'உலக கடற்புல் தினத்தை' கொண்டாடும் வகையில் நினைவு முத்திரை

நேற்று இடம்பெற்ற (2023 மார்ச் 1 ஆம் திகதி) ‘உலக கடற்புல் தினத்தை’ கொண்டாடும் வகையில், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தலைமையில் நினைவு முத்திரை மற்றும் கடித உறையும் வெளியிடப்பட்டன. சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட், வெளிநாட்டு தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் உட்பட இராஜதந்திர பிரதிநிதிகள், சுற்றாடல் அமைச்சின் செயலாளர், தபால் திணைக்கள அதிகாரிகள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றாடல் ஆர்வலர்கள், பாடசாலை மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இந்தியாவில் பதிவான அதிக வெப்ப நிலை

இந்தியாவில் இதுவரை பதிவான வெப்ப நிலைகளில் கடந்த பெப்ரவரி மாதம் பதிவான வெப்ப நிலையே மிகவும் அதிகம் என இந்திய வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சராசரி வெப்பநிலை 27.8 டிகிரி செல்சியஸ் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் பெப்ரவரி மாதம் பதிவான வெப்பநிலை 29.54 டிகிரி செல்சியஸாக அமைந்துள்ளது. இதுவே இதுவரை பெப்ரவரி மாத வெப்பநிலையில் அதிகபட்சமாகும். 1901 ஆம் ஆண்டுக்;குப் பிறகு 2006  பெப்ரவரியில் 29.31°C 2016 … Read more

இலங்கை மக்களின் வாழ்வியலில் ஏற்பட்டுள்ள மாற்றம் – சுகாதார அமைச்சு எச்சரிக்கை

இலங்கையில் அதிக எடை மற்றும் பருமனானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சின் தொற்றா நோய் பிரிவு தெரிவித்துள்ளது. உலக உடல் பருமன் தடுப்பு தினத்தை முன்னிட்டு சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நேற்று “அறிவோம், உடல் பருமனை ஒழிப்போம்” என்ற தொனிப்பொருளில் ஊடகவியலாளர் மாநாடு ஒன்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட சமூக வைத்திய நிபுணர் சாந்தி குணவர்தன, எடை அதிகரிப்பு காரணமாக தொற்றா நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக தெரிவித்தார். 2015ஆம் ஆண்டு அதிக எடை … Read more

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் கோரிக்கை மனு நீதிமன்றத்தால் நிராகரிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டை அறவீட்டுத்தருமாறு ,தமக்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்து அவற்றில் இருந்து தன்னை விடுவித்து உத்தரவிடுமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை, மேல் மாகாண சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றம் ரூ.21,000 கட்டணத்துடன் தள்ளுபடி செய்ய உத்தரவிட்டது. சஞ்சீவ மொராயஸ் மற்றும் பிராங்க் குணவர்தன ஆகியோர் அடங்கிய நீதியரசர்களைக்கொண்ட அமர்வு இந்த உத்தரவை … Read more

ஊவா மாகாணத்திலும், அம்பாறை, ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மழை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு ,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப்பிரிவால் வெளியிடப்பட்டது. 2023 மார்ச்02ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2023 மார்ச் 02ஆம் திகதிஅதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது நாட்டின் ,ஊவா மாகாணத்திலும்  அம்பாறை, ஹம்பாந்தோட்டை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சப்ரகமுவ மாகாணத்திலும் களுத்துறை மாவட்டத்திலும் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில்மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக … Read more

ரஷ்யா மீது சரமாரியாக டிரோன்கள் தாக்குதல்: 2,737 கோடி மதிப்புள்ள உளவு விமானங்களை சுட்டு வீழ்த்திய டிரோன்கள்

உக்ரைன்- ரஷ்ய போர் தாக்குதல் ஓராண்டை கடந்துள்ள நிலையில் ரஷ்யா மீது நேற்று உக்ரைன் சரமாரியாக டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது. உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உதவி வரும் நிலையில் ரஷ்யா பல்வேறு வகையில் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. ரஷ்யா மீது உக்ரைன் நடத்திய திடீர் தாக்குதலில் பெலாரஸில் உள்ள ரஷ்ய விமானப்படை தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த 2737 கோடி மதிப்புள்ள உளவு விமானம் இரண்டு டிரோன்கள் மூலம் அழிக்கப்பட்டுள்ளன. உக்ரைன் எல்லையில் கடுமையான பாதுகாப்பு இதனை … Read more

சுவிட்சர்லாந்தில் வாடகை வீடுகளில் குடியிருப்போருக்கு ஒரு முக்கிய செய்தி…

சுவிட்சர்லாந்தில் வாடகை வீடுகளில் குடியிருப்போருக்கு ஒரு முக்கிய செய்தி. ஆம், இந்த ஆண்டில் வீட்டு வாடகைகள் உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாடகை வீடுகளில் குடியிருப்போருக்கு அடிமேல் அடி சுவிட்சர்லாந்தில் இந்த ஆண்டில் வீட்டு வாடகைகள் உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதுடன், இந்த வாடகை உயர்வு இப்போதைக்கு முடிவுக்கு வரப்போவதில்லை என்னும் செய்தி, வட்டி வீதங்கள் அதிகரிப்பு, பணவீக்கம் என பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளவர்களுக்கு அடி மேல் அடியாக அமைந்துள்ளது. மார்ச் 1ஆம் திகதியாகிய இன்று, வீடுகளுக்கு பொறுப்பான பெடரல் … Read more

லெபனானில் உயிரிழந்த இலங்கை பெண் – பொதுமக்களிடம் உதவி கோரியுள்ள வெளிவிவகார அமைச்சு

லெபனானில் உயிரிழந்ததாக கூறப்படும் இலங்கை பெண்ணின் உறவினர்களை அடையாளம் காண இலங்கையின் வெளிவிவகார அமைச்சு பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளது. இலங்கையை சேர்ந்த ஜெயசூரியகே பிரியந்திகா நீலகந்தி என்ற பெண்ணே இன்று (01) லெபனானில் உயிரிழந்துள்ளதாக லெபனானில் உள்ள இலங்கை தூதரகம் இலங்கையின் வெளியுறவு அமைச்சகத்தின் தூதரக விவகாரப்பிரிவுக்கு அறிவித்துள்ளது. இந்நிலையில் உயிரிழந்ததாக கூறப்படும் பெண்ணின் உறவினர்களை அடையாளம் காண வெளிவிவகார அமைச்சு விபரங்களை வெளியிட்டு உதவிகோரியுள்ளது. இதற்கமைய, ஜயசூரியகே பிரியந்திகா நீலகந்தியின் பின்வரும் விபரங்களை அமைச்சு பகிர்ந்துள்ளது. அடையாள … Read more

அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள ராஜபக்சர்களின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன! வெளியாகும் தகவல்

அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள ராஜபக்சர்களின் சொத்துக்கள் முடக்கப்பட்டு இறுக்கப்பட்டு வருகின்றன. அதேசமயம் ராஜபக்சர்களின் பல சொத்துக்கள் ஆப்பிரிக்காவில் உள்ளது.  அவையும் தற்போது இறுக்கப்பட்டு வருகின்றன என்று இந்தியாவின் இராணுவத்தின் முன்னாள் மேஜர் தர அதிகாரி மதன்குமார் குறிப்பிட்டுள்ளார்.   இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,  13ஆவது சீர்த்திருத்தம் குறித்து இலங்கைக்கு வேறு வழியில்லை.  13ஆவது சீர்த்திருத்தம் என்பது இரு நாடுகளுக்கு போடப்பட்ட ஒப்பந்தம்.  இருநாட்டு தலைவர்கள் அதில் கையெழுத்திட்டுள்ளனர்.  அதாவது, ஜெயவர்தன அவர்களும் இந்தியாவின் முன்னாள் … Read more

பிரிட்டனில் திருமணத்திற்கான குறைந்தபட்ச வயது 18ஆக அதிகரிப்பு

கட்டாய குழந்தை திருமணத்தை தடுக்கும் விதமாக பிரிட்டனில் திருமணத்திற்கான குறைந்தபட்ச வயது 18ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் நாட்டில் திருமணத்திற்கான குறைந்த பட்ச வயது 18ஆக தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. அங்கு இதற்கு முன் 16, 17 வயதுகளை ஒத்தவர்களுக்கு பெற்றோர் கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைப்பதாக புகார் நீண்ட காலம் எழுந்து வந்தது. இந்த சூழலில் இதுபோன்ற கட்டாய குழந்தை திருமணத்தை தடுக்கும் விதமாக இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் அரசுகள் திருமணத்திற்கான குறைந்த வயதை 18ஆக உயர்த்தி சட்டம் … Read more