திலீபனின் நினைவிடத்தில் மனவருத்தத்திற்கு ஆளான இலங்கை வந்துள்ள பிரபல தென்னிந்திய நடிகர்

அகிம்சை வழியில் போராடி தன் உயிரை நீத்த தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திற்கு சென்றமை தொடர்பில் தனது அனுபவத்தை பிரபல தென்னிந்திய நடிகர் தீனா பகிர்ந்து கொண்டுள்ளார். லங்காசிறியின் ஊடக அனுசரணையில் அண்மையில் யாழ்ப்பாணத்தில் மாபெரும் இசை நிகழ்ச்சியொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக நடிகர் தீனா இலங்கைக்கு குறிப்பாக யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்தார். இந்த நிலையில் அவர் யாழ்ப்பாணத்தில் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டிருந்த போது தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திற்கு சென்றுள்ளார். திலீபனின் நினைவிடத்தில் … Read more

பாராளுமன்ற நிதி தெரிவுக் குழுவின் தலைமைத்துவத்தினை அரசிற்கு எடுப்பதற்கு எவ்வித எதிர்பார்ப்பும் இல்லை

பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளை இடைநிறுத்தி பாராளுமன்ற நிதி தெரிவுக் குழுவின் தலைவர் பதவியை அரசாங்கம் கைப்பற்றும் என்பதில் எவ்வித எதிர்பார்ப்பும் இல்லை என ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான திரு.பிரசன்ன ரணதுங்க சுட்டிக்காட்டினார். பாராளுமன்ற நிதி தெரிவுக் குழுவின் தலைவர் பதவியை எதிர்க்கட்சிக்கு வழங்கும் தீர்மானத்தில் மாற்றம் இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எவ்வாறாயினும், சம்பந்தப்பட்ட தலைவர் நியமனம் இரு தரப்பினரின் இணக்கப்பாட்டுடன் மேற்கொள்ளப்பட வேண்டுமென அவர்  நேற்று (22) … Read more

சில இடங்களில் இடியுடன் கூடிய மழை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு தேசியவளி மண்டலவியல்நிலையத்தின் முன்னறிவிப்புப்பிரிவால் வெளியிடப்பட்டது. 2023 பெப்ரவரி23ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2023 பெப்ரவரி23ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடியசாத்தியம்  காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தியா – இலங்கை தொழில்துறையை மேம்படுத்த தனித்தனி தேசிய திட்டம்

இந்தியா, இலங்கை ஆகிய இரு நாடுகளும் தேயிலை மற்றும் கோப்பி தொழில்துறையை மேம்படுத்த தனித்தனி தேசிய திட்டங்களைப் புதுப்பித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை வேல்ட் டீ செய்தித்தளம் இதனைத் தெரிவித்துள்ளது. இந்தியாவின் வடகிழக்கில் அமைந்துள்ள முக்கிய மாநிலமான அஸ்ஸாமின் தேயிலைத்துறையில் கட்டமைக்கப்பட்ட ஒரு திட்டத்தை உருவாக்கி வருகிறது. தேயிலை இதன்படி புருனே, கம்போடியா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, மியன்மார், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்நாம், பங்களாதேஷ், பூட்டான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுடன் இணைப்புத்திட்டத்தையும் அறிவித்துள்ளது. இதன் … Read more

கடற்பரப்புகளில் ,காற்றின் வேகம் அதிகரிக்கக்கூடிய சாத்தியம்

இலங்கைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல்நிலை,தேசியவளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப்பிரிவால் வெளியிடப்பட்டது.  அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு   2023 பெப்ரவரி 23ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.   மழை நிலைமை: நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.   காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்குதிசையிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் … Read more

அரச மருத்துவமனைகளுக்கு டீசல் வழங்க ஜப்பான் 46 மில்லியன் டொலர்கள் நன்கொடை

நாடு முழுவதும் உள்ள அரச மருத்துவமனைகளுக்கு டீசல் வழங்குவதற்காக ஜப்பானிய அரசாங்கம் 46 மில்லியன் டொலர்களை மனிதாபிமான நன்கொடையாக வழங்கியுள்ளது. இது தொடர்பான ஒப்பந்தம், கைச்சாத்திடும் நிகழ்வு நேற்று (22) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் முன்னிலையில் இடம்பெற்றது. நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிரிவர்தன மற்றும் ஜப்பான் தூதுவர் மிசுகோஷி ஹிடேகி (Mizukoshi Hideaki) ஆகியோர் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர். இந்த உடன்படிக்கையின் பிரகாரம் ஜப்பான் அரசாங்கம் இலங்கைக்கு 20 மில்லியன் லீற்றர் … Read more

உலகெங்கும் குழப்பங்களை விதைத்துள்ள மேற்கத்திய நாடுகள் – புடின் உறுதி

ரஷ்யா – உக்ரைன் இடையிலான போர் துவங்கி ஓராண்டு நிறைவடைய உள்ள நிலையில் போரில் ரஷ்யாவை தோற்கடிப்பது என்பது சாத்தியமில்லாதது என அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடின் கூறியுள்ளார். உக்ரைன் மீதான போர் துவங்கி ஓராண்டு நிறைவு பெற்றுள்ள நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உரையாற்றுகையில் கூறியதாவது, போரை தவிர்க்க ரஷ்யா அனைத்து முயற்சிகளையும் எடுத்தது. ஆனால், மேற்கத்திய நாடுகளின் ஆதரவை பெற்ற உக்ரைன், ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள கிரிமீயா நகரை தாக்க முயற்சி செய்தது. … Read more

சீனாவின் ஒரு பாதை திட்டத்தால் அச்சமடைந்துள்ள அமெரிக்கா-செய்திகளின் தொகுப்பு

சீனாவின் ‘ஒரு பாதை – ஒரு மண்டலம்’ என்ற செயற்திட்டம் உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளதாக பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார். இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார். அமெரிக்க உள்ளிட்ட ஜரோப்பா நாடுகள் சீனாவில் இந்த பெருந்திட்டத்தை கண்டு அஞ்சியுள்ளதாக எஸ்.பி.திசாநாயக்க குறிப்பிடுகின்றார். இந்த திட்டத்தின் முக்கிய மையங்களாக இலங்கை மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகள் உள்ளதாகவும் இந்த திட்டத்தின் ஊடாக இலங்கைக்கு மிகப்பெரிய பயன் காத்திருப்பதாக குறிப்பிடுகின்றார். உலகத்தில் … Read more

ரஷ்யாவை தாக்க திட்டமிடவில்லை! அமெரிக்கா தெரிவிப்பு

போலந்து விஜயத்தின் போது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கூறுவது போல் ரஷ்யாவை தாக்க மேற்கத்திய நாடுகள் திட்டமிடவில்லை என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். எனவே ரஷ்ய அதிபரின் கருத்து அடிப்படை ஆதாரமற்றது என்று அமெரிக்க அதிபர் குறிப்பிட்டுள்ளார். மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவை தாக்க திட்டமிட்டுள்ளதாக ரஷ்ய அதிபர் கூறிய கருத்திற்கு அமெரிக்க அதிபர் இவ்வாறு பதிலளித்துள்ளார். உக்ரைன் விஜயம் பலத்த தாக்கம் அண்டை நாடுகளுடன் நிம்மதியாக வாழ விரும்பும் லட்சக்கணக்கான ரஷ்யர்கள் எதிரிகள் அல்ல என்று … Read more