அரச ஊழியர்களுக்கான உத்தியோகபூர்வ வெளிநாட்டு பயணங்களை, சாதாரண வகுப்பில் (Economy Class) மட்டுமே பயணிக்கலாம் – ஜனாதிபதி அறிவுறுத்தல்

வெளிநாட்டு பயணங்களுக்கான விமான டிக்கெட்டுகளை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்தின் நிதியைப் பயன்படுத்தும்போது, பிரதம நீதியரசர், உச்ச நீதிமன்ற நீதியரசர்கள், மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் தவிர்ந்த ஏனைய அதிகாரிகள் சாதாரண (Economy Class) வகுப்பு விமான டிக்கெட்டுகளை மாத்திரமே கொள்வனவு செய்ய வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் அறிவித்துள்ளார். இது தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் கையொப்பமிடப்பட்ட 2023 பெப்ரவரி 22 ஆம் திகதி சுற்றறிக்கை பிரதமரின் செயலாளர், … Read more

ஆபத்தான நிலையில் இலங்கை – அவசர நிதியுதவி தேவையென அமெரிக்கா தெரிவிப்பு

இலங்கைக்கு மிக அவசரமான நிதி நிவாரணம் தேவைப்படுவதாக அமெரிக்க திறைசேரி செயலாளர் ஜேனட் எல் யெலன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் நடைபெற்ற ஜி-20 நாடுகளின் நிதியமைச்சர்கள் மற்றும் பிற அதிகாரிகள் பங்கேற்ற மாநாட்டில் அவர் உரையாற்றிய  போது இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். கடன் சுமையால் உலகின் பல நாடுகள் பின்தங்குவதைத் தடுக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று கூறியுள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் தரவுகளின்படி, குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் சுமார் 55 சதவீத நாடுகள் கடன் … Read more

பிரித்தானிய கடவுசீட்டு வைத்திருப்பவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு

பிரித்தானிய கடவுசீட்டில் செய்யப்பட இருக்கும் மாற்றம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவின் மன்னராக சார்லஸ் தெரிவானதை தொடர்ந்து கடவுசீட்டு தொடர்பிலான விதிகளில் ஒரு முக்கிய மாற்றம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சார்லஸ் பெயரால் கடவுசீட்டு அதாவது, தற்போது பிரித்தானிய கடவுசீட்டுகள் மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் பெயரால் வழங்கப்பட்டு வருகின்றன. விதி மாற்றங்களைத் தொடர்ந்து, இனி பிரித்தானிய கடவுசீட்டுகள் மன்னர் சார்லஸ் பெயரால் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய சார்லஸ் மன்னரின் பெயரால், கடவுசீட்டு வைத்திருப்பவரை தடை எதுவுமின்றி நாட்டுக்குள் … Read more

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க வழக்கில் திருப்பம்! நீதிமன்றம் வழங்கியுள்ள அனுமதி

அவுஸ்திரேலியாவில் வன்புணர்வு குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட இலங்கை அணியின் பிரபல கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு வழங்கப்பட்ட பிணை நிபந்தனைகளை தளர்த்த சிட்னி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க தனது பிணை நிபந்தனைகளை மீளாய்வு செய்யுமாறு கோரி இன்று (23) மனுவொன்றினை சமர்ப்பித்துள்ளார். நீதிமன்ற அனுமதி இதனை தொடர்ந்து குறித்த வழக்கினை ஆராய்ந்த சிட்னி நீதிமன்றம் பிணை நிபந்தனைகளை தளர்த்தி உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அவர் மீண்டும் வாட்ஸ்அப்பை பயன்படுத்தவும், இரவில் வெளியே செல்லவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. … Read more

இலங்கையை அச்சுறுத்தும் நோய் – மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

இலங்கையில் எட்டு மாவட்டங்களில் யானைக்கால் நோய் பரவும் அபாயம் காணப்படுவதாக யானைக்கால் நோயைக் கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது. கொழும்பு, களுத்துறை, மாத்தறை, காலி, ஹம்பாந்தோட்டை, கம்பஹா, புத்தளம் மற்றும் குருநாகல் மாவட்டங்களில் இந்நோய் தொடர்ந்து பரவி வருகின்றது. கடந்த வருடத்தில் மாத்திரம் 400 புதிய நோயாளர்கள் இனங்காணப்பட்டதாக யானைக்கால் நோயைக் கட்டுப்பாட்டு அமைப்பின் பணிப்பாளர் வைத்தியர் உதய ரத்நாயக்க தெரிவித்துள்ளார். 2030ஆம் ஆண்டளவில் இந்நோயை இலங்கையிலிருந்து ஒழிப்பது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும். நோயாளிகளைக் கண்டறிந்து சிகிச்சை அளிப்பதற்காக, இரத்தப் … Read more

வறுமை காரணமாகக் குடும்பப் பெண் செய்த காரியம்: முல்லைத்தீவில் சம்பவம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் வறுமையில் வாழ்ந்து வந்த குடும்பப் பெண் ஒருவர் கஞ்சா கடத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்றைய தினம் (22.02.2023) சிறப்பு அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்ட பெண்ணை, இன்றைய தினம் (23.02.23) முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புதறிகுடா கிராமத்தைச் சேர்ந்த 19 வயதுடைய ஒரு பிள்ளையின் தாய் ஒருவர், தனது கணவனைப் பிரிந்து வாழ்ந்து நிலையில், … Read more

கல்வி அமைச்சு வளாகத்திற்குள் நுழைந்து பிக்கு மாணவர்கள் ஆர்ப்பாட்டம் (Video)

முதலாம் இணைப்பு கல்வி அமைச்சினுள் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட சில பிக்குகள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்றைய தினம் (23.02.2023) பிற்பகல் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட பிக்குகள் குழுவொன்று பேரணியாக சென்று கல்வி அமைச்சுக்குள் பிரவேசித்து வளாகத்தில் போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்த நிலையில் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். பத்தரமுல்லையில் அமைந்துள்ள கல்வி அமைச்சு வளாகத்திற்குள் நுழைந்து பௌத்த மற்றும் … Read more

திடீரென முடிவை மாற்றிய IMF – இலங்கைக்கு மீண்டும் நிபந்தனை விதிப்பு

இலங்கைக்கு கடன் வழங்குவதற்காக முன்வந்த நிபந்தனைகளை சர்வதேச நாணய நிதியம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. சீனாவின் கடன் உறுதிப்பத்திரம் இன்றி இலங்கைக்கான கடனை விடுவிக்க முடியாது என சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் தலைவர் கிருஷ்ணா சீனிவாசன் தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் பெறுவதற்கான நிதிக் குழுவின் ஒப்புதலைப் பெற இலங்கைக்கு சிறந்த வழி சீனா உட்பட இருதரப்பு கடன் வழங்குநர்களிடமிருந்து நிதி உத்தர வாதங்களைப் பெறுவதாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சீனாவின் … Read more

முறையான தொழிற்கல்வி இல்லாத கட்டுமான தொழிலாளர்களுக்கு தேசிய தொழில் தகுதிச் சான்றிதழ்

கட்டுமான துறையில் அனுபவம் உள்ள கைவினைஞர்கள் ஆனால் முறையான தொழிற்கல்வி இல்லாதவர்களுக்கு தேசிய தொழில் திறன் சான்றிதழ்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது நிர்மாணக் கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபை (CIDA) மற்றும் மூன்றாம் நிலைக் கல்வி, தொழிற்கல்வி ஆணைக்குழுக்களின் (TVEC) ஒப்பந்தத்தின் படி, இது செயற்படுத்தப்படும். நிர்மாணக் கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ஆர். எச். ரூவின்ஸ் மற்றும் மூன்றாம் நிலைக் கல்வி, தொழிற்கல்வி ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கே.ஏ. லலிததீர, இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு நேற்று (22) கையொப்பமிட்டுள்ளார்கள். இது கொழும்பு 07, சவ்சிறிபாயவில் அமைந்துள்ள நிர்மாணக் கைத்தொழில் … Read more

மன உளைச்சலுக்கு ஆளாகுபவர்களின் ஆற்றுப்படுத்தலுக்கான உளநல பாதுகாப்பு நிலையம் திருகோணமலையில் திறப்பு!

உளவள பாதுகாப்பிற்கான திருகோணமலை மாவட்ட, உளவள நிலைய அங்குரார்ப்பண நிகழ்வு துளசிபுர நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு திணைக்களத்தில், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.முரளிதரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு திறந்து வைத்தார். பெண்கள், வீட்டு வன்முறை மற்றும் 18 வயதுக்குட்பட்ட பால்நிலை போன்றவற்றால் மன உளைச்சலுக்கு ஆளாகுபவர்களின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து வருகின்றது. அவர்களை ஆற்றுப்படுத்துவதற்கான முயற்சினை திருமலை மாவட்ட பெண்கள் அமைப்பின் பணிப்பாளர் பிரசாந்தினி உதயகுமார் முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்தார். சமீபத்தில் இடம்பெற்ற … Read more