் உள்ள ராஜ்பவனில் மகாராஷ்டிரா ஆளுநர் ரமேஷ் பாயிஸை சந்தித்துள்ளார். மேலும், இலங்கை வளமானது. அழகான மென்மையான மற்றும் மணல் கடற்கரைகள், பசுமையான தேயிலை தோட்டங்கள், மலைகள் தாவரங்கள் மற்றும் விலங்கினங்களுக்கு பெயர் பெற்றது என்றும் பெரும்பாலானவை இராமாயணத்துடன் தொடர்பு கொண்டவை எனவும் மொரகொட … Read more

3 ஆவது ஒருநாள் போட்டி – நியூசிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

சுற்றுலா இலங்கை அணிக்கும், நியூசிலாந்து அணிக்கும் இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இன்று (31) காலை 6.30 மணிக்கு ஹாமில்டனில் ஆரம்பமாகிய இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 41.3 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 157 ஓட்டங்களை பெற்றது. இதன்பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 32.5 ஓவர்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து 159 ஓட்டங்களை பெற்றது. இதனால் நியூசிலாந்து அணி 3 ஆவது … Read more

பாடசாலையில் தரம் ஒன்றுக்கு உள்வாங்கப்படும் அனைத்து மாணவர்களுக்கும் ஆங்கில மொழி பிரயோகம் ஆரம்பம்

நாடளாவிய ரீதியில் பாடசாலைகளில் தரம் ஒன்றில் அனைத்து மாணவர்களுக்கும் ஆங்கில மொழியை பிரயோகிப்பதற்காக 13, 800 ஆசிரியர்கள் தமது பயிற்சியை பூர்த்தி செய்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த தெரிவித்தார். கங்கொடவில சமுத்திரா தேவி பாலிகா கனிஷ்ட வித்தியாலயத்தில் நேற்று (30) இடம்பெற்ற தரம் ஒன்று மாணவர்களுக்காக ஆங்கில மொழிப் பிரயோகத்தை ஆரம்பிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதுதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்… சவால்களை பொறுப்பேற்பதற்கு தயாராக … Read more