போதைப் பொருள் பாவனையை தடுப்பதற்காக விசேட கலந்துரையாடல்

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டத்திற்கான முன்னாயத்த கலந்துரையாடல் கடற்தொழில் அமைச்சரும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று(14) காலை நடைபெற்றது. இதன்போது மத்திய மற்றும் மாகாண அமைச்சுக்களால் கிளிநொச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டதுடன் அவை தொடர்பான விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டு புதிய முன்மொழிவுகளுக்கான அனுமதிகளும் பெறப்பட்டுள்ளன. கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெறும் சட்ட விரோத மண் அகழ்வினை தடுப்பது தொடர்பாக … Read more

மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் புதிய சட்டமூலம்

இலங்கையில் பல்வேறு குறைபாடுகள் உள்ள மாற்றுத்திறனாளிகள் பலர் உள்ளனர். சர்வதேச நடைமுறைக்கு அமைவாக அவர்களுக்கும் குடிமக்களைப் போன்று அனைத்து உரிமைகளையும் வழங்கி பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளை உள்ளடக்கிய புதிய சட்டமூலம் முன்வைக்கப்படவுள்ளது என்று வெகுஜன ஊடகத்துறை அமைச்சர், அமைச்சரவைப் பேச்சாளர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (14) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில், கலந்து கொண்ட போதே அமைச்சர் இதனை தெரிவித்தார். 2016 ஆம் ஆண்டு மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் தொடர்பான ஐக்கிய … Read more

ரூபாவின் பெறுமதியில் மீண்டும் சரிவு! மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்

நேற்றையதினத்துடன் ஒப்பிடும் போது இன்றையதினம் அமெரிக்க டொலரின் விலையில் சிறு அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.  கடந்த மாதங்களுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி  கடந்த இரு வாரங்களில் சடுதியாக அதிகரித்திருந்தது. இதன்படி, இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 335.68 ரூபாவாகவும், கொள்வனவு விலை 319.84 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.    பவுண்ட் மற்றும் யூரோவின் பெறுமதி எவ்வாறாயினும், … Read more

வரவு செலவுத் திட்டத்தில் தேர்தலுக்கு ஒதுக்கப்பட்ட தொகை போதுமானதா என்பதை தேர்தல் ஆணைக்குழு சிந்திக்க வேண்டும்..

வரவு செலவுத் திட்டத்தில் தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட பணம் போதுமானதா என்பதை தேர்தல் ஆணைக்குழு பரிசீலிக்க வேண்டும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் திரு.பிரசன்ன ரணதுங்க கூகூறினார். இந்த தருணத்தில் தேர்தல் நடத்தப்படுவதற்கு முன்னர் நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்த வேண்டும் என அமைச்சர் சுட்டிக்காட்டினார். கம்பஹா, உடுகம்பல பிரதேசத்தில் இடம்பெற்ற அரசியல் கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை (13) தெரிவித்தார். அமைச்சர் மேலும் கூறியதாவது: மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த தேர்தலும் … Read more

சீனா மற்றும் இலங்கை மக்களுக்கு நன்மை பயக்கும் எதிர்காலம் உருவாக்கப்படும்

சீனா மற்றும் இலங்கை மக்களுக்கு நன்மை பயக்கும் எதிர்காலம் உருவாக்கப்படும்சீன ஜனாதிபதி ஷி ஜின் பிங்கிற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் அனுப்பிவைத்துள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவிப்பு சீன ஜனாதிபதி ஷி ஜின் பிங்கின் மூன்றாவது பதவிக்காலத்தின்போது, சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஒத்துழைப்பு, மேலும் வலுவடைந்து, இரு நாட்டு மக்களுக்கும் நன்மை பயக்கும் எதிர்காலம் உருவாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்துள்ளார். ஷி ஜின்பிங்கின் அனுபவமிக்க தலைமையின் கீழ், சீனா பல சவால்களை வெற்றிகொண்டு, … Read more

அரச ஊழியர்கள் தொடர்பில் மகிழ்ச்சி தரும் செய்தியை வெளியிட்ட அமைச்சர்

 அரசாங்கத்தின்  வருமானம் அதிகரிக்கும் பட்சத்தில் அரச ஊழியர்களுக்கே முதலில் நிவாரணம் வழங்கப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.   இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். நிவாரணம் வழங்க நடவடிக்கை  அரசு ஊழியர்களில் 10 சதவீதம் பேர் மட்டுமே இந்த வரி விதிப்பில் உள்ளனர், மற்ற 90 சதவீத அரசு ஊழியர்களுக்கு இந்த வரி இல்லை. எனவே, அரசின் வருமான ஆதாரம் அதிகரித்தால், அரசுக்கு … Read more

வேட்பாளர்களுக்கான எரிபொருள்:இறக்குமதி செய்வதற்கு 6 மாதங்கள் ஆகும்

எதிர்வரும் ஏப்ரல் மாதம் இடம்பெறவுள்ள எரிபொருள் விலை திருத்தத்தில் மக்களுக்கு நிவாரணத்தை வழங்க எதிர்பார்த்துள்ளதாக மின் சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அமெரிக்க டொலருக்கு சமமாக  ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளதினால் அதன் நன்மையை  அடுத்த விலை திருத்தத்தில் மக்களுக்கு பெற்றுக்கொடுக்கவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். மினுவங்கொடை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வில் இதுதொடர்பாக அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், உள்ளூராட்சி தேர்தல் வேட்பாளர்களுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்குமாறு கோரிக்கைகள் கிடைத்துள்ளதாக  தெரிவித்தார். தற்போது மோட்டார் சைக்கிள் ஒன்றிற்கு வாரத்திற்கு வழங்கப்படும் … Read more

தொழில்சார் சட்டத்தரணியாக 50 வருடங்களை நிறைவு செய்த ஜனாதிபதிக்கு “அபிநந்தன” விருது வழங்கி கௌரவிப்பு

தொழில்சார் சட்டத்துறையில் 50 வருடங்கள் பணியாற்றிய இலங்கை சட்டத்தரணிகள் சங்க உறுப்பினர்களைப் பாராட்டும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்ட “அபிநந்தன விருது விழா” (12) கொழும்பு, சினமன் கிரான்ட் ஹோட்டலில் நடைபெற்றது. 50 வருட தொழில்சார் சட்டப் பணியை நிறைவு செய்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களும் இங்கு கௌரவிக்கப்பட்டதுடன் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய ஜனாதிபதிக்கு “அபிநந்தன விருது” வழங்கினார். கொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் நேற்று (12) ஆரம்பமான “இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தேசிய வருடாந்த … Read more

பாடசாலைப் புத்தகங்களுக்கான இந்திய ஆதரவு  இலங்கையின் சிறந்த எதிர்காலத்துக்கான முதலீடு

இலங்கையின் பல்வேறு பாகங்களிலுமுள்ள பாடசாலைகளில் கல்விகற்கும் மாணவர்களின் பயன்பாட்டுக்காக, இந்திய அரசாங்கத்தின் ஆதரவுடன் அரச அச்சக கூட்டுத்தாபனத்தில் அச்சிடப்பட்ட பாடசாலைப் புத்தகங்களின் விநியோகப்பணிகளை இலங்கையின் கல்வி அமைச்சர் டாக்டர் சுசில் பிரேமஜயந்த மற்றும் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கௌரவ கோபால் பாக்லே ஆகியோர் இணைந்து 2023 மார்ச் 09 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைத்தனர். கல்வி இராஜாங்க அமைச்சர் கௌரவ அ.அரவிந்த குமார் மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் திரு.நிஹால் ரணசிங்கே உள்ளிட்ட அமைச்சின் சிரேஸ்ட … Read more

கிழக்கு ,ஊவா, மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டங்களிலும் மழை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு தேசியவளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப்பிரிவால் வெளியிடப்பட்டது. 2023 மார்ச்14ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2023மார்ச் 14ஆம் திகதி அதிகாலை 5.30 மணிக்கு வெளியிடப்பட்டது. நாட்டின் கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும்என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, வடமேல்மற்றும் தென்மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடியசாத்தியம் … Read more