அதிஷ்டம் கிட்டவுள்ள மூன்று ராசிக்காரர்கள்: கடினமான காலத்தை எதிர்கொள்ளவுள்ள கும்ப ராசியினர் – நாளைய ராசிபலன்

நாளொன்றுக்கான ராசி பலனை நாம் முன்னரே அறிந்து கொண்டு அதற்கேற்றாற் போல் முன்னெச்சரிக்கையாக சில செயல்களை திட்டமிட்டு நடந்துக்கொண்டால் நினைத்த காரியங்கள் வெற்றி பெறும். கிரக நிலைக்கு ஏற்ப ராசிபலன் கணிக்கப்படுவதால், நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை சரியாக முடிவு செய்தால் வெற்றி நிச்சயமாகும். இந்த நிலையில் இன்றைய தினம் எந்த ராசிக்காரர்களுக்கு அதிஷ்டம் கிட்டவுள்ள என்பதை பார்க்கலாம். உங்களது இன்றைய ராசிப்பலனை இன்றே தெரிந்து கொள்ள, எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN … Read more

தேர்தலில் போட்டியிடும் அரச ஊழியர்கள் தொடர்பில் நாடாளுமன்றில் இராஜாங்க அமைச்சர் வெளியிட்ட தகவல்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஒத்திவைக்கப்படும் பட்சத்தில் அதில் போட்டியிடும் அரச ஊழியர்களுக்கு அநீதி இழைக்கப்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்கும்புர தெரிவித்துள்ளார். இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.  “உள்ளூராட்சி சபைத் தேர்தலை சரியான நேரத்தில் நடத்த முடியாவிட்டால், தேர்தலில் போட்டியிடும் எந்தவொரு அரசாங்க ஊழியர்களுக்கும் அசௌகரியம் ஏற்படாத வகையில், நிறுவனங்களின் சட்டத்தில் தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் எனவும் நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார். தேர்தலில் போட்டியிடும் அரச ஊழியர்கள் எதிர்நோக்கும் … Read more

சிவில் ,அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் கீழான இலங்கையின் 6வது காலாந்தர மீளாய்வு ஜெனீவாவில்

சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் கீழான இலங்கையின் 6வது காலாந்தர மீளாய்வு 2023 மார்ச் 8 மற்றும் 9ஆந் திகதிகளில் ஜெனீவாவில் நடைபெறவுள்ளது. சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையை 1980 ஜூன் 11ஆந் திகதி இலங்கை ஏற்றுக்கொண்டது. உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவதோடு, உடன்படிக்கையின் அனைத்து அரச தரப்பினரும் குழுவிற்கு அவ்வப்போது அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்கும், அவ்வப்போது மீளாய்வுகளில் பங்கேற்பதற்குமானதொரு தன்னார்வக் கடமையை மேற்கொண்டுள்ளன. அதன்படி, 1983, 1990, 1994, 2003 மற்றும் 2013ஆம் … Read more

தேர்தல்கள் ஆணைக்குழுவின் கூட்டத்தில் கலந்துகொள்ளமுடியாதென அறிவித்த திறைசேரி செயலாளர்!

இன்று இடம்பெறும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் கூட்டத்தில் கலந்துகொள்ள முடியாது என திறைசேரியின் செயலாளர் மகிந்த சிறிவர்தன ஆணைக்குழுவுக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளார். உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நடத்தப்படும் தினம், தேர்தலுக்கான நிதி மற்றும் வாக்குச்சீட்டு அச்சிடுதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு இன்றைய தினம் கூடி ஆராய்கிறது. குறித்த கலந்துரையாடலில் பங்கேற்குமாறு திறைசேரியின் செயலாளர், அரச அச்சகர் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. தேர்தல் ஆணைக்குழு அடுத்த மாதம் இரண்டாம் பாதியில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். … Read more

குறைந்த வருமானம் பெறுவோர் கலைஞர்களுக்கு வீடுகள் நிர்மாணிக்க சீனாவுடன் ஒப்பந்தம்….

குறைந்த வருமானம் பெறுவோர் மற்றும் கலைஞர்களுக்கு 1,996 வீடுகளை நிர்மாணிக்க சீனாவுடனான ஒப்பந்தம் அடுத்த சில வாரங்களில் செய்து முடிக்கப்படும் என நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இது தொடர்பான அடிப்படை திட்டங்கள் ஏற்கனவே வரையப்பட்டுக் கொண்டிருக்கிறது என்று அந்த  அதிகாரசபை தெரிவித்துள்ளது. இதற்கான ஆரம்ப ஒப்பந்தம் அண்மையில் நகர அபிவிருத்தி அதிகார சபையில் கைச்சாத்திடப்பட்டது. சீன அரசாங்கத்தின் சார்பாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் திரு. நிமேஷ் ஹேரத் மற்றும் சீன அரசாங்கத்தின் மத்திய … Read more

பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழையும் குடியேற்றவாசிகளை, திருப்பி அனுப்ப திட்டம்

பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழையும் குடியேற்றவாசிகளை திருப்பி அனுப்ப திட்டமிடப்பட்டிருப்பதாக அந்நாட்டு   ஊடகங்கள் தெரிவித்துள்ளனன. ஆங்கில கால்வாய் ஊடாக சட்டவிரோதமான முறையில் பிரித்தானியாவுக்குள் நுழைந்து அடைக்கலம் கோருவதை தடுக்கும் புதிய சட்டம் அடுத்த வாரம் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்படி சட்டவிரோதமாக பிரித்தானியாவுக்குள் குடியேறும் மக்களை பாதுகாப்பான ஏனைய நாடுகளுக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அவர்கள் மீண்டும் பிரித்தானியாவுக்குள் நுழைய முடியாத வகையில் நிரந்தர தடை விதிக்கப்படும் என்றும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை – மூவர் தற்கொலை – பலர் ஆபத்தில்…..!

இணையம் ஊடாக கடன் வழங்கும் மோசடிக்கு இரையாக வேண்டாம் என சட்ட ஆலோசகர் சந்தருவன் சேனாரத்ன பொதுமக்களை கேட்டுக்கொள்கிறார். இந்த மோசடி மூலம் நாளாந்தம் 05 கோடி ரூபா வங்கிகள் ஊடாக புழக்கத்தில் விடப்படுவதாக அறியமுடிகின்றது எனவும் அவர் கூறுகிறார். இந்நிறுவனத்தின் மூலம் கடன் பெற்றவர்களில் மூவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும், மேலும் இரண்டு பிள்ளைகளின் தாய் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளதாகவும் அவர் கூறினார். மேலும் இவ்வாறான நிறுவனத்தில் கடன் பெறும் போது முதலில் 10,000 … Read more

நான் எனது கடமையை நிறைவேற்றிவிட்டேன்: IMFதனது கடமையைச் செய்யும் வரை காத்திருப்போம்.

நான் எனது கடமையை நிறைவேற்றிவிட்டேன்: IMFதனது கடமையைச் செய்யும் வரை காத்திருப்போம். IMF முன்மொழிவு கிடைத்த பின்னர், அது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்! -அதை அங்கீகரியுங்கள் அல்லது மாற்று வழியை முன்வையுங்கள்.அரசாங்கத்தின் திட்டம் தோல்வியுற்றால், 2022 பெப்ரவரி – மார்ச் மாதங்களில் இருந்த சூழ்நிலையை விட மிகவும் ஆபத்தான இடத்திற்கு நாடு தள்ளப்படும். சீனாவின் எக்ஸிம் வங்கியிடமிருந்து நிதி உறுதி கடிதம் நேற்றிரவு கிடைத்ததையடுத்து, தானும் மத்திய வங்கி ஆளுநரும் கையெழுத்திட்ட இணக்கப்பாட்டுக் கடிதம் சர்வதேச நாணய நிதியத்திற்கு … Read more

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதானி கிரிஸ்டலினா ஜோஜிவாவுக்கும் ஜனாதிபதிக்கும் இடையே தீர்மானமிக்க கலந்துரையாடல்

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கும் இடையில் நேற்று (02) இரவு, Zoom தொழிநுட்பத்தின் ஊடாக விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. இலங்கை எதிர்பார்க்கும் சர்வதேச நாணய நிதியத்தின் நிதி வசதிகள் மற்றும் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது. தற்போது, இலங்கையின் கடன் மறுசீரமைப்பு மற்றும் நிதி வசதி தொடர்பில், அனைத்து தரப்பினரினாலும் சாதகமான மற்றும் நம்பிக்கையான பின்னணி உருவாக்கப்பட்டு வருகின்றது. அண்மையில் சீனப் பிரதமருடன் … Read more

இலங்கை வந்த ரஷ்ய பிரஜைக்கு நேர்ந்த கதி!

ஹுங்கம பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கஹமொதர, மாதெல்ல துறைமுக பிரதேசத்தில் வெளிநாட்டு பிரஜை ஒருவர் கடற்பரப்பில் நீராடச் சென்றநிலையில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று (06) இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. ஹுங்கம கடற்பரப்பில் இரு வெளிநாட்டு பிரஜைகள் மது அருந்திவிட்டு கடலில் நீராடிக் கொண்டிருந்த போது அதில் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார். ரஷ்ய பிரஜை ஒருவர் பலி இந்நிலையில் நீண்ட தேடுதலின் பின்னர் பிரதேசவாசிகள் மூலம் குறித்த நபர் உயிரிழந்த … Read more