புடினுக்கு எதிராக ரஷ்யாவில் இராணுவப் புரட்சி! இராணுவ ஆய்வாளர் எச்சரிக்கை(Video)

ரஷ்யாவில் வெகுவிரைவில் புரட்சி ஒன்று ஏற்படலாம் என்ற அதிர்ச்சிகரமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. குறிப்பாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு எதிராக இந்த புரட்சி ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் அது மக்கள் புரட்சியாக அல்லது இராணுவ புரட்சியாக அமையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவில் புரட்சி ஏற்பட்டால், யாரால் அது ஏற்படுத்தப்படும்? என்ன நோக்கத்திற்காக ஏற்படுத்தப்படும்? புடின் அதனை எவ்வாறு எதிர்கொள்வார்? என்பது ஒரு புறம் இருக்க, ரஷ்யாவில் இராணுவ புரட்சி ஏற்படுமா?என்ற கேள்வியே இங்கு முதன்மைப்படும். அது … Read more

சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபை இன்று கூடுகிறது.

இலங்கைக்கான கடன் வசதியை வழங்குவது தொடர்பில் தீர்மானிக்க சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபை இன்று கூடுகிறது. சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து இலங்கைக்கு கிடைக்கும் நீட்டிக்கப்பட்ட கடன் வசதி தொடர்பான சர்வதேச நாணய நிதியத்தின் தீர்மானம் நாளை காலை அறிவிக்கப்படவுள்ளது. இந்த நிலையில், இந்த கடன் வசதியை வழங்குவது தொடர்பான, நிதியத்தின் உத்தியோகபூர்வ அறிவிப்பு ஊடகங்களுக்கு வெளியிடப்படும் என இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இதன்படி எதிர்வரும் 22ஆம் திகதி முதல், இலங்கைக்கு 8 … Read more

கட்டுநாயக்க விமான நிலையத்தில் நெகிழ்ச்சி சம்பவம் – வெளிநாட்டு குடும்பத்தின் செயல்

வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு சுற்றுலா வந்த தம்பதி ஒன்று இலங்கை சுற்றுலா வழிகாட்டியின் மீது கொண்ட அன்பு பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்தில் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பிரபல்யம் அடைந்துள்ளன. வெளிநாட்டு குடும்பத்துடன் தனது பயணத்தை மேற்கொண்டிருந்த இலங்கை சுற்றுலா வழிக்காட்டி அவர்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றுள்ளார். இதன்போது சுற்றுலா வழிகாட்டியை விட்டு பிரிய மனமில்லாத வெளிநாட்டு தம்பதியின் பிள்ளைகள் கண்ணீர் விட்டழுத காட்சி பலரையும் நெகிழச் செய்துள்ளது. … Read more

IMF கடனை இழந்தால் இரண்டு வாரங்களுக்குக்கூட நாட்டை முன்னெடுத்துச் செல்ல முடியாது: பந்துல குணவர்தன

எதிர்வரும் 20ஆம் திகதிக்குள் இலங்கை, சர்வதேச நாணய நிதியத்தை ஏற்று கடன் உதவியைப் பெறாவிட்டால் மேலும் இரண்டு வாரங்களுக்குக்கூட நாட்டை முன்னெடுத்துச் செல்ல முடியாமற் போகும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். களுத்துறை விமானப்படை தளத்தில் நேற்று (19.03.2023)ஸ்ரீலங்கா சாரதிகளுக்கான தொழில்நுட்ப நடைமுறை பயிற்சிகளை வழங்கும் நிகழ்ச்சியின் போது அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது, கடனை அடைக்க முடியாத நாடாக உலகமே வழக்கு தொடரும் … Read more

ஈக்வடோரில் 6.8 ரிக்டர் நிலநடுக்கம்: உயிரிழப்பு அதிகரிப்பு

ஈக்வடாரின் வடக்கு பெருவின் கடலோரப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 380க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. நேற்று (18.03.2023) இரவு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகியுள்ளது. வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி இதன் காரணமாக பல நகரங்களில் பல வீடுகள், பாடசாலைகள் மற்றும் மருத்துவ நிலையங்கள் இடிந்து வீழ்ந்துள்ளதுடன், பலர் அந்த கட்டிடங்களுக்கு இடையில் சிக்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சாண்டா ரோசா விமான நிலையமும் … Read more

அடுத்தவாரம் கும்ப ராசிக்காரர்களுக்கு பேரதிஷ்டம்! ஆனால் மகர ராசிக்காரர்களுக்கு – வாரத்திற்கான ராசிபலன்

ஜோதிடத்தின் அடிப்படையான நவகிரகங்கள் தினமும் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்குப் பெயர்ச்சி ஆகிக் கொண்டு இருக்கின்றன. இதனால் ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு விதமாக நாளாந்த பலன்கள் மாறுபடும். கிரகங்களின் பெயர்ச்சி அனைத்து 12 ராசிகளையும் பாதித்தாலும், மார்ச் மாதத்தில் சில ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலனையே கொடுக்கும். எனவே 2023 மார்ச் மாதத்தில் 4 முக்கிய கிரகங்களின் பெயர்ச்சி நிகழவுள்ளது. இந்த நிலையில் துலா ராசி முதல் கன்னி வரையிலான 6 ராசிகளுக்குமான இந்த வார பலன்கள் எப்படி அமையப்போகிறது … Read more

பேராதனை பல்கலை வளாகத்தில் காதல் செய்வதற்கு தடையில்லை! துணைவேந்தர்

பேராதனைப் பல்கலைக்கழக வளாகத்தில் காதல் செய்வது தடைசெய்யப்பட்டதல்ல, ஆனால் அளவுக்கு மீறிய செயற்பாடுகள் அனுமதிக்கப்பட மாட்டாது என பேராதனை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர். டி.எம். லமாவன்ச தெரிவித்துள்ளார்.  அண்மையில் பேராதனை பல்கலைக்கழகத்தின் செனட் கட்டடத்துக்கு அருகில் காதலர்கள் இருவர் கட்டித்தழுவியபடி நின்றிருந்த சம்பவம் தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகத்தின் நடவடிக்கை குறித்து சமூக ஊடகங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளதை தொடர்ந்தும் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மாணவர்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரத்தை கட்டுப்படுத்தப் போவதில்லை  பல்கலைக்கழக வளாகத்தில் 1700 ஏக்கர் நிலப்பரப்பில் 13,000க்கும் … Read more

விமான டிக்கெட்டுக்களின் விலை குறைகிறது!

டொலரின் விலையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சிக்கு ஏற்ப விமான டிக்கெட்டுக்களின் விலையும் 20 வீதத்தால் குறைந்துள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். இலங்கையில் இயங்கும் விமான சேவை நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். விமான டிக்கெட்டுகளின் விலைகளை மேலும் குறைக்க நடவடிக்கை டொலர் விலை குறைவினால் விமான டிக்கெட்டுகளின் விலையை குறைக்குமாறு இலங்கையில் உள்ள விமான நிறுவன பிரதிநிதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும், … Read more

வெளிநாட்டில் பூபதி அம்மாவிற்கு பூ வைக்கிறார்கள்! தாயகத்தில் ஏன் இப்படி செய்கிறீர்கள் கண்ணீருடன் மகள் (Video)

தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் உண்ணாநோன்பிருந்து உயிர்நீத்த தியாக தீபம் அன்னை பூபதியின் 35வது ஆண்டு நினைவேந்தல் மாதத்தின் முதலாம் நாள் இன்றைய தினம் மட்டக்களப்பு நாவலடியிலுள்ள அவரது கல்லறையில் அனுஷ்டிக்கப்பட்டது. 1988.03.19ஆம் திகதி சாகும்வரையிலான உண்ணாவிரத போராட்டத்தின் ஆரம்ப நாளான இன்றைய தினம் (19.03.2023) அனுஷ்டிக்கப்படுகின்றது. மட்டக்களப்பு – நாவலடியில் அமைந்துள்ள அன்னை பூபதியின் நினைவுத் தூபியில் அவரின் பிள்ளைகள் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் ஈகச்சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. இவர் மட்டக்களப்பில், அகிம்சை … Read more

தொடர்ந்து வீழ்ச்சியை சந்திக்கும் இலங்கையின் பொருளாதாரம்! வெளியான தகவல்

நடப்பு ஆண்டிலும் இலங்கையின் பொருளாதார வளர்ச்சியில் வீழ்ச்சியே ஏற்படும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். பொருளாதார ஆய்வுகளை மேற்கொள்ளும் அட்வகோட்டா நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி தனநாத் பெர்னாண்டோ இது தொடர்பான எதிர்வுகூறல் ஒன்றை முன்வைத்துள்ளார். கடந்த வருடத்தில் இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியில் 7 வீதம் மற்றும் 8 வீதம் வீழ்ச்சியடைந்துள்ளதைக் காணமுடிகிறது. வறுமையில் தள்ளப்பட்டுள்ள பொதுமக்கள்  அந்தவகையில், இந்த வருடமும் பொருளாதார வளர்ச்சி மேலும் 3 எதிர்மறை புள்ளிகளால் குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளது … Read more