கடற்பரப்புகளில் வானிலை , கடல்நிலை

இலங்கைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல்நிலை,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப்பிரிவால் வெளியிடப்பட்டது அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு 2023 பெப்ரவரி 27ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. மழை நிலைமை:பொத்துவிலிலிருந்து மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஊடாக காங்கேசந்துறைவரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பலதடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கொழும்பிலிருந்து காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சில இடங்களில்மாலையில் அல்லது இரவில் மழை … Read more

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த பாரிய கப்பல்! வெளியான காரணம்

இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘INS சுகன்யா’ என்ற கப்பல் நல்லெண்ண உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று(27.02.2023) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. நாட்டிற்கு வருகை தந்த கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கு அமைவாக வரவேற்றுள்ளனர். 101 மீற்றர் நீளமுள்ள இந்த கப்பலில் 106 பணியாளர்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு கடற்படையினரும் இணைந்து பயிற்சி   இதற்கிடையில், கப்பலின் கட்டளை அதிகாரி கொமாண்டர் பிரணவ் ஆனந்த் நேற்று காலை மேற்கு கடற்படை கட்டளை பிரிவின் கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் … Read more

நெருக்கமான நபரால் புடின் கொலை செய்யப்படுவார் : ஜெலன்ஸ் பரபரப்பு தகவல்

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், அவருக்கு நம்பிக்கையான நபரால் கொலை செய்யப்படுவார் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். உக்ரைன் போரில் ஏற்பட்ட பின்னடைவுகளால் புடினுக்கு நெருக்கமானவர்கள் அவர் மீது கடும் அதிருப்தியில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தனக்கு மிகவும் நம்பிக்கையானவர்களை உயர் பொறுப்புகளில் நியமித்துள்ளதால் ஜெலன்ஸ்கி கூறுவது சாத்தியமல்ல என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் யுத்தம் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்து ஓராண்டு நிறைவடைந்த நிலையில் உக்ரைனுக்கு மேற்குலக நாடுகள் பெருந்தொகை ஆயுதங்களை வழங்கி … Read more

தமிழீழ இலட்சியவாதி அ.கௌரிகாந்தன் தமிழகத்தில் மரணம்(Photos)

தமிழீழ விடுதலை பற்றி ஓயாது சிந்தித்தும், எழுதியும் வந்த பொதுவுடமைவாதியான அ.கௌரிகாந்தன் மரணமடைந்துள்ளார். தமிழகத்தில் தர்மபுரி மாவட்டத்தில் ஈழத்தமிழர் ஏதிலி முகாமில் நேற்றிரவு(26.02.2023) இவர் மரணமடைந்துள்ளார். முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்பும் தளராத தமிழீழ இலட்சியவாதியும், தமிழிழக் கோட்பாட்டாளர்களில் தன்னுடைய இறுதி மூச்சுவரை விட்டுக்கொடுப்பற்று அந்த இலட்சியத்தையே பேசிய ஒருவராக இவர் திகழ்ந்துள்ளார். தமிழீழ இலட்சியவாதி ஆரம்பகாலத்தில் இடதுசாரியமைப்புகளில் தீவிரமாக செயற்பட்டவர். ஆயுதப்போரட்டம் வளரத் தொடங்கியபோது 1980 களின் ஆரம்பத்தில் புளொட் இயக்கத்திடன் சமூக இயக்கங்களில் பயணித்துள்ளார். எனினும் … Read more

வெளிநாட்டில் உயிரிழந்த இலங்கை கோடீஸ்வரர் கொலை பின்னணியில் மனைவி – பிரேஸில் பொலிஸாரின் உதவு கோரும் சிஐடி

இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் மர்மமான முறையில் கோடீஸ்வர வர்த்தகர் ஒனேஷ் சுபசிங்க கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மனைவி மற்றும் உதவியாளரைக் கைது செய்ய சர்வதேச பொலிஸாரின் ஊடாக பிரேஸில் பொலிஸாரின் உதவியை குற்றப் புலனாய்வு திணைக்களம் கோரியுள்ளது. கடந்த 3ஆம் திகதி, இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் அடுக்குமாடி குடியிருப்பில் உயிரிழந்த கோடீஸ்வர தொழிலதிபர் ஒனேஷ் சுபாசிங்கவின் சடலம் அந்நாட்டு பாதுகாப்புப் படையினரால் கண்டெடுக்கப்பட்டது. இதன்படி, நாட்டின் புலனாய்வுத் திணைக்களங்கள், நாட்டின் குற்றப்புலனாய்வுப் பிரிவினரும் மரணம் தொடர்பான … Read more

பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த வாரத்துடன் (24.02.2023) ஒப்பிடுகையில் இன்று(27.02.2023) பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளது. அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதியும் சற்று உயர்ந்து விற்பனை விலை 367.92 ரூபாவாகவும், கொள்வனவு விலை 358.36 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. பவுண்ட் மற்றும் யூரோவின் பெறுமதி இதேவேளை எவ்வாறாயினும், கடந்த வாரத்துடன் ஒப்பிடும்போது ஸ்டெர்லிங் பவுண் மற்றும் யூரோவுக்கு எதிராக ரூபாவின் … Read more

யாழ். போதனா வைத்தியசாலை காவலாளி மீது வாள்வெட்டு மேற்கொள்ள முயற்சி (Video)

யாழ். போதனா வைத்தியசாலை காவலாளி மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்த முயற்சித்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது.  குறித்த சம்பவம் நேற்றிரவு 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.  யாழ். போதனா வைத்தியசாலையின் பிரேத அறை பக்கம் உள்ள நுழைவாயிலுக்கு அருகில் பட்டா வாகனத்தில் வந்த சிலர் கதவால் ஏறி குதித்து வைத்தியசாலைக்குள் நுழைய முற்சித்துள்ளனர்.  காவலாளியை வெட்ட முயற்சி இதனை அவதானித்த வைத்தியசாலை காவலாளி அவர்களை தடுக்க முயன்ற போது, அவர்கள் வந்த பட்டா வாகனத்திலிருந்து வாளை எடுத்து காவலாளியை வெட்ட … Read more

போக்குவரத்து வீதி தடை குறித்து பொலிஸாரின் அறிவித்தல்

கொஹுவல சந்தியில் நிர்மாணிக்கப்படவுள்ள மேம்பாலத்தின் நிர்மாணப் பணிகள் பெப்ரவரி 22ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு மே 31ஆம் திகதி வரை மேற்கொள்ளப்படவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த நிர்மாணப்பணிகள் மேற்கொள்ளும் காலத்தில் பயணிகள் பஸ்கள் மற்றும் இலகுரக வாகனங்கள் கொ{ஹவல சந்தி ஊடாக பயணிக்க முடியும். ஆனால், மேம்பாலம் அமைக்கும் பணிகள் இடம்பெற்று வருவதால், போக்குவரத்து நெரிசலை குறைக்க, மாற்று வழிகளை பயன்படுத்துமாறு, போலிஸார் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளனர். வீதி அபிவிருத்தி அதிகாரசபை, பொதுமக்களுக்கு … Read more

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணி

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இலங்கை கிரிக்கெட் அணியை இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. திமுத் கருணாரத்ன தலைமையிலான இலங்கை அணியில் 17 வீரர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனர். இந்த அணியில் புதிய வீரர்களான நிஷான் மதுஷ்க மற்றும் மிலான் ரத்நாயக்க ஆகியோர் இடம்பெற்றுள்ளமை விசேட அம்சமாகும். இலங்கை – நியூசிலாந்து அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி மார்ச் மாதம் 09ஆம் திகதி கிறைஸ்ட் சேர்ச்சிலும், இரண்டாவது டெஸ்ட் போட்டி மார்ச் 17ஆம் திகதி வெலிங்டனிலும் நடைபெறும். … Read more

வத்தளை நகரம் “மேற்கு பிராந்தியத்தின் பசுமையான வாழ்வாதாரமாக” அபிவிருத்தி செய்யப்படும்…

வத்தளை நகரம் “மேற்கு பிராந்தியத்தின் பசுமையான வாழ்வாதாரமாக” அபிவிருத்தி செய்யப்படும். இது அடுத்த பத்து ஆண்டுகளில் செயல்படுத்தப்படும். நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் திரு.பிரசன்ன ரணதுங்கவின் ஆலோசனையின் பேரில், இது தொடர்பான அபிவிருத்தி திட்ட சட்ட வரைவு தயாரிக்கப்படும். வரைவு செய்யப்பட்ட வத்தளை நகர அபிவிருத்தித் திட்டத்திற்கான மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளின் கருத்துக்களையும் யோசனைகளையும் பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் அதற்கான முக்கிய கல்ந்துரையாடல் வெள்ளிக்கிழமை (24) பத்தரமுல்ல செத்சிறிபாயவில் அமைந்துள்ள நகர அபிவிருத்தி … Read more