இலங்கையில் வேகா கார்களுக்கு போக்குவரத்து திணைக்களம் அங்கீகாரம்

இலங்கையில் வேகா கார்களுக்கு மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. அதன்படி, நாட்டில் பதிவு செய்யப்பட்ட முதல் வேகா காருக்கான பதிவு இலக்கத்தகடு நேற்று வழங்கப்பட்டுள்ளது. போக்குவரத்து அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தலைமையில் நடைபெற்ற வைபவத்தில் அமைச்சர் ரமேஷ் பத்திரனவும் கலந்துகொண்டார். இதன்போது மோட்டார் வாகன திணைக்கள ஆணையாளர் நாயகத்தினால் ´வேகா´ காரை வடிவமைத்த ஹர்ஷ சுபசிங்கவிடம் குறித்த இலக்க தகடு கையளிக்கப்பட்டது. Source link

சிங்கப்பூரில் உலக சம்பியன்ஷிப்போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இலங்கை பெண்

சிங்கப்பூரில் நடைபெற்ற சர்வதேச உடற்கட்டமைப்பு உலக சம்பியன்ஷிப்போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி முழுப் போட்டியிலும் சிறந்த வீராங்கனைக்கான கோப்பையையும், தங்கப்பதக்கத்தையும் ஹாஷினி ஹெவேகே வென்றுள்ளார். மொரட்டுவையில் வசிக்கும் ஹாஷினி ஹேவகே, டுபாயில் கணக்காளராகப் பணிபுரிந்து வரும் நிலையில், சிங்கப்பூரில் நடைபெற்ற வருடாந்திர உடற்கட்டமைப்பு உலக சாம்பியன்ஷிப்பில் 163 செ.மீ உயரம் பிரிவில் “ஸ்போர்ட்ஸ் மாடல்” பிரிவில் பங்கேற்று, அந்த நிகழ்வில் தங்கப் பதக்கத்தையும், ஒட்டுமொத்த போட்டியின் சிறந்த விளையாட்டு வீரருக்கான கோப்பையையும் வென்றுள்ளார். இந்த சாதனைகளுடன் அவர் நேற்று … Read more

அதிக வட்டி விகிதங்களுக்கு கடன் பெற்ற மக்களுக்கு நிவாரணம்

மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக இரண்டு சுற்று நிருபங்களை வெளியிட்டுள்ளதாக மத்திய வங்கி நேற்று அறிவித்துள்ளது. அதிக வட்டி விகிதங்கள் மற்றும் வரிகள் காரணமாக வங்கிகளில் கடன் பெற்று தவிக்கும் மக்களுக்காக இந்த தீர்மானம் எடுக்க்பபட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க குறிப்பிட்டுள்ளார்.  மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க நேற்று பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார். இதற்கிடையில், வழக்கமான வைப்பு வசதி விகிதம் மற்றும் வழக்கமான கடன் வசதி விகிதம் ஆகியவற்றை உயர்த்தவும் … Read more

கோட்டாபய கொலை முயற்சி வழக்கு: அரசியல் கைதியின் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் நிராகரிப்பு

அரசியல் கைதியான சிவலிங்கம் ஆருரனை பொலிஸார் சித்திரவதை செய்து கடும் காயங்களை ஏற்படுத்தியுள்ளனர் என்பதனை சாட்சியங்கள் மூலம் நீதிமன்றிற்கு நிரூபிக்கப்பட்டுள்ளது என எதிரி தரப்பில் முன்னிலையாகிய ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசாவின் வாதத்தையடுத்து அரச தரப்பின் முக்கிய சான்றான முன்வைக்கப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்கு மூலத்தை கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி நிராகரித்துள்ளார். 14 வருட விசாரணையின் பின்னர் கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க, இந்த ஒப்புதல் வாக்குமூலத்தை நேற்றைய தினம் (02.03.2023) நிராகரித்துள்ளார். 2006ஆம் ஆண்டு மார்கழி … Read more

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதானியுடன் ஜனாதிபதி கலந்துரையாடல்

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப்பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் நேற்றிரவு, சூம் தொழிநுட்பத்தின் ஊடாக விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. இலங்கை எதிர்பார்க்கும் சர்வதேச நாணய நிதியத்தின் நிதி வசதிகள் மற்றும் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது. தற்போது, இலங்கையின் கடன் மறுசீரமைப்பு மற்றும் நிதி வசதி தொடர்பில், அனைத்து தரப்பினரினாலும் சாதகமான மற்றும் நம்பிக்கையான பின்னணி உருவாக்கப்பட்டு வருகின்றது. நம்பிக்கையான பின்னணி அண்மையில் சீனப்பிரதமருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர், … Read more

முதலீட்டுத் தகவல்களை டிஜிட்டல் மயமாக்க ஜனாதிபதி அறிவுறுத்தல்

கமத்தொழில் மேம்பாட்டுச் சட்டம் மற்றும் வயல் நிலச் சட்டத்தை காலத்திற்கேற்ப மீள்திருத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். அவசியமான எந்தவொரு தரப்பினரும் இலகுவாகவும் விரைவாகவும் பெற்றுக்கொள்ளக் கூடிய வகையில் முதலீட்டுத் தகவல்களை, டிஜிட்டல் மயமாக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் பணிப்புரை வழங்கினார். இலங்கையில் முதலீட்டு வாய்ப்புகளை ஊக்குவித்தல் மற்றும் மேம்படுத்தலே இதன் நோக்கங்களாகும் என்றும் இதன் மூலம் முதலீட்டாளர்கள் புதிய முதலீட்டு வாய்ப்புகளை இலகுவாக இனங்கண்டு கொள்வதற்கான வாய்ப்பைப் பெறுவதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். நேற்று முன்தினம் … Read more

உடல் பருமனை குறைப்போம் – ஆரோக்கியமாக வாழ்வோம்

உலக முதியோர் சனத்தொகையில் 1.9 பில்லியனுக்கும் அதிகமானோர் அதிக உடல் பருமன் கொண்டவர்களாக இருக்கின்றனர். அவர்களில் 650 மில்லியன் பேர் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சின் தொற்றா நோய் பிரிவின் சமூக மருத்துவ நிபுணர் சாந்தி குணவர்தன தெரிவித்தார். நாளை 4 ஆம் திகதி இடம்பெறவுள்ள சர்வதேச உடல் பருமன் தினத்தை முன்னிட்டு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (02) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். … Read more

சட்ட விரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த தொண்டர் அணி – கடற்றொழில் அமைச்சர்

சட்ட விரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையை விரைவுபடுத்தும் நோக்கில் தொண்டர் அணி ஒன்றினை உருவாக்க உள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவித்துள்ளார். கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் சமகால அரசியல் நிலைவரம் தொடர்பாக நேற்று (02) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். எமது பிரதேசங்களில் பல்வேறு வகைகளில் பலதரப்பட்ட முறைகேடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை நாளாந்தம் அறியக்கிடைக்கின்றது. இவற்றை கட்டப்படுத்த கடலோர காவற்படையினர் செயற்பட்டுவருகின்ற போதிலும் அவர்களுக்கு … Read more

இலங்கையில் உள்ள ரம்சா சதுப்பு நிலம் , ஈரநில பூங்காக்கள் குறித்து பாடசாலை மாணவர்களுக்கு தெளிவுபடுத்தும் சிறப்பு நிகழ்ச்சி….

இலங்கையின் ரம்சா சதுப்பு நிலங்கள் மற்றும் ஈரநிலப் பூங்காக்கள் குறித்து பாடசாலை மாணவர்களுக்கு தெரிவிக்கும் விசேட வேலைத்திட்டமொன்றை நகர அபிவிருத்தி அதிகார சபை ஆரம்பித்துள்ளது. நகர அபிவிருத்தி அதிகாரசபையின் கீழ் உள்ள    பெத்தகான ஈரநில பூங்கா மற்றும் கோட்டே, கொட்டுபெம்ம ஈரநில பூங்கா ஆகியவற்றை இலவசமாக பார்வையிடும் வாய்ப்பும் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ரம்சா சதுப்பு நில சுற்றுச்சூழல் பற்றி பள்ளி மாணவர்களுக்கு கற்பிப்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் … Read more

பசுமை வலுசக்தி பொருளாதாரத்திற்கு விரைவாக மாற வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி வலியுறுத்தினார்

பசுமை வலுசக்தி பொருளாதாரம் மூலம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் இலங்கையின் பொருளாதாரத்தை சர்வதேச மட்டத்திற்கு உயர்த்தக் கூடிய அடித்தளத்தை உருவாக்குவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்துள்ளார். மின்னேரிய, வோல்டா ஒட்டோ டெக் இன்ஜினியரிங் நிறுவனத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் நேற்று (02) கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்குத் தீர்வாக மின்சார மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கான தேவை ஏற்பட்டுள்ள இக்காலத்தில், ஒன்றிணைக்கப்படும் டிராக்டர்கள், மின்சார மோட்டார் … Read more