லிஸ்டீரியா நோய் தொடர்பில் விசேட பரிசோதனைகள் ஆரம்பம்

லிஸ்டீரியா நோய்தொடர்பில் ஸ்ரீபாத வீதியில் மேற்தளம் வரையிலான கடைகளில் விசேட சோதனை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அந்த கடைகளில் இருந்து உணவு மாதிரிகளை எடுத்து இந்த பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருவதாக இரத்தினபுரி மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஸ்ரீனி அழகப்பெரும தெரிவித்தார். லிஸ்டீரியா நோயால் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு பெண் சமீபத்தில் இறந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் கூறினார். விசேட பரிசோதனைகள் ஆரம்பம் ஸ்ரீ பாத சாலையில் உள்ள பேருமண்டிய பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் பணிபுரிந்து … Read more

சர்வதேச நாணய நிதியத்தின் தீர்மானம் குறித்து 21ம் திகதி அறிவிப்பு!

இலங்கைக்கு வழங்கப்படவுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட கடன் வசதி குறித்து 21ம் திகதி முக்கிய அறிவிப்பொன்று வெளியிடப்படவுள்ளது. இலங்கை எதிர்பார்க்கும் கடன் வசதிகளை வழங்குவது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையின் கூட்டம் மார்ச் 20 ஆம் திகதி நடைபெறவுள்ளது. முக்கிய தீர்மானம் அதன் பின்னர், இந்த செயற்குழுவில் விவாதிக்கப்பட்ட விடயங்கள் குறித்து தெரிவிக்கும் வகையில் செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க நேரப்படி 20ஆம் திகதி பிற்பகல், அதாவது இலங்கை நேரப்படி … Read more

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ ரங்கா கைது

 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீ ரங்கா சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.  களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.   நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு கடந்த 2011ஆம் ஆண்டு வவுனியா – செட்டிக்குளம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் வவுனியா மேல் நீதிமன்றத்தில் வழக்கு இடம்பெற்று வருகின்றது.  இந்தநிலையில், குறித்த வழக்குடன் தொடர்புடைய சாட்சியாளர்களை அச்சுறுத்தியதாக தெரிவித்து ஸ்ரீ ரங்காவை கைது செய்து நீதிமன்றத்தில் … Read more

யாழில் ஆசிரியர்களிடம் விளக்கக் கடிதம் கோரிய பாடசாலை

தொழிற்சங்க நடவடிக்கையில் பங்குகொண்ட ஆசிரியர்களிடம் யாழ். புறநகர் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்று விளக்கக் கடிதம் கோரியுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. அரசின் வரிக்கொள்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்றுமுன்தினம் புதன்கிழமை நாடளாவிய ரீதியில் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. அதில் 47 க்கும் அதிகமான தொழிற்சங்கங்கள் பங்கேற்றன. நாடளாவிய ரீதியில் பாடசாலைகளும் மூடப்பட்டன. பாடசாலை வராமைக்கான காரணம் இந்தநிலையில், பாடசாலைக்கு சமூகமளிக்காத ஆசிரியர்களிடம் பாடசாலைக்கு வராமை தொடர்பான காரணத்தை குறித்த பாடசாலை விளக்கக் கடிதம் மூலம் கோரியுள்ளது. Source … Read more

குறைந்துள்ள தங்கம் மற்றும் டொலரின் பெறுமதி! மக்கள் உணரத் தொடங்கியுள்ள மாற்றம்

தற்போது, பொருட்களின் விலைகள் குறைந்து செல்கின்றன. தங்கத்தின் விலையும் குறைந்துள்ளது. டொலரின் பெறுமதி குறைந்துள்ளதால் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதை மக்கள் உணரத் தொடங்கியுள்ளனர் என இராஜாங்க அமைச்சர் ஜானக வகும்புர தெரிவித்துள்ளார்.  தொடர்ந்தும் அவர் குறிப்பிடுகையில், உள்ளூராட்சித் தேர்தலுக்கு முகம் கொடுப்பதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பயப்படவில்லை. தேர்தலை நடத்தாமல் விட்டால் அதிக பாதிப்பு எமது கட்சிக்குத்தான். 2018 இல் தேர்தலில் அதிக சபைகளைக் கைப்பற்றியதும் நாங்கள்தான். அதிகரித்துள்ள சுற்றுலாப் பயணிகளின் வருகை ரணில் விக்ரமசிங்க … Read more

இராணுவத்தினரால் முல்லைத்தீவு ,யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வறிய குடும்பத்திற்கு வீடுகள்

இராணுவத்தினரால் முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வறிய குடும்பத்திற்கு வீடுகள் நிர்மாணிப்புஅண்மையில் யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவில் உள்ள இரண்டு குடும்பங்களுக்கு இலங்கை இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட இரண்டு புதிய வீடுகளின் சாவிகள் கையளிக்கப்பட்டன. முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் 64வது காலாட் படைப் பிரிவின் 643வது காலாட் பிரிகேடின் படையினரால் முட்டியங்காட்டுக்குளம் பகுதியைச் சேர்ந்த திருமதி ஜே. அன்டோனிதாஸின் குடும்பத்திற்காக புதிய வீடு ஒன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 8வது இலங்கை பீரங்கி படையினர் தங்களுடைய தொழில்நுட்பம் … Read more

தமது நாட்டின் பாதுகாப்பு படைகளுக்கு இலங்கை இராணுவம் வழங்கும் பயிற்சி வசதிகளை மாலைதீவின் புதிய உயர்ஸ்தானிகர் பாராட்டினார்.

இலங்கையிலுள்ள இராணுவப் பயிற்சி நிறுவனங்களினால் மாலைதீவு பாதுகாப்புப் படைகளினருக்கு வழங்கப்படும் இராணுவப் பயிற்சி குறித்து இலங்கைக்கான மாலைதீவுக் குடியரசின் புதிதாக நியமிக்கப்பட்ட உயர்ஸ்தானிகர் அதிமேதகு அலி பாயிஸ் பாராட்டு தெரிவித்தார். இலங்கை தமது பாதுகாப்புப் படை வீரர்களுக்கு உயர்தர மற்றும் தரமான பயிற்சிகளை வழங்குவதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார். அதேபோன்று மாலைதீவு மக்கள் அவர்களின் பல்வேறு தேவைகளுக்காக இலங்கைக்கு வரும் சந்தர்பங்களில் இலங்கை அதிகாரிகளினால் அவர்களுக்கு வழங்கப்படும் ஒத்துழைப்புக்காக உயர்ஸ்தானிகர் பாயிஸ் தனது மனமார்ந்த நன்றிகளையும், பாராட்டுகளையும் … Read more

நிறுத்தப்படும் அரச கொடுப்பனவுகள்! நிதியமைச்சு எடுத்துள்ள தீர்மானம்

அமைச்சர்கள் உட்பட சகல மக்கள் பிரதிநிதிகளதும் உத்தியோகபூர்வ  வெளிநாட்டுப்  பயணங்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளை நிறுத்துவதற்கு நிதியமைச்சு தீர்மானித்துள்ளது. அமைச்சர்கள், மாகாண ஆளுநர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாகாண சபை அமைச்சர்கள் மற்றும் தலைவர்கள் மாநகர சபை முதல்வர்கள் மற்றும் பிரதேச சபை  தலைவர்கள் ஆகியோரின் வெளிநாட்டுப் பயணங்களுக்காக கொடுப்பனவுகள் வழங்கப்பட்டு வந்தன. இந்தக் கொடுப்பனவுகைள நிறுத்தவே நிதியமைச்சு தீர்மானித்துள்ளது. இத்தீர்மானம் எதிர்வரும் மார்ச் 20ஆம் திகதி  முதல் நடைமுறைக்கு வரும் என்றும் நிதியமைச்சின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறைக்கப்படும் கொடுப்பனவுகள் ஆய்வுகள், … Read more

இத்தாலிய தூதுவர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

இலங்கை மற்றும் மாலைதீவுக்கான இத்தாலிய தூதுவர் அதிமேதகு ரிடா ஜூலியானா மன்னெல்லா இலங்கை பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தார். கோட்டே, ஸ்ரீ ஜயவர்தனபுரயிலுள்ள பாதுகாப்பு அமைச்சில்  (மார்ச் 15) இந்த சந்திப்பு இடம்பெற்றது. பாதுகாப்பு அமைச்சுக்கு வருகை தந்த இத்தாலிய தூதுவர் தலைமையிலான குழுவினர் பாதுகாப்புச் செயலாளரினால் வரவேற்கப்பட்டதை தொடர்ந்து இவர்களுக்கிடையில் சுமூகமான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. ஜெனரல் குணரத்னவுக்கும் தூதுவர் மன்னெல்லாவுக்கும் இடையிலான இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு … Read more

பனாகொடை மேற்குப் படையினருக்கு இராணுவத் தளபதி உரை

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் செவ்வாய் (14) மாலை மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகம் மற்றும் அதன் கீழ் உள்ள அமைப்புகளின் படையினர்களுக்கு உரையாற்றினார். பனாகொடை இராணுவ உடற்பயிற்சி கூடத்தில் இது இடம்பெற்றது. உரையின் போது, இராணுவத் தளபதி, ஒழுக்கத்தின் மிக உயர்ந்த தரத்தைப் பேணுவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்ததுடன், இராணுவத்தின் செயல்திறனின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் தற்போதைய செயற்பாட்டுச் சூழல் முன்வைத்துள்ள சவால்கள் குறித்து அவர்களுக்கு எடுத்துரைத்தார். பயிற்சி, திட்டமிடல் மற்றும் முன்னறிவிப்பு … Read more