புலம்பெயர் தொழிலாளர்களின் வெளிநாட்டுப் பணம் தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட தகவல்!

2023 பெப்ரவரியில் இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களின் வெளிநாட்டுப் பணம் 407.4 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். தமது உத்தியோகப்புர்வ டுவிட்டர் பதிவிலே அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.  Sri Lankan migrant workers’ foreign remittances increased to US$ 407.4 million in February 2023 from US$ 204.9 million in February 2022. This is a 98.8% (US$ 202.5 million) increase compared to … Read more

புதிய நியமனம் பெற்ற யாழை சேர்ந்த இளம் வர்த்தகர் விடுத்துள்ள அழைப்பு

முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சின் பிரித்தானியாவுக்கான இலங்கை பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ள இளம் வர்த்தகரான யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கந்தையா கஜன், சர்வதேச முதலீட்டாளர்களுக்கு அழைப்பொன்றை விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.  அதில் இலங்கையின் பொருளாதாரத்தை நெருக்கடியில் இருந்து மீட்பதற்கு சர்வதேச நாடுகளிலுள்ளவர்களின் முதலீடுகள் மிக முக்கியமானது என சுட்டிக்காட்டியுள்ளார்.  இலங்கையின் பொருளாதாரம் அத்துடன் தற்போது ஜனாதிபதி அவர்களின் பொருளாதார மீட்புக்கான திட்டங்களால் இலங்கையின் பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சி பாதையை நோக்கி பயணிக்கின்றது. இவ்வாறான சந்தர்ப்பத்தில் உலக நாடுகளிலுள்ள சர்வதேச முதலீட்டாளர்களை … Read more

காற்றின் தரத்தில் ஏற்பட்ட ஆபத்தான மாற்றம்!

இலங்கையில் இன்று காலை 11 மணி நிலவரப்படி பல பகுதிகளில் காற்றின் தரம் குறைந்துள்ளதாக தெரியவருகிறது. அந்த வகையில் குறித்த நேரத்தில் கொழும்பில் காற்றின் தரக் குறியீட்டு மதிப்பு 152ஆக பதிவாகியுள்ளது. கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தால் நிறுவப்பட்ட காற்றின் தர கண்காணிப்பு (AQM) நிறுவனம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. காற்றின் தரம் மிதமான மட்டத்தில் காணப்பட்ட மாவட்டங்கள் எவ்வாறாயினும் நுவரெலியா, நீர்கொழும்பு, தம்புள்ளை, அம்பலாந்தோட்டை, இரத்தினபுரி மற்றும் கம்பஹா பகுதிகளில் காற்றின் தரம் மிதமான மட்டத்தில் … Read more

அதிவேக வளர்ச்சியை பதிவு செய்துள்ள ரூபாவின் பெறுமதி! மிக வேகமாக வீழ்ச்சியடையும் நிலை

இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்களில், ரூபா மதிப்பு மிக வேகமாக சரிய வாய்ப்புள்ளது என்று பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார்.  ரூபாவின்  பெறுமதி இந்த அளவிற்கு திடீர் வளர்ச்சியடைவதற்கு, டொலரின் தேவை முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டு விநியோகம் விடுவிக்கப்பட்டமையே இதற்கு காரணமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.  இவ்வாறான நிலையில், எந்தவொரு நாட்டின் நாணயத்தின் மதிப்பும் வலுவடையும், ஆனால், அதை நீண்டகாலமாக பராமரிக்க முடியாது.  மிக வேகமாக சரியும் எப்படியிருப்பினும், … Read more

தங்கத்தின் விலையில் நாளுக்கு நாள் ஏற்படும் மாற்றம்! இன்று பதிவாகியுள்ள நிலவரம்

இலங்கையில் தங்கப்பவுணொன்றின் விலையானது ஒரே வாரத்தில் சுமார் 39,000 ரூபாவினால் குறைந்திருந்த நிலையில் நேற்றைய தினம் திடீர் அதிகரிப்பு பதிவாகியிருந்தது. அதன்படி நேற்றுமுன் தினத்தை விட, நேற்றைய தினம் 24 கரட் தங்க பவுண் ஒன்றின் விலை 10,000 ரூபாவால் அதிகரித்திருந்ததாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தின் பொருளாளர் இராமன் பாலசுப்ரமணியம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இன்றையதினம் கொழும்பு செட்டியார்தெரு தகவல்களின் படி மீண்டும் தங்கத்தின் விலையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது. தங்கத்தின் இன்றைய நிலவரம் இன்றைய … Read more

இரண்டு மூன்று மாதங்களில் ரூபா மதிப்பு மிக வேகமாக வீழ்ச்சியடைய வாய்ப்பு! வெளியாகியுள்ள தகவல்

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வலுவடைவதற்குப் பல காரணிகள் காரணமாக அமைவதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவின் பேராசிரியர் பிரியங்க துனுசிங்க தெரிவித்துள்ளார். பொருளாதாரச் செயற்பாட்டின் சில செயற்பாடுகளுடன் அதுவரை டொலர்களை வைத்திருந்த தரப்பினர் அந்த டொலர்களை சந்தையில் விடுவித்தமையும் இந்த நிலைமைக்கு மற்றொரு காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஃபிட்ச் நிறுவன மதிப்பீடுகள் அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாவின் பெறுமதி பாரிய வீழ்ச்சியை எதிர்கொள்ளும் என ஃபிட்ச் நிறுவன மதிப்பீடுகள் கணித்துள்ளது. சமகாலத்தில் அமெரிக்க டொலருக்கு … Read more

இலங்கையில் நீண்ட வரிசையில் டொலர்களுடன் காத்திருக்கும் மக்கள்

சமகாலத்தில் அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளமையினால் டொலரை பதுக்கி வைத்திருந்தவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தங்கள் கையில் இருந்த டொலரை ரூபாய்க்கு மாற்றுவதற்காக, பண பரிவர்த்தன நிலையங்களுக்கு அருகில் நீண்ட வரிசையில் மக்கள் நிற்பதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த மார்ச் முதலாம் திகதி அமெரிக்க டொலர் ஒன்றின் பெறுமதி 360 ரூபாவாகவே இருந்தது. ஆனால் கடந்த 3 நாட்களாக அமெரிக்க டொலரின் விலை வேகமாக சரிந்தது. டொலரின் பெறுமதி மேலும் குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், … Read more

கீரிமலை சிவன் கோவில் இடித்து அழிக்கப்பட்டு ஜனாதிபதி மாளிகை கட்டப்படவில்லை : வடமாகாண ஆளுநர்

யாழ்ப்பாணம் – கீரிமலை சிவன் ஆலயம் முழுமையாக இடித்து, அழிக்கப்பட்டு, அந்த இடத்தில் ஜனாதிபதி மாளிகை அமைக்கப்பட்டுள்ளதாக தகவலொன்று வெளியாகியது.  இவ்வாறு சில ஊடகங்களில் வெளியிடப்பட்ட செய்தியை வடமாகாண ஆளுநர், வடபகுதிக்குப் பொறுப்பான நகர அபிவிருத்தி அதிகார சபை பணிப்பாளர், தெல்லிப்பழை பிரதேச செயலாளர் மற்றும் படைத்தரப்பு என்பன மறுத்துள்ளன. உண்மைக்கு புறம்பான செய்தி தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனை மேற்கொண்டதாக தவறான புரிதலை ஏற்படுத்தும் வகையில் இந்த செய்தி ஊடகங்களில் வெளியாகியுள்ளன. கோவில் உடைக்கப்பட்டு … Read more

கண்ணீர்ப்புகை குண்டுகள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

இலங்கை பொலிஸ் சேவைக்கு கண்ணீர்ப்புகை குண்டுகளைக் கொள்வனவு செய்தபோது, அவற்றின் உள்ளடக்கம் தொடர்பில் இரசாயன ஆய்வுக்கூட பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.  கண்ணீர்ப்புகை குண்டுகள் தொடர்பில் சமூகம் மற்றும் அமைதிக்கான மையத்தின் குழுவொன்று மேற்கொண்ட ஆய்வில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. ஆய்வின்படி, 2022 ஆம் ஆண்டில் ஆர்ப்பாட்டங்களைக் கலைக்க காலாவதியான கண்ணீர்ப்புகைக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளதுடன், அவற்றில் 2000 ஆம் ஆண்டு முதல் தயாரிக்கப்பட்ட கண்ணீர்ப்புகை குண்டுகளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2012 முதல் 2019 வரையான காலப்பகுதியில் … Read more

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான விசேட வர்த்தமானி வெளியீடு!

தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவுறுத்தல்களின்படி, உள்ளூராட்சி மன்றத் தேர்தலை 25.04.2023 அன்று நடத்துவதற்கான திகதியை நிர்ணயித்து ஒவ்வொரு தேர்தல் நடத்தும் அதிகாரிகளாலும் விசேட வர்த்தமானி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. 2322/28 முதல் 2322/52 வரையிலான சிறப்பு வர்த்தமானி மூலம் ஒவ்வொரு தேர்தல் நடத்தும் அதிகாரியும் மேற்படி தேர்தலை நடத்துவதற்கான திகதியை நிர்ணயித்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Source link