அமெரிக்க டொலரின் மதிப்பு மேலும் வீழ்ச்சி – இன்றைய (07) வெளிநாட்டு நாணய மாற்று விகிதம்

அமெரிக்க டொலரின் மதிப்பு ரூபாய்க்கு எதிராக மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.இன்றைய (07) வெளிநாட்டு நாணய மாற்று விகிதம் இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின்படி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 318.30 ரூபாவாகவும் அதன் விற்பனை விலை 335.75 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. இலங்கை மத்திய வங்கியினால் இன்று  (03.03.2023) வெளியிடப்பட்ட  நாணய மாற்று விகிதங்கள் வருமாறு:

சுற்றுலா ,வர்த்தகத் துறைகளில் இந்திய ரூபாவின் பயன்பாடு இலங்கையின் பொருளாதார மீட்சிக்கும் வளர்ச்சிக்கும் உதவுகின்றது

இந்தியா இலங்கை இடையிலான பொருளாதார பரிவர்த்தனைகளுக்காக இந்திய ரூபாவினைப் பயன்படுத்துவது குறித்த கலந்துரையாடலொன்று 2023 மார்ச் 02ஆம் திகதி இந்திய உயர் ஸ்தானிகராலயத்தால் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. இலங்கை வங்கி, ஸ்டேட் பாங்க் ஒப் இந்தியா, மற்றும் இந்தியன் வங்கி ஆகியவற்றின் பிரதிநிதிகள் தமது அனுபவங்களை இங்கு பகிர்ந்துகொண்டதுடன் இலங்கை மத்திய வங்கி மற்றும் இந்திய ரிசேர்வ் வங்கி ஆகியவற்றால் 2022 இல் வழங்கப்பட்ட நடைமுறைப்படுத்தல் கட்டமைப்பின் அடிப்படையில் Vostro/Nostro கணக்குகள் ஊடாக இந்திய ரூபா அடிப்படையிலான வர்த்தக பரிவர்த்தனைகளை … Read more

விமான கட்டணங்களில் திருத்தம்! எதிர்வரும் 16ஆம் திகதி முதல் நடைமுறை

விமானப் போக்குவரத்து சேவைக் கட்டணத்தை அதிகரிக்க துறைமுகங்கள், கடற்படை மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த புதிய கட்டணங்கள் எதிர்வரும் 16ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் திருத்தப்பட்டுள்ளன. இருபது ஆண்டுகளுக்குப் பின்னர் விமானக் கட்டண திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வருடாந்த வருமானத்தை அதிகரித்தல் இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையின் வான் பரப்பை பயன்படுத்தும் வெளிநாட்டு விமானங்கள் மூலம் வருடாந்த வருமானத்தை ஒரு கோடியே இருபது இலட்சம் … Read more

நலன்புரி கொடுப்பனவுகளுக்காக ,சமர்ப்பிக்கப்பட்டுள்ள விண்ணப்பங்கள்………..

நலன்புரி கொடுப்பனவுகளுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள விண்ணப்பங்கள் ஆராயப்பட்டுவருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். நலன்புரி உதவிகளை பெறுவதற்காக போலியான தகவல்களை வழங்குபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் கூறினார். அவ்வாறான நபர்கள் பற்றிய தகவல்கள் சேகரிக்கப்படுகிறது. நலன்புரி கொடுப்பனவுகளை கோரி 37 இலட்சம் விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. குறித்த விண்ணப்பங்கள் தொடர்பில் தொடர்ந்தும் ஆராய்வதாக தெரிவித்த இராஜாங்க அமைச்சர் ,நலன்புரி கொடுப்பனவை விரைவில் மக்களுக்கு வழங்குவது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும். விண்ணப்பதாரிகளால் குறிப்பிடப்பட்டிருக்கும் … Read more

பாராளுமன்றத் தேர்தல் மூலம் மாத்திரமே அரசாங்கத்தை மாற்ற முடியும் – வீதிகள் அதற்கு மாற்று வழியல்ல

பாராளுமன்றத் தேர்தல் மூலம் மாத்திரமே அரசாங்கத்தை மாற்ற முடியும் – வீதிகள் அதற்கு மாற்று வழியல்லநாட்டின் பொருளாதாரத்திற்கு விரைவில் சாதகமான முடிவு- திருகோணமலையில் ஜனாதிபதி வலியுறுத்தல். மக்களால் தெரிவு செய்யப்படும் பாராளுமன்றத் தேர்தல் மூலம் மாத்திரமே அரசாங்கத்தை மாற்ற முடியும் என்றும் வீதிகள் அதற்கு மாற்றுவழியல்ல என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் வலியுறுத்தியுள்ளார். நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் விரைவில் சாதகமான முடிவுகள் கிடைக்கவுள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி. பொருளாதார வீழ்ச்சியின் ஊடாகவும் நாடுகள் அராஜக நிலைக்கு மாறும் … Read more

இலங்கையிலிருந்து இரவோடு இரவாக அனுப்பப்பட்ட கடிதம்! உயரும் ரூபாவின் பெறுமதி – ரணில் வெளியிட்ட அறிவிப்பு (Live)

உரம் வழங்குவதன் மூலம் சிறு மற்றும் பெரும் போகங்களில் வெற்றிகரமான அறுவடையை நாடு பெற்றுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில், 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் விவசாய உற்பத்திப் பொருட்களின் ஏற்றுமதி இயல்பு நிலைக்கு வந்துள்ளது. பொருளாதார பிரச்சினைகள் ஓரளவு தீர்க்கப்பட்டுள்ளன. அத்தியாவசியப் பொருட்கள் வழங்குதல், தடையில்லா மின்சார விநியோகம், விவசாயிகளுக்கு உரம், சமுர்த்தி பயனாளிகளுக்கு மேலதிக நிதி … Read more

திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் வளாகம், இலங்கை IOC எண்ணெய் தாங்கிகள் மற்றும் களஞ்சிய முனையத்திற்கு ஜனாதிபதி கண்காணிப்பு விஜயம்

திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் வளாகம், இலங்கை IOC எண்ணெய் தாங்கிகள் மற்றும் களஞ்சிய முனையத்திற்கு ஜனாதிபதி கண்காணிப்பு விஜயம்பல தசாப்தங்களாக பயன்படுத்தப்படாத எண்ணெய் தாங்கிக் கட்டமைப்பை நவீனமயப்படுத்தி, திருகோணமலை அபிவிருத்தி வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க நடவடிக்கை திருகோணமலை எண்ணெய் தாங்கி கட்டமைப்பை மீண்டும் செயற்படுத்தி தேசிய பொருளாதாரத்துடன் இணைப்பதற்கான துரித வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள், பொறுப்பான அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். கடந்த 03 ஆம் திகதி  முற்பகல் திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் … Read more

ரைசினா உரையாடலின் பக்க அம்சமாக இருதரப்பு பேச்சுவார்த்தைக்காக இந்திய வெளியுறவு அமைச்சருடன் வெளிநாட்டு அலுவல்கள் சந்திப்பு

மார்ச் 02 – 04ஆந் திகதிகளில் இந்திய வெளியுறவு அமைச்சுடன் இணைந்து பார்வையாளர் ஆய்வு அறக்கட்டளையால் கூட்டாக நடாத்தப்பட்ட புவிசார் அரசியல் மற்றும் புவிசார் பொருளாதாரம் தொடர்பான இந்தியாவின் முதன்மை மாநாடான ரைசினா உரையாடல் – 2023 இல் கலந்து கொள்வதற்காக, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் எம்.யு.எம். அலி சப்ரி புதுதில்லிக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார். பேச்சுவார்த்தையின் தொடக்க அமர்வை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.  பக்க … Read more

ரஷ்யாவுக்கு ஆயுதங்களை அனுப்பினால்…! சீனாவுக்கு ஜெர்மன் பகிரங்க எச்சரிக்கை

ரஷ்யாவுக்கு ஆயுதங்களை அனுப்பினால் சீனா கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என ஜெர்மன் அதிபர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.  ரஷ்யாவுக்கு ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை வழங்கும் நடவடிக்கைகளை சீனா தொடங்கும் என அமெரிக்க கடந்த சில நாட்களுக்கு முன்னர் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் அமெரிக்க பயணம் மேற்கொண்ட ஜெர்மனி அதிபர் ஸ்கால்சிடம் இது தொடர்பில் வினவியபோதே இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், சீனா விளைவுகளை சந்திக்க நேரிடும் உக்ரைனில் நடந்து வரும் போரில் … Read more

இலங்கை பாடசாலை மாணவர்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி

சலுகை விலையில் பாடசாலை மாணவர்களுக்கு பயிற்சிப் புத்தகங்களை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.  30 சதவீத சலுகை விலையில் இவ்வாறு பயிற்சிப் புத்தகங்களைப் பெற்றுக் கொள்ள முடியும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அடுத்த வாரம் முதல் பெற்றுக் கொள்ளலாம் இதன்படி, பாடசாலை மாணவர்கள் அரசாங்க அச்சக சட்டப்படுத்தப்பட்ட கூட்டுத்தாபனத்தினால் அச்சிடப்பட்ட அப்பியாசக் கொப்பிகளை விசேட சலுகையில் பெற்றுக் கொள்ள முடியும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார். இதன்படி, அடுத்த வாரம் முதல் மாணவர்கள்  … Read more