இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் – 2023 சனவரி

2023 சனவரியில் பணிகள் நடவடிக்கைகள் சிறிதளவு விரிவடைந்த அதேவேளை தயாரித்தல் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக சீர்குலைந்ததை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள் எடுத்துக்காட்டின. தயாரிப்பு கொள்வனவு முகாமையாளர் சுட்டெண், 2023 சனவரியில் மாதத்திற்கு மாதம் அடிப்படையில் தயாரிப்பு நடவடிக்கைகளில் தொடர்ச்சியான பின்னடைவினை சமிக்ஞைப்படுத்தியது. அதற்கமைய, நிரம்பலர் விநியோக நேரம் தவிர, அனைத்து துணைச் சுட்டெண்களிலும் வீழ்ச்சிகளினால் தூண்டப்பட்டு, முன்னைய மாதத்திலிருந்து 4.0 சுட்டெண் புள்ளிகளைக் கொண்ட வீழ்ச்சியுடன் தயாரிப்பு கொ.மு.சுட்டெண் 2023 சனவரியில் 40.8 சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்தது. பணிகள் … Read more

இலங்கைக்கு திடீரென கிடைக்கும் 400 மில்லியன் டொலர்

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு 400 மில்லியன் டொலர்களை வழங்கவுள்ளதாக சர்வதேச நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது. உலக வங்கியின் முதலீட்டுப் பிரிவான சர்வதேச நிதியியல் கூட்டுத்தாபனம் இந்த நிதியுதவியை வழங்கவுள்ளதாக இன்று அறிவித்துள்ளது. அத்தியாவசிய இறக்குமதிகளுக்கு நிதியளிப்பதற்காக இந்த நிதி வழங்கப்படவுள்ளது. மருந்து, உணவு மற்றும் உரம் உள்ளிட்ட அத்தியாவசிய இறக்குமதிகளுக்கு இந்த நிதி பகிர்ந்தளிக்கப்படும் என்று சர்வதேச நிதியியல் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. Source link

காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டி – 2022இன் இரண்டாம் அரையாண்டு

கொழும்பு மாவட்டத்திற்கான காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டியானது 2022இன் இரண்டாம் அரையாண்டு காலப்பகுதியின் போது ஆண்டுக்காண்டு அடிப்படையில் 14.8 சதவீதத்தினால் 205.2 ஆக அதிகரித்தது. காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டியின் அனைத்து துணைக் குறிகாட்டிகளும் அதாவது, வதிவிடக் காணி விலைமதிப்பீட்டு குறிகாட்டி, வர்த்தகக் காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டி மற்றும் கைத்தொழில் காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டி ஆகிய அனைத்தும் துணைக் குறிகாட்டிகளும் ஒட்டுமொத்த அதிகரிப்பிற்குப் பங்களித்துள்ளன. Published Date: Friday, February 24, 2023 முழு வடிவம் https://www.cbsl.gov.lk/sites/default/files/cbslweb_documents/press/pr/press_20230224_land_valuation_indicator_second_half_2022_t.pdf 

மகளிர் ரி20 உலக வெற்றிக்கிண்ணத்தை 6ஆவது முறையாக அவுஸ்திரேலியா கைப்பற்றியது

மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலிய அணி தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தி 6 ஆவது முறையாக சாம்பியன் கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது. எட்டாவது மகளிர் ரி 20 உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி தென்னாபிரிக்காவின் கேப் டவுன் மைதானத்தில் நேற்று (26) நடைபெற்றது. 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் ‘ஏ’ பிரிவில் இருந்து அவுஸ்திரேலியா அணியும், தென்னாப்பிரிக்கா அணியும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றிருந்தன. இதன்படி … Read more

அதிஷ்டம் கிட்டவுள்ள மூன்று ராசிக்காரர்கள்: அதிலும் தனுசு ராசிக்காரர்களுக்கு – இன்றைய ராசிபலன்

நாளை என்ன நடக்கும் என்று அறியும் சக்தி பொதுவாக மனிதர்களுக்கு இருப்பது அசாத்தியமான ஒன்றாகும். ஆனால் வேதத்தின் கண்ணாக விளங்கும் ஜோதிடத்தின் மூலம் நமது இன்றைய தினத்தின் பலனை நாம் அறியும் சாத்தியம் உள்ளது. எனவே நாளொன்றுக்கான ராசி பலனை நாம் முன்னரே அறிந்து கொண்டு அதற்கேற்றாற் போல் முன்னெச்சரிக்கையாக சில செயல்களை திட்டமிட்டு நடந்து கொள்ள நினைத்த காரியங்கள் வெற்றி பெறும். கிரக நிலைக்கு ஏற்ப ராசிபலன் கணிக்கப்படுவதால், நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் … Read more

கொழும்பு அடுக்குமாடி குடியிருப்புகளில் ,உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கு நடவடிக்கைகள்

கொழும்பு நகரில் தற்போதுள்ள நகர அடுக்குமாடி திட்டங்களின் உட்கட்டமைப்பை அபிவிருத்தி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கு உடனடி நடவடிக்கை எடுக்குமாறு நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் திரு.நிமேஷ் ஹேரத் அதன் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். கொழும்பில் பல வீட்டுத் திட்டங்களின் கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்ட போதே போதே தலைவர் இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார். நகர அபிவிருத்தி அதிகார சபையினால் நிர்மாணிக்கப்பட்ட காலிங்க மாவத்தை – கொலொம்தோட்டை சரசவி தோட்டம், பொரளை சிரிசர தோட்டம் மற்றும் மெட்சர தோட்டம், … Read more

சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் ஏற்கும் பணி, நாளையுடன் நிறைவு

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளும் பணி நாளையுடன் நிறைவு நிறைவடைகிறது. இம்முறை பரீட்சைக்கு ஓன்லைன் online ஊடாக மாத்திரமே விண்ணப்பிக்க வேண்டும் என்று பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. பாடசாலை விண்ணப்பதாரர்கள் தமது பாடசாலை அதிபரினூடாகவும், தனிப்பட்ட விண்ணப்பதாரர்கள் தனிப்பட்ட முறையிலும் வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகளுக்கு அமைய விண்ணப்பிக்க வேண்டும். பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான http://www.doenets.lk அல்லது http://www.onlineexams.gov.lk என்ற முகவரியினூடாக இணையத்தில் பிரவேசித்து விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும். தேவைப்படும் பட்சத்தில் சமர்ப்பிப்பதற்காக விண்ணப்பதாரர்கள் … Read more

காலநிலை மாநாட்டு தலைவருடன் அமைச்சர் நஸீர் அஹமட் சந்திப்பு

கோப் 28 மாநாட்டின் தலைவரும் காலநிலை மாநாட்டின் விசேட பிரதிநிதியுமான சுல்தான் அல்ஜாபிரை, சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட் புதுடில்லியில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். புதுடில்லியில் நடைபெறும் நிலைபேறான அபிவிருத்தி மாநாட்டில் பங்கேற்றுள்ள அமைச்சர் நஸீர் அஹமட், அங்கு வருகைதந்துள்ள முக்கிய தலைவர்கள் சிலரைத் தனித்தனியாகச் சந்தித்துக் கலந்துரையாடி வருகிறார். இச்சந்திப்புக்களின் அடிப்படையிலேயே, காலநிலை மாற்றங்கள் குறித்த இக்கலந்துரையாடல் நடைபெற்றது. இயற்கையின் மாற்றங்களால் ஏற்படும் பாதிப்புக்களில் அதிக சவால்களை இலங்கை எதிர்கொள்கிறது. இலங்கையின் எதிர்பார்ப்பு அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் … Read more

கலிபோர்னியா மாகாணத்தில் பனிப் புயல்

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் வீசி வரும் பயங்கர பனிப்புயலால் பொது போக்குவரத்து சேவைகள் பாதிப்படைந்துள்ளது. புவி வெப்பமயமாதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உலகில் காலநிலை வேகமாக மாறி வருகிறது. இதன் விளைவாக உலகின் பல நாடுகளில் வெயில், குளிர், மழை என அனைத்து காலநிலைகளும் இதுவரை இல்லாத அளவுக்கு மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன. குறிப்பாக அமெரிக்கா காலநிலை மாற்றத்தால் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறது. கடந்த வருடம் டிசம்பர் மாதம் வரலாற்றில் இல்லாத அளவுக்கு … Read more

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான 7வது வருடாந்த பாதுகாப்பு உரையாடல் அண்மையில் நடைபெற்றது

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான 7வது வருடாந்த பாதுகாப்பு உரையாடல் இந்தியாவின் புதுடெல்லியில் அண்மையில் நடைபெற்றது. பாதுகாப்பு உரையாடலில் ஜெனரல் கமல் குணரத்ன தலைமையிலான குழுவினர் கலந்து கொண்டனர். இந்திய பாதுகாப்பு செயலாளர் கிரிதர் அர்மானே மற்றும் ஜெனரல் கமல் குணரத்ன ஆகியோர் கூட்டத்திற்கு தலைமை தாங்கினர். www.defence.lk/Tamil