நிலநடுக்கத்தால் ஏற்படும் பாதிப்பு குறித்து இலங்கைக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை! செய்திகளின் தொகுப்பு

இந்தியாவில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டால் அது கொழும்பு நகரை பாதிக்கும் வாய்ப்புகள் அதிகம் என புவியியல் துறையின் மூத்த பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார். ஹிம்ச்சல் – உத்தரகாண்ட் மாநிலங்களில் வரும் வாரத்தில் ரிக்டர் அளவில் 8 ஆக பதிவான நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக இந்திய நிலநடுக்கவியல் ஆய்வு நிறுவனம் எச்சரித்துள்ளது. இந்தியாவில் 8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டால் அது கொழும்பை நிச்சயம் பாதிக்கும் என்று கூறிய பேராசிரியர், சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் … Read more

முல்லைத்தீவில் அரச உத்தியோகத்தர்களுக்கான இரண்டாம் மொழி பயிற்சிநெறி

அரச கரும மொழிகள் திணைக்களத்தினால் அரச நியமனம் பெற்ற உத்தியோகத்தர்களுக்கான இரண்டாம் மொழி பயிற்சிநெறி வகுப்புக்கள் நாடளாவிய ரீதியில் நடைபெற்றுவருவதற்கு அமைவாக முல்லைத்தீவு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட அரச உத்தியோகத்தர்களுக்கு 150 மணித்தியாலங்களை உள்ளடக்கிய இரண்டாம் மொழி பயிற்சிநெறி வகுப்புக்கள் கடந்த வருடம் கார்த்திகை மாதம் ஆரம்பிக்கப்பட்டு இன்று (24) நிறைவடைந்தது இக் கற்க்கை நெறியின் நிறைவு நிகழ்வு இன்று (24) முல்லைத்தீவு மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் மாவட்ட தேசிய ஒருமைப்பாடு மேம்பாட்டு உதவியாளர் அ.தாமரைச்செல்வி … Read more

முதியோர்களுக்கான நடமாடும் மருத்துவ, கண்சிகிச்சை , நிவாரண உதவி

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட முதியோர்களுக்கான கண் சிகிச்சை மற்றும் தொற்றா நோய்களுக்கான பரிசோதனை, மருத்துவ முகாம் மற்றும் நிவாரண உதவி வழங்கல் நிகழ்வு பிரதேச செயலாளர் கே. தனபாலசுந்தரமின் வழிகாட்டலில் கடந்த இரண்டு நாட்களாக (22,23 மற்றும் 24) மூன்று கட்டங்களில் இடம்பெற்றது. இம்முகாம்கள் ஹெல்பேஜ் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் அனுசரணையுடன் பிரதேச செயலகத்தின் சமூக சேவை பிரிவின் ஏற்பாட்டில் முதற்கட்ட முகாம் ஏறாவூர்பற்று பிரதேச செயலகத்தின் கலாசார மத்திய நிலையத்திலும், இரண்டாம் … Read more

15 ஆண்டுகள் சிறையில் இருந்த தமிழ் அரசியல் கைதி விடுதலை!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு உதவினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு கடந்த 15 ஆண்டுகளாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதியான செல்லையா சதீஸ்குமார் விடுதலை செய்யப்பட்டார். சுயாதீன ஊடகவியலாளரும் எழுத்தாளருமான சதீஸ்குமார் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டார். சதீஸ்குமார் உட்பட மூன்று தமிழ் அரசியல் கைதிகளுக்குக் கடந்த பெப்ரவரி 1ஆம் திகதி ஜனாதிபதியால் பொது மன்னிப்பு அறிவிக்கப்பட்டது. அந்தவகையில், உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மேன் முறையீட்டு மனு அவரால் … Read more

போலி ஆவணங்களை தயாரித்து இஸ்ரேலில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி மோசடி  

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பூரண அனுசரணையுடன், இஸ்ரேலில் செவிலியர் Nurse வேலை வாய்ப்புப் பெற்றுத் தருவதாக கூறி, அரச இலச்சினை மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் அரச இலச்சினை என்பவற்றை பயன்படுத்தி வடிவமைக்கப்பட்ட போலி ஆவணங்களை, இளைஞர்களுக்கு வழங்கி, இளைஞர்களை தவறாக வழிநடத்திய ஒருவர் பணியகத்தின் அதிகாரிகளினால் நேற்று முன்தினம் (22) பத்தரமுல்ல தியதமுல்ல பகுதியில்  கைது செய்யப்பட்டுள்ளார்.  குறித்த சந்தேக நபர், இஸ்ரேலில் வேலை வாய்ப்புப் பெற்றுத் தருவதாக கூறி ஒருவரிடம் தலா 4 இலட்சம் ரூபா பணத்தை … Read more

குடிவரவு குடியகல்வு வளாகத்திற்கு வரும் மக்களின் வசதிக்காக இருக்கைகள்

  தேசிய அடையாள அட்டை மற்றும் கடவுச்சீட்டு பெற வரும் பொதுமக்களின் வசதிக்காக, அந்த இடத்தில் இருக்கைகளை அமைக்க நகர அபிவிருத்ததிகார சபை நடவடிக்கை எடுத்து வருகிறது. நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் திரு. நிமேஷ் ஹேரத் மேற்கொண்ட கள.ஆய்வுக்குப் பின்னர்  இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குடிவரவு குடியகழ்வு திணைக்களம் மற்றும் ஆட்பதிவு திணைக்களத்திற்கு கடவுச்சீட்டு மற்றும் தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்வதற்காக தினமும் ஏராளமான மக்கள் வருகை தருகின்றனர். அமர்வதற்கு போதிய இருக்கைகள் இல்லாததால், மரங்களின் கீழ், … Read more

தேர்தல் நடத்தப்படும் திகதி தொடர்பில் வெளியான அறிவிப்பு

தேர்தலை நடத்தும் திகதி குறித்து புதிய அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது. அதன்படி தேர்தலை நடத்தும் திகதி குறித்து எதிர்வரும் மார்ச் மாதம் 3 ஆம் திகதி அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. விசேட கூட்டம் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தும் திகதி தொடர்பில் இன்றைய தினம் தேசிய தேர்தல் ஆணைக்குழுவில் விசேட கூட்டமொன்று நடைபெற்றிருந்தது. இதன்போதே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  Source link

வங்கித்தொழில் மற்றும் நிதிச் சேவைகள் பற்றிய குழுவுக்கு உறுப்பினர்கள் நியமனம்

பாராளுமன்றத்தில் புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட வங்கித்தொழில் மற்றும் நிதிச் சேவைகள் பற்றிய குழுவில் பணியாற்றுவதற்காக தெரிவுக் குழுவினால் பெயர்குறித்து நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர்களின் பெயர்களை சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன  (21) பாராளுமன்றத்தில் அறிவித்தார். பாராளுமன்ற நிலையியற் கட்டளை 122 இன் ஏற்பாடுகள் மற்றும் 2023 பெப்ரவரி 10 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணைக்கு அமைய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதற்கமைய, கௌரவ செஹான் சேமசிங்க, கௌரவ அனுப பஸ்குவல், கௌரவ சமல் ராஜபக்ஷ, கௌரவ சட்டத்தரணி அநுர … Read more

ரஷ்ய தூதுக்குழுவினர் பிரதி சபாநாயகரைச் சந்தித்தனர்

ரஷ்யாவின் விளாடிமிர் பிராந்தியத்தின் பொருளாதார அபிவிருத்தி மற்றும் கைத்தொழில் அமைச்சர் சிடொரின் செர்கி மற்றும் விளாடிமிர் பிராந்தியத்தின் கமேஷ்கோவோ மாவட்டத்தின் நிர்வாகத் தலைவர் குர்கன்ஸ்கி அரியாடோலி ஆகியோர் அடங்கிய ரஷ்ய தூதுக் குழுவினர் பிரதி சபாநாயகர் கௌரவ அஜித் ராஜபக்க்ஷவை அண்மையில் (17) பாராளுமன்றத்தில் சந்தித்தனர். இந்த நாட்டிற்கு வரும் ரஷ்ய சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது மற்றும் இந்நாட்டில் முதலீட்டு வாய்ப்புகளை அதிகரிப்பது உள்ளிட்ட இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து இங்கு விவாதிக்கப்பட்டது. இலங்கையின் நண்பன் … Read more