இலங்கையின் மிக நீண்ட தொடர் போராட்டம்…!(Video)

இலங்கையில் தொடர்ந்து ஏழாவது ஆண்டாக நடைபெற்று வரும் போராட்டத்தில் நூற்றுக்கணக்கான தமிழ் உறவுகள் கலந்து கொண்டனர். இப்போராட்டம் நேற்றைய தினம் (21.02.2023) கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது. முதுமை, வறுமை, கோவிட் தொற்று அச்சுறுத்தல் உள்ளிட்ட பல தடைகளையும் மீறி வீதியில் இறங்கிய தமிழ்த் தாய்மார்கள், பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் அல்லது அவர்களால் கடத்தப்பட்ட பின்னர், காணாமல் போன தமது அன்புக்குரியவர்களின் கதி என்னவென்பதை வெளிப்படுத்துமாறு வலியுறுத்தும் போராட்டம் ஏழாவது ஆண்டை எட்டியுள்ளது. இலங்கையில் மிக நீண்ட தொடர்ச்சியான … Read more

ஹோமாகமயில் பதற்றம் – பிக்குகளுக்கும் பொலிஸாருக்கும் இடையில் மோதல்

ஹோமாகம பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகத்தின் பல்கலைக்கழகங்களுக்கிடையேயான பிக்குகள் அமைப்பினால் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிட்டிபன சந்தியில் மாணவர் பிக்குகள் சத்தியாக்கிரகத்தை ஆரம்பிப்பதற்கு தற்காலிக கூடாரத்தை அமைக்க முயற்சித்துள்ளனர். அப்போது, ​​அதற்கு பொலிஸார் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலையின் போது பொலிஸ் அதிகாரி ஒருவர் தள்ளுப்பட்டு கீழே விழுந்துள்ளார். Source link

இலங்கையில் ஜேர்மன் பெண்ணுக்கு ஏற்பட்ட விரும்பத்தகாத அனுபவம்! சுற்றிவளைத்த சாரதிகள்

இலங்கையில் முச்சக்கரவண்டி சாரதிகள் சிலரால் தாம் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக ஜேர்மன் சுற்றுலாப் பயணியொருவர் வெளியிட்ட காணொளியொன்று வைரலாகி வருகிறது. மாத்தறையில் வைத்து போக்குவரத்து சேவையை வழங்கும் செயலியினூடாக பதிவு செய்யப்பட்ட நிலையில் வருகை தந்த முச்சக்கரவண்டியில் தாம் பயணிக்க முயன்றதற்காக சாதாரண முச்சக்கர வண்டி சாரதிகள் தன்னையும், நண்பர்கள் குழுவையும் துன்புறுத்தியதாக குறித்த சுற்றுலாப்பயணி குற்றம்சாட்டியுள்ளார். சாதாரண முச்சக்கரவண்டி சாரதிகள் குறித்த பெண் கடந்த 18ஆம் திகதி பேருந்து மூலம் மாத்தறைக்கு வந்ததாகவும், மிரிஸ்ஸ கடற்கரைக்குச் செல்வதற்காக … Read more

இலங்கை வரும் சுற்றுலா பயணிகளுக்கு புதிய நடைமுறை அறிமுகம்

 இலங்கை சுற்றுலா துறையை ஊக்குவிப்பதற்காக பயண அட்டை (Travel Card) ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பயண அட்டை அறிமுகம் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையில் நடத்தப்பட்டுள்ளது. இந்த அட்டையை வழங்கிய பின்னர், சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையில் பதிவுசெய்யப்பட்ட சுற்றுலாத் துறையில் பல்வேறு சேவைகளை வழங்குபவர்கள் சுற்றுலாப் பயணிகளைக் கையாள்வதில் சிறப்புச் சலுகைகளைப் பெறுவார்கள். மேலும், இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையைக் கணக்கிடுதல், தாங்கள் கொண்டு வரும் … Read more

வியட்நாமில் இலங்கையரொருவர் செய்த மோசமான செயல்

இலங்கையர் ஒருவர் மீது வியட்நாமில் பணம் திருட்டு குற்றச்சாட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இலங்கையை சேர்ந்த 42 வயதான அருண ருக்ஷான் ராஜபக்ச என்பவர் மீதே இவ்வாறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த இலங்கையர் கடந்த 2020 மார்ச் முதலாம் திகதி ஹோ சி மின் நகரில் உள்ள ‘டான் சோன் நாட்’ சர்வதேச விமான நிலையம் வழியாக வியட்நாமிற்குள் நுழைந்துள்ளார். சட்ட நடவடிக்கை வியட்நாமின் பல பகுதிகளில் வேலை தேடி அலைந்து தொழில் கிடைக்காத காரணத்தினால் கடந்த … Read more

சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதில் கட்டாயமாக்கப்பட்டுள்ள புதிய நடைமுறை

சாரதி அனுமதிப்பத்திரத்திற்காக புதிதாக விண்ணப்பிக்கும் அனைவருக்கும் அறிவித்தல் ஒன்று வழங்கப்பட்டுள்ளது. சாரதிகளுக்கு அடிப்படை முதலுதவி பற்றிய அறிவை வழங்கும் நோக்கில் புதிய திட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,“சாரதி அனுமதிப்பத்திரத்திற்காக புதிதாக விண்ணப்பிக்கும் அனைவருக்கும் முதலுதவி தொடர்பான அடிப்படை தௌிவூட்டலை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதலுதவி தொடர்பான அடிப்படை தௌிவூட்டல் இதற்கமைய, சாரதி அனுமதிப்பத்திரத்திற்காக புதிதாக விண்ணப்பிக்கும் அனைவரும் தமது திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்படும் முதலுதவி … Read more

அந்நியன் அவதாரம் எடுக்கும் ரணில்! பிடுங்கப்படும் பஸிலின் அதிகாரங்கள்(Video)

நேற்று நள்ளிரவு முதல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் உத்தியோகபூர்வமாக கிடைத்துள்ளது, ஆனால் அவர் நாடாளுமன்றத்தை கலைக்க மாட்டார் என புலனாய்வுச் செய்தியாளரும் அரசியல் ஆய்வாளருமான எம்.எம்.நிலாம்டீன் தெரிவித்துள்ளார். எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் தற்போது கிடைப்பதால், மொட்டு எம்.பிக்கள் அவர் வசமாகின்றார்கள்.  முழு எம்பிக்களும் ரணில் வசமாகின்றனர். இவ்வளவு காலம் இருந்த பஸில் ராஜபக்ச விலக்கப்படுவார்,  … Read more

தங்கத்தின் விலையில் இன்று ஏற்பட்டுள்ள சடுதியான மாற்றம்

உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இதன்படி, இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 668,214 ரூபாவாக பதிவாகியுள்ளது. இலங்கையின் இன்றைய தங்க நிலவரம் இலங்கையில் கடந்த இரு மாதங்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், இடையில் சிறு வீழ்ச்சி பதிவாகியிருந்ததுடன் தற்போது மீண்டும் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. இந்த நிலையில், 24 கரட் தங்கப் பவுண் ஒன்று இன்றைய தினம் 188,600 … Read more

இலங்கை வாழ் இளைஞர், யுவதிகளுக்கு மகிழ்ச்சித் தகவல்

கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தித் திட்டத்தின் மூலம் இளைஞர் யுவதிகளுக்கு பாரிய அளவு வேலைத்திட்டங்கள் ஏற்படுத்தப்படவுள்ளது. அதற்கமைய, 143,375 புதிய தொழில் வாய்ப்புகள் உருவாக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்குவதன் மூலம் நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல முடியும் என கொழும்பு துறைமுக நகரத் திட்டம் தெரிவித்து்ளளது. இதனால் ஆண்டு பொருளாதார மதிப்ப்பு 13.8 பில்லியன் அமெரிக்க டொலர்களை கூடுதலாக உருவாக்கப்படும் என திட்டத்தின் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.  Source link

இந்திய பெருங்கடலில் சூறாவளி – சர்வதேச விண்வெளி நிலையம் எச்சரிக்கை

இந்திய பெருங்கடலில் வெப்பமண்டல சூறாவளி உருவாகியிருப்பதாக சர்வதேச விண்வெளி நிலையம் தெரிவித்துள்ளது. இந்த புயல் இந்தியப் பெருங்கடல் தீவான மொரிஷியசை நோக்கி நகருகிறது. புயல் இன்று (21) மொரிஷியசை தாக்கும் என்றும், சூறாவளியால் மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்பு உள்ளதாகவும், மொரிஷியஸ் நேரடி அச்சுறுத்தலை எதிர் கொண்டுள்ளதாகவும் அந்நாட்டு வானிலை ஆய்வு மத்திய நிலையம் எச்சரித்துள்ளது. சூறாவளி புயல் ஒரு பயங்கரமான சூறாவளியாக மாற்றமடைந்து தாக்கங்களை ஏற்படுத்தும் எனவும் கனமழை வெள்ளம் … Read more