ஆயிரக்கணக்கான அரச ஊழியர்கள் குழப்பத்தில்! வெளியான தகவல்

7000 இற்கும் மேற்பட்ட அரச மற்றும் அரை அரசத்துறை ஊழியர்கள் குழப்பத்தில் உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் (24.02.2023) உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்புமனுக்களை சமர்ப்பித்துள்ள 7000 இற்கும் மேற்பட்ட அரச மற்றும் அரை அரசத்துறை ஊழியர்கள் உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் நிச்சயமற்ற தன்மை காரணமாக குழப்பத்தில் உள்ளனர். சம்பளம் இல்லா விடுமுறையில் அரச … Read more

ஐசிசி ரி-20 பந்து வீச்சாளர் தரவரிசையில்,வனிந்து ஹசரங்கவுக்கு முதலாவது இடம்

  ஐசிசி ரி-20 பந்து வீச்சாளர் தரவரிசையில் இலங்கையின் சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.இதுதொடர்பான பட்டியலில் வனிந்து ஹசரங்க 695 புள்ளிகள் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளார். டி-20 சகலதுறை ஆட்டக்காரர் தரவரிசையில் வனிந்து ஹசரங்க தொடர்ந்து நான்காவது இடத்தில் நீடிக்கிறார்.வனிந்து 175 புள்ளிகளுடன் அந்த நிலையில் நீடிக்கிறார். இதேவேளை, வனிந்து ஹசரங்க ஒருநாள் சகலதுறை ஆட்டக்காரர்கள் தரவரிசையில் 240 புள்ளிகளுடன் 7வது இடத்தில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

T 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி – இங்கிலாந்து-தென் ஆப்பிரிக்கா மோதல்

எட்டாவது மகளிர் T 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரில் அவுஸ்திரேலியாவுடன் மோதும் இரண்டாவது அணி எது என்பதை தீர்மானிக்கும் 2வது அரையிறுதி போட்டி இன்று நடக்கிறது. இதில் போட்டி தொடரை நடத்தும் தென் ஆப்பிரிக்கா-இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இன்று மாலை 6.30 மணிக்கு இந்த போட்டி ஆரம்பமாகவுள்ளது. எட்டாவது மகளிர் வு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி தென்ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று … Read more

அதிஷ்டம் கிட்டவுள்ள மூன்று ராசிக்காரர்கள்: அதிலும் கும்ப ராசிக்காரர்களுக்கு – இன்றைய ராசிபலன்

நாளை என்ன நடக்கும் என்று அறியும் சக்தி பொதுவாக மனிதர்களுக்கு இருப்பது அசாத்தியமான ஒன்றாகும். ஆனால் வேதத்தின் கண்ணாக விளங்கும் ஜோதிடத்தின் மூலம் நமது இன்றைய தினத்தின் பலனை நாம் அறியும் சாத்தியம் உள்ளது. எனவே நாளொன்றுக்கான ராசி பலனை நாம் முன்னரே அறிந்து கொண்டு அதற்கேற்றாற் போல் முன்னெச்சரிக்கையாக சில செயல்களை திட்டமிட்டு நடந்து கொள்ள நினைத்த காரியங்கள் வெற்றி பெறும். கிரக நிலைக்கு ஏற்ப ராசிபலன் கணிக்கப்படுவதால், நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் … Read more

ஒரு கிலோ சோளத்தை 160 ரூபாவுக்கு கொள்வனவு செய்ய கால்நடை உணவு உற்பத்தியாளர்கள் உடன்பாடு

பெரும்போகத்தில் விளைந்த ஒரு கிலோ சோளத்தை 160 ரூபாவுக்கு கொள்வனவு செய்ய கால்நடை உணவு உற்பத்தியாளர்கள் உடன்பாடு தெரிவித்துள்ளனர். விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவுடன் (22) இடம்பெற்ற கலந்துரையாடலில் இது தொடர்பாக இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சோள அறுவடை ஆரம்பமான போதிலும், தமது விளைச்சலுக்கு, உரிய விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் கூறுகின்றனர். இது தொடர்பில் கவனம் செலுத்திய அமைச்சர், சோளச் செய்கையை ஊக்குவிக்கவும், சோள உற்பத்திக்கு அதிக விலை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இம்முறை … Read more

கொரிய மொழித் தேர்ச்சிப் பரீட்சைக்கு 85,000 பேர் பதிவு

தென் கொரியாவில் உற்பத்தி மற்றும் மீன்பிடித் துறைகளில் காணப்படும் வேலை வாய்ப்பிற்காக, இலங்கை இளைஞர் யுவதிகளை தெரிவு செய்வதற்காக, 2023 ஆம் ஆண்டு நடத்தப்பட உள்ள 7 ஆவது கொரிய மொழித் தேர்ச்சிப் பரீட்சைக்காக 85,072 இளைஞர், யுவதிகள் விண்ணப்பித்துள்ளனர் என்று இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. கடந்த வருடம் கொரிய மொழித் தேர்ச்சிப் பரீட்சைக்கு 31,378 பேர் விண்ணப்பித்தனர். இம்முறை அதற்கும் மேலதிகமாக அதிக எண்ணிக்கையிலான இளைஞர், யுவதிகள் விண்ணப்பித்துள்ளனர். இதற்கான பதிவுகள் கடந்த … Read more

​போதைப்பொருள் வர்த்தக முறியடிப்பில் இராணுவத்தினர் தீவிரம்

போதைப்பொருள் வர்த்தக முறியடிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு இராணுவத்தினருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. சட்டவிரோத போதைப்பொருள் வர்த்தக முறியடிப்பு நடவடிக்கைகள் மற்றும் புலனாய்வு தகவல் சேகரிப்பு நடவடிக்கைகளை விரிவுபடுத்துமாறு பாதுகாப்புப் படைத் தளபதிகள் மற்றும் சம்பந்தப்பட்ட சகல தரப்பினருக்கும் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே பணிப்புரை விடுத்துள்ளார். சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல் 2022ஆம் ஆண்டு இராணுவப் புலனாய்வுப் பிரிவினரின் புலனாய்வுகளின் மூலம், பொலிஸ் திணைக்களம் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் சட்டவிரோத போதைப்பொருள் … Read more

குடும்ப புனர்வாழ்வு நிலையத்தினால் பயன்பெறுநர் ஊக்குவிப்பு 

முல்லைத்தீவு மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட சமூகங்கள் மத்தியில் ஒன்றிணைந்த அபிவிருத்தியை ஏற்படுத்துவதன் மூலம் மீண்டெழும் தன்மையினை கட்டியெழுப்பல் என்னும் தொனிப்பொருளில் இயங்கிவரும் குடும்ப புனர்வாழ்வு நிலையத்தினால் வாழ்வாதார உதவியைப் பெற்றுக் கொண்ட பயன்பெறுநர்களை ஊக்கப்படுத்தும் நிகழ்வு (23) முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில்  நடைபெற்றது.  இந்த நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.க.விமலநாதன் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன் 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டு குடும்ப புனர்வாழ்வு நிலையத்தினால் வழங்கப்பட்ட வாழ்வாதாரத்திட்டத்தில் சிறப்பாக  இன்றுவரையும் செயற்பட்டுக்கொண்டிருக்கும் தெரிவு செய்யப்பட்ட  பயனாளர்களுக்கு … Read more

மருந்துப் பொருட்கள் துறைமுகத்தில் தடுத்து வைப்பா..! நிதி இராஜாங்க அமைச்சர் வெளியிட்டுள்ள விடயம்

கொழும்புத் துறைமுகத்தில் எந்தவொரு மருந்துப் பொருட்களும் தடுத்து வைக்கப்படவில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். இந்திய கடனுதவியின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட மருந்துப் பொருட்கள் தொகையொன்று துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியாகியிருந்த செய்தி குறித்து கருத்து வெளியிடும் ​போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.  மேலும் கூறுகையில், ஏற்றுமதி, இறக்குமதி கட்டுப்பாட்டுச்சபை அல்லது சுங்கத்திணைக்களம் மூலமாக அவ்வாறான மருந்துகள் எதுவும் தடுத்து வைக்கப்பட்டிருக்கவில்லை. மருந்துப் பொருட்களுக்கான வரி அத்துடன் மருந்துப் பொருட்களுக்கு … Read more

தாம் அரசியலுக்கு அன்றி பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கே முன்னுரிமை வழங்குவதாக ஜனாதிபதி பாராளுமன்றத்தில் தெரிவிப்பு

அரசாங்கம் தேர்தலை ஒத்திவைப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்திய போதிலும், தேர்தலை நடத்துவதற்கான உறுதியான திகதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. அரசாங்கம் தேர்தலை ஒத்திவைப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்திய போதிலும், தேர்தல்கள் ஆணைக்குழு தேர்தலை நடத்துவதற்கான உரிய திகதியை இதுவரை சட்டபூர்வமாக அறிவிக்கவில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்தார். பாராளுமன்ற விவாதத்தில் நேற்று (23) கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார். அரசியலுக்கு அன்றி பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கே தான் முன்னுரிமை வழங்குவதாக தெரிவித்த ஜனாதிபதி, நாட்டின் … Read more