சுதந்திர ஊடகத்திற்காக நிபந்தனையின்றி முன் நிற்பேன்

சுதந்திர ஊடகத்திற்காக நிபந்தனையின்றி முன் நிற்பேன் என எதிர்க்கட்சித் தலைவர் திரு.சஜித் பிரேமதாச தெரிவித்தார். 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டக் குழு நிலை விவாதத்தில் இன்று (28) வெகுஜன ஊடக அமைச்சிற்கான நிதி ஒதுக்கீட்டில் உரையாற்றுகையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார். ஒரு நாட்டின் ஜனநாயகத்தில் ஊடகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன , அந்த சுதந்திர ஊடகத்தைப் பாதுகாப்பதற்கு ஒவ்வொரு அரசாங்கமும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் மேலும் கூறினார். பாராளுமன்ற உறுப்பினர் கயந்த … Read more

பசுமை சுற்றுச்சூழலுக்கு ஏற்ற பொது போக்குவரத்து கொள்கைக்காக அரசு செயல்பட்டு வருகிறது

பசுமை சுற்றுச்சூழலுக்கு ஏற்ற பொது போக்குவரத்து கொள்கைக்காக அரசு செயல்பட்டு வருவதாக வெகு ஜன ஊடக அமைச்சரும் போக்குவரத்து ,நெடுஞ்சாலைகள் அமைச்சருமான கலாநிதி பந்துல குணவர்தன இன்று (28) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இதற்கமைவாக பசுமை சுற்றுச்சூழலுக்கு பொருத்தமான மின்சார ரெயில் ,மின்சார வாகனம் ஆகியவற்றை கூடுதலாக போக்குவரத்து கட்டமைப்பில் ஒன்றிணைக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார். போக்குவரத்து துறையில் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ள ,திட்டங்களை முன்னெடுப்பதற்கு  எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்த அமைச்சர் இந்த திட்டங்களை விரைவாக பூர்த்தி செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். … Read more

ஊடக தொழில் தரத்தை மேம்படுத்துவதற்காக ,அரசாங்கம் செயல்படுகிறது

ஏந்தாவொரு ஊடகத்தையும் அடக்குமுறைக்கு உட்படுத்துவதற்கு அரசாங்கம் தயார் இல்லை என்று வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன இன்று (28) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 2023 வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதம் இன்றும் 5வது நாளாக தொடர்ந்தும் நடைபெற்றது. வரவு செலவுத் திட்டத்தில் வெகுஜன ஊடகத்திற்கான நிதி ஒதுக்Pட்டு குழு நிலை விவாதத்தில் அமைச்சர் இன்று உரையாற்றினார். சர்வதேச ரீதியில் நாட்டின் நற்பெயருக்கு கடந்த காலத்தில் பாரிய பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இதனை சரிசெய்யும் பொறுப்பு ஊடகங்களுக்கு … Read more

பல்கலைக்கழக விடுதிகளில் நீண்ட காலம் தங்கியிருக்கும் மாணவர்கள் குறித்து விரிவான அறிக்கை பெற ஏற்பாடு

பல்கலைக்கழக விடுதிகளில் இட நெருக்கடியை குறைப்பதிலும், புதிய மாணவர்களுக்கான இட வசதி தொடர்பிலும் உயர்கல்வி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.  அதற்காக 1978ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க பல்கலைக்கழக சட்டம் அமுல்படுத்தப்படும் என இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். நீண்டகாலமாக வதிவிடத்தில் தங்கியுள்ள பல மாணவர்கள் பட்டப்படிப்பை பூர்த்தி செய்யாமல் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது தனது கவனத்திற்கு வந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இவ்வளவு காலம் தங்கியிருக்கும் மாணவர்கள் குறித்து விரிவான அறிக்கை கோரப்பட்டுள்ளது. இதனிடையே, பல்கலைக்கழக … Read more

இலங்கையில் சூதாட்ட விடுதிகளுக்கான அனுமதி தொடர்பில் சபையில் முன்வைக்கப்பட்ட விடயம்

ஒழுங்குமுறை ஆணையம் உடனடியாக ஸ்தாபிக்கப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். ஒழுங்குமுறை ஆணையம் அவர் இதன்போது மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் சூதாட்ட விடுதிகளுக்கு அனுமதி வழங்கப்படுமாயின் அதற்குரிய ஒழுங்குமுறை ஆணையம் உடனடியாக ஸ்தாபிக்கப்பட வேண்டும். கசினோ வணிக ஒழுங்குமுறைச் சட்டத்தின் விதிகளுக்கு நிதிக் குழு ஒப்புதல் அளிக்கவில்லை. சூதாட்ட விடுதிகளுக்கு உரிமம் வழங்கவும், முறைப்படுத்தவும் முதல் முறையாக இந்த … Read more

ஐ.நா. தலைமையகத்தில் மகாத்மா காந்தி சிலை

ஐக்கிய நாடுகள் (ஐ.நா) தலைமையகத்தில் மகாத்மா காந்தியின் சிலை அடுத்த மாதம் திறக்கப்படவுள்ளது. ஐ.நா. பாதுகாப்பு சபையின் தலைமை பொறுப்பை இந்தியா அடுத்த மாதம் (டிசம்பர்) பொறுப்பேற்கிறது. இதனால் தேசத்தந்தை மகாத்மா காந்தியின் மார்பளவு சிலை ஒன்றை ஐ.நா.வுக்கு இந்தியா பரிசளித்துள்ளது. இந்த சிலை ஐ.நா. தலைமையகத்தின் வடபகுதியில் உள்ள புல்வெளியில் நிறுவப்படுகிறது. அடுத்த மாதம் 14 ஆம் திகதி இந்த சிலை திறக்கப்படவுள்ளது. இந்த சிலை திறப்பு விழாவில் ஐ.நா. பொதுச்செயலாளர் António Guterres  மற்றும் பாதுகாப்பு … Read more

அரசாங்க பணத்தை செலவிடுவதை நிறுத்துமாறு அறிவுறுத்தல்

அரச நிறுவனங்களின் திறப்பு விழா, பதவியேற்பு மற்றும் ஓய்வு தொடர்பான நிகழ்வுகள், சிநேகபூர்வ சந்திப்புகள் மற்றும் மாநாடுகள் உட்பட அனைத்து வகையான நிகழ்வுகளுக்கும் ,அரசாங்க பணத்தை செலவிடுவதை நிறுத்துமாறு நிதியமைச்சு, நிறுவனங்களின் தலைவர்களுக்கு அறிவித்துள்ளது. இது தொடர்பில் அமைச்சின் செயலாளர்கள், மாகாண சபை பிரதம செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள், அரச நிறுவன தலைவர்கள் மற்றும் அரச வங்கி தலைவர்களுக்கு சுற்றறிக்கை ,நிதி அமைச்சின் செயலாளரினால் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அரச நிறுவனங்களின் மூத்த அதிகாரிகள் சிலர் ஐந்து … Read more

இலங்கைக்கைக்கு மற்றுமொரு பேரிடி! எயார்லைன்ஸிலிருந்து வெளியேறும் விமானிகள்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸில் பணிபுரியும் சுமார் 40 விமானிகள் விரைவில் விமான சேவையை விட்டு வெளியேற தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே அங்கு பணிபுரிந்த 30 விமானிகள் வேறு விமான நிறுவனங்களில் இணைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. நிறுவனத்தின் முகாமைத்துவ பிரிவின் தலைவர் புத்திக மன்னகே என்ற பெண்ணின் செயற்பாடு காரணமாகவே பெரும்பாலான விமானிகள் விமான சேவையை விட்டு வெளியேறியுள்ளனர் என குறிப்பிடப்படுகின்றது. விமானிகளுக்கு அவரிடமிருந்து பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. அதற்கமைய, 282 ஆக இருக்கும் ஸ்ரீலங்கன் … Read more

பல இடங்களில் , இடியுடன் கூடிய மழை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு ,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்பு பிரிவால் வெளியிடப்பட்டது. 2022 நவம்பர்28ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2022 நவம்பர் 28ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது ஊவா, சப்ரகமுவ, மத்திய மற்றும் தென்மாகாணங்களில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது. மேல்,வடமேல், வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்காணப்படுகின்றது. … Read more