வாகன உதிரிப் பாகங்களின் விலை பாரியளவில் உயர்வு

வாகன உதிரிப் பாகங்களின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளதாக பஞ்சிகாவத்த வாகன உதிரிப் பாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். வாகன உதிரிப் பாகங்களை இறக்குமதி செய்வதற்கான கடனுதவியை வங்கிகள் வழங்க முடியாத நிலையில் உள்ளதன் காரணமாகவும், ஏனைய சில காரணங்களாலும் இவ்வாற வாகன உதிரிப் பாகங்களின் விலை அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  உதிரிப் பாகங்களுக்கு தட்டுப்பாடு மேற்குறிப்பிட்ட  காரணங்களால் வாகன உதிரிப் பாகங்களுக்கு பாரியளவில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஐரோப்பிய நாடுகளில் தயாரிக்கப்பட்ட வாகனங்களுக்கான உதிரிப்பாகங்களுக்கு அதிக தட்டுப்பாடு இல்லையென்றாலும், … Read more

மாணவர்களின் சீருடை துணி விநியோகம் இன்று ஆரம்பம்

2023ஆம் ஆண்டுக்கான பாடசாலை மாணவர்களின் சீருடை துணி விநியோகம் இன்று (23) முதல் ஆரம்பமாவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பாராளுமன்றத்தில் இன்று (23)  உரையாற்றிய அமைச்சர் இதற்கென 12 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. பாடசாலைப் பாடப்புத்தகங்களை விநியோகிப்பதற்கென 16 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். பாடசாலை பாடப் புத்தகங்கள் மற்றும் பாடசாலை சீருடைகளுக்காக செலவிடப்படும் தொகை ஓராண்டில் நான்கு மடங்கு அதிகரித்துள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்தார். கடந்த வருடம் பாடப்புத்தகங்களை அச்சிடுவதற்கான செலவு … Read more

நிதிக் குழுவின் தலைவர் நியமனத்தில் நிலையியற் கட்டளைகள் மீறப்படவில்லை…

பாராளுமன்ற தெரிவுக்குழுவின் பெரும்பான்மையினரின் சம்மதத்துடன் நிதிக்குழுவின் தலைவர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும்,  தலைவர் நியமனத்தில் பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் மீறப்படவில்லை எனவும் ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். இது தொடர்பில் மக்கள் மத்தியில் தவறான கருத்தை ஏற்படுத்தும் நோக்கில் எதிர்க்கட்சிகள் செயற்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இன்று (23) பாராளுமன்றத்தில் கூடிய பாராளுமன்ற தெரிவுக்குழு நிதிக்குழுவின் தலைவராக திரு.மயந்த திசாநாயக்கவை நியமித்ததுடன், அந்த நியமனத்தின் பின்னர்  அமைச்சர் இதனைத் தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா நேற்று எதிர்க்கட்சிகள் என்னை நிதிக்குழு தலைவராக முன்மொழிந்தன. எதிர்க்கட்சிகளின் ஒரே பெயராக இது முன்மொழியப்பட்டது. அதற்கு சபாநாயகர் சம்மதம் தெரிவித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல என்னிடம் தெரிவித்தார். இன்று மீண்டும் தேர்வுக்குழு கூடியது. மீண்டும் எனது பெயர் மட்டுமே எதிர்க்கட்சி உறுப்பினர்களால் முன்மொழியப்பட்டது. தெரிவுக்குழுவில் அரசாங்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் திரு.மயந்த திசாநாயக்கவின் பெயரை முன்மொழிந்தனர். எதிர்க்கட்சிக் குழுவின் பேச்சைக் கேட்காமல் மயந்த திஸாநாயக்க நியமிக்கப்பட்டு தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தினார்கள். நிதிக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டவர் பற்றிய பிரச்சனை அல்ல இது. இங்கு அரசாங்கம் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சி எம்.பி ஒருவருக்கு தலைவர் பதவி வழங்கப்பட வேண்டும் என நிலையியற் கட்டளையில் உள்ளது. இந்த வரிவிதிப்பு முறைகள் சரியா தவறா என்று நாடாளுமன்றக் குழு மூலம் அரசாங்கம் என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதை விமர்சித்து, கேள்விகள் கேட்கவும், அதைக் காட்டவும் இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. இங்கே வந்து பேசி ஒன்றாக வேலை செய்யுங்கள். ஆனால் அவர்கள் அதைச் செய்வதில்லை. எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. நான் பதவிகளை எதிர்பார்த்து வேலை செய்யவில்லை. பாராளுமன்ற உறுப்பினர். ரவூப் ஹக்கீம்  இந்தத் தேர்வுக் குழுவில் நானும் ஒரு உறுப்பினராகப் பங்கேற்றேன். இதற்கு எதிர்க்கட்சி எம்.பி ஒருவரை நியமிக்க வேண்டும் என நிலையியற் கட்டளைகளில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி குழுவால் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்படும் மிகவும் பொருத்தமான நபரை ஏற்றுக்கொள்வது மட்டுமே அதன் செயல்முறையாக இருக்க வேண்டும். ஆனால், அதைச் செய்யாமல், பெரும்பான்மையான குழுவில் ஆளும் கட்சிப் பிரதிநிதிகள் இருப்பதால், அந்தப் பெரும்பான்மையைப் பயன்படுத்திக் குழுவின் முடிவாக வேறொரு பெயர் முன்மொழியப்பட்டது. திரு.ஹர்ஷத சில்வா மிகவும் பொருத்தமானவர் என்று நாம் கூறுகின்றோம். இவ்வாறான செயற்பாடுகளால் நிதிக்குழுவின் நம்பகத்தன்மை வீழ்ச்சியடைந்து சர்வதேச சமூகத்திற்கு தவறான செய்தி அனுப்பப்படுகிறது. பாராளுமன்ற உறுப்பினர். அசோக அபேசிங்க  திரு.ஹர்ஷ டி சில்வா, நிதிக்குழுவில் எதிர்க்கட்சிப் பிரதிநிதி என்ற வகையில், நாட்டில் ஏற்பட்டுள்ள அனைத்துப் பிரச்சினைகளையுசுட்டிக்காட்டி அவற்றை சரிசெய்தார். இது ஆளுங்கட்சியால் காத்திருக்க முடியாமல் செய்த காரியம். பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா  நானும் நிதிக்குழு உறுப்பினராக உள்ளேன். எதிரணியை பிரதிநிதித்துவப்படுத்தும் திரு.ஹர்ஷ டி சில்வா கடந்த காலங்களில் தனது பணியை வெற்றிகரமாக செய்துள்ளார். எதிர்க்கட்சியாக ஒரே ஒரு பெயரைத்தான் நாங்கள் முன்மொழிந்தோம். இந்த ஆதரவைப் பெறாமல் பிரிவினையை உருவாக்கவே ஆளுங்கட்சி நினைக்கிறது. ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க  நாட்டில் தவறான சித்தாந்தத்தை உருவாக்க எதிர்க்கட்சிகள் முயற்சிக்கின்றன. நிலையியற் கட்டளையில் எந்த இடத்திலும் எதிர்க்கட்சிகளால் பரிந்துரைக்கப்பட்ட ஒருவரை தலைவராக நியமிக்க வேண்டும் என்று கூறவில்லை. எதிர்க்கட்சியில் இருந்து ஒருவரை நியமிக்க வேண்டும் என்று நிலையியற் கட்டளைகள் கூறுகின்றன. ஏனெனில் … Read more

ஜப்பான் தூதரக அரசியல் ஆலோசகர் – விஜயகலா மகேஸ்வரன் சந்திப்பு (Photos)

ஜப்பான் தூதரக அரசியல் ஆலோசகர் – ஐக்கிய தேசிய கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளரும் முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சருமான விஜயகலா மகேஸ்வரனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இச்சந்திப்பு கொழும்பில் உள்ள விஜயகலா மகேஸ்வரனின் இல்லத்தில் நேற்றைய தினம் (21.02.2023) இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பின்போது, வட மாகாணத்தின் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்தும், வட மாகாணத்தில் நிலைமை தொடர்பாகவும் விஜயகலா மகேஸ்வரனிடம் ஜப்பான் தூதரகத்தின் அரசியல் ஆலோசகர் கானா மொரிவகி கலந்துரையாடியுள்ளார். அவரிடம் தேசிய மற்றும் வடக்கின் அரசியல் … Read more

விடைத்தாள் மதிப்பீடுக்கான கொடுப்பனவை அதிகரிக்க நடவடிக்கை

க.பொ.த உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கான கொடுப்பனவை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த இன்று (23) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்… கொவிட் 19 தொற்றால் பிற்போடப்பட்ட க.பொ.த உயர் தரப்பரீட்சை, அரசாங்கத்தினால் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இந்த பரீட்சை மதிப்பீட்டு பணியை மேற்கொள்வதற்கு ஆசிரியர்கள் இல்லாமை பெரும் பிரச்சினையாக காணப்படுகிறது. இந்தப் பரீட்சை மதிப்பீட்டு பணிக்காக 19,000 ஆசிரியர்கள் தேவைப்படுகின்றனர். ஆனால் 15,000 ஆசிரியர்கள் மாத்திரமே … Read more

இங்கிலாந்தில் வாரத்தில் 4 நாட்கள் வேலை திட்டம் வெற்றி

இங்கிலாந்தில் வாரத்தில் 4 நாட்கள் கடமையாற்றும் திட்டத்தை பெரும்பாலான நிறுவனங்களின் உரிமையாளர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். இங்கிலாந்தில் வாரத்துக்கு 5 நாட்கள் வேலை முறை என்பது சோர்வை ஏற்படுத்துவதாக கூறி 4 நாட்கள் மட்டுமே வேலை பார்க்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த வலியுறுத்தப்பட்டது. வாரத்திற்கு 4 நாட்கள் வேலை திட்டம் சோதனை முயற்சியாக அமல்படுத்தப்பட்டது. இத்திட்டத்துக்கு 100 நிறுவனங்கள் ஒப்புதல் அளித்தன. இந்த திட்டத்தால் சம்பளம், சலுகைகள் எதுவும் குறைக்கப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டது. இத்திட்டத்தை மிகப்பெரியளவில் இங்கிலாந்து நடைமுறைப்படுத்தியது. … Read more

களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் நெல் கொள்வனவு ஆரம்பம்

அரசாங்கத்தின் நாடளாவிய ரீதியில் பிரதேச செயலகங்கள் ஊடாக நெல் கொள்வனவு செய்யும் கொள்கைத் தீர்மானத்தின் பிரகாரம் , மட்டக்களப்பு மண்முனை தென் எருவில்பற்று களுவாஞ்சிகுடி பிரதேச செயலக பிரிவில் பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரத்னம் மற்றும் உதவி பிரதேச செயலாளர் சத்யகெளரி தரணிதரன் ஆகியோரால் நெல் கொள்வனவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன்போது 14% வீதமான காய்ந்த நெல் ஒரு கிலோ 100 ரூபா வீதமும், பச்சை நெல் 14% வீதம் தொடக்கம் 22% வீதம் வரை ஒரு கிலோ … Read more

முதலாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா-அவுஸ்திரேலியா அணிகள்

மகளிர் ரி20 உலக கிண்ண தொடரின் முதலாவது அரையிறுதி போட்டியில் இந்தியா, அவுஸ்திரேலியா அணிகள் இன்று (23) போட்டியிடவுள்ளன. 8 ஆவது மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது.  Cape Town apy; யில் நடைபெறவுள்ள இந்தப் போட்டி, இலங்கை நேரப்படி இன்று மாலை 6.30மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இந்த தொடர் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் குழு 1 இல் இருந்து அவுஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளும், குழு 2 … Read more

'சீதாவாக்கை ஒடிஸ்ஸி' ரயில் சேவை 26 ஆம் திகதி முதல் ஆரம்பம்

‘சீதாவாக்கை ஒடிஸ்ஸி’ ரயில் சேவை இம் மாதம் 26 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் என்று ரயில்வே பொதுமுகாமையாளர் வி.எஸ். பொல்வத்தகே தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (22) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். சீதாவாக்கை பிரதேசத்தை ஒரு புதிய சுற்றுலாத் தளமாக விரிவுபடுத்தும் நோக்குடன்இ போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் புதிய சீதாவாக்கை ஒடிஸ்ஸி ரயில் சேவையை அறிமுகப்படுத்தும் நிகழ்வு அண்மையில் … Read more