கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல்நிலை

இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல்நிலை தேசியவளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப்பிரிவால் வெளியிடப்பட்டது. அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு 2023 மார்ச் 08ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. மழை நிலைமை:ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில்  மற்றும் மட்டக்களப்பு ஊடாக திருகோணமலைவரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.காற்று :நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்குதிசையிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 25-35 கிலோ மீற்றர் … Read more

பாதிக்கப்பட்டவர்களுக்கு விசேட சலுகை! இலங்கை மத்திய வங்கியின் புதிய அறிவிப்பு

இலங்கையில் பொருளாதார நெருக்கடிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்காக விசேட சலுகை வழிமுறைகள் தொடர்பில் மத்திய வங்கி அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி தற்போதைய பேரண்டப் பொருளாதார நிலைமைகளால் பாதிக்கப்பட்ட சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளுக்கும் தனிப்பட்டவர்களுக்குமான சலுகை வழிமுறைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. திட்டத்தில் உள்ளடங்கியுள்ள விடயங்கள் பாதிக்கப்பட்ட கடன் பெறுநர்களுக்காக நீடிக்கப்பட்ட மீள்கொடுப்பனவுக் காலங்கள், சலுகை வட்டி வீதங்கள், தொழில்படு மூலதனக் கடன்கள், படுகடனை காலந்தாழ்த்திச் செலுத்தும் வசதி மற்றும் கொடுகடன் வசதிகளை மறுசீரமைத்தல், மீள அட்டவணைப்படுத்தல் போன்றவற்றை இந்த திட்டங்கள் … Read more

மத்திய வங்கிக்கு நிர்வாக , நிதிசார் தன்னாட்சியை வழங்குவதற்கான 'இலங்கை மத்திய வங்கி' சட்டமூலம்

மத்திய வங்கிக்கு நிர்வாக மற்றும் நிதிசார் தன்னாட்சியை வழங்குவதற்கான ‘இலங்கை மத்திய வங்கி’ சட்டமூலம் பாராளுமன்றத்தில் இலங்கை மத்திய வங்கி சட்டமூலம் முதலாவது மதிப்பீட்டுக்காக சபை முதல்வர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அவர்களினால் நேற்று (மார்ச். 07) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.  நிர்வாக மற்றும் நிதிசார் தன்னாட்சியை வழங்குவதற்காக இலங்கை மத்திய வங்கியை தாபிப்பதற்காகவும், மத்திய வங்கியில் தற்பொழுது காணப்படும் பணச்சட்டத்தை நீக்குவதற்காகவும் ஏற்பாடு செய்வதற்கும், அத்துடன் அவற்றோடு தொடர்புபட்ட அல்லது அவற்றின் இடைநேர்விளைவான கருமங்களுக்கு ஏற்பாடு செய்வதற்குமானதொரு … Read more

இன்று, சர்வதேச மகளிர் தினம்

சர்வதேச மகளிர் தினம் இன்றாகும். அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் 1857ஆம் ஆண்டு இடம்பெற்ற சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு மகளிர் தினம் பிரகடனப்படுத்தப்பட்டது. நியூயோர்க் நகரில்  இயங்கிய ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றிய பெண் ஊழியர்கள் அதன் நிர்வாகத்திற்கு எதிராக மேற்கொண்ட ஆர்ப்பாட்டம் இந்தத் தினத்தைப் பிரகடனம் செய்ய வழிவகுத்தது. 1908இல் 15,000 பெண்கள் நியூயார்க் நகரத்தில் குறிப்பிட்ட வேலை நேரம், சிறந்த ஊதியம் மற்றும் வாக்களிக்கும் உரிமை ஆகியவற்றைக் கோரி ஊர்வலங்கள் இடம்பெற்றன. இதனைத்தொடர்ந்து ஒருவருடத்திற்குப் பின்னர், அமெரிக்காவின் சோசலிஸ்ட் … Read more

இலங்கை வந்த வெளிநாட்டு பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி

பதுளை மாவட்டத்தின் உலகப் புகழ்பெற்ற சுற்றுலா நகரமான எல்ல நகரில் பொதுக் மலசலகூடம், குடிநீர்க் குழாய் அமைப்பு எதுவும் இல்லை என தெரியவந்துள்ளது. இந்த நிலைமையினால் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மாத்திரமன்றி உள்ளூர் சுற்றுலாப் பயணிகள், முச்சக்கர வண்டி சாரதிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், சிறு வியாபாரிகள், கடைக்காரர்கள் எனப் பலரும் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர் என செய்தி வெளியாகியுள்ளது. முறையான கழிவுநீர் அமைப்பு இல்லாத காரணத்தால், வடிகாலில் வியாபாரிகளை கழிவுகளை விடுவிப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக சுகாதார … Read more

மகளிர் தினச் செய்தி

நாடு பொருளாதார சவால்களை எதிர்கொண்டுள்ள போதிலும், பெண்களின் பெருமை, மரியாதை மற்றும் வலிமையைப் பிரதிபலிக்கும் “அவள் நாட்டின் பெருமை” என்ற தொனிப்பொருளில் இம்முறை மகளிர் தினத்தைக் கொண்டாடுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இலங்கை சனத்தொகையில் அரைவாசிக்கும் அதிகமான பெண்களின் பிரதிநிதித்துவம், உலகின் வளர்ச்சியடைந்த நாடுகளின் சமூக மேம்பாட்டுக் குறியீட்டிற்குள் வந்திருப்பது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும். எழுத்தறிவில் முன்னணியில் திகழும் இலங்கைப் பெண்கள், இன்று நாட்டின் பொருளாதாரத்திற்கு தொழில்சார் ரீதியாக வழங்கும் பங்களிப்பும், சக்தியும் விசேடமானது. இலங்கை பெண்களின் இந்த பல்துறை … Read more

மீண்டும் சிக்கலில் இலங்கை – இந்தியாவிடம் விடுத்துள்ள கோரிக்கை

பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள இலங்கைக்கு பல கட்டாங்களாக இந்திய அரசாங்கம் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியிருந்தது. இந்த கடன் வசதியை இந்த ஆண்டு இறுதி வரை நீட்டிக்க இந்தியாவுடன் இலங்கை அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மருந்துகள் மற்றும் உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு வழங்கப்பட்ட கடனின் கால எல்லை எதிர்வரும் 17 ஆம் திகதியுடன் முடிவடைகிறது. குறித்த இந்திய கடன் வசதியின் கீழ் மூன்றில் இரண்டு பங்கு மருந்து மற்றும் … Read more

செயற்கை கோளை சுமந்துச்சென்ற ராக்கெட் விண்ணிலேயே அழிப்பு…!

செயற்கை கோளை சுமந்துச் சென்ற ராக்கெட்டில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக அந்த ராக்கெட்டை ஜப்பான் விண்ணிலேயே அழித்துள்ளது. H3 ராக்கெட் மூலமாக பேரிடர் மேலாண்மை நில கண்காணிப்பு செயற்கைக்கோளான ALOS-3 தனேகாஷிமா விண்வெளி மையத்திலிருந்து ஏவப்பட்டது. இந்த ராக்கெட்டின் இரண்டாம் நிலை இயந்திரத்தில் எரிபொருள் எரியாததால் அதனை விண்ணிலேயே அழித்து விட்டதாக ஜப்பான் தெரிவித்துள்ளது. குறித்த செயற்கைகோளில், வட கொரியாவின் பாலிஸ்டிக் ஏவுகணைகளை கண்டறியும் வகையில் வடிவமைக்கப்பட்ட அகச்சிவப்பு சென்சார் பொருத்தப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Source link

இலங்கையில் தங்கத்தின் விலையில் பாரிய மாற்றம்

அமெரிக்க டொலரின் விலை வீழ்ச்சி காரணமாக தங்கத்தின் விலை குறைவடைந்து வருகின்றது.  இந்த நிலையில் இன்றையதினம் 22 கரட் தங்கப் பவுண் ஒன்று ரூ.153, 500 ஆகவும், 24 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை ரூ.166,000 ஆகவும் வீழ்ச்சி அடைந்து காணப்படுகின்றது.    கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் ஒரு பவுண் தங்கத்தின் விலை 18,000 ரூபாவினால் குறைந்துள்ளதாக நகைக்கடை உரிமையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். you my like this video Source link

சுமந்திரன் மற்றும் சாணக்கியன் தொடர்பான கருத்தினால் நாடாளுமன்றில் வெடித்தது சர்ச்சை (Video)

சுமந்திரனின் செருப்பை சாணக்கியன் நக்கினார் என நாடாளுமன்றத்தில் திலீபன் எம்.பி பகிரங்கமாக தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(07.03.2023) உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், சாணக்கியன் மூன்று மொழிகளிலும் நன்றாக பேசுகிறார். ஆனால் அவர் கலப்படமானவர். அப்படி இருந்துகொண்டு மற்றவர்களை பற்றி பேசுவது நகைப்பாக உள்ளது என பலவாறு சாணக்கியனை பேசினார். இதற்கு சாணக்கியன், வன்னி மாவட்டத்தில் ஏதோ தவறுதலாக நாடாளுமன்றம் வந்தவர்கள். அந்த நாட்களில் இருந்து ராஜபக்சக்களின் செருப்பை நக்கிக்கொண்டு இருப்பவர்கள் எல்லாம் சொல்வதை பற்றி … Read more