அரச ஊழியர்களுக்கு கொடுப்பனவு – அமைச்சர் வாக்குறுதி

இந்த வருட இறுதிக்குள் அரச ஊழியர்களுக்கு சில கொடுப்பனவுகளை வழங்கவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். கன்னோருவ தேசிய விவசாய தகவல் தொடர்பாடல் நிலையத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்ச்சியின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதேவேளை, இம்முறை உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கு ஊதியம் இல்லாமல் விடுமுறையில் இருக்கும் அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படாத அபாயம் ஏற்பட்டுள்ளது. பொது நிர்வாக அமைச்சின் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதற்கமைய, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. தேர்தல் … Read more

வீதி உணவு முறையை அபிவிருத்தி செய்வதற்கான வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்துவோம்… – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க

மாதிவெல மற்றும் கிம்புலாவல பிரதேசங்களில் உள்ள தெருவோர உணவு விற்பனை நிலையங்கள் ஒருபோதும் அகற்றப்படாது என ஆளுங் கட்சியின் பிரதான அமைப்பாளரும், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க இன்று (21) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். வீதி உணவு முறை வெற்றிகரமான வேலைத்திட்டம் எனவும், எவரும் தடுக்கப்படாத வகையில் அந்த முறையை நடைமுறைப்படுத்துவதற்கான வேலைத்திட்டம் தயாரிக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார். இன்று (21) பாராளுமன்றத்தில் ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் திரு ஹர்ஷத சில்வா … Read more

அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழான கட்டளை 23ஆம் திகதி விவாதத்துக்கு

அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழ் ஜனாதிபதியினால் பிறப்பிக்கப்பட்ட கட்டளையை எதிர்வரும் 23ஆம் திகதி வியாழக்கிழமை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேர்தன தலைமையில் இன்று (21) பிற்பகல் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக தெரிவித்தார். இதற்கமைய இந்த விவாதம் மு.ப 9.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை நடைபெறவுள்ளது. 1978ஆம் ஆண்டின் 61ஆம் இலக்க அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழ் … Read more

பாராளுமன்றச் சட்டத்தின் மூலம் தேசிய பாதுகாப்பு பேரவையை சட்டமாக்குவதற்கு தீர்மானம்

தேசிய பாதுகாப்புபேரவையை பாராளுமன்ற சட்டத்தின் மூலம் சட்டப்பூர்வமாக்குவதற்கு, சட்டமூலமொன்றைத் தயாரிக்குமாறு சட்ட வரைஞருக்கு ஆலோசனை வழங்க அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதுதொடர்பாக ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட ஆலோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது. இன்று (21) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சரவை பேச்சாளரும், அமைச்சருமான கலாநிதி பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்தார்.இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் தினித் சிந்தக்க கருணாரத்னவும் கலந்துகொண்டார். கடந்த ஜனவரி 12 ஆம் திகதி அன்று உச்ச நீதிமன்றத்தின் … Read more

பாடசாலை செய்தி வெளியீடு ஊடக அமைச்சரிடம் கையளிப்பு

அரசாங்க தகவல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட பாடசாலை செய்தி பருவ வெளியீடு, திணைக்களத்தின் உதவி செய்திப் பணிப்பாளர் ஹர்ஷ அபேகோனால் அமைச்சரவைப் பேச்சாளரும், வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கலாநிதி பந்துல குணவர்தனவிடம் கையளிக்கப்பட்டது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (21) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டினைத் தொடர்ந்து இந்த வெளியீடு, கையளிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் அரசாங்க தகவல் திணைக்களத்தின் முன்னாள் தவல் பணிப்பாளர் நாயகம் மொஹான் சமரநாயக்கவும் கலந்துகொண்டார்.

ஜி. எஸ். பி. பிளஸ் சலுகையை தொடர்ந்தும் பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கம் முனைப்புடன் செயற்பட்டு வருகிறது

நாட்டிற்கு ஜி. எஸ். பி. பிளஸ் சலுகையை தொடர்ந்தும் பெற்றுக் கொள்வதற்கு அரசாங்கம்  முனைப்புடன் செயற்பட்டு வருவதாக அமைச்சரவைப் பேச்சாளரும், வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (21) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும், சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளக்கூடிய குறிகாட்டிகளுக்கு அமைவாகவே நாட்டின் அரச நிறுவாகம் இடம்பெறுகிறது.இதற்கு  அப்பால் அரசாங்கம் தன்னிச்சையாக செயற்பட மாட்டாது என்றும் … Read more

பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு மாற்று முன்மொழிவுகள் இருந்தால் அவற்றை சர்வதேச நாணய நிதியத்திடம் சமர்ப்பிக்க வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கத் தயார் – ஜனாதிபதி கண்டியில் தெரிவிப்பு

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இரத்தம்

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் இரத்ததான நிகழ்வு, அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா தலைமையில் மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஸ்ரீகாந்த்தின் வழிகாட்டலின் கீழ் நேற்று (20) மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசரப் பிரிவில் ஏற்படுகின்ற இரத்தப் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யும் நோக்கில் ”உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம்” எனும் தொனிப்பொருளில் மாவட்ட செயலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியின் பொறுப்பதிகாரி வைத்தியர் கீர்த்திகா மதன்அழகன் உரையாற்றுகையில் ‘போதனா வைத்தியசாலையின் இரத்த … Read more

ஸ்ரேன்ஜர்ஸ் விளையாட்டு கழகத்தின் விளையாட்டு திருவிழா

தெல்தோட்டை, மெதகெகில, ஸ்ரேன்ஜர்ஸ் விளையாட்டு கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சிவப்பு, நீலம் மற்றும் பச்சை இல்லங்களுக்கு இடையிலான விளையாட்டு திருவிழா கடந்த சனிக்கிழமை (18) மிக சிறப்பாக  நடைபெற்றது. விளையாட்டு திருவிழாவின் இறுதியில் திரு. ஹாரிஸ்கான் தலைமையிலான நீல இல்லம் 2023ம் ஆண்டுக்கான வெற்றி இல்லமாக தெரிவானது. இரு தினங்கள் நடைபெற்ற விளையாட்டு திருவிழாவில், முதல் கட்டமாக மரதன், கெரம், மென்பந்து, கரப்பந்து, உதைப்பந்து போன்ற குழு நிகழ்ச்சிகள் ஜனவரி மாதம் 21 திகதி நடைபெற்றன. விளையாட்டு திருவிழாவின் … Read more

இலங்கையில் வங்கிகளின் பணப்புழக்க நிலை! மத்திய வங்கி ஆளுநர் கூறியுள்ள விடயம்

வங்கித் தொழிலை பாதுகாப்பதற்கு நாம் இருக்கிறோம் என்ற செய்தியை தெரிவிக்க விரும்புவதாக இலங்கையின் மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க உறுதியளித்துள்ளார். கொழும்பில் நேற்றைய தினம் (20.02.2023) தொழில்சார் வங்கியாளர் சங்கங்களின் 33ஆவது ஆண்டு நிறைவு மாநாடு இடம்பெற்றிருந்தது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். வங்கிகளின் நிலைமை இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போதைய பொருளாதார நெருக்கடி சூழ்நிலையில் கடந்த காலத்தில் இருந்ததை போல வங்கிகள் எளிதான சூழ்நிலையில் … Read more