உயிரிழந்த கருணகரன் ராசசுந்தரனின் குடும்பத்திற்கு உதவிக்கரம் நீட்டும் ஏதிலிகள் சமூகம்

அவுஸ்திரேலியாவின் தென்கிழக்கு மெல்போர்னின் ஏதிலிகள் சமூகம், (community of South East Melbourne) இலங்கையின் தமிழ் ஏதிலியான கருணகரன் ராசசுந்தரனின் துன்பகரமான மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து அவரது குடும்பத்தினரை ஆதரித்துள்ளது. இந்த மாத ஆரம்பத்தில் நிகழ்ந்த ராசசுந்தரனின் மரணத்திற்குப் பிறகு, அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுக்கு ஆதரவளிக்கக் குறித்த ஏதிலிகள் நிதியம் ஒன்று உருவாக்கப்பட்டது. இந்த ஏதிலிகள்  நிதியத்துக்கு 10 நாட்களில் சுமார் 6, 000 டொலர்கள் கிடைத்துள்ளதாகக் கூறப்படுகின்றது. முதன்முறை அல்ல… கருணகரன் ராசசுந்தரன் … Read more

நகர அபிவிருத்தி அதிகார சபையின் மனித வள முகாமைத்துவ பிரிவுக்கான ISO 9001 : 2015 தரச் சான்றிதழ்…

சில அரசியல்வாதிகள் மற்றும் உத்தியோகத்தர்களின் தவறுகளினால் அரச நிறுவனங்கள் மீதான மக்களின் நம்பிக்கைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். சில அதிகாரிகள் செய்யும் தவறுகளினால் அரசியல்வாதிகள் அவப் பெயர் கேட்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். நகர அபிவிருத்தி அதிகார சபையின் மனித வள முகாமைத்துவப் பிரிவுக்கு இலங்கை தர நிர்ணய நிறுவனத்தினால்  ISO 9001 :: 2015 தரச் சான்றிதழை வழங்குவதை முன்னிட்டு நகர அபிவிருத்தி அதிகார … Read more

சுங்க பணிகளை துரிதப்படுத்த குழு

இலங்கை சுங்கப்ப பகுதியினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள பொருட்களுக்கு அமைவாக மேற்கொள்ளப்படும் விசாரணை மற்றும் ஆய்வுகளை துரிதப்படுத்துவதற்காக அமைச்சரவை குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளை முழுமைப்படுத்துவதற்காக நீண்ட காலம் செல்வதாகவும், இந்த பொருட்களுக்கு ஏற்படும் பாதிப்பு மற்றும் சேதங்கள் தொடர்பில் பெரும் பொருளாதார பாதிப்பு ஏற்படுவதினாலும் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (28) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சரவை ஊடக பேச்சாளர் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன இதனைத் … Read more

தொடருந்தில் பயணித்த ரஷ்யத் தம்பதிக்கு நேர்ந்த கதி: விசாரணைகள் ஆரம்பம்

தென்னிலங்கை நோக்கித் தொடருந்தில் பயணித்த ரஷ்யத் தம்பதியின் இரண்டு மடிக்கணினிகள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இக்கடுவை பிரதேச நட்சத்திர விடுதியொன்றில் தங்கியிருந்த ரஷ்யத் தம்பதி, நேற்றைய தினம் (27.02.2023) மாலை கொழும்பு – மருதானையிலிருந்து மாத்தறையை நோக்கி சென்ற தொடருந்தில் அளுத்கம வரை பயணித்துள்ளனர். இந்நிலையில், இடைவழியில் தொடருந்து பாணந்துறையை அண்மித்தபோது, அவர்களது மடிக்கணினிகளைச் சூட்சுமமான முறையில் திருடப்பட்டுள்ளது. பொலிஸில் முறைப்பாடு குறித்த தம்பதிக்கு அருகில் நின்று கொண்டிருந்த இளைஞர் ஒருவர், தொடருந்து … Read more

திருகோணமலை மாவட்டத்தில் அரசாங்கத்தின் பெரும்போக நெல் கொள்வனவு வேலைத்திட்டம் ஆரம்பம்

அரசாங்கத்தின் பெரும்போக நெல் கொள்வனவு வேலைத்திட்டத்தின் கீழ் திருகோணமலை மாவட்டத்தில் விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்வனவு செய்யும் நடவடிக்கை (27) ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் பி.எச்.என்.ஜயவிக்ரம தெரிவித்துள்ளார். உயர்ந்தபட்ச ஈரப்பதன் 14 வீதத்தை கொண்ட உலர்ந்த நெல் ஒரு கிலோ 100 ரூபாவுக்கும் ஈரப்பதன் 14 வீதத்தைவிட கூடியதும் 22 வீதத்திற்கு குறைவானதுமான ஒரு கிலோ நெல் 88 ரூபாவுக்கும் கொள்வனவு செய்யப்படவுள்ளதாகவும் அரசாங்க அதிபர் குறிப்பிட்டார். பட்டினமும் சூழலும், கந்தளாய், பதவிஶ்ரீபுர, சேருவல, குச்சவெளி மற்றும் … Read more

விசேட சமூக சமையலறை நிகழ்ச்சி சாகல ரத்நாயக்க தலைமையில் இடம்பெற்றது

கொழும்பு, ஹுனுப்பிட்டிய கங்காராம விகாரையில், விசேட சமூக சமையலறை நிகழ்ச்சியொன்று, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தலைமையில் நேற்று (27) பிற்பகல் இடம்பெற்றது. கொம்பனித்தெரு பொலிஸ் பிரிவின் 05 கிராமிய உத்தியோகத்தர் பிரிவுகளில் உள்ள கர்ப்பிணித் தாய்மார்கள், பாலூட்டும் தாய்மார்கள், தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், ஊனமுற்றோர் மற்றும் குறைந்த வருமானம் பெறுவோர்உள்ளிட்ட 2300 பேருக்கு தினசரி போஷாக்கான உணவை வழங்குவதற்காக ஹுனுப்பிட்டி கங்காராம விகாரையை மையமாகக் கொண்டு … Read more

பாதிக்கப்பட்ட நாடுகளின் கடன் குறித்து சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் தகவல்

பொருளாதார, சமூக மற்றும் கலாசார உரிமைகள் குறித்த பீய்ஜிங்கின் சொல்லாட்சி நீண்ட காலமாக அதன் செயல்களை மீறிவிட்டதாகச் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. இந்த உரிமைகளை ஊக்குவிப்பதாகக் கூறும் சீன அரசாங்கம், அது இலங்கை உட்பட்ட பாதிக்கப்பட்ட நாடுகளில் கொண்டிருக்கும் நீடித்த கடனை எவ்வாறு நிர்வகிக்கிறது என்பதை அவசரமாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது. கடந்த செப்டம்பரில் இலங்கை அரசாங்கத்துடன் எட்டிய 2.9 பில்லியன் டொலர் கடன் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகச் சீனாவின் … Read more

பயணிகளுக்கும் பண்டங்களுக்குமான பொது போக்குவரத்தை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கும் விசேட வர்த்தமானி

பயணிகளுக்கும் பண்டங்களுக்குமான பொது போக்குவரத்தை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கும் விசேட வர்த்தமானியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் சற்று முன்னர் கையெழுத்திட்டார். (235ஆம் அத்தியாயமான) சுங்கக் கட்டளைச் சட்டத்தின் படி, வரைவிலக்கணம் கூறப்பட்ட ஏதேனும் துறைமுகத்தினுள் இருக்கும் கலத்திலிருந்து உணவுப் பொருள் அல்லது பானம், அல்லது நிலக்கரி, எண்ணெய், எரிபொருள் என்பவற்றுள் எவற்றையும் வெளியேற்றுதல், கொண்டுசெல்லல், தரையிறக்குதல், களஞ்சியப்படுத்தல், விநியோகித்தல், அகற்றுதல் என்பதற்காக, தெருக்கள், பாலங்கள், மதகுகள், விமான நிலையங்கள், துறைமுகங்கள், புகையிரதப் பாதைகள் உட்பட தெரு … Read more

உள்ளூராட்சி மன்ற எல்லை நிர்ணய தேசிய குழு தயாரித்த இடைக்கால அறிக்கை

உள்ளூராட்சி மன்ற எல்லை நிர்ணய தேசிய குழு தயாரித்த இடைக்கால அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இந்த அறிக்கையை பிரதமர் தினேஷ் குணவர்த்தனவிடம் இன்று கையளிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறினார். இந்தக் குழு மாவட்ட மட்டத்தில் பெற்றுக்கொண்ட கருத்துக்களையும் யோசனைகளையும் உள்வாங்கியுள்ளது. அதேபோல் பல்வேறு தரப்புக்கள் முன்வைத்துள்ள கருத்துக்களும் யோசனைகளும் உள்வாங்கப்பட்டுள்ளன. இவற்றை மீளாய்வு செய்து மாவட்ட மட்டத்திலான எல்லை நிர்ணய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் ஏற்பாடுகள் தற்போது இடம்பெற்று வருகின்றன. அடுத்த மாதம் … Read more

சர்வதேச மன்னிப்பு சபை இலங்கையிடம் முன்வைத்துள்ள கோரிக்கை

இலங்கை அதிகாரிகள் தமது சக்தியைப் பயன்படுத்துவதில் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதுடன், அமைதியான சட்ட சபைக்கான உரிமையை எளிதாக்க வேண்டும் என்று சர்வதேச மன்னிப்பு சபை கோரியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் பொலிஸாரால் சட்டவிரோதமாக நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை பயன்படுத்தப்பட்டதன் விளைவாக ஒரு எதிர்ப்பாளர் கொல்லப்பட்டார் மற்றும் பலர் காயமடைந்தனர் என்ற செய்தி தொடர்பில் சர்வதேச மன்னிப்பு சபையின் பிராந்திய ஆராய்ச்சியாளர் ஹரீந்திரினி கொரையா தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.  இதனை தொடர்ந்தே அவர் குறித்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.  … Read more